Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


எச்சில் துப்புபவர்களே உஷார் - துடைப்பத்தால் நீங்களே சுத்தம் செய்யவேண்டும்: அமல்படுத்த மகாராஷ்டிரா தீவிரம்

Posted: 16 Jun 2015 10:38 PM PDT

பளிங்கு போல் இருக்கும் சுவர் மற்றும் தரையை சமூக பொறுப்பில்லாத பான் பராக் வாசிகள் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இதற்கு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் பொது

சந்திரபாபு நாயுடு மீது ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுக்க அனுமதி: கவர்னர் நரசிம்மன் தகவல்

Posted: 16 Jun 2015 10:34 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய மந்திரி சுஜினா சவுத்ரி, மேல்சபை எம்.பி.க்கள்

எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: முந்தைய காங்கிரஸ் அரசு என்னை பழிவாங்கிவிட்டது - லலித் மோடி பேட்டி

Posted: 16 Jun 2015 10:08 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் லலித் மோடி ''இந்தியா டுடே'' தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியது தொடர்பாக கூறியதாவது:–

திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி

Posted: 16 Jun 2015 09:56 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள் தூவப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிசுபாலன் கிணற்றின் உள்ளே பார்த்தார். அப்போது கிணற்றின் உள்ளே சில பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. இந்த

பத்மநாப சுவாமி கோவிலில் புதுப்பிக்கப்பட்ட மூலவர் சிலை 25–ந் தேதி பிரதிஷ்டை

Posted: 16 Jun 2015 09:32 PM PDT

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் மிகவும் பழமையும் பிரசித்தியும் பெற்றதாகும். இந்த கோவிலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகம விதிப்படி பழமை மாறாமல் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பதியில் பலத்த மழை: கடுங்குளிரால் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

Posted: 16 Jun 2015 09:26 PM PDT

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 12.30 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 6 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஏழுமலையான் கோவில் முன்பு மழை வெள்ளம் பெருக்கெடுத்து

லலித்மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

Posted: 16 Jun 2015 08:33 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மீது நிதிமுறைகேடு மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. 2010-ம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்ல இங்கிலாந்து தூதரகம் மூலம்

லலித் மோடிக்கு உதவியதாக புகார்: வசுந்தரா ராஜே மறுப்பு

Posted: 16 Jun 2015 08:11 PM PDT

லலித் மோடிக்கு உதவியதாக தன் மீது எழுந்துள்ள புகாரை ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மறுத்துள்ளார். நேற்று அவர் கூறுகையில், 'லலித் மோடியின் குடும்பத்தை எனக்கு தெரியும். ஆனால், அவருக்கு நான் உதவியதாக எந்த ஆவணங்களை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ரூ.1 கோடியை ஒப்படைத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

Posted: 16 Jun 2015 08:10 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பிரபல இந்தி நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. இந்த நிதி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டதால் அவரும் மோசடியில் இணைத்து பேசப்பட்டு வந்தார். இதனால் கடந்த மாதம் அவரிடமும் அமலாக்க பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் வழங்கியதில் உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது: இங்கிலாந்து அரசு விளக்கம்

Posted: 16 Jun 2015 07:29 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது மற்றும் நிதி மோசடி, அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கும் அவர் இந்தியாவில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதால் அங்கு வசிப்பதாக கூறி வருகிறார்.

மானசரோவருக்கு புதிய வழித் தடத்தில் பஸ் வசதியை தொடங்கி வைத்த சுஷ்மா சுவராஜ்

Posted: 16 Jun 2015 07:19 PM PDT

சீனாவின் திபெத்திய பகுதியில் இந்துக்கள் புனிதமாக கருதும் கயிலாய மானசரோவர் ஏரி உள்ளது. இந்த ஏரியை காண்பதற்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். மானசரோவர் செல்வதற்கு, உத்தரகாண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக உள்ள பாதையில் இந்தியர்கள் பஸ்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரி மீது தலைமறைவு குற்றவாளி புகார்

Posted: 16 Jun 2015 05:06 PM PDT

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4-வது குற்றவாளி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க தெலுங்கானா அரசின் நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ.5 கோடி பேரம் பேசி, ரூ.50 லட்சம் முன்பணம் கொடுத்தபோது தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இந்திய விமானப்படையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு விமானம் விபத்தால் மாயம்-பாராளுமன்றக் குழு

Posted: 16 Jun 2015 12:56 PM PDT

இன்று காலை தனது வழக்கமான பயிற்சிக்காக கிளம்பிய இந்திய விமானப்படையை சேர்ந்த ஜாகுவார் போர் விமானம் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த ஆண்டில் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறையாகும்.

மதர் டெய்ரி பால் பாக்கெட்டுகளில் டிடர்ஜெண்ட் பவுடர் கலப்படம்

Posted: 16 Jun 2015 11:46 AM PDT

பால் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக மைதாவை கலப்படம் செய்து வந்தது போல், பால் நுரை ததும்ப வேண்டும் என்பதற்காக டிடர்ஜெண்ட் பவுடர் கலப்படம் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியை மையமாகக் கொண்ட மதர் டெய்ரிஸ் பால் பாக்கெட் மாதிரிகளில் டிடர்ஜெண்ட் பவுடர் இருப்பது சோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆக்ராவில் உள்ள உணவு மற்றும் மருந்து

விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட எம்.பி

Posted: 16 Jun 2015 10:30 AM PDT

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் 9W-728 விமானத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். விமானத்தில் 'ஐலே' சீட் எனப்படும் விமானத்தின் நடைபாதைக்கு அருகே உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்த பீகார் எம்.பி பப்பு யாதவ், தான் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த உணவுப்பொருட்களை நடைபாதையில்

பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்

Posted: 16 Jun 2015 10:09 AM PDT

பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெற்ற மகளையே வக்கிர புத்தி கொண்ட ஒரு கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள மனித மிருகம் ஒன்று தனது 10 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய மோடி

Posted: 16 Jun 2015 09:12 AM PDT

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கும், பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை

முதலாவது சர்வதேச யோகா தினம்: குஜராத்தில் 30 ஆயிரம் யோகா முகாம்களுக்கு ஏற்பாடு தீவிரம்

Posted: 16 Jun 2015 08:57 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதல் சர்வதேச யோகாசன தினமான வரும் 21-ம் தேதி சுமார் 30 ஆயிரம் இடங்களில் யோகாசன முகாம்களை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பெருமுயற்சியின் பலனாக முதலாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 16 Jun 2015 08:31 AM PDT

இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமூகத்தால் கைவிடப்படும் பெண் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக 'இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி' (Girl Rising India) என்ற தொண்டு அமைப்பினை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் 'ஸ்லம் டாக்

கேரள ஐகோர்ட் நீதிபதியின் மகன் பெங்களூரில் நடந்த பைக் விபத்தில் பலி

Posted: 16 Jun 2015 08:22 AM PDT

கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பாபு மேத்யூ. இவரது மகன் ஆனந்த் மேத்யூ (வயது 21). இவர் பெங்களூரில் உள்ள ஜெயாநகர் பகுதியில் தங்கி, கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு எல்.எல்.பி. படித்து வந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™