மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல்
- பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு தீவிரவாதிகள் அனுப்பிய உளவு புறா
- நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது
- 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு
- என்.டி.ராமராவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும்: தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் தீர்மானம்
- திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 1-ந்தேதி தொடங்கி 3 நாள் நடக்கிறது
- கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு
- ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு சோனியா காந்தி நிதி உதவி வழங்கினார்
- டெல்லி மாநில அரசுக்கு ஆதரவான தீர்ப்புக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு இன்று விசாரணை
- மத்திய அரசுக்கு நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடை செய்ய திட்டம் இல்லை: வெங்கையா நாயுடு
- விவசாயம் முதல் கல்வி வரை அனைத்தையும் அறிந்த ஒருவர்: மோடி மீது ராகுல் காந்தி மறைமுக பாய்ச்சல்
- கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியது: ஆந்திராவில் மட்டும் 1300 பேருக்கு மேல் பலி
- இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன: கடற்படை தளபதி
- உலக யோகா தினத்தையொட்டி 45 ஆயிரம் பேருடன் மோடி யோகா நிகழ்ச்சி
- நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அருண் ஜெட்லி பேச்சுவார்த்தை
- தனித்தன்மையை கொலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகள் இந்தியாவை நாசம் செய்துவருகிறது: ராகுல் காந்தி
- குஜ்ஜார்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது - 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ராஜஸ்தான் அரசு சம்மதம்
- மத்திய அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தங்களை எதிர்த்து காலவரையற்ற ஸ்டிரைக்: ரெயில்வே ஊழியர்கள் திட்டம்
- நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடை செய்ய திட்டமா?: பா.ஜனதா மறுப்பு
- பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வங்காளதேசம் செல்கிறார்
| இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல் Posted: 28 May 2015 10:31 PM PDT உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. |
| பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு தீவிரவாதிகள் அனுப்பிய உளவு புறா Posted: 28 May 2015 10:24 PM PDT பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக மத்திய உளவுத்துறை இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து பஞ்சாப் மாநில போலீசார் பதன்கோட் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது Posted: 28 May 2015 09:55 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கடந்த இரண்டு முறையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, இந்த மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக, இந்த மசோதா |
| 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு Posted: 28 May 2015 09:52 PM PDT மூணாறை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி தம்பதியின் மகள் ரோசி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 8–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கும் ஒரு தமிழக வாலிபருக்கும் அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். |
| என்.டி.ராமராவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும்: தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் தீர்மானம் Posted: 28 May 2015 09:52 PM PDT தெலுங்கு தேசம் கட்சியின் 2 நாள் மாநாடு ஐதராபாத்தில் நடந்தது. கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் கட்சி வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
| திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 1-ந்தேதி தொடங்கி 3 நாள் நடக்கிறது Posted: 28 May 2015 09:22 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற (ஜூன் மாதம்) 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. 3 நாட்களுக்கு உற்சவர் மலையப்பசாமிக்கு பல்வேறு கவசங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அத்துடன் கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபம் அருகில் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர் மலையப்பசாமியை வைத்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் ஆகியவற் |
| கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு Posted: 28 May 2015 08:12 PM PDT கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. |
| ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு சோனியா காந்தி நிதி உதவி வழங்கினார் Posted: 28 May 2015 07:50 PM PDT அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி நேற்று ஒரு நாள் பயணமாக தனது தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலிக்கு சென்றார். அங்கு அவர் டேராடூன்-வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் |
| Posted: 28 May 2015 07:00 PM PDT அதிகார போட்டி தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் நியமனம், பொது ஒழுங்கு, போலீஸ் உள்ளிட்டவற்றில் டெல்லி துணைநிலை |
| மத்திய அரசுக்கு நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடை செய்ய திட்டம் இல்லை: வெங்கையா நாயுடு Posted: 28 May 2015 05:30 PM PDT நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடைசெய்யம் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ராய்ப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மாட்டு |
| விவசாயம் முதல் கல்வி வரை அனைத்தையும் அறிந்த ஒருவர்: மோடி மீது ராகுல் காந்தி மறைமுக பாய்ச்சல் Posted: 28 May 2015 05:28 PM PDT இந்தியாவில் விவசாயம் முதல் கல்வி வரை அனைத்தையும் அறிந்த ஒருவர் உள்ளார் என மோடி மீது ராகுல் காந்தி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் ஆட்சியின் சாதனைகளை ஆளும்கட்சியும், |
| Posted: 28 May 2015 05:16 PM PDT இந்தியா முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 440 |
| இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன: கடற்படை தளபதி Posted: 28 May 2015 03:31 PM PDT இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீன கடற்படையின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன கடற்படை சார்பில் பாதுகாப்பு தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, கடற்கரையில் இருந்து முதல் முறையாக திறந்த கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சீன கடற்படையை மேம்படுத்தும் |
| உலக யோகா தினத்தையொட்டி 45 ஆயிரம் பேருடன் மோடி யோகா நிகழ்ச்சி Posted: 28 May 2015 02:57 PM PDT உலக நாடுகளுக்கு இந்தியா அறிமுகம் செய்த மிகச்சிறந்த கலைகளில் யோகாவும் ஒன்று. இந்தியாவின் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த இந்த யோகா பயிற்சிக்கலை, உலகின் பல்வேறு நாடுகளில் இன்று கற்றுக்கொடுக்கப்படுகிறது. |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அருண் ஜெட்லி பேச்சுவார்த்தை Posted: 28 May 2015 02:31 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சாதகமான பரிந்துரைகள் ஏற்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது. |
| தனித்தன்மையை கொலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகள் இந்தியாவை நாசம் செய்துவருகிறது: ராகுல் காந்தி Posted: 28 May 2015 01:55 PM PDT தனித்தன்மையை கொலை செய்யும் 'ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகள் இந்தியாவை நாசம் செய்துவருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு மாநாட்டில் பேசிய காங்கிரஸ் |
| குஜ்ஜார்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது - 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ராஜஸ்தான் அரசு சம்மதம் Posted: 28 May 2015 01:04 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி குஜ்ஜார் இன மக்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் கடந்த 8 |
| மத்திய அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தங்களை எதிர்த்து காலவரையற்ற ஸ்டிரைக்: ரெயில்வே ஊழியர்கள் திட்டம் Posted: 28 May 2015 08:03 AM PDT மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மற்றும் ரெயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். நவம்பர் மாதம் நாடு தழுவிய அளவில் இந்த ஸ்டிரைக் நடக்கும் என ஹிந்த் மஸ்தூர் சபா |
| நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடை செய்ய திட்டமா?: பா.ஜனதா மறுப்பு Posted: 28 May 2015 07:53 AM PDT நாடு முழுவதும் மாட்டு இறைச்சியை தடைசெய்ய பா.ஜனதா விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநில அரசுகளே முடிவு எடுக்க வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பனாஜியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பா.ஜனதா அரசு எங்கெல்லம் உள்ளதோ, அங்கு மாட்டு இறைச்சிக்கு தடை விதிப்பதற்கு |
| பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வங்காளதேசம் செல்கிறார் Posted: 28 May 2015 06:55 AM PDT பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது பிரதமருடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்கிறார். இதுபற்றி மேற்கு வங்காள மாநில கல்வி மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |