Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராகுல்காந்தியின் அமேதி தொகுதியில் உணவு பூங்கா திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி ரத்து

Posted: 10 Apr 2015 11:03 PM PDT

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ராகுல்காந்தியின் அமேதி தொகுதியில் ரூ.200 கோடியில் உணவு பூங்கா திட்டம் தொடங்க ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம்

பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 3 வீரர்கள் படுகாயம்

Posted: 10 Apr 2015 10:30 PM PDT

பஞ்சாப் மாநில எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். நாட்டில் அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சாதியை குறிப்பிட்டு பேசியதாக நடிகை ரோஜா மீது வழக்கு

Posted: 10 Apr 2015 10:29 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா புத்தூர் பகுதியில் பொது மக்களிடம் குறைகேட்டார். தொகுதி மக்கள் சிலருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க அவர் புத்தூர் மண்டல பிரிவு அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அவரை பார்க்க அதிகாரிகள் வரவில்லை. இதனால் நடிகை ரோஜா மண்டல அலுவலகம் முன்பு

நாய் மற்றும் குரங்கு கடித்தால் 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு பெறலாம்: உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் முன்மாதிரி தீர்ப்பு

Posted: 10 Apr 2015 10:29 PM PDT

உத்தரகாண்டில் யாரையாவது நாய் மற்றும் குரங்கு கடித்தால், அவர் 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கோரலாம் என அம்மாநில உயர்நீதிமன்றம் முன்மாதிரி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையை இரண்டாக பகிர்ந்து முதல் பாதி தொகையை, நாய் கடித்த நகராட்சி நிர்வாகமும், இரண்டாவது பாதி தொகையை மாநில அரசும், நாய் மற்றும் குரங்கு கடிக்குள்ளானவருக்கு

கேரளாவில் பீர், ஒயின் விற்பனை அதிகரிப்பு

Posted: 10 Apr 2015 09:40 PM PDT

கேரளாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கேரளாவில் 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து மதுபார்களும் அதிரடியாக மூடப்பட்டது.

கொடூரத்தின் உச்சம்: தந்தை, மாமன், சகோதரன் என தன் குடும்பத்தினராலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்

Posted: 10 Apr 2015 09:39 PM PDT

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை, பாலியல் வன்புணர்வுக்கு

சித்திரை விஷு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

Posted: 10 Apr 2015 09:33 PM PDT

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளின் போது சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் போதும் சபரிமலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படும். தற்போது சித்திரை விஷுவையொட்டி சுவாமி அய்யப்பன் கோவில் நடை நேற்று மா

20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

Posted: 10 Apr 2015 07:57 PM PDT

அண்டை மாநிலமான ஆந்திராவில், சேஷாசல வனப்பகுதியில், தமிழ்நாட்டை சேர்ந்த அப்பாவித் தொழிலாளர்கள் 20 பேரை செம்மரக் கடத்தல் தடுப்பு படையினர் கடந்த 7-ந் தேதி சுட்டுக் கொன்று குவித்த சம்பவம், இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சிறையிலிருந்து லக்வி விடுதலை ஆனார்: இந்தியா கடும் கண்டனம்

Posted: 10 Apr 2015 07:47 PM PDT

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மிருகவெறி தாக்குதல்களில், மூளையாக செயல்பட்டவர், ஜாகியுர் ரகுமான் லக்வி (வயது 55). லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான இவர், மும்பை தாக்குதல்

செம்மரங்கள் வெட்டுவதற்கு உள்ள தடையை நீக்கவேண்டும்: மத்திய அரசுக்கு ஆந்திரா கோரிக்கை

Posted: 10 Apr 2015 05:27 PM PDT

ஆந்திர அரசு செம்மரங்கள் அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர அரசு மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் செம்மரங்களை அதிக அளவில் இருப்பதால், அவற்றை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். அப்படி செய்வதன் மூலம் கடத்தலை தடுக்கமுடியும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக அம்மாநில சுற்றுசூழல் அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார். கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய செம்மரங்களை ஒரு டன் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டது. தற்போது ஆந்திர அரசிடம் 3500 டன்

நேதாஜியின் குடும்பத்தினரை நேரு அரசு உளவு பார்த்தது: புதிய தகவல்களால் பரபரப்பு

Posted: 10 Apr 2015 05:14 PM PDT

சுதந்திர போராட்டத்தின்போது, 1939-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார். நேதாஜி, 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை

பிரான்சிடம் 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கப்படும்: பிரதமர் மோடி

Posted: 10 Apr 2015 11:18 AM PDT

பிரான்சிடம் பறக்க தயாராக இருக்கும் 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல், மூத்த அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளனர்.

பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 8 பேர் பலி: சாவு எண்ணிக்கை 2167 ஆக உயர்ந்தது

Posted: 10 Apr 2015 08:41 AM PDT

காலனின் வடிவில் வந்து இந்திய மக்களை கொன்று குவித்துவரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்றுவரை பலியானோர் எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளும் இலவசமாக சிகிச்சை வழங்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

Posted: 10 Apr 2015 08:11 AM PDT

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு தொடர்ந்த ஒரு வழக்கை இன்று முடித்துவைத்த உச்ச நீதிமன்றம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் உயர்தர சிகிச்சையை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது

Posted: 10 Apr 2015 08:08 AM PDT

டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும் துவாரகா மோர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரமேஷ் குமார் என்பவரின்

வீட்டுக்கடன் வட்டியை 0.20 சதவீதம் குறைத்தது எச்.டி.எப்.சி.

Posted: 10 Apr 2015 07:35 AM PDT

எச்.டி.எப்.சி. வங்கி தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன்கள் மீதான வட்டியை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம், எச்.டி.எப்.சி. வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் வீட்டுக்கடன்கள் மீது 9.9 சதவீத வட்டி வசூலிக்கும். இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இதனால் புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள் என்றும்

தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

Posted: 10 Apr 2015 06:56 AM PDT

தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின்

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 சுங்கச்சாவடிகள் மூடப்படும்: முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு

Posted: 10 Apr 2015 05:43 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 12 சுங்கச் சாவடிகள் மூடப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். மேலும், 53 சுங்கச் சாவடிகளில் தனியார் இலகு ரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்

பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்

Posted: 10 Apr 2015 04:43 AM PDT

உலகில் மிகவும் கொடூரமான வலி எது? என்று யாரை கேட்டாலும் சற்றும் தயங்காமல் பிரசவ வலி என்று சுலபமாக பதில் கூறி விடுவார்கள். பதில் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், பிரசவ வலி என்பது அவ்வளவு சாதாரணமாக எல்லோராலும் தாங்கிக் கொள்ளக்கூடிய வலி அல்ல என்பது தாய்மார்களுக்குதான் தெரியும். ஒரு மனித உடலால்

திருப்பதியில் தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்

Posted: 10 Apr 2015 04:33 AM PDT

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில், கடந்த செவ்வாய்க்கிழமை செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™