Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடியவருக்கு 2 மாதம் சிறை

Posted: 22 Jul 2015 10:38 PM PDT

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேஷ்முக், வினோத். இருவரும் கடந்த மே மாதம் 19–ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கிணறுக்கு அருகில் சென்றனர். அங்கிருந்த ஒரு

ஒரே ஒரு போன் செய்தால் மது பாட்டில் வீடு தேடி வரும்: ஆந்திராவில் புதிய திட்டம் அறிமுகம்

Posted: 22 Jul 2015 10:16 PM PDT

தற்போது பீட்சா மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டுமானால் ஒரே ஒரு போன் செய்தால் போதும், தேவையான உணவுப் பொருட்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படும். அதேபோல் மளிகை பொருட்களையும் தெரிந்த கடைகளில் போன் மூலம் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே டெலிவரி கொடுத்து பணத்தை பெற்றுச்செல்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

உள்துறை மந்திரிக்கு சல்யூட் அடிக்காத சர்ச்சை: கேரள ஏ.டி.ஜி.பி.க்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

Posted: 22 Jul 2015 10:10 PM PDT

கேரள மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் கிருஷிராஜ்சிங். தீயணைப்பு துறையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் தான் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பதவி ஏற்றார். இவர் இந்த பதவிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மீது சோனியா கோபம்

Posted: 22 Jul 2015 09:30 PM PDT

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான சசிதரூர் அவ்வப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து வருகிறார். மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்கிறது. இந்த

ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகள் 72.03 கோடியாக அதிகரிப்பு

Posted: 22 Jul 2015 09:24 PM PDT

ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 0.58 சதவீதம் வளர்ச்சி அடைந்து 72.03 கோடியை எட்டியுள்ளது. செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களில் பெரும்பாலும் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் சேவை வழங்குகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் ஒரே செல்போன் சாதனத்தில் பல்வேறு வகை நிறுவனங்களின் சிம் கார்டுகளை

பாலக்காடு அருகே முட்டை–பழம் சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் 50 பேருக்கு வாந்தி–மயக்கம்

Posted: 22 Jul 2015 09:14 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புளச்சேரி அருகே உள்ளது வெள்ளிநேழி அரசு தொடக்கப்பள்ளி. இங்கு 200–க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். நேற்று மதிய உணவுக்குப்பிறகு 3 மணியளவில் பள்ளியில் குழந்தைகளுக்கு முட்டை, பழம் ஆகியவை வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட குழந்தைகள் மாலையில் வீடு திரும்பினர்.

கேரள அரசு சார்பில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு 124 அதிரடி படை கமாண்டோக்கள்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Posted: 22 Jul 2015 08:58 PM PDT

தென் தமிழக மக்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு கேரள அரசின் கைகளில் உள்ளது. இதனை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்,

45 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால் இந்தியாவுக்கு ரூ.645 கோடி வருவாய்: பாராளுமன்றத்தில் தகவல்

Posted: 22 Jul 2015 08:08 PM PDT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' பிற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 19 நாடுகளுக்கு சொந்தமான 45 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.645 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும்

நிலக்கரி சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய காங்கிரஸ் தலைவர்: சுஷ்மா புகார்

Posted: 22 Jul 2015 08:02 PM PDT

மத்திய அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி லண்டனில் இருந்து போர்ச்சுக்கல் செல்ல பயண ஆவணங்கள் பெற உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே இருவரும் உடனடியாக பதவி

எந்த தவறும் செய்யவில்லை: சுஷ்மா, வசுந்தரா, சவுகான் ராஜினாமா இல்லை: பாரதீய ஜனதா திட்டவட்டம்

Posted: 22 Jul 2015 07:53 PM PDT

லலித் மோடிக்கு உதவியதாக கூறுகிற விவகாரத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், மத்திய பிரதேச அரசு தேர்வு வாரிய ஊழலில் (வியாபம்) முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் பதவி விலகியே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. 2 நாட்களாக அவை பாராளுமன்றத்தை முடக்கின.

அவதூறு வழக்குகள்: மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது கண்டிக்கத்தக்கது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

Posted: 22 Jul 2015 07:48 PM PDT

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசின் சார்பில் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவதூறு தொடர்பான சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றை நீக்க வேண்டும் என்றும்

சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு: அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு

Posted: 22 Jul 2015 07:42 PM PDT

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் மீது ஒரே சீரான வரிமுறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. எனினும், ஆளும் கட்சிக்கு டெல்லி மேல்-சபையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா

மழை வேண்டி மரக்கிளையில் அமர்ந்து பூஜை செய்யும் சாமியார்

Posted: 22 Jul 2015 07:40 PM PDT

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம், மழை வெள்ளம் சூழ்வதால் பயிர்கள் நாசம் அடைவது, வறட்சி காலத்தில் பயிர்கள் கருகுவது ஆகியவைதான் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு

சபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு நடை அடைக்கப்பட்டது

Posted: 22 Jul 2015 07:33 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆடி மாத பிறப்பையொட்டி கடந்த 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் தினமும் படிபூஜை, உதயஸ்தமன பூஜை ந

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கருணை மனுக்களை தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது - மத்திய அரசு வாதம்

Posted: 22 Jul 2015 07:07 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா விமானம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவில்லை: சீனா அறிவிப்பு

Posted: 22 Jul 2015 07:05 PM PDT

பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள கிராமங்களில் கடந்த 12-ந் தேதி தாக்குதல் நடத்தி ஒரு பெண்ணை கொன்றதுடன், 6 பேரை படுகாயம் அடையச்செய்தது. இதில் இந்தியா நடவடிக்கை எடுத்தவுடன், தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து

அரியானா மாநிலத்தில் தண்டவாளத்தில் கிடந்த ராக்கெட் குண்டுகள்

Posted: 22 Jul 2015 04:57 PM PDT

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம், ஷஹாபாத் மற்றும் தோஜா மஜ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே குருசேத்திரா அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 7 ராக்கெட் குண்டுகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கிடந்தன. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார்: கேரள அரசு முடிவு

Posted: 22 Jul 2015 03:28 PM PDT

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்

சீனாவுக்கு போட்டியாக இந்தியப் பெருங்கடலில் கடற்படையின் வலிமையைக் காட்ட திட்டமிடும் மோடி அரசு

Posted: 22 Jul 2015 09:16 AM PDT

சீனக் கடற்படையின் ஏவுகணை அழிப்பு நீர்முழ்கி கப்பலான ஜினான், என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பல் சில தினங்களுக்கு முன் மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனாவின் நீர்முழ்கி கப்பல் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நிறுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் தவிர, இலங்கை, வங்கதேசம், மாலத் தீவுகள்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது

Posted: 22 Jul 2015 06:53 AM PDT

கொல்கத்தாவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்து தலைமறைவான பிரபல கால் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷியாமளா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 8 ஆம் தேதி பணி முடிந்த பின்பு, நள்ளிரவில் கால் டாக்ஸி மூலம் தனது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™