மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பதவி விலகுங்கள்: சோனியா கோரிக்கையை ஏற்க மறுத்த கவர்னர்
- திருவனந்தபுரம் அருகே கள்ளக்காதலிக்கு செக்ஸ் டார்ச்சர்: தடுத்த பெண் சரமாரி குத்திக்கொலை - தொழிலாளி கைது
- மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை
- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு: முதல் மந்திரி வாக்குறுதி
- காலில் ஏற்பட்ட கட்டியால் அவதி: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு அறுவை சிகிச்சை
- வியாபம் முறைகேடு விவகாரம்: ஊழலுக்கு எதிராக பேசிய பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
- நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் முழு திறமையும் எங்களுக்கு உள்ளது: பாகிஸ்தானின் மிரட்டலுக்கு ராணுவ மந்திரி பதிலடி
- நெடுஞ்சாலை, கப்பல் துறையில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை: மத்திய மந்திரி கட்காரி
- மத்தியபிரதேச கவர்னரை நீக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
- நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால்
- டெல்லியில் நில அபகரிப்பு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
- ரூ.90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கைது
- வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட போகோ ஹராம் தீவிரவாதி கைது
- ராஜஸ்தானில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 24 மயில்கள்
- இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார்
- பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம்
- வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி
- முதல்வர் பதவியில் நீடிக்க சவுகானுக்கு தார்மீக உரிமை இல்லை - காங்கிரஸ்
- சுதந்திர தினத்துக்கு முன்பு மும்பையில் வான்வெளி தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
- விரைவில் நல்ல செய்தி வரும்: ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்து மனோகர் பாரிக்கர் தகவல்
| பதவி விலகுங்கள்: சோனியா கோரிக்கையை ஏற்க மறுத்த கவர்னர் Posted: 09 Jul 2015 10:01 PM PDT மத்திய பிரதேச நுழைவுத் தேர்வு ஊழல் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி புயலை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவர்னர் ராம்நரேஷ் யாதவ் இந்த ஊழலில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு சற்று நெருடலாக உள்ளது. எனவே கவர்னர் பதவியில் இருந்து ராம் நரேஷ் யாதவை பதவி விலகச் |
| Posted: 09 Jul 2015 09:47 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் சரசம்மாள் (வயது 65). இவரது மகள் ராதா. கடந்த 10 வருடத்திற்கு முன்பு ராதாவின் கணவர் இறந்து விட்டார். இதனால் தனிமையில் வாடிய ராதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (62) என்ற ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டு |
| மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை Posted: 09 Jul 2015 09:17 PM PDT மாமியார், நாத்தனார் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட காலம் போக, மாமனார் மற்றும் மைத்துனர்களின் கொடுமை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்துப் போன சம்பவம் அரியானா |
| மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு: முதல் மந்திரி வாக்குறுதி Posted: 09 Jul 2015 08:38 PM PDT ஆட்சியில் இருக்கும் போது அரசின் வருமானத்தை பெருக்குவதற்காக சந்து பொந்துகளில் எல்லாம் மதுக்கடைகளை திறந்துவிடும் அரசியல்வாதிகள் அவ்வேளைகளில் குடிமகன்களாக மாறிப்போன குடும்பத்தலைவர்களால் பாதிக்கப்படும் குடும்பத்தலைவிகளின் கண்ணீரைப் பற்றியோ, அவர்கள் |
| காலில் ஏற்பட்ட கட்டியால் அவதி: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு அறுவை சிகிச்சை Posted: 09 Jul 2015 08:31 PM PDT மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த வாரம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கல்வித்துறை செயலாளர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் காலில் ஏற்பட்ட |
| Posted: 09 Jul 2015 07:12 PM PDT டெல்லியில், மகளிர் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மத்தியபிரதேச தேர்வு வாரிய முறைகேடுகள் பற்றிய கேள்விக்கு ராகுல் |
| Posted: 09 Jul 2015 05:14 PM PDT 'நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்த்து இந்தியாவை பாதுகாத்துக்கொள்ளும் முழுத்திறமையும் எங்களுக்கு உள்ளது' என்று பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்று பதிலடி கொடுத்தார். பாகிஸ்தானின் ராணுவ மந்திரி ஹவாஜா ஆசிப் நேற்று தனது பேட்டியில் இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயங்கமாட்டோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். |
| நெடுஞ்சாலை, கப்பல் துறையில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை: மத்திய மந்திரி கட்காரி Posted: 09 Jul 2015 02:28 PM PDT நெடுஞ்சாலை, கப்பல் துறைகளில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கி தரும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். தலைநகர் டெல்லியில் நெடுஞ்சாலை உபகரணங்கள் குறித்து நேற்று ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய நெடுஞ்சாலை, கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நெடுஞ்சாலை துறையில் ரூ.5 லட்சம் கோடியும், கப்பல் துறையில் ரூ.1 லட்சம் கோடியும் முதலீடு செய்து வேலைகள் செய்ய உள்ளோம். |
| மத்தியபிரதேச கவர்னரை நீக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் Posted: 09 Jul 2015 01:22 PM PDT வியாபம் ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது திக்விஜய் சிங் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், கவர்னர் போன்ற முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டால் அவை குறித்து விசாரிக்கவோ அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ சட்டத்தில் வழிவகை இல்லை என்றார். |
| நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால் Posted: 09 Jul 2015 10:31 AM PDT வி.எச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். உத்திரப் பிரதேசத்தின் அருகே ஒரு கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசோக் சிங்கால் "நாட்டின் முன்னேற்றத்துக்கு பசுவதைக்கு தடை விதிப்பது முக்கியம். பசுவதைக்கு தடை விதிப்பதன் மூலம் வரும் 2020 அளவில் இந்தியா ஒரு இந்து தேசமாக மாறிவிடும்" என தெரிவித்தார். |
| டெல்லியில் நில அபகரிப்பு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது Posted: 09 Jul 2015 08:54 AM PDT டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமார் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான மனோஜ் குமார் மீது புது அசோக் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மோசடி புகார் அளித்திருந்தார். கடந்த 2012ம் ஆண்டு வீட்டு மனை விற்பனையில் தன்னிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக |
| ரூ.90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கைது Posted: 09 Jul 2015 08:36 AM PDT கோவாவில் 90 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து உதவி இயக்குநர் உதய் கவாஸ், உதவி் மோட்டார் வாகன இயக்குநர் வாமன் ஆகிய இருவரும் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரியை விடுவிக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனத்திடம் |
| வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட போகோ ஹராம் தீவிரவாதி கைது Posted: 09 Jul 2015 06:42 AM PDT நைஜீரியாவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட போகோ ஹராம் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். நைஜீரியாவின் மத்திய நகரமான ஜோஸ் மற்றும் ஜரியா ஆகிய இரு நகரங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு |
| ராஜஸ்தானில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 24 மயில்கள் Posted: 09 Jul 2015 05:29 AM PDT ராஜஸ்தானில் விஷம் கலந்த உணவை உட்கொண்ட 24 மயில்கள் கொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கன்பூரா ஜட்டன் கிராமம். இக்கிராமத்தில் 24 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு வந்த |
| இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார் Posted: 09 Jul 2015 04:58 AM PDT வளர்ந்து வரும் இந்தியா, பல விஷயங்களில் உலக நாடுகளைப் போல் மேலும் முன்னேற நினைக்கிறது. ஆனால், சில விஷயங்களில் உலக நாடுகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. "நாங்கள் மலம் அள்ளுபவர்களாகவே பிறந்தோம். பிறந்ததிலிருந்தே அடிமைகளாக இருக்கிறோம். எங்களுக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. இந்த கொடுமையிலிருந்து நாங்கள் வெளியேற |
| பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம் Posted: 09 Jul 2015 04:40 AM PDT பாலியல் தொழிலில் இருந்து வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு இந்த மாதம் துவக்க இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஏராளமான பெண்கள் மீட்கப்பட்டு அரசு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த பெண்கள் மற்றும் பாலியல் |
| வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி Posted: 09 Jul 2015 03:22 AM PDT உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் உள்ள மெர்கா என்ற கிராமத்தில் தான் இச்சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. கனமழையின் காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த ரன்பீர் லால் என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ரன்பீர் லால், மூன்று சிறுமிகள், ஒரு சிறுவன் என |
| முதல்வர் பதவியில் நீடிக்க சவுகானுக்கு தார்மீக உரிமை இல்லை - காங்கிரஸ் Posted: 09 Jul 2015 03:20 AM PDT வியாபம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் முதல் அமைச்சர் பதவியில் நீடிக்க சிவராஜ் சிங் சவானுக்கு தார்மீக உரிமை இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில நுழைவுத் தேர்வு வாரியத்தில் (வியாபம்) கடந்த 2007–ம் ஆண்டு தொடங்கி 2013–ம் ஆண்டு வரை மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. |
| Posted: 09 Jul 2015 02:59 AM PDT இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரான மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 164 பேர் பலியானார்கள். 308 பேர் காயம் அடைந்தனர். கடல் வழியாக ஊடுருவி இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இந்த நிலையில் மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் |
| விரைவில் நல்ல செய்தி வரும்: ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்து மனோகர் பாரிக்கர் தகவல் Posted: 09 Jul 2015 02:47 AM PDT இந்திய பாதுகாப்புப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால கோரிக்கையாகவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும் என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |