Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம்: கீழ்த்தரமான அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது - பா.ஜ.க. குற்றச்சாட்டு

Posted: 15 Jun 2015 11:01 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முறைகேடு செய்த லலித்மோடிக்கு விசா கொடுக்க உதவுமாறு இங்கிலாந்து எம்.பியிடம் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 700 கோடி முறைகேடு செய்தவருக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவி செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பு ஏற்று சுஷ்மா மந்திரி

இந்திய தேசம் இன்று: அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டிய பெண் - விரட்டிப்பிடித்த போலீஸ்

Posted: 15 Jun 2015 11:01 PM PDT

நேற்று நள்ளிரவு மும்பையில் உள்ள பாந்த்ரா புறநகர் பகுதியில் அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக

அலகாபாத் அருகே ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி பாதுகாப்பாக வெளியேறினார்

Posted: 15 Jun 2015 09:40 PM PDT

இந்திய விமானப்படையை சேர்ந்த ஜாகுவார் போர் விமானம் அலகாபாத் அருகே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி பாதுகாப்பாக வெளியேறினார். இன்று காலை சுமார் 7.25 மணி அளவில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஜாகுவார் போர் விமானம் தனது வழக்கமான பயிற்சிக்காக கிளம்பி சென்றது.

முஸ்லிம்கள் கல்வி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இஸ்லாத்தை புகழ்ந்து பேசிய மோடி

Posted: 15 Jun 2015 09:40 PM PDT

பிரபல வரலாற்று ஆய்வாளரும், பேராசியருமான ஜே.எஸ். ராஜபுத் மற்றும் இந்திய இஸ்லாமிய கலாச்சார மைய தலைவரான சிராஜூதின் குரேஷி ஆகியோர் இணைந்து எழுதிய 'முஸ்லிம்கள் கல்வி' என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி பாரதப் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி இஸ்லாத்தை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

நியமன எம்.எல்.ஏ.யிடம் போன் பேச்சு: சந்திரபாபு நாயுடுவிடம் குரல் பரிசோதனை - தெலுங்கானா போலீஸ் முடிவு

Posted: 15 Jun 2015 09:38 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் எம்.எல்.சி. தேர்தல் நடந்த போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி, நியமன எம்.எல்.ஏ.க்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்டார். தெலுங்கானா போலீசார் ரேவந்த் ரெட்டி எம்.எல்.ஏ.யிடம் விசாரணை நடத்தி

மைசூருவில் பிரசித்தி பெற்ற சாமுண்டிமலை கோவிலுக்கு விரைவில் ரோப்கார் சேவை: மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்

Posted: 15 Jun 2015 08:27 PM PDT

மைசூருவில் உள்ள மண்டல கமிஷனர் அலுவலகத்தில் சுற்றுலா தலங்களின் வளர்ச்சிப் பணிகள் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில சுற்றுலா துறை மற்றும் உயர்கல்வித் துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமை தாங்கினார்.

ஊழல் செய்வோருக்கு கர்நாடக அரசு அடைக்கலம் கொடுக்கிறது: ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு

Posted: 15 Jun 2015 08:26 PM PDT

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு லோக்-ஆயுக்தா கேட்டது. ஆனால் இதை மாநில

கர்நாடகத்தில் ரூ.550 கோடி அரசு பணத்தை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர்: குமாரசாமி குற்றச்சாட்டு

Posted: 15 Jun 2015 08:12 PM PDT

கர்நாடக ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ரூ.2,500 கோடி ஒதுக்குவதாக சித்தராமையா கூறியுள்ளார். அந்த பணம் எங்கு உள்ளது என்பதை அவர்

குழந்தைகள் கடத்தி விற்பனையா? தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

Posted: 15 Jun 2015 08:02 PM PDT

சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி, கேரள மாநிலம் திருச்சூரில் ஏலம் விடப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளுக்கு விளக்கம் கோரி நோட்டீசு அனுப்பி உள்ளது.

ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் கோரி முன்னாள் ராணுவத்தினர் தொடர் உண்ணாவிரதம்

Posted: 15 Jun 2015 08:00 PM PDT

முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 14-ந்தேதி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் ராணுவத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் செயலாளர் மீது ஊழல் புகார்

Posted: 15 Jun 2015 07:57 PM PDT

டெல்லி பேச்சுவார்த்தை ஆணையத்தின் (டி.டி.சி.) முன்னாள் உறுப்பினர்-செயலாளரான அஷிஷ் ஜோஷி, டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் எம்.கே.மீனாவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக இருக்கும்

லலித் மோடியின் வக்கீலாக 9 ஆண்டுகள் பணியாற்றிய சுஷ்மா சுவராஜின் மகள்

Posted: 15 Jun 2015 07:31 PM PDT

லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா சுவராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுஷ்மா சுவராஜின் மகளும், வக்கீலுமான பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக கோர்ட்டுகளில் ஆஜராகி வருவது தெரிய வந்துள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் லலித் மோடிக்காக ஆஜராகும் வக்கீல்களில் ஒருவராக பன்சூரி சுவராஜின் பெயர், கோர்ட்டு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது

ஆட்டோ டிரைவர் டூ அசத்தல் பைலட்: சாதனை நாயகனின் சரித்திரப் பயணம்

Posted: 15 Jun 2015 05:22 PM PDT

வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேகம் கொடுக்கும் கதை ஸ்ரீ காந்துடையது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் அப்பாவிற்கு மகனாய்ப் பிறந்தவர் ஸ்ரீ காந்த் பந்தாவனே. பள்ளிக்குச் செல்லும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக டெலிவரி பாயாக ஆட்டோ ஓட்டும் வேலை பார்த்து வந்தார். அப்படி ஒருநாள் ஏர்போர்ட்டுக்கு டெலிவரி செய்வதற்காகச் சென்ற போது ஏர்போர்ட்டில் உள்ள டீ கடைக்காரர் ஒருவரிடம் பேசிக்

நாடு முழுவதும் 320 கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் அழிப்பு- நெஸ்லே

Posted: 15 Jun 2015 03:51 PM PDT

ரசாயனக்கலப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மேகி நூடுல்ஸ் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டதையடுத்து 320 கோடி ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டு வருவதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் மோனோ சோடியம் குளூடாமேட் எனப்படும் ரசாயன உப்பு அதிகமாக இருப்பதால் 'மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது' என அண்மையில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்தது.

அமெரிக்காவில் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: வெளி விவகார அமைச்சகத்திடம் உதவிகோரும் தெலுங்கானா

Posted: 15 Jun 2015 02:39 PM PDT

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் தெலுங்கானா மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தெலுங்கானா அரசு வெளி விவகாரத்துறை மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகத்திடம் உதவி கோரியுள்ளது. கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் சந்திரசேகரராவ் தெலுங்கானா ஒரு திறமையான மாணவனை இழந்து விட்டதாக தெரிவித்தார்.

இயற்கையின் சட்டப்படியே பத்திரிகையாளர் எரிக்கப்பட்டார்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Posted: 15 Jun 2015 02:05 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாநில அமைச்சர் இந்த சம்பவத்தை இயற்கையின் சட்டப்படி நடந்தது என்று அதிகேவலமான முறையில் வர்ணித்துள்ளார்.

மூடி மறைத்த பெற்றோர்: பாலியல் பலாத்காரம் செய்த மாமா மீது துணிச்சலாக வழக்கு பதிவு செய்த 14 வயது இளம்பெண்

Posted: 15 Jun 2015 11:13 AM PDT

பாலியல் பலாத்காரங்களின் தாயகமாகத் திகழும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்த மாமாவின் மீது இளம்பெண் துணிச்சலாக போலீசில் புகாரளித்துள்ளார். கிரேடர் நொய்டாவில் வசிக்கும் 14 வயது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் பிஸ்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டிற்குச் சென்றார். புழுக்கம் காரணமாக மாடியில் படுத்திருந்த அந்தப் பெண்ணை அவரது மாமா பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார். மாமாவின் இந்த கொடூர

யோகா எக்ஸ்பிரஸாக மாறும் ஹரித்வாரா மெயில்

Posted: 15 Jun 2015 10:49 AM PDT

'ஹரித்வாரா மெயில்' என்று அழைக்கப்பட்டு வந்த ரெயிலை 'யோகா எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றம் செய்வதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்திலிருந்து ஹரித்வார் சென்று மீண்டும் அகமதாபாத் திரும்பும் ரெயில் எண் 19031/19032 ஐக் கொண்ட 'ஹரித்வார் மெயில்' உடனடியாக 'யோகா எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் ரெயில் நேரங்களில் மாற்றமில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

போலி ஆவண புகார்: லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு

Posted: 15 Jun 2015 10:25 AM PDT

கோச்சடையான் படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பாக மோசடி, மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தில் கொடுத்தது போன்ற காரணங்களுக்காக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ'

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த பொறியாளருக்கு மாங்காய்கள் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம்

Posted: 15 Jun 2015 09:29 AM PDT

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக சோப், செங்கல் அனுப்பிய வரிசையில், சமீபத்திய வரவாக தெலுங்கானா மாநிலத்தில் ஒருவருக்கு மாங்காய்களை அனுப்பியுள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த பொறியாளர் சிலுவேரி சிருசரண் என்பவர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™