Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இமாச்சல பிரதேச முதல்–மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு: ஊழல் புகார் பற்றிய விசாரணை தொடங்கியது

Posted: 18 Jun 2015 11:46 PM PDT

இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி வீர்பத்திரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வீர்பத்திரசிங் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இரும்புத் துறை அமைச்சராக இருந்தார். மத்திய மந்திரியாக இருந்த போது வீர்பத்திர சிங் வருமானத்துக்கு

லலித் மோடி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய கீத் வேஸ்: பிரிட்டன் உள்துறை தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்வு

Posted: 18 Jun 2015 11:38 PM PDT

லலித் மோடி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவரும், பிரிட்டனில் நீண்ட காலமாக எம்.பி.யாக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கீத் வேஸ், அந்நாட்டின் உள்துறை விவகார தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கேரள வாலிபர் சுட்டுக்கொலை

Posted: 18 Jun 2015 11:26 PM PDT

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஜோன். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அஜேஸ் (வயது 27). இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த அஜேஸ் பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் தென் ஆப்பிரிக்கா சென்றார். கடந்த 15–ந்தேதி அவர்

வசுந்தரா ராஜேயின் பஞ்சாப் பயணம் ரத்து

Posted: 18 Jun 2015 11:24 PM PDT

லண்டனில் இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்ந்து ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டு இருந்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதியில் பிரதமர் மோடி ரூ.35 லட்சம் மட்டுமே செலவழித்துள்ளார்: ரூ.4.65 கோடி இன்னும் பயன்படுத்தவில்லை

Posted: 18 Jun 2015 11:04 PM PDT

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் எம்.பி.க்களுக்கு, அவர்களது தொகுதியை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெரும்பாலான எம்.பி.க்கள் முழுமையாக செலவு செய்வதில்லை. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 எம்.பி.க்களில் 49 எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை சரிவர செலவு செய்யவில்லை. இந்த 49 பேரில் 43 எம்.பி.க்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.

சோலார் மோசடி வழக்கு: 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு - சரிதா நாயர் பேட்டி

Posted: 18 Jun 2015 10:51 PM PDT

கேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசை தாக்கி கைதி விடுவிப்பு: முன்னாள் காங்கிரஸ் எம்.பி.க்கு 6 மாதம் சிறை தண்டனை

Posted: 18 Jun 2015 10:50 PM PDT

தெலுங்கானா மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள அமலாபுரத்தில் கடந்த 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மால மகாநாடு என்ற அமைப்பின் தலைவர் சாரம் சிவாஜி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் கும்பலாக நின்ற சிலரை அமலாபுரம் போலீசார் கைது செய்தனர். இதனை கேள்விபட்ட அப்போதைய

பூம் பூம் மாடு என விமர்சிப்பதா?: ஆந்திர மந்திரிகள் மீது கவர்னர் நரசிம்மன் கோபம்

Posted: 18 Jun 2015 10:44 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ.50 லட்சம் கொடுத்ததாக தெலுங்குதேச எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி அவரது உதவியாளர் உதய்சிம்ஹா, செபாஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த லஞ்ச வழக்கில் தொடர்புடைய தெலுங்குதேசம் தலைவர்களுக்கு ஊழல் தடுப்பு துறை போலீசார் நோட்டீசு வழங்கி

ராகுலுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து - காங்கிரஸ் நிர்வாகிகள் குவிந்தனர்

Posted: 18 Jun 2015 10:05 PM PDT

விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி ராகுலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

சுஷ்மா, வசுந்தராவை நீக்காவிட்டால் பாராளுமன்ற கூட்டத்தை நடத்த விடமாட்டோம்: குலாம்நபி ஆசாத் மிரட்டல்

Posted: 18 Jun 2015 10:00 PM PDT

லண்டனில் தங்கி இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பயண விசா பெறுவதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவிய விவகாரம் பா.ஜனதாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டது. என்றாலும்

சரிதா நாயர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்: சூரியசக்தி மின்கூரை மோசடி வழக்கில் முதல் தீர்ப்பு

Posted: 18 Jun 2015 09:46 PM PDT

கேரள மாநிலத்தில் சூரியஒளி மின்உற்பத்தி செய்யும் கூரை அமைத்துத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, 2013-ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் வெளியாயின. இதில் முக்கிய குற்றவாளியாக நடிகை சரிதா எஸ்.நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது புகார்கள் குவிந்தன.

அலகாபாத் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி - 12 பேர் படுகாயம்

Posted: 18 Jun 2015 09:41 PM PDT

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் அருகே பிரதாப்கர்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். காலை 5 மணியளவில் ஓட்டலில் உள்ள மின் இணைப்பில் கசிவு

மும்பையில் போலி மதுபானம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

Posted: 18 Jun 2015 09:19 PM PDT

மும்பை அருகே, மால்வானி பகுதியில் உள்ள ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் மது அருந்தியவர்களில் பலருக்கு நேற்று காலை முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர்களை மலாட் மற்றும் கண்டிவாலியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு

மத்திய அரசின் தீவிர நடவடிக்கை எதிரொலி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்குவது குறைந்தது

Posted: 18 Jun 2015 09:01 PM PDT

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த கருப்பு பண முதலைகளின் சொர்க்கபுரியாக சுவிட்சர்லாந்து வங்கிகள் திகழ்கின்றன. இந்த வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான பெரும் செல்வந்தர்கள் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். இது இந்திய

வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் நிதி விவரத்தை தெரிவிக்க கெடு நிர்ணயம்

Posted: 18 Jun 2015 09:01 PM PDT

வெளிநாட்டு நன்கொடை பெறும் 9 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமம், கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. 4 ஆயிரத்து 470 தொண்டு நிறுவனங்களின் உரிமம், இந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொண்டு நிறுவனங்களின் மீதான பிடியை இறுக்கும்

மும்பையில் கனமழை: புறநகர் ரெயில் சேவைகள் பாதிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 18 Jun 2015 09:00 PM PDT

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடும் மழை காரணமாக புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் பல மடங்கு பூச்சி கொல்லி மருந்து: கேரளா புகார்

Posted: 18 Jun 2015 07:45 PM PDT

கேரள அரசு தங்கள் மாநிலத்துக்கு தேவையான சுமார் 80 சதவீத காய்கறிகளை அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கணிசமான காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஐ.எப்.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற பார்வையற்ற சென்னை பெண்ணுக்கு டெல்லியில் பாராட்டு விழா

Posted: 18 Jun 2015 04:53 PM PDT

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ்-மேரி பத்மஜா தம்பதியின் மகள் பினோ ஜெபின் (வயது 24). பார்வையிழந்த எம்.ஏ. பட்டதாரியான இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்ற பினோ ஜெபின், ஐ.எப்.எஸ். பணிக்கு (இந்திய அயல்நாட்டு பணி) தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இந்தியாவிலேயே பார்வையிழந்த பெண் ஒருவர் ஐ.எப்.எஸ். அதிகாரியாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை ஆகும்.

லலித் மோடிக்கு எதிராக காங். ஆட்சியில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: மத்திய அரசு கேள்வி

Posted: 18 Jun 2015 04:38 PM PDT

லலித் மோடி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில், காங்கிரஸ் கட்சிக்கு மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா நேற்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதுபற்றி நேற்று அவர் கூறும்போது, "நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தனது அடித்தளத்தை இழந்து விட்டது. அதனால் பிரச்சினையை தேடுகிறது. ஆனால் எந்த பிரச்சினையும் கிடைக்கவில்லை. அவர்கள் ஆட்சியின்போதுதான் எல்லாம் (லலித் மோடி ஊழல் குற்றம் புரிந்தது)

மோடியைத்தான் அத்வானி விமர்சித்து இருக்கிறார் எதிர்க்கட்சிகள் கருத்து

Posted: 18 Jun 2015 03:35 PM PDT

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருப்பதுவும், அரசியல் தலைமையிடம் நம்பிக்கை இல்லை என கூறி இருப்பதுவும் பரபரப்பான விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி உள்ளனர். அது வருமாறு:- காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கருத்து தெரிவிக்கையில், "நீதிபதி வெளியே வந்திருக்கிறார். அத்வானி பேசுகிற


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™