Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மருந்து விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்
- ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு காண வேண்டும்: கருணாநிதி
- பள்ளிக் கல்வியில் ராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாறு
- பாமக உண்மை அறியும் குழு திருப்பதி சென்றது
- தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை: மத்திய அரசு தலையிட வேண்டும்
- ரஷிய நாட்டியக் கலைஞருக்கு நவீன மூட்டு அறுவைச் சிகிச்சை
- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப் பரிந்துரை
- இந்தியாவில் 28 கோடி பேருக்கு மின்சார வசதியில்லை
- தங்கக் கட்டிகள் கடத்தல்: கொச்சியில் விமானப் பயணி கைது
- ஆளுநர்களுக்கு உள்துறை கட்டுப்பாடு
- சிவசேனை எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தல்
- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு
- சிபிஐ நடவடிக்கையின் பின்னணியில் மோடி: மம்தா
- "கிரீன்பீஸ்' அமைப்பு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
- மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்: தோற்றாலும் ஹர்பஜன் நாயகன்
- வேண்டாம் "முகமூடி' உறவு
- உள்ளிருந்து உருக்கும் நோய்
- குடும்ப வன்முறையும் நிர்பயா நிதியும்!
- நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசிதழில் வெளியாகுமா? உச்ச நீதிமன்ற வழக்கால் தாமதிக்கும் மத்திய அரசு
- சென்னையின் மின் தேவை 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும்?
- எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் எப்போது?
- வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- மாவோயிஸ்ட் தாக்குதல்: 10 மாநிலங்களில் உஷார் நிலை
- மாவோயிஸ்ட் தாக்குதல்: ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை
- இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக சாத்தியக்கூறுகள்: பிரதமர் மோடி
- போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இன்று அறிவிப்பு
- முக்கிய நகரங்களுக்கு விமான சேவை
- வங்கிக் கடன் முறைகேடு: வி.கே.சிங்குக்கு நெருக்கமானவர் மீது வழக்குப் பதிவு
- மரம் வெட்டும் தொழிலாளர்கள் 63 பேர் ஆந்திரத்தில் கைது
- ஆந்திரம், தெலங்கானா துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்: தில்லியில் தொடரும் போராட்டம்
- எழுத்தாளர் ஷோபா டேவுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை நோட்டீஸ்
- வீட்டு வசதிக் கடன் வட்டி 0.25% வரை குறைப்பு: எஸ்.பி.ஐ.
- காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரத்தை அரசியலாக்கும் பாஜக, பிடிபி கூட்டணி
- இந்திய எல்லைப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் உளவு விமானம்
- தனி நகரிய திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்
- "பத்ம விருதுக்கு குர்கான் மருத்துவரை பரிந்துரைத்தார் சரத் யாதவ்'
- பலியான போலீஸாரின் உடல்கள் மீட்பு
- 17 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைப்பு
- ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் ஆதரவு
- தன்னிச்சையாகச் செயல்படுகிறது மத்திய அரசு
- முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கக் கோரும் சிவசேனை கருத்தால் சர்ச்சை
- ஊடகங்களின் குற்றச்சாட்டு பின்னணியில் ஆயுதத் தரகர்கள்: வி.கே. சிங்
- மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ராஜ்குமார் குடும்பத்தினர் ஆதரவு
- ஆளுநர்களுக்கு மத்திய உள்துறை திடீர் கட்டுப்பாடு
- பஞ்சாபில் சிவசேனைத் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது
- பதர்பூர் - ஃபரீதாபாத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
- ஜாட் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு?
- கட்டடக் கழிவு மறுசுழற்சி மையத்தின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்
- தில்லியின் வளர்ச்சிக்காக அதிக நிதியை ஒதுக்குங்கள்
- சுமித்ரா மகாஜன் பிறந்த நாள்: பிரணாப், மோடி வாழ்த்து
- தெற்கு தில்லி மாநகராட்சிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு
- அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்தியவர் ஜெயகாந்தன்'
- இலவச சீருடைகள் வழங்கக் கோரி பள்ளிக்கு எதிராக ஏழை மாணவர்கள் வழக்கு
- குஜராத் பவனில் தீ விபத்து
- குரங்குகள் தொல்லையைத் தடுக்க மின் வேலி:முனிசிபல் கவுன்சிலுக்கு நோட்டீஸ்
- ஜாமியாபல்கலை.யில் 4 புதிய படிப்புகள்
- தில்லி அரசின் கடிதம்: உள்துறையிடம் ஆலோசனை கேட்கும் காவல் துறை
- துர்க்மான் கேட் சம்பவம்:காவல் ஆணையருக்கு கடிதம்
- மாநகராட்சிகளின் நிதிச் சிக்கலுக்கு காரணம் என்ன?
- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை:ரூ.50 உயர்த்த ஆணையம் பரிந்துரை
- வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு
- ஏப்ரல் 15- இல் சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- இரு சக்கர வாகனம் மோதி சிறுவன் சாவு
- சாலையோர பழ வியாபாரிகளுக்கு இலவச வலை
- 17-இல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்
- நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா
- குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து 11,607 பேர் காத்திருப்பு
- நலவாரியப் பதிவை புதுப்பிக்கும் விவகாரம் தொழிலாளர்களை நிர்பந்திக்க கூடாது
- ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயி−ல் தீமிதி விழா
- எல்லையம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா
- திமுக சார்பில் 1,063 பேருக்கு நல உதவிகள் அளிப்பு
- அதிமுக நிர்வாகிகள் 5 பேர் காயம்
- பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணி சாவு
- இரு வேறு சம்பவங்கள்:ரயில் மோதியதில் 2 பேர் சாவு
- சாலையில் பெரிய பள்ளம் முடப்படுமா?
- வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
- வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம்களில் ஆய்வு
- கிணறு தோண்ட பதிவுச் சான்று அவசியம்
- தீப் பிடித்து மரம் எரிந்தது:8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- 136 பேர் ரத்த தானம்
- ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது தாக்குதல்
- விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டுகளாக அதிகரிக்க வலியுறுத்தல்
- கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- எவனுக்கு தெரியும்!
- நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்: மூவர் மீது வழக்கு
- குமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- சுந்தரனார் பல்கலை. வெள்ளி விழா கோப்பை:நாகர்கோவிலில் வாலிபால் போட்டி தொடக்கம்
- குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை கனிகாணும் வைபவம்
- குமரி அருகேகுளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
- தேங்காய்ப்பட்டினத்தில் மீனவர் பேரவைக் கூட்டம்
- மது பாட்டில் பதுக்கல்:ஓய்வுபெற்ற காவலர் கைது
- 1,629 மையங்களில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முகாம்
- நாகர்கோவிலில் தமிழ்நல மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- இலக்கியச் சங்கமம்
- மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்குத் தீர்வு
- குமரி மாவட்டத்தில் 10 மாதங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: பொன்.ராதாகிருஷ்ணன்
- எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு
- மாவட்டத்தில் 4 இடங்களில் பெண்கள் கூட்டமைப்பினர் நாளை மனிதச் சங்கிலி
- 17 இல் குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- அனுமன் கதைகள்
| மருந்து விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் Posted: 12 Apr 2015 01:24 PM PDT அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு காண வேண்டும்: கருணாநிதி Posted: 12 Apr 2015 01:24 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை (ஏப்.13) நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| பள்ளிக் கல்வியில் ராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாறு Posted: 12 Apr 2015 01:22 PM PDT ராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாற்றை பள்ளிக் கல்வியில் இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தினார். |
| பாமக உண்மை அறியும் குழு திருப்பதி சென்றது Posted: 12 Apr 2015 01:21 PM PDT திருப்பதி வனப் பகுதியில் ஆந்திர மாநில போலீஸாரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை அறிவதற்காக பாமக சார்பில் உண்மை அறியும் குழு ஞாயிற்றுக்கிழமை திருப்பதி புறப்பட்டுச் சென்றது. |
| தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை: மத்திய அரசு தலையிட வேண்டும் Posted: 12 Apr 2015 01:20 PM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மாநிலங்களவைக் குழு திமுக தலைவர் கனிமொழி வலியுறுத்தினார். |
| ரஷிய நாட்டியக் கலைஞருக்கு நவீன மூட்டு அறுவைச் சிகிச்சை Posted: 12 Apr 2015 01:19 PM PDT ரஷிய நாட்டியக் கலைஞருக்கு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். ("சிம்ஸ்') மருத்துவமனையில் நவீன மூட்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. |
| நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப் பரிந்துரை Posted: 12 Apr 2015 01:13 PM PDT நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 50 உயர்த்துமாறு, விவசாயச் செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையம் (சிஏசிபி) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. |
| இந்தியாவில் 28 கோடி பேருக்கு மின்சார வசதியில்லை Posted: 12 Apr 2015 01:13 PM PDT இந்தியாவில் 28 கோடி பேருக்கு அடிப்படை மின்சார வசதி கூட இல்லை என்று மத்திய மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். |
| தங்கக் கட்டிகள் கடத்தல்: கொச்சியில் விமானப் பயணி கைது Posted: 12 Apr 2015 01:12 PM PDT கேரள மாநிலம், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், ரூ.54 லட்சம் மதிப்புள்ள 2 தங்கக் கட்டிகளைக் கடத்தியதாக பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஆளுநர்களுக்கு உள்துறை கட்டுப்பாடு Posted: 12 Apr 2015 01:12 PM PDT குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| சிவசேனை எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தல் Posted: 12 Apr 2015 01:06 PM PDT முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவசேனைக் கட்சியின் நாளேடான, "சாம்னா'வில் கட்டுரை வெளியாகியுள்ள நிலையில், அந்த நாளேடின் ஆசிரியரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை கைது செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு Posted: 12 Apr 2015 01:05 PM PDT ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதன்மைத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. |
| சிபிஐ நடவடிக்கையின் பின்னணியில் மோடி: மம்தா Posted: 12 Apr 2015 01:00 PM PDT திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிதி விவரங்களைக் கோரி, மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அறிவிக்கை அனுப்பியதன் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாக, மேற்கு வங்க முதல்வரும், அக்கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். |
| "கிரீன்பீஸ்' அமைப்பு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு Posted: 12 Apr 2015 12:59 PM PDT சுமார் 35 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தியத் தேயிலைத் தொழில் துறையைச் சீர்குலைக்க "கிரீன்பீஸ் இந்தியா' தன்னார்வ அமைப்பு முயற்சிப்பதாக மத்திய உள்துறை குற்றம்சாட்டியுள்ளது. |
| மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்: தோற்றாலும் ஹர்பஜன் நாயகன் Posted: 12 Apr 2015 12:56 PM PDT ஐபிஎல் தொடரில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லியின் அதிரடியும், பந்து வீச்சாளர்களின் தேர்ந்த பங்களிப்பும் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. |
| Posted: 12 Apr 2015 12:49 PM PDT உலகில் உறவுக்கு என்று ஒரு தனி அர்த்தம் உள்ளது. ஆனால், நவீன தொழில்நுட்பக் காலத்தில் உறவுகள் அனைத்தும் முகம் இல்லாமல் தொடர்கின்றன என்பதுதான் யதார்த்த உண்மை. |
| Posted: 12 Apr 2015 12:47 PM PDT நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடைக் கல்லாய் விளங்குவதாக நாம் ஊழலை நினைக்கிறோம். |
| குடும்ப வன்முறையும் நிர்பயா நிதியும்! Posted: 12 Apr 2015 12:46 PM PDT மகளிர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. |
| நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் அரசிதழில் வெளியாகுமா? உச்ச நீதிமன்ற வழக்கால் தாமதிக்கும் மத்திய அரசு Posted: 12 Apr 2015 12:41 PM PDT உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மூத்த நீதிபதிகளே நியமிக்கும் "கொலீஜியம்' முறைக்கு மாற்றான, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை அரசிதழில் வெளியிடுவதில் மத்திய அரசு அவசரம் காட்டவில்லை எனத் தெரிகிறது. |
| சென்னையின் மின் தேவை 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும்? Posted: 12 Apr 2015 12:41 PM PDT சென்னையின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு 3 ஆயிரம் மெகாவாட் அளவைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் எப்போது? Posted: 12 Apr 2015 12:40 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க மே மாதம் இரண்டாவது வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். |
| வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு Posted: 12 Apr 2015 12:40 PM PDT வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். |
| மாவோயிஸ்ட் தாக்குதல்: 10 மாநிலங்களில் உஷார் நிலை Posted: 12 Apr 2015 12:38 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் போலீஸார் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக 10 மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |
| மாவோயிஸ்ட் தாக்குதல்: ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை Posted: 12 Apr 2015 12:38 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். |
| இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக சாத்தியக்கூறுகள்: பிரதமர் மோடி Posted: 12 Apr 2015 12:37 PM PDT "இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ளன' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இன்று அறிவிப்பு Posted: 12 Apr 2015 12:36 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை (ஏப்.13) நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை அறிவிக்கப் போவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| முக்கிய நகரங்களுக்கு விமான சேவை Posted: 12 Apr 2015 12:31 PM PDT தேசிய அளவில் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜு தெரிவித்தார். |
| வங்கிக் கடன் முறைகேடு: வி.கே.சிங்குக்கு நெருக்கமானவர் மீது வழக்குப் பதிவு Posted: 12 Apr 2015 12:29 PM PDT பாதுகாப்புத் துறைத் தளவாடங்களை விநியோகிப்பதற்கான ஏலத்தில் பங்கேற்க, சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங்குக்கு நெருக்கமானவர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: |
| மரம் வெட்டும் தொழிலாளர்கள் 63 பேர் ஆந்திரத்தில் கைது Posted: 12 Apr 2015 12:28 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த 63 மரம் வெட்டும் தொழிலாளர்களை ஆந்திர மாநிலம், நெல்லூரில் அந்த மாநில போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
| ஆந்திரம், தெலங்கானா துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்: தில்லியில் தொடரும் போராட்டம் Posted: 12 Apr 2015 12:28 PM PDT ஆந்திர வனப் பகுதிகளில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும், தெலங்கானா மாநிலத்தில் சிறைக் கைதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தில்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. |
| எழுத்தாளர் ஷோபா டேவுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை நோட்டீஸ் Posted: 12 Apr 2015 12:27 PM PDT மகாராஷ்டிர மாநில திரையரங்குகளில் மராத்திய மொழி திரைப்படங்கள் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்ற மாநில அரசின் முடிவை சுட்டுரை (டுவிட்டர்) சமூகவலைதளப் பக்கத்தில் விமர்சித்தது குறித்து விளக்கம் கேட்டு, எழுத்தாளர் ஷோபா டேவுக்கு அந்த மாநில சட்டப்பேரவை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| வீட்டு வசதிக் கடன் வட்டி 0.25% வரை குறைப்பு: எஸ்.பி.ஐ. Posted: 12 Apr 2015 12:23 PM PDT வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் வரை வட்டியைக் குறைத்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. புதிய வட்டி விகிதம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. |
| காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரத்தை அரசியலாக்கும் பாஜக, பிடிபி கூட்டணி Posted: 12 Apr 2015 12:22 PM PDT காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஆளும் பிடிபி - பாஜக கூட்டணி அரசியலாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| இந்திய எல்லைப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் உளவு விமானம் Posted: 12 Apr 2015 12:22 PM PDT இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மேற்கு எல்லைப் பகுதியில் அண்மையில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் பறந்தது குறித்து, அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஞாயிற்றுக்கிழமை கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. |
| தனி நகரிய திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும் Posted: 12 Apr 2015 12:21 PM PDT "எங்களது மனவலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே நிவாரணம் அளிக்க விரும்பினால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் எங்களுக்கு தனி நகரியம் அமைக்கும் திட்டத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்று தீவிரவாத தாக்குதலில் தங்களது உறவினர்களை இழந்த காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தி உள்ளனர். |
| "பத்ம விருதுக்கு குர்கான் மருத்துவரை பரிந்துரைத்தார் சரத் யாதவ்' Posted: 12 Apr 2015 12:18 PM PDT குர்கானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் பரிந்துரை செய்தார் என்று மத்திய உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. |
| பலியான போலீஸாரின் உடல்கள் மீட்பு Posted: 12 Apr 2015 12:14 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 7 போலீஸாரின் உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. |
| 17 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைப்பு Posted: 12 Apr 2015 12:14 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், காங்கர் மாவட்டத்தில் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்தனர். |
| ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் ஆதரவு Posted: 12 Apr 2015 12:12 PM PDT கர்நாடகத்தில் நடைபெறும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் ஆதரவு தெரிவித்தார். |
| தன்னிச்சையாகச் செயல்படுகிறது மத்திய அரசு Posted: 12 Apr 2015 12:12 PM PDT அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 12 மாவட்டங்களை "பதற்றம் நிறைந்த பகுதிகள்' என்று அறிவிக்கும் முடிவை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துள்ளது என்று அந்த மாநில முதல்வர் நபம் துகி குற்றம்சாட்டினார். |
| முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கக் கோரும் சிவசேனை கருத்தால் சர்ச்சை Posted: 12 Apr 2015 12:09 PM PDT முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனை கட்சி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| ஊடகங்களின் குற்றச்சாட்டு பின்னணியில் ஆயுதத் தரகர்கள்: வி.கே. சிங் Posted: 12 Apr 2015 12:09 PM PDT என் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டு பின்னணியில், ஆயுதத் தரகர்கள் உள்ளனர் என்று மத்திய அமைச்சரும், ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே. சிங் தெரிவித்தார். |
| மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ராஜ்குமார் குடும்பத்தினர் ஆதரவு Posted: 12 Apr 2015 12:07 PM PDT கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். |
| ஆளுநர்களுக்கு மத்திய உள்துறை திடீர் கட்டுப்பாடு Posted: 12 Apr 2015 12:07 PM PDT குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| பஞ்சாபில் சிவசேனைத் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது Posted: 12 Apr 2015 12:07 PM PDT சிவசேனைக் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் ஹர்வீந்தர் சோனியை ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். சோனியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. |
| பதர்பூர் - ஃபரீதாபாத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் Posted: 12 Apr 2015 12:06 PM PDT மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பதர்பூர் - ஃபரீதாபாத் இடையே அமைக்கப்பட்டுள்ள 13.87 கிலோ மீட்டர் உயர்மட்ட வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| ஜாட் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு? Posted: 12 Apr 2015 12:06 PM PDT ஜாட் சமூகத்துக்கான இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக, மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்புக்குப் பிறகே, அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. |
| கட்டடக் கழிவு மறுசுழற்சி மையத்தின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் Posted: 12 Apr 2015 12:06 PM PDT காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், அவசரத் தேவையின் அடிப்படையில், தில்லி புராரியில் இயங்கும் கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி மையத்தின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| தில்லியின் வளர்ச்சிக்காக அதிக நிதியை ஒதுக்குங்கள் Posted: 12 Apr 2015 12:06 PM PDT "தில்லியின் வளர்ச்சிக்காக அதிக நிதியை ஒதுக்குங்கள்' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். |
| சுமித்ரா மகாஜன் பிறந்த நாள்: பிரணாப், மோடி வாழ்த்து Posted: 12 Apr 2015 12:06 PM PDT மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தனது 72-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியதையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். |
| தெற்கு தில்லி மாநகராட்சிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு Posted: 12 Apr 2015 12:05 PM PDT தெற்கு தில்லியின் லஜ்பத் நகர் பகுதியில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டம் தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காததற்காக தெற்கு தில்லி மாநகராட்சியை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டித்துள்ளது. |
| அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்தியவர் ஜெயகாந்தன்' Posted: 12 Apr 2015 12:05 PM PDT அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று அவரது மறைவையொட்டி தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. |
| இலவச சீருடைகள் வழங்கக் கோரி பள்ளிக்கு எதிராக ஏழை மாணவர்கள் வழக்கு Posted: 12 Apr 2015 12:05 PM PDT இலவசமாக கோடை கால சீருடைகள், புத்தகங்கள் வழங்கக் கோரி, பள்ளிக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் ஏழை மாணவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். |
| Posted: 12 Apr 2015 12:04 PM PDT தில்லியில் உள்ள குஜராத் பவனில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென சிறு தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. |
| குரங்குகள் தொல்லையைத் தடுக்க மின் வேலி:முனிசிபல் கவுன்சிலுக்கு நோட்டீஸ் Posted: 12 Apr 2015 12:04 PM PDT குரங்குகள் தொல்லையைத் தடுப்பதற்காக அரசுக் கட்டடங்களில் குறைந்த மின் அழுத்தமுடைய வேலிகளை அமைக்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலங்குகள் நல உரிமைகள் அமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| ஜாமியாபல்கலை.யில் 4 புதிய படிப்புகள் Posted: 12 Apr 2015 12:03 PM PDT தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், வரும் கல்வியாண்டு முதல் 4 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது. |
| தில்லி அரசின் கடிதம்: உள்துறையிடம் ஆலோசனை கேட்கும் காவல் துறை Posted: 12 Apr 2015 12:03 PM PDT தில்லியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பட்டியல் அளிக்குமாறு தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸிக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை பெறப்படும் என்று தில்லி காவல் துறை உயர் அதிக |
| துர்க்மான் கேட் சம்பவம்:காவல் ஆணையருக்கு கடிதம் Posted: 12 Apr 2015 12:03 PM PDT தில்லி துர்க்மான் கேட் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றவர் வாகன மோதல் சர்ச்சை காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனமாக இருந்த இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லி காவ |
| மாநகராட்சிகளின் நிதிச் சிக்கலுக்கு காரணம் என்ன? Posted: 12 Apr 2015 12:02 PM PDT தில்லியில் உள்ள கிழக்கு, வடக்கு ஆகிய இரண்டு மாநகராட்சிகள் சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஒன்றுபட்ட மாநகராட்சியை மூன்றாகப் பிரித்தது, சொத்து வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஆகியவைதான் காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன. |
| நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை:ரூ.50 உயர்த்த ஆணையம் பரிந்துரை Posted: 12 Apr 2015 12:02 PM PDT நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 50 உயர்த்துமாறு, விவசாயச் செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையம் (சிஏசிபி) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. |
| வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு Posted: 12 Apr 2015 12:01 PM PDT காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஆதார் எண்ணை, பட்டியலில் பதிவு செய்தனர். |
| ஏப்ரல் 15- இல் சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 12 Apr 2015 12:01 PM PDT ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். |
| இரு சக்கர வாகனம் மோதி சிறுவன் சாவு Posted: 12 Apr 2015 12:00 PM PDT காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தார். |
| சாலையோர பழ வியாபாரிகளுக்கு இலவச வலை Posted: 12 Apr 2015 12:00 PM PDT உலக சுகாதார தினத்தையொட்டி, சாலையோர பழ வியாபாரிகளுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச வலை வழங்கப்பட்டது. |
| 17-இல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் Posted: 12 Apr 2015 12:00 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (17-ஆம் தேதி) விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. |
| நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா Posted: 12 Apr 2015 11:59 AM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ரூ. 22.80 லட்சம் மதிப்பில் 6,12, 17 ஆகிய வார்டுகளில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. |
| குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து 11,607 பேர் காத்திருப்பு Posted: 12 Apr 2015 11:59 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை மொத்தம் 11,607 பேர் காத்திருக்கின்றனர். |
| நலவாரியப் பதிவை புதுப்பிக்கும் விவகாரம் தொழிலாளர்களை நிர்பந்திக்க கூடாது Posted: 12 Apr 2015 11:59 AM PDT நலவாரியப் பதிவை புதுப்பிக்க, தொழிலாளர்களை நேரில் வருமாறு நிர்பந்தப்படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று, காஞ்சிபுரம் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயி−ல் தீமிதி விழா Posted: 12 Apr 2015 11:58 AM PDT திருத்தணி காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதி திருவிழா நடைபெற்றது. |
| எல்லையம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா Posted: 12 Apr 2015 11:58 AM PDT திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். |
| திமுக சார்பில் 1,063 பேருக்கு நல உதவிகள் அளிப்பு Posted: 12 Apr 2015 11:57 AM PDT திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 1,063 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| அதிமுக நிர்வாகிகள் 5 பேர் காயம் Posted: 12 Apr 2015 11:57 AM PDT உள்கட்சித் தேர்தலுக்கான மனு தாக்கலின்போது ஏற்பட்ட மோதலில், அதிமுக நிர்வாகிகள் 5 பேர் காயம் அடைந்தார். |
| பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணி சாவு Posted: 12 Apr 2015 11:57 AM PDT திருவள்ளூரை அடுத்த செங்காட்டைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரிகிருஷ்ணன் (45), பேருந்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார். |
| இரு வேறு சம்பவங்கள்:ரயில் மோதியதில் 2 பேர் சாவு Posted: 12 Apr 2015 11:56 AM PDT இருவேறு சம்பவங்களில் ரயில் மோதியதில், 2 பேர் இறந்தனர். அம்பத்தூர் ஒரகடம் லட்சுமியம்மன் நகரைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (58). |
| சாலையில் பெரிய பள்ளம் முடப்படுமா? Posted: 12 Apr 2015 11:56 AM PDT திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான காமராஜர் சிலை அருகே முழுமையாக மூடப்படாததால் பெரிய பள்ளம் உள்ளது. இதில், வாகனங்கள் சிக்கினால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. |
| வீடு புகுந்து நகை, பணம் திருட்டு Posted: 12 Apr 2015 11:56 AM PDT பாடியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். சென்னை பாடி அமண்ணா தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (34). இவர் சனிக்கிழமை தான் நடத்திவரும் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்றுவிட்டார். |
| வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம்களில் ஆய்வு Posted: 12 Apr 2015 11:56 AM PDT வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல் திட்டத்தின் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். |
| கிணறு தோண்ட பதிவுச் சான்று அவசியம் Posted: 12 Apr 2015 11:55 AM PDT கிணறு தோண்ட பதிவுச் சான்று, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார். |
| தீப் பிடித்து மரம் எரிந்தது:8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Posted: 12 Apr 2015 11:55 AM PDT ஊத்துக்கோட்டை அருகே 150 ஆண்டு பழைமையான மரம் தீப்பற்றி எரிந்தது. இதனால், சாலையில் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| Posted: 12 Apr 2015 11:54 AM PDT திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, லட்சிவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 136 பேர் ரத்த தானம் செய்தனர். |
| ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது தாக்குதல் Posted: 12 Apr 2015 11:54 AM PDT திருத்தணி அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தாக்கப்பட்டார். திருத்தணி ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. |
| விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டுகளாக அதிகரிக்க வலியுறுத்தல் Posted: 12 Apr 2015 11:54 AM PDT விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டுகளாக உயர்த்த வேண்டும் என்று விசைத்தறி நெசவாளர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 Apr 2015 11:54 AM PDT ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, போரூர் ரவுண்டனா அருகே கட்டுமானத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 12 Apr 2015 11:53 AM PDT எவனுக்கு தெரியும்! |
| நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்: மூவர் மீது வழக்கு Posted: 12 Apr 2015 11:53 AM PDT நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மூவர் மீது கோட்டார் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| குமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 12 Apr 2015 11:52 AM PDT குமரி மாவட்டத்தில், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை இரவு தொ |
| சுந்தரனார் பல்கலை. வெள்ளி விழா கோப்பை:நாகர்கோவிலில் வாலிபால் போட்டி தொடக்கம் Posted: 12 Apr 2015 11:52 AM PDT மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வெள்ளி விழா வாலிபால் போட்டிகள் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கின. |
| குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை கனிகாணும் வைபவம் Posted: 12 Apr 2015 11:52 AM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) கனிகாணும் வைபவம் நடைபெற உள்ளது. |
| குமரி அருகேகுளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு Posted: 12 Apr 2015 11:52 AM PDT கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி சமையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| தேங்காய்ப்பட்டினத்தில் மீனவர் பேரவைக் கூட்டம் Posted: 12 Apr 2015 11:51 AM PDT தேங்காய்ப்பட்டினத்தில் குமரி மாவட்ட மீனவர் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவர் ஜோர்தான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லூக்காஸ் முன்னிலை வகித்தார். |
| மது பாட்டில் பதுக்கல்:ஓய்வுபெற்ற காவலர் கைது Posted: 12 Apr 2015 11:51 AM PDT நாகர்கோவிலில் வீட்டில் 170 மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஓய்வுபெற்ற மத்திய அதிரடிப் படை காவலரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| 1,629 மையங்களில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முகாம் Posted: 12 Apr 2015 11:51 AM PDT குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்லிட |
| நாகர்கோவிலில் தமிழ்நல மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 12 Apr 2015 11:51 AM PDT ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நல மன்றத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலு |
| Posted: 12 Apr 2015 11:50 AM PDT மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 86 ஆவது பிறந்த நாள் விழா.தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: இல.கணேசன், இராம.குருநாதன் கோ.பெரியண்ணன், தேவநாதன், ரவீந்திரன், மெ.ரூசவெல்ட், ஆர்.டி.பழனிவேலு; ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, சென்னை-86; 13.4.15 மாலை 5.30. |
| மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 12 Apr 2015 11:50 AM PDT நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 117 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் 10 மாதங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 12 Apr 2015 11:50 AM PDT குமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு Posted: 12 Apr 2015 11:50 AM PDT எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி; பக்.288; ரூ.180; ஜீவா பதிப்பகம், 8, (ப.எண்.38 பி), சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17. |
| மாவட்டத்தில் 4 இடங்களில் பெண்கள் கூட்டமைப்பினர் நாளை மனிதச் சங்கிலி Posted: 12 Apr 2015 11:50 AM PDT பெண் கொடுமைகளுக்கு எதிராக குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) நடைபெறவுள்ளது. |
| 17 இல் குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 12 Apr 2015 11:49 AM PDT குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இம்மாதம் 17ஆம் தேதி நாகர்கோவிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Apr 2015 11:49 AM PDT அனுமன் கதைகள் - கே. குருமூர்த்தி(மாயூரன்); பக்.172; ரூ.90; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 14; )044 2813 2863. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |