Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


உடம்பை வெளிச்சம்போட்டு காட்டுவதா கிளாமர்..? - நிக்கியின் கோபம்..!

Posted:

கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு.. கதைக்கு தேவைப்பட்டதால் கவர்ச்சியாக நடித்தேன் என எல்லா நடிகைகளும் சொல்லிவைத்ததுபோல கோனார் உரையை வாசிப்பதை நாம் பல காலமாக பார்த்துக்கொண்டுதானே வருகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் நிக்கி கல்ராணியின் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது. ரைஸிங் ஸ்டார் என சொல்லப்படும் அளவுக்கு தற்போது லைம்லைட்டில் பளிச்சென மேலே ...

'மாஸ்' - ரீ-ரிக்கார்டிங் ஆரம்பம்

Posted:

சூர்யாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை வெங்கட் பிரபுவால் கொடுக்க முடியுமா என்ற மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'மாஸ்'. அஜித்துக்கு ஒரு 'மங்காத்தா' போல, சூர்யாவுக்கு இந்த 'மாஸ்' படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என சிலர் சொல்லி வருகிறார்கள். அது எந்த அளவிற்கு இருக்கும் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து ...

சமந்தாவைக் கிண்டலடித்த ராகுல் ப்ரீத் சிங்

Posted:

ராகுல் ப்ரீத் சிங் யார் என்று தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடம் கேட்டால் கண்டிப்பாகத் தெரியாது என்றுதான் சொல்வார்கள். தமிழில் அவர் இதுவரை மூன்று படங்களில்தான் நடித்திருக்கிறார். அதில் அவர் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க' ஓரளவிற்கு ஓடியது. அடுத்து அவர் நாயகியாக நடித்த 'புத்தகம், என்னமோ ஏதோ' இரண்டு மோசமான தோல்விப் படங்கள். ...

ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - அஜித், விஜய் பாணியில் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஏதோ ஒன்றிரண்டு படங்களில் மட்டும் சின்னதாக நெகடிவ் கேரக்டரில் நடித்திருக்கிறாரே தவிர, முழுப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு 'சிறகொடிஞ்ச கினவுகள்' படம் மூலமாக கிடைத்துள்ளது. இதில் பியூட்டி என்னவென்றால் படத்தில் அஜித், விஜய் பாணியில் வாலி, அழகிய தமிழ் மகன் படம்போல ...

உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்! - கமல்

Posted:

உத்தம வில்லன் படம், மக்களைப் பற்றிய படம் தானே தவிர, எந்த மதத்தையோ அல்லது ஆத்திக, நாத்திகர்களைப் பற்றிய படமல்ல என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
உத்தமவில்லன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இதுகுறித்து, கமல் கூறியதாவது, உத்தம வில்லன் படம் இந்துக்களான ஆத்திகர்களைப் ...

என் கத்திரி மொழி பார்க்காது - தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்

Posted:

'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் ஒரு காட்சி. தான் நடித்த படத்தை ஆர்வமாக பார்க்க காத்திருக்கிறான் 'அசால்ட்' சேது; தான் எடுத்த படத்திற்கு கிடைக்கப்போகும் வரவேற்பை எண்ணி, திரையரங்கிற்கு வெளியே தவித்திருக்கிறான் கார்த்திக்! படம் ஆரம்பிக்கிறது... அசுர வேகம் எடுக்கிறது! அடுத்தடுத்த நொடிகளில், 'அசால்ட்' சேதுவின் கோபம், படம் எடுத்த ...

ஒரே க்ளைமாக்ஸ் தான் - மணிரத்னம் வெளியிட்ட உண்மை..!

Posted:

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த், மணிரத்னம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த 'தளபதி' படம், ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்கல்தான். அதேபோல மலையாள சூப்பர்ஸ்டாராகிய மம்முட்டியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கும் தமிழில் ஒரு புதிய வாசலை ...

'திலீப்பை பார்த்து மற்ற நடிகர்கள் மாறவேண்டும்” - அறிமுக இயக்குனர் வேண்டுகோள்..!

Posted:

மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதலிடத்தில் நிற்பவர் திலீப். சாந்துப்பொட்டு படத்தில் பெண் தன்மை கொண்டவராக, குஞ்சுக்கூனன் படத்தில் கூன் விழுந்தவராக, சவுண்ட் தோமா படத்தில் முகத்தின் மேல் அன்னம் பாதிக்கப்பட்டு மூக்கில் பேசுபவராக, மாயமோகினி படத்தில் படம் முழுக்க பெண்ணாக என விதவிதமான ...

எனக்கு குடும்பமே முக்கியம் : கரிஸ்மா கபூர்

Posted:

குடும்பமா , நடிப்புத்தொழிலா என்று இரு வாய்ப்புகள் என்முன் வைக்கப்பட்டால், எனது தேர்வு குடும்பமாகவே இருக்கும் என்று பாலிவுட் நடிகை கரிஸ்மா கபூர் கூறியுள்ளார். 2012ம் ஆண்டில் வெளியான டேஞ்சரஸ் இஸ்க் படத்தில், கடைசியாக கரிஸ்மா கபூர் நடித்திருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கரிஸ்மா கபூர் கூறியதாவது, படமா, குடும்பமா ...

ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி ஜீன்ஸ்: இன்று முதல் ஒளிபரப்பு

Posted:

தெலுங்கு தொலைக்காட்சியான ஈநாடு டி.வியில் ஒளிபரப்பான ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை தற்போது தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது. புதுமையான இந்த நிகழ்ச்சிக்கு ஆந்திராவில் வரவேற்பு கிடைத்ததையட்டி ஜீ தமிழ் தமிழில் ஒளிபரப்புகிறது.
இதில் சமூகத்தில் பலதரப்பட்ட நிலைகளில் வாழ்கிறவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வார்கள். ...

ஹீரோவாகிறார் ஜெயம் ராஜா!

Posted:

தமிழ் சினிமாவின் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ஜெயம்ராஜா. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற ரீமேக் படங்களை இயக்கிய ராஜா வேலாயுதம் என்ற சொந்த கதையையும் விஜய்யை வைத்து இயக்கினார். தற்போது தம்பி ஜெயம்ரவி நடிக்க தனி ஒருவன் படத்தை இயக்கி வருகிறார். இதுவும் அவரது சொந்தக் ...

அன்னை இல்லத்தில் அமிதாப்பச்சன்

Posted:

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் மருமகள் ஐஸ்வர்யாராயுடன் சென்னையில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர்கள் தி.நகர் நார்த் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் இல்லமான அன்னை இல்லத்துக்குச் சென்றனர். அவர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டின் முன் ஹாலில் ...

ஹேமமாலினி வீட்டில் திடீர் தீ விபத்து

Posted:

பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு சென்னையில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. ஹேமமாலினி சென்னை வந்தால் அங்குதான் தங்குவார். மற்ற நேரங்களில் பூட்டிக் கிடக்கும். இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டினர் ...

தில்வாலே முதற்கட்ட சூட்டிங் நிறைவு

Posted:

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் தில்வாலே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது. ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் படப்பிடிப்பு, ஜூன் மாதத்தில் துவங்க உள்ள நிலையில், வருண் தவான், கிர்தி சனோன் நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளது. இதுகுறித்து, வருண் தவான் டுவிட்டரில் ...

ராகுலுக்கு ஜோடியான பிரியங்கா சோப்ரா

Posted:

பிரகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகிவரும் கங்காஜல் 2 படத்தில், ராகுல் பட்டிற்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். கங்காஜல் 2 படத்தில், பிரியங்கா சோப்ரா ஐ.பி.எஸ். ஆபி்சராக நடிக்க உள்ள நிலையி்ல், ராகுல் பட்டிற்கு எத்தகைய கேரக்டர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ராகுல் பட்டிற்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளது மட்டுமே ...

ஆல் இஸ் வெல் ஆகஸ்டில் ரிலீஸ்

Posted:

உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி உள்ள ஆல் இஸ் வெல் படம், ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன், ரிஷி கபூர், அசின், சுப்ரியா பதக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் நடிப்பதாக இருந்தது. இதன்காரணமாக, படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில், ...

இனி யாருக்கும் நஷ்டம் ஏற்படாதுதயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேச்சு

Posted:

சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்துள்ளதால் சினிமாவில் இனி யாருக்கும் நஷ்டம் ஏற்படாது, என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறினார்.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
திரைப்பட ...

சினிமா தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன் காலமானார்

Posted:

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் காலமானார். ஜாக்பாட் சீனிவாசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களை தயாரித்தவர். 1970ம் ஆண்டின் பிற்பகுதியில், ரஜினி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தநிலையில், அவரை வைத்து படமெடுக்க பலர் தயங்கிய நிலையில், தர்மயுத்தம் படத்தை ...

கங்கனா சிறந்த நடிகை : மணிரத்னம்

Posted:

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பி்ல் சிறந்து விளங்குவதாக முன்னணி இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். டி.வி. சேனல் ஒன்றிற்கு, மணிரத்னம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்திய பாலிவுட் படங்களை ஒப்பிடுகையில், கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை சிறந்த படம் என்றே சொல்லுவேன். அப்படத்தில், கங்கனா ரனாவத் அற்புதமான நடிப்பை ...

நித்யா மேனனுக்கு தமிழில் முதல் 'டபுள்' வெற்றி

Posted:

'ஓ காதல் கண்மணி' படத்தில் தனது நடிப்பின் மூலமாக திரைப்பட ரசிகர்களின் மனதை நித்யா மேனன் கொள்ளை கொண்டு விட்டார். இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட நித்யாவுக்கு வெற்றிப் பட வரிசையில் சேரவில்லை. ஆனால், முதல் முறையாக ஒரே நாளில் தமிழில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™