மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எம்.எல்.ஏ. தொலைபேசி ஒட்டுகேட்பு: சந்திரசேகரராவ் மீது வழக்கு
- பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 லட்சத்தை கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார்
- அரசின் அலட்சியத்தால் 9 வயது மகனைப் பறி கொடுத்த கூலித்தொழிலாளி: வழக்கால் நடுங்கும் டெல்லி நிர்வாகம்
- ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை
- இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஆஸ்பத்திரி
- 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
- மும்பை தீ விபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டவர்களை சாதுர்யமாக மீட்ட பீட்சா டெலிவரி பாய்
- கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ்: சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டியதாக ம.பி. அரசு அதிகாரிகள் குற்றச்சாட்டு
- கிரீமிலேயர் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: மத்திய அரசு ஆலோசனை
- நேரடி விற்பனை இல்லாததால் 40 சதவீத நூடுல்சை திரும்பப் பெறுவதில் சிக்கல்
- லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வுடன் பேசிய டேப் ஒளிபரப்பு - சந்திரபாபு நாயுடுக்கு சிக்கல் வலுக்கிறது
- உத்தரபிரதேசத்தில் உள்ள சிறைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
- காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம்: பாதுகாப்புத்துறை வட்டாரம் அறிவிப்பு
- ராக்கிங் புகாரில் சிக்கிய 7 மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி
- நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்: பிரதமர் மோடி 25-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
- சீன அச்சுறுத்தலை சமாளிக்க எல்லைப்பகுதிக்கு கூடுதல் படை
- மேகி நூடுல்ஸ் விவகாரம்: நுகர்வோர் ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு
- மோடியை கிண்டல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு பேட்டி
- மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்
- டெல்லியில் நாளை காங்கிரஸ் முதல்-மந்திரிகள் கூட்டம்
| எம்.எல்.ஏ. தொலைபேசி ஒட்டுகேட்பு: சந்திரசேகரராவ் மீது வழக்கு Posted: 07 Jun 2015 11:08 PM PDT தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி தலைவர் சந்திரசேகரராவ் முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. திடீரென்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் |
| பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 லட்சத்தை கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார் Posted: 07 Jun 2015 11:04 PM PDT இஸ்கான் நிறுவனம் ஆண்டு தோறும் பகவத் கீதை போட்டியை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் சிறுமி மரியம் சித்திக் பகவத் கீதை போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். |
| அரசின் அலட்சியத்தால் 9 வயது மகனைப் பறி கொடுத்த கூலித்தொழிலாளி: வழக்கால் நடுங்கும் டெல்லி நிர்வாகம் Posted: 07 Jun 2015 10:50 PM PDT டெல்லி அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் தன் 9 வயது மகனின் உயிரைப் பலி கொடுத்த கூலித்தொழிலாளி தொடுத்த வழக்கு அம்மாநில நிர்வாகத்தை உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், டெல்லியில் தினசரி கூலி வேலை செய்து வரும் நவல் கிஷோர் ஷாவின் 9 வயது மகன், பட்லி தொழிற்பேட்டை அருகே |
| ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை Posted: 07 Jun 2015 09:42 PM PDT ரெயில் பயணிகள் அவசர தேவை ஏற்படும் போது, ஓடும் ரெயிலை நிறுத்த சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் ''ரெயிலை நிறுத்த சங்கிலியைப் பிடித்து இழுக்கவும்'' என்று ரெயில்வே நிர்வாகம் எழுதி வைத்துள்ளது. |
| இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஆஸ்பத்திரி Posted: 07 Jun 2015 09:41 PM PDT கேரளாவில் உள்ள காடுகளில் ஏராளமான யானைகள் உள்ளன. மேலும் இங்குள்ள அனைத்து கோவில்களிலும் நடக்கும் விழாக்களில் யானைகள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக சாமி விக்கிரங்களை யானைகள்தான் சுமந்து செல்லும். எனவே யானைகள் இல்லாமல் இங்கு எந்த கோவில் விழாக்களும் நடப்பது இல்லை. |
| 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: விசாரணை அறிக்கை இன்று தாக்கல் Posted: 07 Jun 2015 09:36 PM PDT திருப்பதி அருகே வனத்துறைக்கு சொந்தமான காட்டுக்குள் புகுந்து செம்மர கட்டைகளை வெட்டி கடத்தியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 7–ந்தேதி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர மாநில அதிரடிப்படை போலீசாரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. |
| மும்பை தீ விபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டவர்களை சாதுர்யமாக மீட்ட பீட்சா டெலிவரி பாய் Posted: 07 Jun 2015 09:34 PM PDT மும்பை சண்டிவலி பகுதியில் 24 மாடிகளைக் கொண்ட 'லேக் ஹோம்ஸ்' என்ற குடியிருப்பின் 14வது மாடியில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கிய 25 பேரை பீட்சா டெலிவரி செய்யும் வாலிபர் ஒருவர் அங்கிருந்த சிலரின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார். 21 வயதான ஜிதேஷ், ஈகிள் பாய்ஸ் பீட்சா நிறுவனத்தில் பணிபுரிகிறார். தீவிபத்து நடந்த குடியிருப்புக்கு அருகில் பீட்சா டெலிவரி செய்யச் |
| கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ்: சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டியதாக ம.பி. அரசு அதிகாரிகள் குற்றச்சாட்டு Posted: 07 Jun 2015 09:34 PM PDT மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாலையை ஆக்கிரமித்து கோயிலை விரிவுபடுத்தியதாக கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் பிந்த் பகுதியில் உள்ள அனுமன் கோயில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து இது |
| கிரீமிலேயர் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: மத்திய அரசு ஆலோசனை Posted: 07 Jun 2015 09:26 PM PDT அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் சேருவதற்கு 'கிரீமிலேயர்' இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டவர்களில் ஓரளவு செல்வ வளம் பெற்று பொருளாதார சமூக அந்தஸ்துடன் இருப்பவர்கள்தான் கிரீமிலேயர் என்று அழைக்கப்படுகிறார்கள். |
| நேரடி விற்பனை இல்லாததால் 40 சதவீத நூடுல்சை திரும்பப் பெறுவதில் சிக்கல் Posted: 07 Jun 2015 09:26 PM PDT மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரசாயன உப்பு கலவை அதிகம் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நாடு முழுவதும் அதை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சை தயாரித்து விற்பனை செய்யும் சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவனத்துக்கு இது கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. |
| லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வுடன் பேசிய டேப் ஒளிபரப்பு - சந்திரபாபு நாயுடுக்கு சிக்கல் வலுக்கிறது Posted: 07 Jun 2015 08:55 PM PDT தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஸ்டீவன் சன்னின் ஓட்டை 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வாங்க முயன்றதாக கூறி தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர்கள் செபாஸ்டியன், உதய்சிம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். |
| உத்தரபிரதேசத்தில் உள்ள சிறைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை Posted: 07 Jun 2015 08:33 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் சட்டவிரோதமாக கைதிகள் செல்போன், கத்தி போன்ற பொருட்களையும், போதைப்பொருட்களையும் வைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்த அரசு உத்தரவிட்டது. காசியாபாத், ஆக்ரா, லக்னோ, வாரணாசி உள்பட அனைத்து மாவட்ட |
| காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம்: பாதுகாப்புத்துறை வட்டாரம் அறிவிப்பு Posted: 07 Jun 2015 08:29 PM PDT காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்ப்பு போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது, அங்கு மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. |
| ராக்கிங் புகாரில் சிக்கிய 7 மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி Posted: 07 Jun 2015 08:21 PM PDT மராட்டிய மாநிலம புனே ராணுவ கல்லூரியில் படித்து வரும் 7 மாணவர்கள் மீது கடந்த ஆண்டு (2014) மார்ச் மாதம் ஜூனியர் மாணவர்களை 'ராக்கிங்' செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை பிற கல்லூரிகளில் சேர்க்கவும் 3 ஆண்டுகள் தடை விதித்து புனே பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. |
| நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்: பிரதமர் மோடி 25-ந் தேதி தொடங்கி வைக்கிறார் Posted: 07 Jun 2015 08:13 PM PDT கிராமப்புற பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனால் பெரிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய சவால்களும், நெருக்கடிகளும் நகர நிர்வாகத்துக்கு உருவாகி உள்ளது. கிராம மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வசதிகளும் கொண்ட 100 'ஸ்மார்ட்' நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். இதேபோல் 500 நகரங்களை புதுப்பிக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்ட 'அம்ருத்' என்ற திட்டமும் தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நகரங்களின் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள் |
| சீன அச்சுறுத்தலை சமாளிக்க எல்லைப்பகுதிக்கு கூடுதல் படை Posted: 07 Jun 2015 08:10 PM PDT லடாக் எல்லைப்பகுதியில் சீன அச்சுறுத்தலை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்துக்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை பரிந்துரைத்துள்ளது. இந்தியா-சீனா இடையே 3,488 கி.மீ. தூர சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. காஷ்மீரின் லடாக் பகுதியில் இருந்து அருணாசல பிரதேசம் வரையிலான |
| மேகி நூடுல்ஸ் விவகாரம்: நுகர்வோர் ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு Posted: 07 Jun 2015 08:04 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில் அதிக அளவு ரசாயன உப்பு இருந்தது கண்டறியப்பட்டு அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தரமற்ற உணவு விற்பனைக்காகவும், தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை வழிநடத்தியதற்காகவும் நெஸ்லே நிறுவனத்தின் மீது தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. மத்திய அரசின் நுகர்வோர் அமைச்சகம் மேலும் தெரிவிக்கையில், இந்த விவகாரம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் ஆலோசனையை கேட்டுள்ளோம். அவர் மத்திய அரசு சார்பில் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஆஜர் ஆவார் |
| மோடியை கிண்டல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு பேட்டி Posted: 07 Jun 2015 07:30 PM PDT மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடப்பாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஐ.ஐ.டி. பிரச்சினைக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை. சிலர் வேண்டும் என்றே மத்திய அரசை இதில் இழுக்கின்றனர். அது கல்வி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினை. இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சி போட்டியிடுவதா? என்பது பற்றி மாநில பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்து கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். வேட்பு மனு |
| மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் Posted: 07 Jun 2015 05:44 PM PDT கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் சேர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான அமைந்துவிட்டனர். |
| டெல்லியில் நாளை காங்கிரஸ் முதல்-மந்திரிகள் கூட்டம் Posted: 07 Jun 2015 03:29 PM PDT காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகளின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இதில் அருணாசலபிரதேசம், மேகாலயா, அசாம், மிசோரம், மணிப்பூர், கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், இமாசலபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள் கலந்துகொள்கின்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |