Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி போராட்டம்

Posted:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மித் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

தமிழகத்தில் ஆட்சி அரசாங்கம் நடப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்: இவிகேஎஸ்

Posted:

தமிழகத்தில் ஆட்சி அரசாங்கம் நடப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள் என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

லட்சுமிமேனனுக்கு சிம்புதான் அட்வைசர்?

Posted:

லட்சுமிமேனனுக்கு அறிவிக்கப்படாத அட்வைசர் ஆகியிருக்கிறார் சிம்பு.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : பரணி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : அஸ்வினி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் யோகாவை செய்தால் எந்த மதமும் தள்ளிவைக்காது:ராம்தேவ்

Posted:

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் யோகாவை செய்தால் எந்த மதமும் தள்ளிவைக்காது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.


Read more ...

எலி - விமர்சனம்

Posted:

தமிழ்சினிமாவை திடுதிடுக்க வைத்த ஒரு நகைச்சுவை புலி, இப்படி நைஞ்சு போன எலியாகிருச்சே? என்கிற கவலை வாட்டாமல் ஒருவராலும் தியேட்டரை விட்டு வெளியே வரவே முடியாது. இந்த படத்தின் மூலம் கஞ்சா கருப்பு, சிசர் மனோகரையெல்லாம் கூட ‘தேவலாம்’ ஆக்குகிறார் வடிவேலு! ஆளை விட்டால் போதும் என்று வெளியே ஓடிவரும் அந்த நேரத்திலும் கட்ட தொர, புலிப்பாண்டியெல்லாம் கண்முன்னே வந்து போவதுதான் அவர் இத்தனை காலம் போட்ட அசைக்க முடியாத அஸ்திவாரம். இருந்தாலும் பேஸ்மென்ட்டும் வீக்!, பில்டிங்கும் வீக்.! வடிவேலுவுக்கு உடனடி தேவை, நல்ல கொத்தனார்கள் கூட இல்லை.... சுய பரிசோதனை!

அறுபதுகளில் நடக்கிறது கதை. சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் இவரை, போலீசே உதவிக்கு அழைக்கிறது. சிகரெட் கடத்தலில் ஈடுபடும் அந்த கொள்ளைக்காரர்களின் கூட்டத்தில் எலி போல நுழைந்து வேவு பார்த்து அதை அப்படியே போலீசுக்கு போட்டுக் கொடுப்பதுதான் வடிவேலுவிற்கு இடப்படும் பணி. எப்படியோ நுழையும் அவர், அங்கிருந்த குற்றவாளிகளை போலீசிடம் மாட்டிவிட்டுவிட்டு எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் முடிவு.

ஏதோ, தான் பண்ணும் சேட்டைகளையெல்லாம் இந்த சமூகம் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் என்ற நினைப்பு வடிவேலுவுக்கு பலமாகவே இருக்கிறது. அதன் விளைவை ஒவ்வொரு பிரேமிலும் ‘அனுபவி’க்கிறோம். இந்த படத்தில் வாய்விட்டு சிரிக்க ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா என்று வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு தின்றுவிட்டு  யோசித்தாலும் வெறுமைதான் மிச்சம். ஆனால் ஓப்பனிங்கிலேயே அவர் அடிக்கும் சிக்சர் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ‘ஜ்மோக்க்கிங் இஜ் என்ஞ்ஜுரியஜ் டூ கெலுத்த்’ என்று ஆரம்பத்தில் வரும் அந்த டைட்டில் கார்டை அவர் படிக்கிற போது அந்த குரலைக் கேட்டே குஷியாகிறது தியேட்டர். அதற்கப்புறம்...? ‘போங்கடா வெண்ணைங்களா’ என்கிறார் வடிவேலு. பல காட்சிகளில் டாய்லெட்டில் முக்குவதை போலவே முகத்தை வைத்துக் கொள்கிறாரா? தாங்கல...

அவ்வளவு கோடிகள் போட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதில் நாமும் நடிக்கிறோம். அட்லீஸ்ட் பற்களை மட்டுமாவது ஒரு மருத்துவரிடம் சென்று க்ளீன் செய்து கொள்ளக் கூடாதா அவர்? குளோஸ் அப்புகள் ஒவ்வொன்றும் கொடுமை வடிவேலு. இந்த படத்தை பொறுத்தவரை வடிவேலுவே ஸ்பெஷல் தோசை இல்லை என்றாகிவிட்டது. இதில் சதா தோசை மட்டும் என்னவாம்? ரொம்ப ரொம்ப ‘சாதா’ தோசை!

முன்பெல்லாம் வடிவேலுவின் நகைச்சுவை படையில் விதவிதமாக வந்து கலக்கும் பலரில், சிலரை தவிர யாருமே இந்த படத்தில் இல்லை. அதையே பெரும் திராபையாக உணர முடிகிறது. மருந்துக்கு கூட கேமிராவை மற்றவர்கள் பக்கம் திருப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் வடிவேலு, எல்லா காட்சிகளிலுமே தான் இருக்கும்படி கவனித்துக் கொண்டிருக்கிறார். (இலை நிறைய உப்பு! அந்த உப்பும் கூட சப்)

இசை வித்தியாசாகர். பின்னணி இசையில் படுத்தி எடுக்கிறார். அதற்காக முன்னணி இசை எப்படி என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். நல்லவேளை.... இந்தியில் இருந்து ‘மேரே ஹப்பு நக்கி’  பாடலை ரைட்ஸ் வாங்கி உள்ளே விட்டிருக்கிறார்கள். தப்பித்தோம்! அதில் மட்டும் வடிவேலுவின் பர்பாமென்ஸ் ரகளை!

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டனின் லைட்டிங்ஸ் பிரமாதம். அறுபதுகளை கண்முன் கொண்டு வருவதில் பலத்த சிக்கல்கள் இருந்தாலும் முடிந்தவரை வென்றிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.

பட்டாபட்டி என்ற அருமையான நகைச்சுவை படத்தை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவ்வளவு சுமாரான படத்தையும் அவர்தான் இயக்கியிருக்கிறார் என்றால் நம்பதான் முடியவில்லை.

எலி- பொறியில் சிக்கட்டும். அது அதனுடைய தலையெழுத்து. அந்த பொறிக்குள் படம் பார்க்கிறவர்களையும் சிக்க வைத்திருக்கிறீரே... அது என்ன லாஜிக் எலி மன்னவா?



 - 4தமிழ்மீடியாவிற்காக : ஆர்.எஸ்.அந்தணன்


Read more ...

வாஜ்பாயி உள்ளிட்டவர்களின் அதிகாரப் பகிர்வுக்கே எனது ஆதரவு:அத்வானி

Posted:

முன்னால் பிரதமர் வாஜ்பாயி உள்ளிட்டவர்களின் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் எனது ஆதரவு என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான அத்வானி கூறியுள்ளார்.


Read more ...

ஜூலை முதல் வாரத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!

Posted:

வருகிற ஜூலை மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.


Read more ...

காக்கா முட்டை திரைப்படத்துக்கு கர்நாடக அரசு முழு வரிவிலக்கு!

Posted:

தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த காக்கா முட்டை தமிழ் படத்துக்கு கர்நாடக அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது.


Read more ...

சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் மஹிந்த ஆதரவு அமைப்பாளர்களை நீக்க மைத்திரி தீர்மானம்!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சித் தலைமையின் தீர்மானங்களை மீறிச் செயற்படும் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 


Read more ...

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளியோம்: விக்கிரமபாகு கருணாரட்ன

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி- மஹிந்த இணைப்புக்கான விசேட குழு ஜனாதிபதியைச் சந்தித்தது!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்கும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட விசேட இணைப்புக்குழு நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் சந்திப்பொன்றில் கலந்து கொண்டது. 


Read more ...

கொழும்பிலிருந்து பணம் வாங்கியதான சி.வி.விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு தவறானது: மாவை சேனாதிராஜா

Posted:

கொழும்பிலிருந்து (மத்திய அரசாங்கத்திடமிருந்து) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரடியாக பணம் வாங்கியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டுவது பிழையானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனாவிடமிருந்து இலங்கை விலகும்(?): மங்கள சமரவீர

Posted:

சீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை மீளாய்வு செய்யும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி துணை முதல்வருக்கு போக்குவரத்து போலீஸ் சம்மன்!

Posted:

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோரியாவுக்கு டெல்லி போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்து சம்மன் கொடுத்துள்ளது.


Read more ...

குருமாற்றப் பலன்கள் - 2015

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி; ஐ.தே.க. தீர்மானம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக் கட்சியாக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 


Read more ...

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் நிலை வராது: RSS

Posted:

இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் நிலை வராது என்று RSS திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 


Read more ...

தமிழகத்தைப் பார்த்து பாகிஸ்தானும் பின்பற்றலாமே: பாகிஸ்தான் ஊடகம்

Posted:

ரமலான் நோன்புக்கு என்று தமிழக அரசு பள்ளி வாசல்களுக்கு இலவச அரசி வழங்குவதை பாகிஸ்தான் அரசும் பின்பற்றலாமே என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

பேரறிவாளன் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Read more ...

நடிகர் சங்கத்தில் ஊழல் நடக்கிறது என்று கேட்கவில்லை:நடிகர் விஷால்

Posted:

நடிகர் சங்கத்தில் ஊழல் நடக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை, கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.


Read more ...

மேகதாதுவில் அணைக்கட்ட எந்த நிறுவனத்துக்கு அனுமதி?:பரிசீலனை

Posted:

மேகதாதுவில் அணைக்கட்ட எந்த நிறுவனத்துக்கு அனுமதி என்பதுக் குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், 4 நாட்களில் இறுதி முடிவு எடுபோம் என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Read more ...

தலைக்கவசம் அணிவதுக் குறித்த தமிழக அரசின் விழிப்புணர்வு பிரச்சாரம் போதவில்லை:நீதிபதி

Posted:

தலைக்கவசம் அணிவதுக் குறித்த தமிழக அரசின் விழிப்புணர்வு பிரச்சாரம் போதவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.


Read more ...

சமையல் எரிவாயு இணைப்பு எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்க கடைசி நாள்

Posted:

சமையல் எரிவாயு இணைப்பு எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்க வருகிற 30ம் திகதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™