Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரியின் உத்தரவின் பேரில் இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை!

Posted:

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த நாள்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

 


Read more ...

மஹிந்த குழுவினர் ஜெனீவாவுக்கு செல்வது தேசத்துரோகம் இல்லையா?; ஐ.தே.க கேள்வி!

Posted:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவா சென்று முறையிடுவது தேசத்துரோகம் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், இப்போது ஊழல் மோசடி விசாரணைக்கு எதிராக ஜெனீவா சென்று முறையிடுவது தேசத்துரோகம் இல்லையா?, என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 


Read more ...

உள்ளூராட்சி சபைகள் மே 15 முதல் விசேட ஆணையாளரின் மேற்பார்வையில் கீழ்; ஜனாதிபதி அறிவிப்பு!

Posted:

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையோடு (மே 15, 2015) முடிவுக்கு வரும் நிலையில், அவற்றின் பதவிக் காலம் நீடிக்கப்படமாட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 


Read more ...

சென்னையை 6 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியது டெல்லி!

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை ராஜ்பூரில் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

விடுமுறைக்காக பிரான்ஸுக்கு 6400 ஊழியர்களை அழைத்துச் சென்றது சீனக் கம்பனி!

Posted:

கடந்த வார இறுதியில் Tiens Group என்ற சீனக் கம்பனி ஒன்று உலகில் மிக அதிகம் பேர் பங்கு பற்றிய விடுமுறை சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.


Read more ...

பங்களாதேஷில் 3 ஆவது இணையத்தள எழுத்தாளர் படுகொலை

Posted:

பங்களாதேஷில் இணையத் தள பிளாக்குகள் மூலம் சுதந்திரமாக மதச்சார்பற்ற வகையில் கட்டுரை எழுதி வந்த 32 வயதாகும் ஆனந்தா பிஜோய் டாஸ் என்ற எழுத்தாளர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்து அவர் வேலை செய்து வரும் வங்கிக்குச் சென்று கொண்டிருக்கையில் முகமூடி தரித்த 4 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.


Read more ...

7.3 ரிக்டரில் நேபாளத்தைத் தாக்கிய 2 ஆவது பூகம்பம் மற்றும் சக்தி வாய்ந்த தொடர் அதிர்வுகள்:68 பேர் பலி

Posted:

நேபாளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 9 மணியளவில் 7.3 ரிக்டரில் பதிவான இன்னொரு பாரிய பூகம்பத்தில் அங்குள்ள 75 மாவட்டங்களில் 32 மாவட்டங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வலிமையான அதிர்வு உணரப் பட்டுள்ளதுடன் கட்டடங்கள் சேதமடைந்தும் வீழ்ந்துள்ளன. இதில் நேபாளத்தில் மட்டும் குறைந்தது 50 பேர் பலியாகியும் 1261 பேர் காயம் அடைந்தும் இருப்பதாகவும் இந்தியாவில் 18 பேர் பலியாகி இருப்பதாகவும் சீன திபேத்தில் ஒரு பெண் கொல்லப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 3 கிழமைகளுக்கு முன் நேபாளத்தைத் தாக்கி இருந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அங்கு 8000 இற்கும் அதிகமான உயிர்களைக் குடித்து இருந்தது. இதையடுத்து இதுவரை 160 இற்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் பதிவாகி வந்ததுடன் உச்சக் கட்டமாக இன்று 7.3 ரிக்டரில் மறுபடியும் நிலநடுக்கம் பதிவாகி மக்களைப் பீதியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 7.3 ரிக்டரை அடுத்து 30 நிமிடத்தில் 6.3 ரிக்டரில் இன்னொரு வலிமையான தொடர் அதிர்வும் பதிவாகியதை அடுத்து ஏற்கனவே பேரழிவில் சிக்கியுள்ள தலைநகர் காத்மண்டு மற்றும் அண்டிய பகுதிகளில் மக்கள் பீதியடைந்து தெருக்களில் சிதறி ஓடியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதைவிட ரிக்டர் ஸ்கேலில் 5 இற்கும் அதிகமாக மேலும் 5 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளன எனவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. நேபால் போலிசாரின் தகவல் படி இந்த அதிர்வுகளால் காத்மண்டுவில் மட்டும் 6 கட்டடங்கள் சரிந்து வீழ்ந்ததாகத் தெரிய வருகின்றது. இதேவேளை நேபாளப் பாராளுமன்றத்தில் இன்றைய நில அதிர்வு உணரப் பட்டதை அடுத்து அங்கிருந்து அதிபர் உட்பட எம்பிக்கள் பதற்றமடைந்து வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.


Read more ...

தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சி: விமல் வீரவங்ச

Posted:

பொதுத் தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 


Read more ...

68வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தயாராகியுள்ள பிரான்ஸ் : புகைப்படங்கள்

Posted:

ஆஸ்கார் விருதுக்கு நிகரான சர்வதேச கேன்ஸ் திரைப்பட விருது விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.


Read more ...

நில நடுக்கம்:மக்கள் பீதியடைய வேண்டாம்:ராஜ்நாத் சிங்

Posted:

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டு மக்கள் பீதியுடன் சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

ஜெ விடுதலை அறிவுப்பூர்வமாக அதிர்ச்சி, உணர்வுப் பூர்வமாக மகிழ்ச்சி:டி ஆர்

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை என்பது அறிவுப்பூர்வமாக அதிர்ச்சி, உணர்வுப் பூர்வமாக மகிழ்ச்சி என்று, டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்குறித்த தமிழக அரசின் மனு அவசர வழக்கு இல்லை:உச்ச நீதிமன்றம்

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்குறித்த தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™