மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவிலில் இன்று பிற்பகலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
- பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம்
- ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்
- பீகார் தேர்தல்: நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் நிதீஷ்குமார்
- செம்மரக் கடத்தலில் தொடர்பு: பஸ் டிரைவர்கள் 40 பேர் டிஸ்மிஸ் - ஆந்திரா அரசு நடவடிக்கை
- பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது
- ஜெயலலிதா வெற்றி: டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் கொண்டாட்டம்
- மைசூரு உயிரியல் பூங்காவில் 26 வயதான பெண் மனித குரங்கு இறந்தது: ஊழியர்கள் அஞ்சலி
- மத்தியபிரதேசத்தில் நடந்த நுழைவுத் தேர்வு ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு: திக்விஜய் சிங் தாக்கல்
- தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- மராட்டியத்தில் மற்றொரு பா.ஜனதா மந்திரி மீது ஊழல் புகார்
- ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்
- இந்தியாவிற்குள் வர முயற்சித்த 23 வங்கதேசத்தினர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம்
- திகார் சிறையில் இருந்து தப்பியோடிய 2-வது கைதியும் பிடிபட்டான்
- இந்திய கடற்படைக்கு 3 புதிய போர்க்கப்பல்கள், மேலும் 48 தயாரிப்பில் உள்ளது- கடற்படை அதிகாரி
- குஜராத்தில் ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க முடிவு
- முதல் மந்திரியின் உதவியாளர் விசா ஆவணங்களை கொண்டு வராததால் அமெரிக்கா செல்லும் விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
- இந்திரா காந்தியின் படுகொலையை தற்கொலையாக அறிவிக்க கோரிய வழக்கு 29 ஆண்டுகளுக்கு பின்னர் தள்ளுபடி
- இரண்டாம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு 2.25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
| திருப்பதி கோவிலில் இன்று பிற்பகலில் ஜனாதிபதி சாமி தரிசனம் Posted: 30 Jun 2015 10:19 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று விமானம் மூலம் ஐதராபாத் வந்தார். அவரை விமான நிலையத்தில் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திர சேகரராவ் காலில் விழுந்து வரவேற்றார். பின்னர் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் நரசிம்மன் ஜனாதிபதிக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஆந்திரா முதல்–மந்திரி சந்திர பாபுநாயுடு, |
| பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம் Posted: 30 Jun 2015 09:59 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார மந்திரியாக உள்ள சவுதரிலால் சிங், பெண் மருத்துவர் ஒருவரின் கோட் காலரில் கை வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. லக்கான்பூர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின் |
| ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம் Posted: 30 Jun 2015 09:38 PM PDT தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் இவர் முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல ஆங்கில வார இதழ், கிசு கிசு வெளியிட்டது. அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், |
| பீகார் தேர்தல்: நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் நிதீஷ்குமார் Posted: 30 Jun 2015 09:19 PM PDT பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். பா.ஜ.க.வை வீழ்த்த பிரதான கட்சிகளான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா |
| செம்மரக் கடத்தலில் தொடர்பு: பஸ் டிரைவர்கள் 40 பேர் டிஸ்மிஸ் - ஆந்திரா அரசு நடவடிக்கை Posted: 30 Jun 2015 09:06 PM PDT திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செம்மர கடத்தில் ஈடுபடும் முக்கிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு |
| பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது Posted: 30 Jun 2015 08:39 PM PDT பெங்களூரு அருகே பன்னரகட்டாவில் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு தற்போது 9 நீர் யானைகள் உள்ளன. 1997-ம் ஆண்டில், முதல் முறையாக மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து கார்த்திக், சீதா என்ற நீர் யானை ஜோடி இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் தற்போது 9 நீர் |
| ஜெயலலிதா வெற்றி: டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் கொண்டாட்டம் Posted: 30 Jun 2015 08:28 PM PDT சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல அ.தி.மு.க. டெல்லி மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள வித்தல்பாய் பட்டேல் அவுஸ் வளாகத்தில் நேற்று டெல்லி அ.தி.மு.க. சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. |
| மைசூரு உயிரியல் பூங்காவில் 26 வயதான பெண் மனித குரங்கு இறந்தது: ஊழியர்கள் அஞ்சலி Posted: 30 Jun 2015 08:23 PM PDT மைசூரு அரண்மனை அருகே சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் வனவிலங்குகள், பறவை இனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. |
| Posted: 30 Jun 2015 07:57 PM PDT மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் 2013-ம் ஆண்டு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. |
| தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 30 Jun 2015 07:46 PM PDT பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்த போது மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய |
| மராட்டியத்தில் மற்றொரு பா.ஜனதா மந்திரி மீது ஊழல் புகார் Posted: 30 Jun 2015 07:40 PM PDT அமலாக்கப்பிரிவினரால் தேடப்பட்டு வரும் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடிக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோரும், போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் சிக்கினர். மராட்டிய |
| ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம் Posted: 30 Jun 2015 05:14 PM PDT மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, 7 வயது மகளும் தாயும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்று முன்தினம் வந்த நபர் ஒருவர், தான் பீகாரிலிருந்து |
| இந்தியாவிற்குள் வர முயற்சித்த 23 வங்கதேசத்தினர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம் Posted: 30 Jun 2015 01:47 PM PDT வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்த 23 கிராமமக்கள், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் (BSF) தடுத்து நிறுத்தப்பட்டனர். வங்க தேசத்தின் கோவாய் மாவட்டத்தில் உள்ள அஷ்ராம்பரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்த 23 பேரும் தங்கள் கிராமத்தில் நடந்த |
| திகார் சிறையில் இருந்து தப்பியோடிய 2-வது கைதியும் பிடிபட்டான் Posted: 30 Jun 2015 12:55 PM PDT தீவிர கண்காணிப்புக்கு பெயர் போன டெல்லி திகார் சிறையிலிருந்து தப்பியோடிய 2-வது கைதியும் போலீசாரிடம் பிடிபட்டான். தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறையாக டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறை உள்ளது. இந்த சிறையை பலத்த பாதுகாப்புக்கு உதாரணமாக சொல்வார்கள். 24 மணி நேரமும் |
| இந்திய கடற்படைக்கு 3 புதிய போர்க்கப்பல்கள், மேலும் 48 தயாரிப்பில் உள்ளது- கடற்படை அதிகாரி Posted: 30 Jun 2015 10:56 AM PDT எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும், கடல்வழிக் கடத்தலை தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும் 3 புதிய வாட்டர் ஜெட் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுவதாகவும், மேலும் 48 போர்க்கப்பல்கள் நாடு முழுவதும் உள்ள கப்பல் கட்டுமான தளங்களில் தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் |
| குஜராத்தில் ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க முடிவு Posted: 30 Jun 2015 09:43 AM PDT பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து அடுத்த மாத இறுதியில் அளிக்கப்படும் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி ராமன்லால் வோரா தெரிவித்துள்ளார். |
| Posted: 30 Jun 2015 09:26 AM PDT மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு முறைப்பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் மாநில தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய், மாநில தலைமை செயலாளர் சுவாதீன் சத்ரியா, முதன்மை செயலாளர் பிரவீன் பர்தேஷி உள்ளிட்ட குழுவினரும் உடன் சென்றனர். மும்பை விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த ஏர் இந்தியா விமானத்தில் அவர்கள் ஏறச் சென்றபோது முதன்மை செயலாளர் பிரவீன் |
| இந்திரா காந்தியின் படுகொலையை தற்கொலையாக அறிவிக்க கோரிய வழக்கு 29 ஆண்டுகளுக்கு பின்னர் தள்ளுபடி Posted: 30 Jun 2015 08:46 AM PDT இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கொலை அல்ல தனது மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்க இந்திரா காந்தியின் தற்கொலை முயற்சியாக இதை அறிவிக்க வேண்டும் என குஜராத் மாநிலத்தை சேர்ந்த |
| இரண்டாம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு 2.25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்தனர் Posted: 30 Jun 2015 08:16 AM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குகின்றது. 59-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து |
| Posted: 30 Jun 2015 08:03 AM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. டெல்லி நிலவரப்படி, பெட்ரோல் விலை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |