மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நேபாளத்தில் ஆற்றை முடக்கிய நிலச்சரிவு: வெள்ள அபாயத்தில் இந்தியா- அதிகாரிகள் எச்சரிக்கை
- ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம்
- தாவூத், ஹபீஸ், லக்வியின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தானை வலியுறுத்தும் இந்தியா
- திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 95 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
- ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி
- மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு: மனைவி பலி
- கங்கை நதியை மாசுபடுத்திய விவகாரம்: ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சீல்
- ஜம்முவில் ஓடும் ரெயிலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: ரெயில்வே அதிகாரி
- பீகாரில் ஒரே வீட்டிலிருந்து 1500 டெட்டனேட்டர்கள் பறிமுதல்: ஒருவர் கைது
- சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி மேலிடத்துடன் பேசவில்லை: சித்தராமையா
- மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு: நாடு முழுவதும் ஒரு வாரம் கொண்டாட பா.ஜனதா முடிவு
- சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு
- உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிற பிரதமர் மோடிக்கு மிரட்டல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- தற்போதைக்கு டெல்லிக்கு முழு தனி மாநில அந்தஸ்து இல்லை: அருண் ஜெட்லி
- ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ஜுன் 6-ம் தேதி பூமி பூஜை
- போலி லாட்டரி ஊழல்: பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்
- ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியான 80 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
- தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
- கவர்னர்- முதல் மந்திரி மோதல் எதிரொலி: டெல்லி சட்டசபை அவசரமாக கூடுகின்றது
- கோவாவில் மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி கடல் விமானச் சேவை: சோதனை வெள்ளோட்டம் தொடங்கியது
| நேபாளத்தில் ஆற்றை முடக்கிய நிலச்சரிவு: வெள்ள அபாயத்தில் இந்தியா- அதிகாரிகள் எச்சரிக்கை Posted: 23 May 2015 11:28 PM PDT நேபாளத்தில் சமீபத்திய பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்சரிவுடன் சேர்ந்து இடிந்த கட்டிடங்களும் ஆற்றின் குறுக்கே விழுந்து நீரோட்டத்தை முடக்கிவிட்டது. இதனால் இந்தியாவில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். |
| ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம் Posted: 23 May 2015 10:58 PM PDT ஐதராபாத் அருகே உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் சிஜ்ரா சித்தப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பார்வாத் பகுதியில் ஆட்டோவில் வந்த 5 பேர் தன்னை தாக்கி எனது மகளை கடத்தி சென்று கற்பழித்து கொன்று விட்டதாக கமல் போலீசில் புகார் செய்தார். |
| தாவூத், ஹபீஸ், லக்வியின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தானை வலியுறுத்தும் இந்தியா Posted: 23 May 2015 10:45 PM PDT மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அதிகம் தேடப்படும் தீவிரவாதிகளான ஹபீஸ் சயீத், சகி-யுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டவர்களின் சொத்துக்களை முடக்குமாறு பாகிஸ்தானிடம் வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐ.நா.பாதுகாப்பு குழுவின் அல்-கொய்தா மற்றும் தாலிபான் தடைகள் |
| திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 95 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் Posted: 23 May 2015 10:42 PM PDT திருப்பதி கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோடை விடுமுறை, மற்றும் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று ஒரே நாளில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 95 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. இது தவிர 1 லட்சத்து 25 |
| ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி Posted: 23 May 2015 10:29 PM PDT ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் முதியவர்கள் பலர் புழுவை போல் சுருண்டு விழுந்து பலியாகிறார்கள். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள். |
| மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு: மனைவி பலி Posted: 23 May 2015 10:28 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரது வீட்டில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் அவரது மனைவி பலியானார். பிரிபம் மாவட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவராக உள்ள புரோ ஹன்ஸ்டாவின் வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் |
| கங்கை நதியை மாசுபடுத்திய விவகாரம்: ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சீல் Posted: 23 May 2015 10:10 PM PDT மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி கங்கை நதியை அசுத்தம் செய்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு உத்தரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஹரித்வாரில் உள்ள ரேடிசன் ஓட்டலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு கழிவு நீரை சுத்தப்படுத்தும் வசதி |
| ஜம்முவில் ஓடும் ரெயிலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: ரெயில்வே அதிகாரி Posted: 23 May 2015 10:10 PM PDT ஜம்முவில் ரெயில்வே உள்கட்டமைப்பை தகர்க்கும் வகையில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் முயன்று வருவதாகவும், இதனால் பாதுகாப்பு முகமைகள்(security agencies) கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
| பீகாரில் ஒரே வீட்டிலிருந்து 1500 டெட்டனேட்டர்கள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 23 May 2015 09:26 PM PDT பீகார் மாநிலத்தின் ரோதாஸ் மாவட்டத்தில் உள்ள டாகியா பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 1500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்திருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டாகியா |
| சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி மேலிடத்துடன் பேசவில்லை: சித்தராமையா Posted: 23 May 2015 08:17 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி மேலிடத்துடன் பேசவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவரை கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந்தேதி விடுவித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் |
| மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு: நாடு முழுவதும் ஒரு வாரம் கொண்டாட பா.ஜனதா முடிவு Posted: 23 May 2015 07:45 PM PDT பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று நாளையுடன்(25-ந்தேதி) ஓராண்டு நிறைவு அடைகிறது. இதனை கோலாகலமாக கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. |
| சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு Posted: 23 May 2015 05:19 PM PDT ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில் |
| உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிற பிரதமர் மோடிக்கு மிரட்டல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் Posted: 23 May 2015 03:23 PM PDT உத்தரபிரதேச மாநிலத்துக்கு நாளை (திங்கட்கிழமை) செல்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜன சங்கத்தின் மூத்த |
| தற்போதைக்கு டெல்லிக்கு முழு தனி மாநில அந்தஸ்து இல்லை: அருண் ஜெட்லி Posted: 23 May 2015 11:41 AM PDT தற்போதைக்கு டெல்லிக்கு முழு தனி மாநில அந்தஸ்து வழக்குவதற்கு வாய்ப்பு இல்லை என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் |
| ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ஜுன் 6-ம் தேதி பூமி பூஜை Posted: 23 May 2015 09:27 AM PDT ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர், ஐதராபாத்துக்கு பதிலாக விஜயவாடா பகுதியில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை நினைவுகூரும் விதமாக இந்த புதிய தலைநகரம் அமராவதி நகரம் என அழைக்கப்படும் எனவும் |
| போலி லாட்டரி ஊழல்: பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் Posted: 23 May 2015 09:05 AM PDT லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்து, விற்பனை செய்து, குலுக்கல் நடத்தியதாக தினந்தோறும் முடிவும் வெளியிட்டுவந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பணத்தை பறிகொடுத்த பலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. |
| Posted: 23 May 2015 08:49 AM PDT விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து |
| தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Posted: 23 May 2015 07:54 AM PDT தமிழக முதலமைச்சராக இன்று ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தமிழக முதலமைச்சராக |
| கவர்னர்- முதல் மந்திரி மோதல் எதிரொலி: டெல்லி சட்டசபை அவசரமாக கூடுகின்றது Posted: 23 May 2015 06:21 AM PDT டெல்லி முதல் மந்திரி மற்றும் துணைநிலை கவர்னர் இடையில் முற்றிவரும் மோதல் தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டசபையின் 2 நாள் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில தலைமைச் செயலாளர் கே.கே.சர்மா தனிப்பட்ட பயணமாக விடுமுறையில் அமெரிக்கா சென்றார். இதனால், தற்காலிக தலைமைச் |
| கோவாவில் மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி கடல் விமானச் சேவை: சோதனை வெள்ளோட்டம் தொடங்கியது Posted: 23 May 2015 04:44 AM PDT கோவாவின் மன்டோவி ஆற்றிலிருந்து இன்று சோதனை ஓட்டமாக கடல் விமானம் இயக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்றழைக்கப்படும் கோவாவில் கடல் விமானங்களின் மூலம் விமான நிலையத்திலிருந்து எந்தவித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் பனாஜிக்கு செல்லும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |