Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை: பிரசாரத்தில் அச்சுதானந்தன் தாக்கு

Posted: 17 Jun 2015 10:09 PM PDT

திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மறைந்த சபாநாயகரின் மகன் சபரிநாதன் காங்கிரஸ் வேட்பாளராகவும், முன்னாள் மத்திய மந்திரி ஓ.ராஜகோபால் பாரதீயஜனதா வேட்பாளராகவும், முன்னாள் மந்திரி விஜயக்குமார் கம்யூனிஸ்ட்டு வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்கள்.

ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி மறுப்பு: தெலுங்கானா அரசு இழுத்தடிப்பு

Posted: 17 Jun 2015 09:49 PM PDT

ஆந்திரபிரதேச முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சொந்தமான பங்களா உள்ளது. அந்த பங்களா கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. மேலும் அந்த பங்களாவில் இரண்டே இரண்டு படுக்கை அறைகள் மட்டுமே

லஞ்ச வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது: சந்திரசேகர ராவ் ஆவேசம்

Posted: 17 Jun 2015 09:48 PM PDT

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் கரீம் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– மேல்–சபை தேர்தலில் ஓட்டுக்கு கோடிகள் கொடுத்த லஞ்ச வழக்கை திசை திருப்ப சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இந்த வழக்கில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த காரியத்தையும் இந்த சந்திரசேகர ராவ் செய்ய மாட்டார்.

ரெயில்வே தனியார் மயம் ஆகாது: மத்திய மந்திரி சுரேஷ்பிரபு தகவல்

Posted: 17 Jun 2015 09:43 PM PDT

ரெயில்வேயை தனியார் மயமாக்கலாம் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த பரிந்துரைப்படி எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கும் உரிமையும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ரெயில்வே இலாகாவை தனியார் மயம் ஆக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு விளக்கம்

பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது

Posted: 17 Jun 2015 09:35 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோட்டக்கரையை சேர்ந்தவர் சரசா(வயது 40). இவரது சொந்த ஊர் கோவை. கணவரை பிரிந்த சரசா கோட்டக்கரையில் கண்ணன்(43) என்பவருடன் வசித்து வந்தார். இவர் மனைவியை பிரிந்தவர். சரசாவும், கண்ணனும் கோட்டக்கரையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்து வந்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் இடையே அடிக்கடி

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு: டெல்லி போலீசார் தகவல்

Posted: 17 Jun 2015 08:59 PM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இவற்றின் மீது விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யப்போவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகள் மருத்துவம் படித்தவரா? டுவிட்டரில் பதிவான தகவலால் சுஷ்மா சுவராஜ் ஆவேசம்

Posted: 17 Jun 2015 08:55 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் பெற உதவிய விவகாரத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜின் பெயர் ஏற்கனவே படாதபாடுபடுகிறது.

ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் மோடி - ஷெரிப் சந்திக்க வாய்ப்பு?

Posted: 17 Jun 2015 08:47 PM PDT

லலித் மோடி விவகாரத்தில் பெருத்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள போதிலும், பாகிஸ்தானுடனான உறவில் இணக்கமான சூழல் ஏற்படுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

லண்டனில் சந்தித்தபோது லலித்மோடியை இந்தியா வருமாறு வற்புறுத்தினேன்: சரத்பவார் தகவல்

Posted: 17 Jun 2015 08:47 PM PDT

லண்டனில் வசிக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை கடந்த மாதம், தான் சந்தித்து பேசியதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். இத்தகவலை நேற்று மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்த அவர் மேலும்

லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

Posted: 17 Jun 2015 08:28 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2010-ம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கும் அவர் இந்திய போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இதனிடையே, மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு போர்ச்சுகல் செல்வதற்காக இங்கிலாந்து அரசு லலித்மோடிக்கு

நாடு முழுவதும் 24-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted: 17 Jun 2015 08:11 PM PDT

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய, 'பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கம்' அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது.

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தேசிய குற்ற ஆவண அலுவலக இயக்குனராக நியமனம்

Posted: 17 Jun 2015 08:05 PM PDT

தமிழ்நாட்டின் 1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தொகுப்பை சேர்ந்தவர், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம். இவர் சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதில் சில சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 'ரிட்' வழக்கு

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக சரத்பவார் மீண்டும் தேர்வு

Posted: 17 Jun 2015 07:28 PM PDT

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ.) நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதன் முடிவு இரவில் வெளியிடப்பட்டது. சங்கத்தின் தலைவராக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய் பட்டீலை 172-145 என்ற ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சரத்பவார் ஏற்கனவே 2001-ம்ஆண்டு முதல் 2011-12-ம் ஆண்டு வரை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் மற்றும் ஆஷிஷ் செலார் ஆகியோர் துணை

பெண் எனும் பெரும் சக்தி: சர்வதேச தொழிலாளர்கள் மாநாட்டில் குப்பைகளை சேகரிக்கும் ஒரு இந்தியப்பெண்ணின் குரல்

Posted: 17 Jun 2015 05:23 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள கலாம்ப் கிராமத்தில் தினக்கூலியாக வேலை செய்யும் பெற்றோருக்கு பிறந்தவர் சுமன் மோரே. இந்தியாவில் பெண்ணாய் அதுவும் தாழ்ந்த சாதிப் பெண்ணாய் பிறந்தால் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வருமோ, எல்லாவற்றையும் அனுபவித்தார். கிராமத்தில் பெரும் பஞ்சம் வந்த போது தனது கணவருடன் சேர்ந்து புனே நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவரது கணவர் தனது சாதி

நாடு முழுவதிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சிமெண்ட் உலைகளில் எரிக்க ஏற்பாடு

Posted: 17 Jun 2015 04:51 PM PDT

நாடு முழுவதிலும் இருந்து திரும்ப பெறப்பட்டு வரும் 'மேகி நூடுல்ஸ்' பாக்கெட்டுகளை சிமெண்டு உலைகளில் எரித்து அழிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்தமான உணவாக விளங்கி வந்த மேகி நூடுல்சில் காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் போன்ற

மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயற்சி: ரூ.7½ கோடி போதைப்பொருளுடன் பெண் கைது

Posted: 17 Jun 2015 04:32 PM PDT

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தோகா வழியாக ஜெருசலேம் செல்லும் கத்தார் நாட்டு விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய தான்சானியா நாட்டு பாஸ்போர்ட்டுடன் சாம்பே பேட்மா பாசில் என்ற பெண் வந்தார். அப்போது, அவரை பார்த்து சோதனையில் ஈடுபட்டிருந்த மோப்ப நாய் திடீரென குரைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கவரித்துறை அதிகாரிகள் அந்த பெண் வைத்திருந்த உடமைகளை வாங்கி சோதனை செய்தனர்.

மத்திய மந்திரிசபை ஒப்புதல்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு- வீட்டு கடனுக்கான வட்டி மானியம் அதிகரிப்பு

Posted: 17 Jun 2015 01:13 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட அமல், நேரடி அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி, சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வீட்டு வசதி திட்டத்தை பொறுத்தமட்டில் 2022-ம் ஆண்டுக்குள், 'நகர்ப்புறத்தில் அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை மத்தியில் ஆளும்

போலிச்சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா பைலட் சஸ்பெண்ட்

Posted: 17 Jun 2015 12:22 PM PDT

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் போலியான கல்விச் சான்றிதழை கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஏர் இந்தியாவின் செய்தித்தொடர்பாள்ர் கூறுகையில் "உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு பிறகு பீகாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் கருதப்பட்ட விமானியின் கல்விச்சான்றிதழை சரிபார்த்த போது அது போலியானதென்று கண்டுபிடிக்கப்பட்டது.

யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட் பங்கேற்காது: முதல்வர் ஹரிஷ் ராவத்

Posted: 17 Jun 2015 11:24 AM PDT

வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட், அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கட்டாய வாக்குப்பதிவு சட்டம்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் அமலாகுமா?

Posted: 17 Jun 2015 11:08 AM PDT

குஜராத் மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சர்ச்சைக்குரிய கட்டாய வாக்குப்பதிவு சட்டத்தை வருகிற தேர்தல் முதல் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநில செய்தித்தொடர்பாளரும் சுகாதார அமைச்சருமான நிதின் படேல், காந்தி நகரில் இன்று நடந்த கேபினெட் கூட்டத்திற்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, கட்டாய வாக்குப்பதிவு சட்டத்திற்கான விதிகளை கட்டமைக்கும் பணியில் இருப்பதாகவும், அடுத்த வாரம் இது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™