மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சுற்றுச்சூழலை நாசமாக்கும் எச்.எப்.சி.: பிரிட்ஜ், ஏ.சி. மெஷினில் பயன்படுத்துவதை தவிர்க்க 15 ஆண்டு அவகாசம் கோரிய இந்தியா
- திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு
- உம்மன்சாண்டி உதவியாளரிடம் சரிதா நாயர் ரூ.25 லட்சம் பணம் கொடுத்தார்: காங் (பி) தலைவர் தகவல்
- மூன்று நாள் பயணம் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- மேகதாது அணை விவகாரம்: அனைத்துக்கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க அனுமதி கோரி சித்தராமையா கடிதம்
- மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு
- ஆன்-லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது ஆதாருடன் இணைப்பு: மத்திய அரசு தகவல்
- சபரிமலையில் காட்டுப்பன்றி தாக்கியதில் தமிழக பக்தர் சாவு
- தலைவர்கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி
- ராகுல் காந்தி மறுபிரவேசம்: விவசாயிகளின் பேரணியை தலைமை தாங்கி நடத்த முடிவு
- பூஷன், யோகேந்திரா மற்றும் குழுவுக்கு ஆம் ஆத்மி கட்சி நோட்டீஸ்: விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்
- முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு தேவை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
- டெல்லியில் விவசாயிகள் பேரணி: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
- 47 இந்திய மீனவர்கள் கைது- 8 படகுகளையும் சிறைபிடித்து பாகிஸ்தான் அராஜகம்
- ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் அதிரடி ரெய்டு
- பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பெருகிவரும் டெல்லியில் பஸ் டிரைவரான முதல் பெண்
- மசரத் ஆலம் கைது எதிரொலி: காஷ்மீரில் நாளை பந்த் நடத்த கிலானி அழைப்பு
- சாரதா வழக்கில் சி.பி.ஐ. துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
- உ.பி.யில் பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை தலைமறைவு
- சிறுவன் அடிபட்டு இறந்ததால் ரெயிலுக்கு தீ வைத்த பொதுமக்கள்
| Posted: 17 Apr 2015 10:43 PM PDT உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரிட்ஜ், ஏ.சி. மற்றும் இன்சுலேட்டிங் போம்(Insulating foam) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்(எச்.எப்.சி.) வாயுவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மோன்ட்ரியலில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் மாநாட்டில் |
| திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு Posted: 17 Apr 2015 10:17 PM PDT கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. எனவே பக்தர்களுக்கு தேவையான |
| உம்மன்சாண்டி உதவியாளரிடம் சரிதா நாயர் ரூ.25 லட்சம் பணம் கொடுத்தார்: காங் (பி) தலைவர் தகவல் Posted: 17 Apr 2015 09:50 PM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் கோடி கணக்கில் பண மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது 2–வது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். |
| மூன்று நாள் பயணம் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி Posted: 17 Apr 2015 08:49 PM PDT பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கனடாவிலிருந்து இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவரை, பா.ஜ.க. |
| மேகதாது அணை விவகாரம்: அனைத்துக்கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க அனுமதி கோரி சித்தராமையா கடிதம் Posted: 17 Apr 2015 08:39 PM PDT காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கியும் முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார். புதிய அணை |
| மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு Posted: 17 Apr 2015 08:20 PM PDT காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் |
| ஆன்-லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது ஆதாருடன் இணைப்பு: மத்திய அரசு தகவல் Posted: 17 Apr 2015 08:05 PM PDT தற்போது ஆன்-லைன் மூலம் வருமான வரி கணக்குளை வருமானவரி இலாகாவுக்கு தாக்கல் செய்பவர்(ரிடர்ன்) அது தொடர்பாக நிரப்பப்பட்ட தாளின் ஒரு பகுதியை வருமானவரி இலாகாவுக்கு தபால் மூலம் பெங்களூரு வருமானவரி இலாகா அலுவலகத்துக்கு அனுப்பி |
| சபரிமலையில் காட்டுப்பன்றி தாக்கியதில் தமிழக பக்தர் சாவு Posted: 17 Apr 2015 07:46 PM PDT சபரிமலையில் காட்டுப்பன்றி தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் பலியானார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் முகாமிட்டு அய்யப்பனை |
| தலைவர்கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி Posted: 17 Apr 2015 07:39 PM PDT ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி அளவுக்கு குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
| ராகுல் காந்தி மறுபிரவேசம்: விவசாயிகளின் பேரணியை தலைமை தாங்கி நடத்த முடிவு Posted: 17 Apr 2015 03:56 PM PDT ராகுல்காந்தி இன்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் நிலம் கையப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் விவசாயிகளின் பேரணியை தலைமை தாங்கி நடத்தப்போவதாகவும் |
| Posted: 17 Apr 2015 03:49 PM PDT பிரசாந்த் பூஷண், யோகேந்திரா மற்றும் சில தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரியாக பதவி ஏற்றதும் அவருக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம் |
| Posted: 17 Apr 2015 03:24 PM PDT முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படையின் பாதுகாப்பு தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு எதிர் பதில்மனு தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு (2014) நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதன் மீது 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. |
| டெல்லியில் விவசாயிகள் பேரணி: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை Posted: 17 Apr 2015 02:27 PM PDT மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 56 நாட்களாக ஓய்வு எடுத்திருந்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது |
| 47 இந்திய மீனவர்கள் கைது- 8 படகுகளையும் சிறைபிடித்து பாகிஸ்தான் அராஜகம் Posted: 17 Apr 2015 09:15 AM PDT இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் இருக்கும் ஜகாவு துறைமுகம் அருகே நேற்றிரவு அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் கடலோர |
| ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Posted: 17 Apr 2015 09:01 AM PDT இணையவழி வர்த்தகமான ஆன்லைன் டிரேடிங்கில் கொடிகட்டி பறக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவககத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உரிய அங்கீகாரம் பெற்ற மருந்து கடைக்காரர்கள் மட்டுமே விற்க முடியும் என்ற |
| பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பெருகிவரும் டெல்லியில் பஸ் டிரைவரான முதல் பெண் Posted: 17 Apr 2015 08:11 AM PDT நித்தம் இரு கற்பழிப்பு, சத்தம் இல்லாமல் ஓடும் காருக்குள் பாலியல் பலாத்காரங்கள் என்ற ரீதியில் மாறிக் கொண்டிருக்கும் நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசு பஸ்சை ஓட்டும் முதல் பெண் டிரைவராக சரிதா என்பவர் இன்று பணியில் சேர்ந்துள்ளார். |
| மசரத் ஆலம் கைது எதிரொலி: காஷ்மீரில் நாளை பந்த் நடத்த கிலானி அழைப்பு Posted: 17 Apr 2015 07:17 AM PDT டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு திரும்பிய பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையது அலி ஷா கிலானியை வரவேற்கும் வகையில் மஸரத் ஆலம் தலைமையில் நேற்று முன்தினம் பேரணி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை பறக்க விட்டதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களும் எழுப்பினர். |
| சாரதா வழக்கில் சி.பி.ஐ. துணை குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 17 Apr 2015 05:44 AM PDT மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. இன்று துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அலிபோர் நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மடாங் சிங், சாரதா நிறுவன உரிமையாளர் சுதிப்தா சென்னின் நெருங்கிய உதவியாளர் ஷிபானாரெயின் தாஸ் மற்றும் |
| உ.பி.யில் பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை தலைமறைவு Posted: 17 Apr 2015 05:41 AM PDT உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் பகுதியில் பெற்ற தந்தையே தன்னை 4 மாதங்களாக மிரட்டி கற்பழித்துவந்ததாக பாதிக்கப்பட்ட 14 வயது மகள் அளித்த புகாரையடுத்து அந்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள ஷாசந்தன் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் தாயார் நான்காண்டுகளுக்கு முன்னர் இறந்துப் போனார். அதன்பின், குடும்ப வேலைகளை தனதாக்கிக் கொண்ட அந்த சிறுமி தற்போது பருவ வயதை |
| சிறுவன் அடிபட்டு இறந்ததால் ரெயிலுக்கு தீ வைத்த பொதுமக்கள் Posted: 17 Apr 2015 05:30 AM PDT ஒடிசா மாநிலம் பூரி அருகே ரெயிலில் அடிபட்டு சிறுவன் ஒருவன் இறந்ததையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரெயிலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்பில்-பூரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு பயணம் செய்த ஒரு சிறுவன், டிலாங் ரெயில் நிலையத்தில் இறங்க முயன்றான். அந்த ரெயில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |