Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம்
- வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி
- 20 கிராமங்களில் தூய்மை காவலர்களை நியமிக்க முடிவு
- சாலை விபத்தில் வங்கி அதிகாரி சாவு
- டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
- மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது
- சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- சொத்துத் தகராறில் தாயைக் கொன்ற மகன் கைது
- எரிவாயுக் கிணற்றில் தீ: 8 பேர் காயம்
- பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு
- விக்கி தியாகி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை
- யேல் பல்கலை. பயிற்சிக்கு 2 இந்தியர்கள் தேர்வு
- சல்மான் கான் வழக்கில் தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு
- "மோடி குறித்த கருத்தை ஒபாமா மாற்றிக் கொள்வார்'
- விறுவிறுப்பாக நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல்
- பழனி சரக்கு ரோப்கார் சீரமைப்புப் பணிகள் துவக்கம்
- கூட்டுறவுத் துறை அலுவலர் சங்கக் கூட்டம்
- வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு சம்பள உயர்வு
- செவிலியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்
- சூறாவளிக் காற்றுடன் மழை: 50 ஏக்கர் முருங்கை மரங்கள் சாய்ந்தன
- சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தம்பதி கைது
- கொடைக்கானல் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுசெல்ல தடை
- கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
- இயற்கை உரம் தயாரிப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்
- பாலக்கோம்பையில் "அம்மா' திட்ட முகாம்
- திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
- தீவிரவாதிகள் விடுவித்த பாதிரியார் கொடைக்கானல் மக்களுடன் சந்திப்பு
- அரசு பள்ளி அருகே தேங்கும் மழை நீர்: நோய் பரவும் அபாயம்
- கட்சிக்காரர் செல்வாக்கு மிக்கவர் என்பதற்காக வாதிடாதீர்கள்
- புதிய வருமான வரிப் படிவங்கள் குறித்து மறுபரிசீலனை: மத்திய அரசு
- பணம் கேட்டு மிரட்டல்: 6 மாவோயிஸ்டுகள் கைது
- ஒடிஸா அரசு அதிகாரிகளின் நடத்தை: ஆராய நெறிமுறைக் குழு நியமனம்
- மத்திய அமைச்சர் கட்கரியின் சகோதரி வீட்டில் திருட்டு
- முஃப்தி - சரத் யாதவ் சந்திப்பு
- குஜராத்தின் கட்டாய வாக்களிப்புச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது: காங்கிரஸ்
- மகாராஷ்டிரம்: நியாயவிலைக் கடைகளில் விரைவில் பயோ-மெட்ரிக் பதிவு முறை
- மே 5-இல் நாடாளுமன்றம் முற்றுகை
- நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு 21-இல் விசாரணை
- மோடி வருகையால் ரூ.8,000 கோடிக்கு வர்த்தகம்
- பூமிதான இயக்கம்: விநியோகிக்கப்படாத 23 லட்சம் ஏக்கர் நிலங்கள்
- மேலிடம் அனுப்பிய நோட்டீஸ் சிறந்த நகைச்சுவை
- உ.பி. பயிர்ச் சேத நிவாரண நிதி: 15 நாள் ஊதியத்தை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்
- அனைத்துப் பிரச்னைகளையும் ஜம்மு-காஷ்மீர் அரசு சமாளிக்கும்
- குருவாயூர் கோயிலில் இலங்கைப் பிரதமர் வழிபாடு
- அரசின் ஜனரஞ்சகமான திட்டங்களை நீதித் துறை அனுமதிக்கக் கூடாது
- நாகர்கோவில்
- யேமன்: 4 அம்ச அமைதித் திட்டத்தை ஐ.நா.விடம் அளித்தது ஈரான்
- ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- "சமூக நல்லிணக்க முகாம்களில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கலாம்'
- போதைப் பொருள் கும்பல் தலைவர் கைதால் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் சாவு
- திருச்செந்தூரில் இன்று மார்க்சிஸ்ட் வாகனப் பிரசாரம்
- தற்காப்புக்காகவே ராணுவம்: ஈரான் விளக்கம்
- "இணையதளக் குற்றங்கள் பயங்கரவாதத்துக்கு இணையானவை'
- எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் ரூ.26.90 கோடியில் விரிவாக்கப் பணிகள்
- லிபியாவில் அரசு - கிளர்ச்சிப் படையினர் மோதல்
- சீனாவில் ரூ.68 லட்சம் கரன்சி எரிந்து நாசம்
- 27இல் கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்
- ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 33 பேர் பலி
- பங்குச் சந்தையில் சரிவு
- விஸ்டாரா புதிய சேவைகள் அறிவிப்பு
- ஏற்றுமதி அதிகரிப்பதற்கு மத்திய அரசு உதவக் கோரிக்கை
- பெட்ரோல் நிலையங்களை மீண்டும் திறக்க ரிலையன்ஸ் முடிவுஸ்
- வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
- விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதில்லை
- அம்பேத்கர் சிலை சேதம்: கண்டித்து சாலை மறியல்
- பயணிகள் ரயில் தாமதம்: நிலைய அதிகாரி முற்றுகை
- இலவச கால்நடை மருத்துவ முகாம்
- 974 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்
- ஆழ்துளைக் கிணறு உரிமையாளர் கைது
- சென்னை பல்கலை.யில் ரூ.500 கோடியில் கடல்சார் உயிரி தொழில்நுட்பத் துறை
- "நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு அவசியம்'
- ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி: அதிகாரி நேரில் ஆய்வு
- என்சிசி அலுவலருக்கு பதவி உயர்வு
- போலி பட்டா தயாரித்து ரூ.1.5 கோடி நிலம் விற்பனை: 11 பேர் மீது வழக்கு
- மாணவிகள் இருவரைக் காணவில்லை
- குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
- ஆந்திரச் சம்பவம்: திருவண்ணாமலையில் 6 உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை
- காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு
- யாக சாலை பூஜை நடத்திய அதிமுகவினர்
- பிருதூரில் குடியிருப்போருக்கு பட்டா
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பேற்பு
- ஊராட்சித் தலைவர்களுக்கு நாளை பயிற்சி
- விவசாயிகளுக்கு குழு மேம்பாட்டுத் திறன் பயிற்சி
- தடகளப் போட்டியில் பங்கேற்க மாணவி தேர்வு
- இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
- ஏப்ரல் 20 மின் தடை
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் விழிப்புணர்வுப் பிரசார இயக்கம்
- போலீஸ் வளையத்தில் அரசு மருத்துவமனை
- 27இல் கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்
- விவசாயிகளுக்கு ராகுல் அழைப்பு
- செறிவான கலாசாரத்தைப் பறைசாற்றும் தமிழகம்!
- ஸ்டீபன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் கேஜரிவால்
- மெட்ரோ ஊழியர்களின் "பாரம்பரிய நடைப்பயணம்'
- மேலிடம் அனுப்பிய நோட்டீஸ் சிறந்த நகைச்சுவை
- ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக கண்டனம்
- கயத்தாறு அருகே பைக் மோதி 5 பேர் காயம்
- அவதூறு வழக்கு: கேஜரிவால், சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்
- மோசடி வழக்கு: நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தருக்கு விலக்கு
- வழிப்பறியைத் தடுத்த பெண் உள்பட இருவருக்கு காவல் ஆணையர் பாராட்டு
- ரூ.2.50 கோடி கொள்ளை: தேடப்பட்டவர் கைது
| வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் Posted: 18 Apr 2015 01:07 PM PDT பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி Posted: 18 Apr 2015 01:06 PM PDT தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தொடர்பு வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கி டாக்கி வழங்கப்பட உள்ளது. |
| 20 கிராமங்களில் தூய்மை காவலர்களை நியமிக்க முடிவு Posted: 18 Apr 2015 01:05 PM PDT தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 20 ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கு தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். |
| சாலை விபத்தில் வங்கி அதிகாரி சாவு Posted: 18 Apr 2015 01:05 PM PDT உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் சுந்தர்(50). தேசியவங்கி ஒன்றின் மேலாளர். கடந்த மார்ச்.16 ஆம் தேதி கம்பம் நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் தவறி கீழே விழுந்தாராம். |
| டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் Posted: 18 Apr 2015 01:04 PM PDT கொடைக்கானலில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது Posted: 18 Apr 2015 01:03 PM PDT பழனி அருகே கீரனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம்(47). இவர் வெள்ளிக்கிழமை பழனி-திண்டுக்கல் சாலையில் மீனாட்சி ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்த போது பழனி இடும்பன் நகரை சேர்ந்த கனகராஜ்(46) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி Posted: 18 Apr 2015 01:03 PM PDT திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. |
| சொத்துத் தகராறில் தாயைக் கொன்ற மகன் கைது Posted: 18 Apr 2015 01:02 PM PDT தேனி மாவட்டம், வருசநாடு அருகே சொத்துத் தகராறில் தாயைக்கொன்ற மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| எரிவாயுக் கிணற்றில் தீ: 8 பேர் காயம் Posted: 18 Apr 2015 01:01 PM PDT குஜராத் மாநிலம், சூரத் அருகே உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய்க் கிணற்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். |
| பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு Posted: 18 Apr 2015 01:01 PM PDT வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சுமைதூக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| விக்கி தியாகி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை Posted: 18 Apr 2015 12:59 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரெளடி விக்கி தியாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள 5 பேரின் சொத்துகளை முடக்குவதற்கான நீதிமன்ற நோட்டீஸ்கள் அவர்களது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். |
| யேல் பல்கலை. பயிற்சிக்கு 2 இந்தியர்கள் தேர்வு Posted: 18 Apr 2015 12:59 PM PDT நிகழாண்டில் சர்வதேச சமூக ஆர்வலர்களாக (வேர்ல்டு ஃபெல்லோ), இரண்டு இந்தியர்களை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. |
| சல்மான் கான் வழக்கில் தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு Posted: 18 Apr 2015 12:58 PM PDT மும்பையில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் (49) மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி திங்கள்கிழமை (ஏப்.20) அறிவிக்கப்படும் என்று விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. |
| "மோடி குறித்த கருத்தை ஒபாமா மாற்றிக் கொள்வார்' Posted: 18 Apr 2015 12:57 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை "இந்தியாவின் தலைமைச் சீர்திருத்தவாதி' என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது கருத்தை மாற்றிக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார். |
| விறுவிறுப்பாக நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் Posted: 18 Apr 2015 12:56 PM PDT மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகராட்சிக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது, ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. |
| பழனி சரக்கு ரோப்கார் சீரமைப்புப் பணிகள் துவக்கம் Posted: 18 Apr 2015 12:55 PM PDT பழனி மலைக்கோயிலுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் சரக்கு ரோப்கார் சீரமைப்புப் பணிகள் சனிக்கிழமை துவங்கியது. |
| கூட்டுறவுத் துறை அலுவலர் சங்கக் கூட்டம் Posted: 18 Apr 2015 12:55 PM PDT கொடைக்கானலில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலர் சங்க மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு சம்பள உயர்வு Posted: 18 Apr 2015 12:54 PM PDT தேனி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம்(ஏப்ரல்) முதல் தினச் சம்பளம் ரூ.183 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. |
| செவிலியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல் Posted: 18 Apr 2015 12:53 PM PDT தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சூறாவளிக் காற்றுடன் மழை: 50 ஏக்கர் முருங்கை மரங்கள் சாய்ந்தன Posted: 18 Apr 2015 12:53 PM PDT பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. |
| சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தம்பதி கைது Posted: 18 Apr 2015 12:52 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், காங்கேர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, மாவோயிஸ்ட் தம்பதியரை, மகாராஷ்டிர மாநிலத்தில் போலீஸார் கைது செய்தனர். |
| கொடைக்கானல் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுசெல்ல தடை Posted: 18 Apr 2015 12:52 PM PDT கொடைக்கானல் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். |
| கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் Posted: 18 Apr 2015 12:51 PM PDT தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| இயற்கை உரம் தயாரிப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் Posted: 18 Apr 2015 12:51 PM PDT திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார். |
| பாலக்கோம்பையில் "அம்மா' திட்ட முகாம் Posted: 18 Apr 2015 12:49 PM PDT ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் மூன்றாம் கட்ட அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 18 Apr 2015 12:48 PM PDT பழனி அருகே நெய்க்காரபட்டியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| தீவிரவாதிகள் விடுவித்த பாதிரியார் கொடைக்கானல் மக்களுடன் சந்திப்பு Posted: 18 Apr 2015 12:48 PM PDT தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பாதிரியார் கொடைக்கானல் பகுதி ஆதிவாசிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். |
| அரசு பள்ளி அருகே தேங்கும் மழை நீர்: நோய் பரவும் அபாயம் Posted: 18 Apr 2015 12:47 PM PDT ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| கட்சிக்காரர் செல்வாக்கு மிக்கவர் என்பதற்காக வாதிடாதீர்கள் Posted: 18 Apr 2015 12:43 PM PDT "கட்சிக்காரர் செல்வாக்கு மிக்கவர் என்பதற்காக மட்டுமே அவருக்காக வாதிடாதீர்கள்' என்று வழக்குரைஞர்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் வலியுறுத்தி உள்ளார். |
| புதிய வருமான வரிப் படிவங்கள் குறித்து மறுபரிசீலனை: மத்திய அரசு Posted: 18 Apr 2015 12:43 PM PDT வருமான வரிப் படிவங்களில் கூடுதல் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| பணம் கேட்டு மிரட்டல்: 6 மாவோயிஸ்டுகள் கைது Posted: 18 Apr 2015 12:42 PM PDT பிகார் மாநிலத்தில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் 6 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| ஒடிஸா அரசு அதிகாரிகளின் நடத்தை: ஆராய நெறிமுறைக் குழு நியமனம் Posted: 18 Apr 2015 12:42 PM PDT ஒடிஸாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம், அவர்களது அணுகுமுறையை ஆய்வு செய்ய மக்களவையில் இருப்பதுபோல, ஒடிஸா சட்டப் பேரவையிலும் நெறிமுறைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. |
| மத்திய அமைச்சர் கட்கரியின் சகோதரி வீட்டில் திருட்டு Posted: 18 Apr 2015 12:41 PM PDT மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில், வசித்து வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சகோதரி வீட்டில் ரூ.23 லட்சம் மதிப்பிலான பணம், நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். |
| முஃப்தி - சரத் யாதவ் சந்திப்பு Posted: 18 Apr 2015 12:41 PM PDT ஐம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீதை, ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் சனிக்கிழமை சந்தித்து பேசினார். |
| குஜராத்தின் கட்டாய வாக்களிப்புச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது: காங்கிரஸ் Posted: 18 Apr 2015 12:40 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று குஜராத் அரசு கொண்டு வந்துள்ள சட்டமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| மகாராஷ்டிரம்: நியாயவிலைக் கடைகளில் விரைவில் பயோ-மெட்ரிக் பதிவு முறை Posted: 18 Apr 2015 12:37 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில், மும்பை, தாணே ஆகிய நகரங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில், வரும் நவம்பர் மாதத்துக்குள் பயோ-மெட்ரிக் பதிவு முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. |
| மே 5-இல் நாடாளுமன்றம் முற்றுகை Posted: 18 Apr 2015 12:36 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அடுத்த மாதம் 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. |
| நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு 21-இல் விசாரணை Posted: 18 Apr 2015 12:26 PM PDT தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட நால்வர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) விசாரிக்கவுள்ளது. |
| மோடி வருகையால் ரூ.8,000 கோடிக்கு வர்த்தகம் Posted: 18 Apr 2015 12:16 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையே ரூ.8,000 கோடி அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. |
| பூமிதான இயக்கம்: விநியோகிக்கப்படாத 23 லட்சம் ஏக்கர் நிலங்கள் Posted: 18 Apr 2015 12:16 PM PDT வினோபா பாவேயின் "பூமிதான இயக்கத்தில்' நாடு முழுவதும் தானமாகப் பெறப்பட்ட 47 லட்சம் ஏக்கர் நிலங்களில், 23 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது. |
| மேலிடம் அனுப்பிய நோட்டீஸ் சிறந்த நகைச்சுவை Posted: 18 Apr 2015 12:16 PM PDT கட்சி விதிகளை மீறிச் செயல்பட்டதாகத் தனக்கும், பிரசாந்த் பூஷணுக்கும் ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பியுள்ள நோட்டீஸ் சிறந்த நகைச்சுவையான நடவடிக்கை என்று அக்கட்சியின் அதிருப்தியாளர் யோகேந்திர யாதவ் கூறினார். |
| உ.பி. பயிர்ச் சேத நிவாரண நிதி: 15 நாள் ஊதியத்தை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் Posted: 18 Apr 2015 12:15 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயிர்ச் சேதத்துக்கான முதல்வர் நிவாரண நிதிக்கு பாரபங்கி மாவட்ட ஆட்சியர் தன்னுடைய 15 நாள் ஊதியத்தை வழங்குவதாக சனிக்கிழமை கூறினார். |
| அனைத்துப் பிரச்னைகளையும் ஜம்மு-காஷ்மீர் அரசு சமாளிக்கும் Posted: 18 Apr 2015 12:14 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தப் பிரச்னையானாலும், அதனைக் கையாளும் திறன் மாநில அரசுக்கு உண்டு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். |
| குருவாயூர் கோயிலில் இலங்கைப் பிரதமர் வழிபாடு Posted: 18 Apr 2015 12:14 PM PDT கேரளத்தின் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமை வழிபாடு செய்தார். |
| அரசின் ஜனரஞ்சகமான திட்டங்களை நீதித் துறை அனுமதிக்கக் கூடாது Posted: 18 Apr 2015 12:13 PM PDT "அரசின் ஜனரஞ்சகமான திட்டங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும்படியாக இருந்தால், அவற்றை நீதித் துறை அனுமதிக்கக்கூடாது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். |
| Posted: 18 Apr 2015 12:08 PM PDT |
| யேமன்: 4 அம்ச அமைதித் திட்டத்தை ஐ.நா.விடம் அளித்தது ஈரான் Posted: 18 Apr 2015 12:07 PM PDT யேமனில் அமைதி திரும்ப ஐ.நா.விடம் 4 அம்சத் திட்டத்தை ஈரான் அளித்துள்ளது. |
| ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் Posted: 18 Apr 2015 12:07 PM PDT தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளர்பிரான் கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| "சமூக நல்லிணக்க முகாம்களில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கலாம்' Posted: 18 Apr 2015 12:06 PM PDT ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நடைபெறும் சமூக நல்லிணக்க முகாம்களின்போது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| போதைப் பொருள் கும்பல் தலைவர் கைதால் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் சாவு Posted: 18 Apr 2015 12:06 PM PDT மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. |
| திருச்செந்தூரில் இன்று மார்க்சிஸ்ட் வாகனப் பிரசாரம் Posted: 18 Apr 2015 12:05 PM PDT உடன்குடி அனல் மின் நிலையத்திட்டப்பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி திருச்செந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.19) இருசக்கர வாகனப் பிரசாரப் பயணம் நடைபெறுகிறது. |
| தற்காப்புக்காகவே ராணுவம்: ஈரான் விளக்கம் Posted: 18 Apr 2015 12:05 PM PDT ஈரானின் ராணுவம் தற்காப்புக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் ஹஸன் ரெளஹானி கூறினார். |
| "இணையதளக் குற்றங்கள் பயங்கரவாதத்துக்கு இணையானவை' Posted: 18 Apr 2015 12:05 PM PDT பயங்கரவாதத்தைப் போலவே இணையதளக் குற்றங்களும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக ஐரோப்பிய காவல்துறை (யூரோபோல்) தலைவர் ராப் வெய்ன்ரைட் கூறியுள்ளார். |
| எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் ரூ.26.90 கோடியில் விரிவாக்கப் பணிகள் Posted: 18 Apr 2015 12:04 PM PDT தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் ஆலை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.26.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளை அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். |
| லிபியாவில் அரசு - கிளர்ச்சிப் படையினர் மோதல் Posted: 18 Apr 2015 12:04 PM PDT லிபியாவில் அரசுப் படையினருக்கும், மதவாத கிளர்ச்சியாளர்களுக்கும் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சண்டையில் 21 பேர் கொல்லப்பட்டனர். |
| சீனாவில் ரூ.68 லட்சம் கரன்சி எரிந்து நாசம் Posted: 18 Apr 2015 12:04 PM PDT சீனாவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் தீப்பிடித்ததில் 6.77 லட்சம் சீன யுவான்கள் (சுமார் ரூ.68.34 லட்சம்) மதிப்பிலான கரன்சி நோட்டுகள் எரிந்து நாசமாகின. |
| 27இல் கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 18 Apr 2015 12:03 PM PDT கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டியில் இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்குகிறது என யங் சேலஞ்சர்ஸ் கல்வி மற்றும் விளையாட்டு அகாதெமி செயலர் பசுபதி தெரிவித்துள்ளார். |
| ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 33 பேர் பலி Posted: 18 Apr 2015 12:03 PM PDT ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 18 Apr 2015 12:02 PM PDT மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 437 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 28,442 புள்ளிகளாக நிலைத்தது. |
| விஸ்டாரா புதிய சேவைகள் அறிவிப்பு Posted: 18 Apr 2015 12:01 PM PDT விஸ்டாரா விமான நிறுவனம் செயல்படத் தொடங்கி 100 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து, புதிய சேவைகளை அறிவித்துள்ளது. |
| ஏற்றுமதி அதிகரிப்பதற்கு மத்திய அரசு உதவக் கோரிக்கை Posted: 18 Apr 2015 12:00 PM PDT ஏற்றுமதிகள் அதிகரிப்பதற்கு மத்திய அரசு கூடுதல் உதவிகள் அளிக்க வேண்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பெட்ரோல் நிலையங்களை மீண்டும் திறக்க ரிலையன்ஸ் முடிவுஸ் Posted: 18 Apr 2015 12:00 PM PDT நாடு முழுவதும் உள்ள தங்களின் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது. |
| வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு Posted: 18 Apr 2015 11:57 AM PDT திருச்சி உய்யக்கொண்டான் திருமலை அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதில்லை Posted: 18 Apr 2015 11:55 AM PDT வேலூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கான கடனுதவியைக் கூட்டுறவு வங்கிகள் முறையாக வழங்குவதில்லை என வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
| அம்பேத்கர் சிலை சேதம்: கண்டித்து சாலை மறியல் Posted: 18 Apr 2015 11:54 AM PDT சோளிங்கர் அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அரசியல் கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பயணிகள் ரயில் தாமதம்: நிலைய அதிகாரி முற்றுகை Posted: 18 Apr 2015 11:54 AM PDT அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு சனிக்கிழமை காலை புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகியும் புறப்படாததைக் கண்டித்து நிலைய அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டனர். |
| Posted: 18 Apr 2015 11:54 AM PDT ஆம்பூர், வாணியம்பாடி மிட்டவுன், திருப்பத்தூர் சுழற் சங்கங்கள், கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் நிறுவனம், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில், இலவச கால்நடை மருத்துவ முகாம் திருப்பத்தூர் அருகே குரும்பக்கேரி புதூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 974 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் Posted: 18 Apr 2015 11:54 AM PDT குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் 974 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| ஆழ்துளைக் கிணறு உரிமையாளர் கைது Posted: 18 Apr 2015 11:53 AM PDT ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| சென்னை பல்கலை.யில் ரூ.500 கோடியில் கடல்சார் உயிரி தொழில்நுட்பத் துறை Posted: 18 Apr 2015 11:53 AM PDT சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.500 கோடியில் கடல்சார் உயிரிதொழில்நுட்பத் துறை விரைவில் அமைக்கப்பட உள்ளது என பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார். |
| "நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு அவசியம்' Posted: 18 Apr 2015 11:53 AM PDT நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். தாண்டவன் கூறினார். |
| ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி: அதிகாரி நேரில் ஆய்வு Posted: 18 Apr 2015 11:53 AM PDT ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் பழனியம்மாள் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| என்சிசி அலுவலருக்கு பதவி உயர்வு Posted: 18 Apr 2015 11:52 AM PDT வேலூர், காட்பாடி காந்தி நகர் 10-ஆவது பட்டாலியன் என்சிசி அலுவலர் க.ராஜாவுக்கு முதன்மை அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. |
| போலி பட்டா தயாரித்து ரூ.1.5 கோடி நிலம் விற்பனை: 11 பேர் மீது வழக்கு Posted: 18 Apr 2015 11:52 AM PDT போலி பட்டா தயாரித்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ததாக வந்தப் புகாரின்பேரில் 11 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். |
| Posted: 18 Apr 2015 11:52 AM PDT பள்ளிக்குத் தேர்வு எழுதச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என சிப்காட் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 18 Apr 2015 11:51 AM PDT குடிநீர் கேட்டு ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| ஆந்திரச் சம்பவம்: திருவண்ணாமலையில் 6 உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை Posted: 18 Apr 2015 11:51 AM PDT திருப்பதி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 6 தமிழர்களின் உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. |
| காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு Posted: 18 Apr 2015 11:51 AM PDT செங்கம் அருகே ஜமனாமரத்தூர் மலையடிவாரத்தில் உள்ள கிளையூர் தாழைமடுவு ஸ்ரீ காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
| யாக சாலை பூஜை நடத்திய அதிமுகவினர் Posted: 18 Apr 2015 11:50 AM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, ஆரணி வி.ஏ.கே. நகரில் உள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு யாக சாலை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| பிருதூரில் குடியிருப்போருக்கு பட்டா Posted: 18 Apr 2015 11:50 AM PDT பிருதூர் முஸ்லிம் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தியது. |
| வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பேற்பு Posted: 18 Apr 2015 11:50 AM PDT கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) அ.கருணாகரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். |
| ஊராட்சித் தலைவர்களுக்கு நாளை பயிற்சி Posted: 18 Apr 2015 11:49 AM PDT திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலை, அனக்காவூரில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. |
| விவசாயிகளுக்கு குழு மேம்பாட்டுத் திறன் பயிற்சி Posted: 18 Apr 2015 11:49 AM PDT ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு குழு மேம்பாட்டுத் திறன் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| தடகளப் போட்டியில் பங்கேற்க மாணவி தேர்வு Posted: 18 Apr 2015 11:49 AM PDT தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க, திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் Posted: 18 Apr 2015 11:49 AM PDT வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில், மே 20-ஆம் தேதி வரை நடைபெறும் கோடைக்கால இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கியன. |
| Posted: 18 Apr 2015 11:48 AM PDT |
| தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரின் விழிப்புணர்வுப் பிரசார இயக்கம் Posted: 18 Apr 2015 11:48 AM PDT தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவில்பட்டி வட்டக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது. |
| போலீஸ் வளையத்தில் அரசு மருத்துவமனை Posted: 18 Apr 2015 11:47 AM PDT இறந்த 6 தமிழக தொழிலாளர் உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையை சனிக்கிழமை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். |
| 27இல் கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 18 Apr 2015 11:46 AM PDT கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டியில் இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்குகிறது என யங் சேலஞ்சர்ஸ் கல்வி மற்றும் விளையாட்டு அகாதெமி செயலர் பசுபதி தெரிவித்துள்ளார். |
| Posted: 18 Apr 2015 11:45 AM PDT "மத்திய அரசின் நிலம் கையக மசோதாவுக்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் பேரணிக்கு அணி திரளுங்கள்' என்று விவசாயிகளுக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். |
| செறிவான கலாசாரத்தைப் பறைசாற்றும் தமிழகம்! Posted: 18 Apr 2015 11:45 AM PDT பாரதத்தின் செறிவான கலாசாரத்தை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காண முடிகிறது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். |
| ஸ்டீபன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் கேஜரிவால் Posted: 18 Apr 2015 11:45 AM PDT புனித ஸ்டீபன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமை விருந்தினராக சனிக்கிழமை கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் பங்கேற்க கூடாது என்று அந்த கல்லூரி மாணவர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். |
| மெட்ரோ ஊழியர்களின் "பாரம்பரிய நடைப்பயணம்' Posted: 18 Apr 2015 11:44 AM PDT தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) ஊழியர்கள் பங்கேற்ற பாரம்பரிய நடைப்பயண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சாவ்ரி பஜார் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சாந்தினி சௌக் |
| மேலிடம் அனுப்பிய நோட்டீஸ் சிறந்த நகைச்சுவை Posted: 18 Apr 2015 11:44 AM PDT கட்சி விதிகளை மீறிச் செயல்பட்டதாகத் தனக்கும், பிரசாந்த் பூஷணுக்கும் ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பியுள்ள நோட்டீஸ் சிறந்த நகைச்சுவையான நடவடிக்கை என்று அக்கட்சியின் அதிருப்தியாளர் யோகேந்திர யாதவ் கூறினார். |
| ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக கண்டனம் Posted: 18 Apr 2015 11:44 AM PDT தில்லியில் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தில்லி போலீஸ் மூலம் ஆம் ஆத்மி அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டனத்துக்குரியது என்று பாஜக தெரிவித்துள்ளது. |
| கயத்தாறு அருகே பைக் மோதி 5 பேர் காயம் Posted: 18 Apr 2015 11:44 AM PDT கயத்தாறு அருகே சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது பைக் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். |
| அவதூறு வழக்கு: கேஜரிவால், சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 18 Apr 2015 11:43 AM PDT மத்திய முன்னாள் அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித் சிபல் தொடுத்த அவதூறு வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த பூஷண், ஷாஜியா இல்மி ஆகியோர் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகினர். |
| மோசடி வழக்கு: நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தருக்கு விலக்கு Posted: 18 Apr 2015 11:43 AM PDT வேறொருவரின் ஆய்வுக் கட்டுரையை தன்னுடையதாக பிரசுரித்ததாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தீபக் பென்டலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க அவருக்கு விலக்க அளிக்கப்பட்டது. |
| வழிப்பறியைத் தடுத்த பெண் உள்பட இருவருக்கு காவல் ஆணையர் பாராட்டு Posted: 18 Apr 2015 11:43 AM PDT தில்லியில் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தலைத் தடுத்த சம்பவத்தில் இளம் பெண் உள்பட இருவரை தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி நேரில் அழைத்துப் பாராட்டினார். |
| ரூ.2.50 கோடி கொள்ளை: தேடப்பட்டவர் கைது Posted: 18 Apr 2015 11:43 AM PDT தில்லியில் கடந்த டிசம்பரில் உலர் பழம் விற்பனையகத்தில் வசூல் பணம் ரூ.2.50 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபரை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |