Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இடைத்தேர்தலால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் உற்சாகம்: எதிர்க்கட்சிகளும் போட்டியிட வேண்டும் என ஆவல்

Posted:

பொதுத் தேர்தலுக்கு முந்தைய இடைத்தேர்தல் என்பதாலும், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட இருப்பதாலும், ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், உற்சாகத்தில் மிதக்கின்றனர். தேர்தல் பிரசாரம் களைகட்ட, ஆளுங்கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சிகளும் இங்கே களமிறங்க வேண்டும் என, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.அ.தி.மு.க.,வினரே எதிர்பாராத வகையில், இந்த தொகுதியை ஜெயலலிதா தேர்வு செய்துள்ளதற்கு, பெருமாள் பெயரில் (ராதாகிருஷ்ணன் நகர்) உள்ள தொகுதி என்பது தான் முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது.மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா, போட்டியிடும் தொகுதிகள் என, ...

இந்தியாவுக்கு ரூ.60 ஆயிரம் கோடி தர தென் கொரியா சம்மதம்: 'ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்

Posted:

சியோல் : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கும், ரயில்வே, மின் துறை போன்றவற்றின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், இந்தியாவுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க, தென் கொரியா அரசு முன்வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.பிரதமர் நரேந்திர மோடி, சீனா, மங்கோலியா நாடுகளில், சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, இறுதிக் கட்டமாக, நேற்று தென் கொரியா சென்றார். சியோல் விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர், மோடியை அன்புடனும், உற்சாகத்துடனும் வரவேற்றனர். சியோலில் உள்ள போர் ...

மோடி அரசுக்கு ராகுல் பூஜ்ஜியம் மார்க்!

Posted:

அமேதி: ''விவசாயிகள் பிரச்னையை கையாளும் விஷயத்தில், மோடி அரசுக்கு, 10க்கு, பூஜ்ஜியம் மதிப்பெண் தான் அளிக்க முடியும்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறினார். காங்., துணைத் தலைவர் ராகுல், உ.பி.,யில் உள்ள, தன் தொகுதியான அமேதியில், சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நம் நாட்டில் உள்ள விவசாயிகள், விவசாயம் பொய்த்ததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்கின்றனர். இங்கு, இவ்வளவு பிரச்னை இருக்கும் போது, அதைப்பற்றி எல்லாம் கவலையில்லாமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா ...

அலுவலகத்தை பூட்டினார் கெஜ்ரிவால்

Posted:

அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் இடையேயான மோதல், மிகவும் மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. இதனால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேரடியாக தலையிடும் சூழல் உருவாகி உள்ளது.

நியமனம்:
டில்லி மாநில அரசின், தலைமை செயலராக, கே.கே.சர்மா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் தொடர்பாக, மாநில அரசை, டில்லியின் துணை நிலை கவர்னரோ அல்லது உள்துறை அமைச்சகமோ கலந்து ஆலோசிக்கவில்லை என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக ...

திறமையான ஊழியர்களுக்கு பஞ்சம்: சர்வதேச நிறுவனங்கள் கடும் கவலை

Posted:

புதுடில்லி: இந்தியாவில் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்கள், திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மென்பவர் குரூப்' என்ற நிறுவனம், சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு குறித்த ஆய்வை நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களில் பல, போதிய அளவு திறமையான ஊழியர்கள் இல்லாமல் திணறி வருகின்றன. இதனால், 58 சதவீத நிறுவனங்கள் போதிய வேலைவாய்ப்புகள் இருந்தும், திறமையான ஊழியர்கள் இல்லாததால், காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையில் உள்ளன. தகவல் ...

ஜெ.,வை எதிர்த்து போட்டியிட கட்சிகள் தயக்கம்?

Posted:

சென்னை ஆர்.கே.நகரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகும் முனைப்பில் இருக்கும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட, தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பொறுப்பேற்க:
தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார் ஜெயலலிதா. கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், வரும் 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு கூட்டப்பட்டிருக்கிறது. கூட்டத்துக்குப் பின், அன்றோ அல்லது அடுத்த நாளோ, ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொள்வார்.தற்போது எம்.எல்.ஏ.,வாக ...

ஜெ., வழக்கில் அப்பீல்: கர்நாடகா குழப்பம்

Posted:

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, கர்நாடக காங்., அமைச்சர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்:
அப்பீல் செய்வதற்கு ஆதரவாக ஒரு தரப்பு அமைச்சர்களும், எதிர்த்து இன்னொரு தரப்பும் கொடி பிடிப்பதால், இதுபற்றி முடிவெடுக்க, 21ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தை, அம்மாநில முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார்.இந்த தகவல் தெரிய வந்ததும், கர்நாடக காங்., அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை ...

கடத்தலுக்கு கை கொடுக்கும் 'ஜி': அரசை ஏமாற்ற உதவும் அரசு வாகனங்கள்!

Posted:

அரசுத்துறைகளால் ஏலம் விடப்படும் வாகனங்களின் எண்கள் மாற்றப்படாத காரணத்தால், அவற்றை பயன்படுத்தி, சட்டவிரோத சம்பவங்கள் நடப்பதாக திடுக்கிடும் புகார்கள் கிளம்பியுள்ளன.மாநில அரசுத்துறை அதிகாரிகளுக்கு அரசால் வழங்கப்படும் வாகனங்கள், குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப்பின், ஏலத்தில் விடப்படுகின்றன. எதற்கும் லாயக்கற்ற நிலையில் இருக்கும் இந்த வாகனங்களை வாங்குவோர், பெரும் பொருட்செலவில் புதுப்பித்து பயன்படுத்துகின்றனர். சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர், இதுபோன்ற அரசு வாகனங்களை வாங்குவதில், சமீபகாலமாக, அதிக ஈடுபாடு காட்டுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த ...

ஊழலை கண்டித்த அதிகாரிக்கு 'நோட்டீஸ்'

Posted:

பொதுப்பணி துறையில், 45 சதவீத கமிஷன் கேட்கும் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டு, அரசு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, சென்னை, தரமணியில் உள்ள, பொதுப்பணி துறை நீராய்வு நிறுவன செயற்பொறியாளர் தேவராஜன், கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, 9ம் தேதி பேட்டியும் அளித்தார். நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து, புதிய சங்கம் துவங்க முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், செயற்பொறியாளர் தேவராஜிடம் விளக்கம் கேட்டு, அரசு சார்பில், 'நோட்டீஸ்' ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™