Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வட மாநிலங்களில் வெயில் கொடுமை நீடிப்பு: பலி எண்ணிக்கை 2005 ஆக உயர்வு

Posted: 29 May 2015 10:57 PM PDT

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்துகிறது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் வெயில் கொடுமை உச்ச கட்டத்தை எட்டியது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். பகலில்

செம்மரம் வெட்ட சென்றதாக கைதான தமிழக தொழிலாளர்கள் 74 பேர் கடப்பா ஜெயிலில் அடைப்பு

Posted: 29 May 2015 10:05 PM PDT

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7–ந்தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில அதிரடி போலீஸ் படையினர் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர ஐ.ஜி. தலைமையில் 8 பேர் கொண்ட

கேரளாவில் அடிப்படை வசதிகள் இல்லாத 346 பள்ளிகளை திறக்க தடை: கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Posted: 29 May 2015 10:02 PM PDT

கேரளாவில் வருகிற கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், மாநிலம் முழுவதும் 346 பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 2 நாள் தாமதமாக தொடங்கும்: வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்

Posted: 29 May 2015 09:38 PM PDT

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1–ந்தேதி முதல் செப்டம்பர் 30–ந்தேதி வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த ஆண்டு இன்று (30–ந்தேதி) முதலே தென் மேற்கு பருவ மழை தொடங்குமென வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

திருப்பதி கோவிலில் தமிழக கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

Posted: 29 May 2015 07:54 PM PDT

தமிழக கவர்னர் கே.ரோசய்யா நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றார். கோவில் நுழைவுவாயிலில் அவருக்கு கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் ரோசய்யா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடியுடன் உம்மன்சாண்டி சந்திப்பு: மீன்பிடி தடைக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என வலியுறுத்தல்

Posted: 29 May 2015 07:22 PM PDT

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கலாம் என்று கேட்டுக்

மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த நடிகை மாதுரி தீட்சித்துக்கு, உணவு பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

Posted: 29 May 2015 04:45 PM PDT

'மேகி நூடுல்ஸ்' தொடர்பான விளம்பரங்களில் நடித்த இந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பியுள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான 'மேகி நூடுல்ஸ்', இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவாக உள்ளது. இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எந்த ஒரு நபர் மூலமாகவும் டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்ட அறிவிப்பு

Posted: 29 May 2015 03:00 PM PDT

டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கான அதிகாரம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த மோதல் முற்றியதை தொடர்ந்து, டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய

சென்னை ஐ.ஐ.டி. நடவடிக்கையை கண்டித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வீடு முற்றுகை

Posted: 29 May 2015 01:29 PM PDT

சென்னை ஐ.ஐ.டி.யின் நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு மனிதவள மேம்பாட்டு மந்திரியே காரணம் என்று கூறி, டெல்லியில் உள்ள மந்திரி ஸ்மிரிதி இரானியின் வீட்டை முற்றுகையிட்டனர். காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவிகளை நிறுவ மராட்டிய அரசு தீவிரம்

Posted: 29 May 2015 11:20 AM PDT

மகாராஷ்டிராவில் சென்ற ஓராண்டு மட்டும் 450 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். தொடர்ந்து மின்னல்களால் அங்கு உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மின்னல்கள் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து நமக்கு எச்சரிக்கை செய்யும் மொபைல் லைட்டனிங் அரெஸ்டர் கருவிகளை அதிகமான இடங்களில் பொருத்த மராட்டிய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடி: பிரிவினைவாத தலைவர் உள்பட 3 பேர் கைது

Posted: 29 May 2015 08:20 AM PDT

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் பேரணியில் பாகிஸ்தான் கொடி பறக்கவிட்ட சம்பவம் மீண்டும் நடந்து உள்ளது. பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா தெற்கு காஷ்மீரில் அனந்தாக் நகரில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார். இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தி வந்தனர். வாகனங்களிலும் பாகிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

மத்திய மந்திரிசபை செயலாளராக பி.கே சின்கா நியமனம்

Posted: 29 May 2015 06:10 AM PDT

உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீப் குமார் சின்கா மத்திய மந்திரி சபை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய மந்திரி சபை செயலாளராக அஜித் சேத் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக் காலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நிறைவடைகிறது.

கைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய பெண் தலைமறைவு

Posted: 29 May 2015 03:28 AM PDT

உத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் பால்(20) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். நாளடைவில், இந்த காதல் கசந்துப்போகவே, அந்தப் பெண்ணை ராஜ்குமார் நிராகரித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்றிரவு

செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மனித உரிமை ஆணையம் பரிந்துரை

Posted: 29 May 2015 01:59 AM PDT

திருப்பதி வனப்பகுதியில் 20 அப்பாவி தமிழர்களை செம்மரம் கடத்தியதாக கூறி ஆந்திர அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றனர். இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இன்று பரிந்துரைத்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: ஆயுதங்களை பறித்து சென்றனர்

Posted: 29 May 2015 01:35 AM PDT

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கச்தூரா நகரில் ஜம்மு– காஷ்மீர் வங்கி உள்ளது. இந்த வங்கி முன்பு காஷ்மீர் மாநில போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை அந்த வங்கி முன்பு சோபியான் மாவட்ட போலீசார் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு தீவிரவாதி வந்தான்.

மோடியின் யோகா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்: மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

Posted: 29 May 2015 12:15 AM PDT

ஜூன் மாதம் 21–ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியர்கள் அனைவரிடமும் யோகா கலையை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவு கண்டுபிடிப்பு

Posted: 29 May 2015 12:10 AM PDT

புதுடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கதிரியக்க கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நாசவேலை தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

யாருக்கு அதிகாரம் என்பதில் சர்ச்சை: கெஜ்ரிவால் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 28 May 2015 11:42 PM PDT

டெல்லியில் அரசு உயர் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ''அதிகாரிகளை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உள்ளது'' என்று அறிவித்தது. இந்த நிலையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™