மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 25–ந்தேதி பா.ஜ.க. ஆட்சி முதலாண்டு நிறைவு விழா: மதுரா கூட்டத்தில் மோடி பேசுகிறார்
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- ரெயில் பயணியிடம் கொள்ளை: ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.க்கு 2 ஆண்டு ஜெயில்
- தெலுங்கானா வந்த ராகுல்காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு
- சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
- ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் விவகாரம் - பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: காங்கிரஸ்
- ஊடகங்களுக்கு எதிரான கெஜ்ரிவால் அரசின் சுற்றறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
- 2011-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு
- லண்டனில் கேரளாவை சேர்ந்தவர் மனைவி மகள்களை கொன்று தற்கொலை
- அன்னா ஹசாரேவின் கார் 17-ந் தேதி ஏலம்
- நேபாள நிலநடுக்க நிவாரண நிதிக்காக கொல்கத்தாவில் கால்பந்து போட்டி
- நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம்: ஒரே நாளில் 5 முறை குலுங்கியது
- ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா சுவராஜ் தகவல்
- 2 ஆயிரம் வரை பணம் செலுத்த பின் நம்பர் தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- எமனும் நானே... டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்
- 39 இந்தியர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த இந்தியர் அதிர்ச்சி தகவல்
- ஆசிரியர்கள் இருந்தும் படிக்க மாணவர்கள் இல்லை: ஜம்மு காஷ்மீர் கல்வித்துறையை சீர்படுத்த அரசு நடவடிக்கை
- அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?
- திகார் சிறையில் 2 கைதிகள் மர்ம சாவு
- கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு சட்டத்துறை செயலாளர் கடிதம்
| 25–ந்தேதி பா.ஜ.க. ஆட்சி முதலாண்டு நிறைவு விழா: மதுரா கூட்டத்தில் மோடி பேசுகிறார் Posted: 14 May 2015 11:11 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று வருகிற 26–ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி முதலாண்டு ஆட்சி நிறைவு விழாவை நாடெங்கும் பிரமாண்டமாகக் கொண்டாட பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் பா.ஜ.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை நாட்டு மக்களிடம் எடுத்துக் கூற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக |
| கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Posted: 14 May 2015 11:04 PM PDT இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த தென்மேற்கு பருவ மழையே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் தொடங்கி நாடு முழுவதும் பெய்யும். |
| ரெயில் பயணியிடம் கொள்ளை: ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.க்கு 2 ஆண்டு ஜெயில் Posted: 14 May 2015 11:02 PM PDT விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பக்ருதி அப்பா ராவ். இவர் நிஜாமாபாத் ரெயில்வே ஆயுதப்படை போலீசில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார். நிஜாமாபாத்தில் இருந்து சொந்த ஊரான விசாகப்பட்டினத்துக்கு ரெயிலில் செல்லும்போது பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை திருடியதாக கடந்த 2007–ம் ஆண்டு இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. |
| தெலுங்கானா வந்த ராகுல்காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு Posted: 14 May 2015 10:10 PM PDT தெலுங்கானாவில் தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விவசாயிகளுடன் யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டார். தெலுங்கானா மாநிலம் நிர்மல் பகுதியில் இன்று யாத்திரை மேற்கொண்டார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் ஐதராபாத் சம்சாபாத் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நிர்மல் செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது பயண திட்டம் நேற்று திடீர் என மாற்றப்பட்டது. ராகுல்காந்தி சிறப்பு விமானத்தில் மராட்டிய மாநிலம் நாந்தேட் விமான நிலையம் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடிலாபாத் மாவட்டத் |
| சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு Posted: 14 May 2015 09:30 PM PDT சுனந்தா கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசிதரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் புலனாய்வு குழு அனுமதி கோரியுள்ளது. சசிதரூரின் வீட்டு உதவியாளர் நரெய்ன் சிங், டிரைவர் பஜ்ரங்கி மற்றும் தரூரின் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோர் பொய் சொல்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனந்தாவின் மரணத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பல்வேறு முரண்பாடுகள் பற்றிய கேள்விக்கு சரியான பதிலை அளிக்க மறுப்பதாகவும் இம்மூவர் மீதும் புலனாய்வு குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சுனந்தாவின் மரணத்திற்கான காரணம் கண்டிப்பாக இம்மூவருக்கும் தெரியும் என்று உறுதிபட கூறியுள்ள புலனாய்வு குழு, 2014 ஆம் ஆண்டு, ஜனவரி 17 தேதியன்று சுனந்தா தங்கியிரு |
| Posted: 14 May 2015 05:03 PM PDT ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் விவகாரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா நகரில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படை தாக்குதல் |
| ஊடகங்களுக்கு எதிரான கெஜ்ரிவால் அரசின் சுற்றறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை Posted: 14 May 2015 04:42 PM PDT ஊடகங்களுக்கு எதிரான கெஜ்ரிவால் அரசின் சுற்றறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. மேலும் கெஜ்ரிவாலுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தது. முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி |
| 2011-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு Posted: 14 May 2015 04:33 PM PDT கடந்த 2011-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்வு நடைமுறை மாற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ணப்பித்தவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து, அந்த தேர்வு எழுதியவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதலாக |
| லண்டனில் கேரளாவை சேர்ந்தவர் மனைவி மகள்களை கொன்று தற்கொலை Posted: 14 May 2015 02:54 PM PDT கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார். இவர்களுக்கு இரட்டையர் மகள்கள் நேஹா, நியா (13) |
| அன்னா ஹசாரேவின் கார் 17-ந் தேதி ஏலம் Posted: 14 May 2015 02:05 PM PDT ஊழலுக்கு எதிராக போராடி வரும் 77 வயது சமூகசேவகர் அன்னா ஹசாரே, ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கி சட்டமாக்குமாறு வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் தன்னுடைய காரில் 8 ஆண்டுகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். |
| நேபாள நிலநடுக்க நிவாரண நிதிக்காக கொல்கத்தாவில் கால்பந்து போட்டி Posted: 14 May 2015 02:00 PM PDT நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8230 பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதிக்காக கொல்கத்தாவில் கால்பந்து போட்டி நடைபெறவிருக்கிறது. |
| நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம்: ஒரே நாளில் 5 முறை குலுங்கியது Posted: 14 May 2015 01:30 PM PDT நேபாளத்தில் கடந்த 25-ந்«தி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் சுவடுகள் மறைவதற்குள் கடந்த திங்கள் கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா சுவராஜ் தகவல் Posted: 14 May 2015 01:07 PM PDT ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் உள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்து உள்ளார். ஈராக் மற்றும் சிரியா நகரில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். |
| 2 ஆயிரம் வரை பணம் செலுத்த பின் நம்பர் தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Posted: 14 May 2015 11:15 AM PDT இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் காண்டேக்ட் லேஸ் பற்று மற்றும் கடன் அட்டை பயன்படுத்தும் போது ரூபாய் 2 ஆயிரம் வரை பணம் செலுத்த பின் நம்பர் தேவையில்லை கூறியுள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் பயன்படுத்த கூடிய தொடர்பற்ற |
| எமனும் நானே... டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர் Posted: 14 May 2015 09:43 AM PDT "டிராபிக் போலீசை மதிக்காம ஸ்பீடா போனா எமன்கிட்ட போய்டுவோம்னு சொல்வாங்க... ஆனா, அந்த எமனே டிராபிக் போலீசா இருந்தா???..." இது விசித்திரமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் நம்புங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் சாட்சாத் அந்த எமதர்மராஜனேதான் டிராபிக் போலீஸ். |
| 39 இந்தியர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த இந்தியர் அதிர்ச்சி தகவல் Posted: 14 May 2015 09:35 AM PDT ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டதாக தப்பித்து வந்த இந்தியர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மீதும் போர் தொடுத்தனர். இந்த போரின் போது ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இவர்களில் 40 பேர் இந்தியவர்கள். 51 வங்கதேச நாட்டவர். |
| ஆசிரியர்கள் இருந்தும் படிக்க மாணவர்கள் இல்லை: ஜம்மு காஷ்மீர் கல்வித்துறையை சீர்படுத்த அரசு நடவடிக்கை Posted: 14 May 2015 04:43 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒருபுறம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் பல ஆண்டுகளாக படிக்க மாணவர்கள் இல்லாத பரிதாப நிலை உள்ளது. மறுபுறம், அதிகமான மாணவர்களுக்கு குறைந்த அளவிலான ஆசிரியர்களே உள்ளனர். இதுபற்றி மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் சட்டசபையில் பேசியபோது, ஜம்முவில் 50 பள்ளிகளிலும், காஷ்மீர் டிவிஷனில் 74 பள்ளிகளிலும் மாணவர்களே இல்லை என்று குறிப்பிட்டார். |
| அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா? Posted: 14 May 2015 03:38 AM PDT மும்பையின் புறநகர் பகுதியான ஜூஹூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பெண் பவி ஜகாதியா. இவருக்கு நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பதற்காக 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைத்துள்ளது. இது குறித்து பவி கூறுகையில், "12-ம் வகுப்பில் கணிதத்தேர்வு எழுதுவதற்கு முதல் நாள்தான், டாடா நிறுவனம் வழங்கும் இந்த உதவித்தொகை எனக்கு கிடைத்திருப்பது தெரியும். அந்த நொடி முதல் நான் சந்தோஷத்தில் மிதக்கிறேன்" என்றார். |
| திகார் சிறையில் 2 கைதிகள் மர்ம சாவு Posted: 14 May 2015 02:57 AM PDT டெல்லி திகார் சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 2 கைதிகள் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இருவரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. |
| Posted: 14 May 2015 01:14 AM PDT கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது பற்றி கருத்து கேட்டு அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு சட்டத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு ஜெயில் தண்டனையை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி ரத்து செய்து தீர்ப்பு கூறினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |