மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குடித்துவிட்டு கார் ஓட்டிய போது ஒருவரை கொன்ற வழக்கு: சல்மான்கான் குற்றவாளி-மும்பை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- தீவிரவாத இயக்கங்களில் சேர 14 மாணவர்கள் சிரியா, ஈராக் நாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சி
- 21-ஆம் நூற்றாண்டின் மோசமான நிலநடுக்கம் காஷ்மீர் மாநிலத்தில் நிகழலாம்: வல்லுனர்கள் அதிர்ச்சி தகவல்
- ஜெயலலிதா வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?
- தபால் நிலையங்களில் திருப்பதி தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் ஏற்பாடு
- பூகம்பம் பாதித்த பகுதியில் 11 நாட்களுக்கு பிறகு நேரில் ஆய்வு செய்த நேபாள பிரதமர்
- கேரளாவில் காப்பி அடித்து சிக்கிய போலீஸ் ஐ.ஜி. 2 ஆண்டு தேர்வு எழுத தடை: பல்கலைக்கழகம் அறிவிப்பு
- பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு
- ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி
- மத்திய அரசின் மகப்பேறு உதவிகள் கர்ப்ப காலத்தில் கிடைக்க வேண்டும்: கனிமொழி பேச்சு
- பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவுக்கு ஆதரவாக 350 பேர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினர்
- ராகுல் காந்திக்கு குமாரசாமியின் அறிவுரை தேவை இல்லை: சித்தராமையா பேட்டி
- சம்மன் அனுப்பிய பிரச்சினையில் விஸ்வாசுக்கு ஆதரவாக மகளிர் ஆணைய தலைவியுடன் பெண் உறுப்பினர் கடும் மோதல்
- நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அட்டார்னி ஜெனரலுடன் நீதிபதிகள் கடும் வாக்குவாதம்
- 12 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சல்மான் கானுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
- திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 11 மணிநேரம் ஆனது
- மத்திய பிரதேச கவர்னர் மீதான ஊழல் வழக்கு ரத்து
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு: ரியல் எஸ்டேட் மசோதா காலவரையின்றி நிறுத்தி வைப்பு
- சமையல் எரிவாயு மானியத்திற்கு வருமான வரி கிடையாது: மத்திய அரசு
- தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறான்: மத்திய அரசு திடீர் பல்டி
| Posted: 05 May 2015 11:14 PM PDT இந்தி திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்தராவில் கேலக்சி அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந்தேதி அதிகாலை அதிவேகமாக சென்ற சல்மான்கான் கார் நிலைதடுமாறி பிளாட்பாரத்தில் ஏறி ஒரு பேக்கரிக்குள் புகுந்தது. இதில் பேக்கரிக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். |
| தீவிரவாத இயக்கங்களில் சேர 14 மாணவர்கள் சிரியா, ஈராக் நாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சி Posted: 05 May 2015 10:40 PM PDT ஐதராபாத்தில் இருந்து இளைஞர்கள் ஏராளமானோர் விமானம் மூலம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு |
| 21-ஆம் நூற்றாண்டின் மோசமான நிலநடுக்கம் காஷ்மீர் மாநிலத்தில் நிகழலாம்: வல்லுனர்கள் அதிர்ச்சி தகவல் Posted: 05 May 2015 09:51 PM PDT பூமியின் சொர்க்கம், ஆசியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நூற்றாண்டின் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவாக வாய்ப்புள்ள இந்நிலநடுக்கத்தால் ஜீலம் நதி தண்ணீர் வெடிகுண்டாக மாறக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். |
| ஜெயலலிதா வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு? Posted: 05 May 2015 09:41 PM PDT முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை பெங்களூரில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. |
| தபால் நிலையங்களில் திருப்பதி தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் ஏற்பாடு Posted: 05 May 2015 09:40 PM PDT தபால் நிலையங்களில் திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர பிரதேச சர்க்கிள் தலைமை போஸ்ட் மாஸ்டர் சுதாகர் கூறியதாவது:– திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக தபால் அலுவலகங்களில் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை திருப்பதி |
| பூகம்பம் பாதித்த பகுதியில் 11 நாட்களுக்கு பிறகு நேரில் ஆய்வு செய்த நேபாள பிரதமர் Posted: 05 May 2015 09:39 PM PDT 11 நாட்களுக்கு பிறகு பூகம்பம் பாதித்த பகுதியில் நேபாள பிரதமர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, கீர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. 7500 பேர் பலியாகினர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். |
| கேரளாவில் காப்பி அடித்து சிக்கிய போலீஸ் ஐ.ஜி. 2 ஆண்டு தேர்வு எழுத தடை: பல்கலைக்கழகம் அறிவிப்பு Posted: 05 May 2015 09:32 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் சரக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே ஜோஸ். இவர் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். என்ற சட்ட மேற்படிப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு கொச்சி களமாச்சேரியில் உள்ள செயின்ட்பால் கல்லூரியில் தேர்வு எழுதினார். |
| பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு Posted: 05 May 2015 09:32 PM PDT பசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாரத்திற்கு இரு முறையாவது கோமியம் தெளிப்பதை காணலாம். |
| ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி Posted: 05 May 2015 09:30 PM PDT கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர். |
| மத்திய அரசின் மகப்பேறு உதவிகள் கர்ப்ப காலத்தில் கிடைக்க வேண்டும்: கனிமொழி பேச்சு Posted: 05 May 2015 09:29 PM PDT பாராளுமன்ற மேல்– சபையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:– மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனுக்காக கடந்த ஆண்டு ரூ. 5,700 கோடி |
| பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவுக்கு ஆதரவாக 350 பேர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினர் Posted: 05 May 2015 08:50 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், அஜித் ஜா மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் சமீபத்தில் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் ஆம் |
| ராகுல் காந்திக்கு குமாரசாமியின் அறிவுரை தேவை இல்லை: சித்தராமையா பேட்டி Posted: 05 May 2015 08:10 PM PDT உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அருகே வராகி அணை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்ததை அடுத்து அவற்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்-மந்திரி சித்தராமையா, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- |
| சம்மன் அனுப்பிய பிரச்சினையில் விஸ்வாசுக்கு ஆதரவாக மகளிர் ஆணைய தலைவியுடன் பெண் உறுப்பினர் கடும் மோதல் Posted: 05 May 2015 07:50 PM PDT ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக மகளிர் ஆணையத் தலைவியுடன் பெண் உறுப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கும், அக்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. |
| Posted: 05 May 2015 07:36 PM PDT சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் அடங்கிய 'கொலிஜியம்' அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அதை ஒழித்து விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. |
| 12 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சல்மான் கானுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு Posted: 05 May 2015 05:23 PM PDT 12 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை கோர்ட்டில் நடந்து வரும் நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். இதையொட்டி, மும்பை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. |
| திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 11 மணிநேரம் ஆனது Posted: 05 May 2015 04:13 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 மலைப்பாதைகளில் மொத்தம் 16 ஆயிரம் பக்தர்கள் நடந்து வந்தனர். அன்று ஒரேநாளில் மொத்தம் 71 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். |
| மத்திய பிரதேச கவர்னர் மீதான ஊழல் வழக்கு ரத்து Posted: 05 May 2015 04:00 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் கவர்னராக இருப்பவர், ராம் நரேஷ் யாதவ் (வயது 88). இவர் 'எம்.பி.பி.இ.பி.' என்னும் மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய ஊழலில் சிக்கினார். இந்த ஊழல் தொடர்பான விசாரணையை நடத்துகிற சிறப்பு புலனாய்வு குழு, ராம் நரேஷ் யாதவ் |
| எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு: ரியல் எஸ்டேட் மசோதா காலவரையின்றி நிறுத்தி வைப்பு Posted: 05 May 2015 03:34 PM PDT ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக, ரியல் எஸ்டேட் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால், அம்மசோதா, கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமானது என்றும், வீடு வாங்கும் நடுத்தர மக்களுக்கு பாதகமானது என்றும் கூறி, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. |
| சமையல் எரிவாயு மானியத்திற்கு வருமான வரி கிடையாது: மத்திய அரசு Posted: 05 May 2015 02:38 PM PDT வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி தொடர்பான |
| தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறான்: மத்திய அரசு திடீர் பல்டி Posted: 05 May 2015 09:26 AM PDT மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என கூறிய மத்திய அரசு, இப்போது பாகிஸ்தானில் இருப்பதாக மாற்றி கூறியுள்ளது. மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. நித்யானந்த் ராய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஹரிபாய் சவுத்ரி, 'தாவூத் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் இருக்குமிடம் தெரியவந்தால், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தொடங்கும்' என தெரிவித்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |