Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'தலைவா'வை பின்னுக்கு தள்ளிய 'தல':'போர்ப்ஸ்' தரவரிசையில் ரஜினியை முந்தினார் அஜித்

Posted:

கடந்த ஆண்டில், நாட்டின், சினிமா, விளையாட்டு, எழுத்தாளர்கள் போன்ற முன்னணி பிரபலங்கள் பட்டியலை, பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அதிகமாக சம்பாதித்து, ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்கு தள்ளி, 'தல' என ரசிகர்களால் அழைக்கப்படும், அஜித்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் இந்த பிரபலங்கள் சம்பாதித்த பணம், ...

வாலு புது டிரைலர் விரைவில் ரிலீஸ்...

Posted:

விஜய்சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள "வாலு" படத்தின் டிரைலர், இவ்வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாலு படத்தை, வரும் ஜூலை மாதம் 3ம் தேதி வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளன. படத்திற்கு, மாநில அரசு வரிவிலக்கு வழங்கும் என்ற தகவலும் உலவிவருகிறது.

2012ம் ஆண்டு ...

லதா ரஜினிகாந்த் மீது எப்ஐஆர்., பதிவு

Posted:

கோச்சடையான் படம் தொடர்பாக பொய்யான ஆவணங்கள் தந்தமைக்காக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா மீது பெங்களூரு போலீசார் எப்ஐஆர்., பதிவு செய்துள்ளனர். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தன் அப்பா ரஜினியை வைத்து மோஷன் கேப்டசரிங் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக தயாரித்த படம் கோச்சடையான். இப்படத்தை விற்றது தொடர்பாக ஆட்பீரோ என்ற ...

அனிருத்தை துரத்தும் 10 லட்சம் பேர்!

Posted:

3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத் ரவிச்சந்தர். முதல்படத்திலேயே கொலவெறி எனும் பாடலை கொடுத்து உலகளவில் பேசப்பட்ட இசையமைப்பாளரானார். தொடர்ந்து வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், கத்தி, காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி... என இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. தற்போது அஜித் படத்திற்கு ...

அமீர் படத்துக்கு யார் இசையமைப்பாளர்? சிம்பு சிபாரிசு எடுபடுமா?

Posted:

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் வாலு படம் ஜூலை 3 ஆம் தேதி வெளி வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து சில வார இடைவெளியில், இது நம்ம ஆளு படத்தையும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், அதை கருத்தில் கொண்டு இது நம்ம ஆளு பட பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று சிம்பு தரப்பில் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், ...

அஜித் வழியில் ஆர்யா...! கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!

Posted:

படங்களில் நடித்துக் கொண்டே கார் ரெஸில் கலந்து கொண்டார் அஜித். அதனால் அவர் நடித்த படங்கள் குறித்த காலத்தில் வெளியாக முடியாதநிலை ஏற்பட்டது. அதன் காரணமாக அஜித்தை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தனர். அவரிடம் கால்ஷீட் வாங்கும் எண்ணத்தில் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் அஜித்துக்குப் பதில் வேறு ஹீரோவை ...

சுதீப் படத்துக்கு சிக்கல் வருமா?

Posted:

லிங்கா படத்தின் விநியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட நஷ்டஈடு ஒழுங்காக பிரித்துக் கொடுக்கப்படாததினால், இன்னமும் அந்தப் பிரச்சனை தீராமலே இருக்கிறது. இந்நிலையில், லிங்கா படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் கன்னடத்தில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.

தமிழ், கன்னடம் என ஒரே நேரத்தில் ...

5 மொழிகளில் ரீமேக்காகும் 'ஒரு வடக்கன் செல்பி'..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'பிரேமம்' படத்தை எல்லோரும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை.. இந்தப்படம் வெளியாவதற்கு மூறு மாதங்களுக்கு முன் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படமும் சூப்பர்ஹிட் தான் என்பதையும் ...

தமிழ் நடிகர்களை எதிர்க்கிறாரா சுரேஷ் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் 1981ம் ஆண்டு வெளிவந்த 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சுரேஷ். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து 80களில் முக்கியமான இளம் ஹீரோக்களில் ஒருவராக இருந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். எப்போதாவது சில படங்களில் தலை காட்டுகிறார். 'பாகுபலி' படம் பற்றிய ...

துல்கர் படங்களில் ரிப்பீட் ஆகும் ஹீரோயின்கள்..!

Posted:

துல்கர் சல்மான் தனது படங்களின் கதாநாயகி யார் என்கிற விஷயத்தில் தலையிடுவதில்லை என்றே மலையாள இண்டஸ்ட்ரியில் சொல்லப்படுகிறது. துல்கரின் ஜோடிகள் அவரது அடுத்தடுத்த படங்களிலும் ரிப்பீட் ஆவது அவருக்கே ஆச்சர்யம் தானாம்.. அதனால் இது ஏதேச்சையாக நடக்கிற விஷயம் என்றே மனதில் வைத்துக்கொள்வோம்.. துல்கரின் இரண்டாவது படமான 'உஸ்தாத் ...

சல்மான் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான்கான், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பான அப்பீல் மனுவின் விசாரணை, ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் சாலையோரம் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது இவர் குடி போதையில் காரை ஏற்றி ஒருவர் பலியானார்.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ...

'காக்கா முட்டை'க்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

Posted:

'காக்கா முட்டை' திரைப்படத்திற்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் ஒரு பக்கம் கிடைத்து வர, மறுபக்கம் திரையுலகத்தினரின் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். "காக்கா முட்டை, மிகச் சிறந்த விஷயங்கள் எளிமையான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகான யதார்த்தம், ...

ரஜினியின் எளிமை - வியக்கும் பிரபல தெலுங்கு இயக்குநர்

Posted:

நடிகர் ஆதியின் அப்பாவும் தெலுங்கில் பிரபல இயக்குநருமான ரவிராஜா பினிசெட்டி ரஜினியை வைத்து பெத்தராயுடு இயக்கியவர். இது நம் நாட்டாமை படத்தின் ரீமேக். இவர்தான் சின்னதம்பியை சண்டி என தெலுங்கில் இயக்கியவர். ரஜினியை இயக்கிய அனுபவத்தைக் கூறும்போது. "நான் ரஜினிசாரை வைத்து இயக்கிய போது நடந்த அனுபவங்கள் இனிமையானவை. அவர் எப்போதும் ...

நிவின்பாலிக்கு பிருத்விராஜ் கூறிய மந்திரம்..!

Posted:

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒரே நாளில் இரண்டுவிதமான படங்களில் இரண்டுவிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நிவின்பாலி. அதில் தனி ஹீரோவாக நடித்த 'பிரேமம்' ஹிட்.. பிருத்விராஜுடன் இணைந்து நடித்த 'இவிடே' கிட்டத்தட்ட பிளாப்.. ஆனால் இரண்டையுமே தான் ஒரேவிதமாக எடுத்துக்கொள்வதாக சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிகையில் ...

சினிமாவில் காதல் வியாபாரம்! - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

காதல் என்பது தமிழ் மொழியில் ஒரு வார்த்தை. கவிஞர்களுக்கு ஒரு பாடுபொருள், கதைகளுக்கு கரு. ஆனால் சினிமாக்காரர்களுக்கு அது ஒரு வியாபாரம் மூலப் பொருள். உலகெங்கும் காதல் கதைகள் இருந்தாலும் தமிழ்ச்சினிமாவில் காதல் என்பது அன்று முதல் இன்றுவரை குறைந்த பட்ச உத்திரவாதம் தரும் வியாபாரச் சரக்காக இருக்கிறது.

மூழ்காத டைட்டானிக் ...

சினிமாவில் பிஸியாகிவிட்டார் பூஜா

Posted:

பெங்களூரைச் சேர்ந்த பூஜா. தமிழ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்த அவரை சினிமா கவர்ந்து விட்டது. காதலில் சொப்புவது எப்படி முதல் படம். சித்தார்த்தின் தோழியாக நடித்தார். அதன் பிறகு நண்பேன்டாவின் நயன்தாராவின் தோழி, இப்படி பல படங்களில் ஹீரோயின் தோழி, ஹீரோவின் தோழியாக நடித்தவருக்கு நல்ல ...

ரஜினி சாரின் அழைப்புக்காக காத்துகிட்டிருக்கேன் : ஹன்சிகா சிறப்பு பேட்டி

Posted:

வட நாட்டில் இருந்து வந்தாலும் தமிழ் பெண்ணாகவே மாறி இங்கேயே தங்கி விடும் நடிகைகளில் குஷ்புவுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டாலும் தன் எடையை கணிசமாக குறைத்து, இன்னும் அழகாகி தனக்கென தனி முத்திரையோடு வலம் வருகிறார். கைநிறைய படங்கள், அடுத்தடுத்த ஹிட்டுகள் என பரபரப்பாக ...

இந்தி நடிகரை காதலிக்கிறார் யாமி கவுதம்

Posted:

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் அறிமுகமானவர் யாமி கவுதம். அந்த படம் வெளிவராததால் அதன் பிறகு தமிழில் நடிக்காமல் இந்தியில் நடிக்கச் சென்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனின் கவுரவம் படத்தில் நடித்தார். தற்போது இந்தியில் பிசியாக நடித்துக் கொண்டார்.
பாலிவுட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும் நடிகர் ...

கல்லூரி மாணவி ஆனார் லட்சுமி மேனன்

Posted:

நடிகை லட்சுமி மேனன் அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக, கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இது பழைய செய்தி. அவர் நிஜத்திலும் கல்லூரி மாணவியாகிவிட்டார். இது புதிய செய்தி. சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற லட்சுமி மேனன் அடுத்து பெங்களூரில் பேஷன் டிசைனிங் படிக்கப் போவதாக சொன்னார். ஆனால் பெங்களூரில் படித்தால் ...

என்னோடு வா மனமே படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணியிடம் உதவி இயக்குனராக இருந்த ம.பாண்டியன் இப்போது இயக்குனராகி இருக்கிறார். படத்தின் பெயர் என்னோடு வா மனமே. எஸ் கிரீன்ஸ் சார்பில் பாப்பாத்தி அம்மாள் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். நீரஜா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.
"ஐ.டி.கம்பெனியில் பணியாற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™