Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


20 பேர் சுட்டுக்கொலை: ஆந்திர உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் - திருப்தியளிக்கவில்லை என நீதிபதி கண்டிப்பு

Posted: 09 Apr 2015 11:05 PM PDT

ஆந்திர காட்டுப்பகுதியில் செம்மரம் வெட்டச்சென்ற தமிழத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாருக்கும் மரம் வெட்டும் கும்பலுக்கு இடையே நடைபெற்ற மோதலில்தான் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று ஆந்திர போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப கோளாறு: மும்பையில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

Posted: 09 Apr 2015 10:32 PM PDT

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ஆகும். மும்பையை சுற்றியுள்ள மக்கள் தாங்கள் அலுவலகம் மற்றும் வேலைக்குச் செல்வதற்கு மின்சார ரெயில் சேவை பெரும் உதவியாக இருக்கிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி

பெல்லாரி சுரங்க ஊழல் வழக்கு: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது

Posted: 09 Apr 2015 10:14 PM PDT

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சட்ட விரோத சுரங்கம் மற்றும் இரும்பு தாது கடத்தல் சம்பவங்கள் பல வருடங்களாக நடந்து வருகிறது. இதுபற்றி சி.பி.ஐ.யும், கர்நாடக லோக் ஆயுக்தா மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்பு இருந்த எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின்போது இந்த ஊழல் பெரும் புயலை கிளப்பியது. பெல்லாரி ரெட்டி சகோதரர்களான

திருப்பதி காட்டுக்குள் வந்தால் மீண்டும் சுட்டுக்கொல்வோம்: ஆந்திர போலீஸ் அதிகாரி பேட்டி

Posted: 09 Apr 2015 09:54 PM PDT

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆந்திர மாநில போலீசார் நியாயப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஆந்திர மாநில அரசு, மத்திய உள்துறை மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் திருப்பதி காட்டுக்குள் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர மாநில அதிரடிப்படை போலீசாருக்கு நேற்று அரசு சார்பில் விருந்து

20 பேர் சுட்டுக்கொலை: தமிழக அரசுக்கு கடிதம் எழுத சந்திரபாபு நாயுடு முடிவு

Posted: 09 Apr 2015 09:53 PM PDT

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, ஆந்திரா ஐகோர்ட்டு, தமிழக அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது.

பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்

Posted: 09 Apr 2015 09:51 PM PDT

3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். 3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று மாலை டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசுக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார்

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்

Posted: 09 Apr 2015 08:31 PM PDT

மேகாலயாவில் உள்ள மேற்கு காசி மலைப்பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 புள்ளியாக பதிவானது. நேற்று மாலை 6.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 26

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜைதி நியமனம்: 19-ந்தேதி பதவி ஏற்பு

Posted: 09 Apr 2015 07:34 PM PDT

இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய வி.எஸ்.சம்பத் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய தேர்தல் கமிஷனரான ஹரிஷங்கர் பிரம்மா, தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பு ஏற்றார். பிரம்மா வருகிற 18-ந்தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அடுத்த இந்திய

பலியான 20 பேர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை: ஆந்திர மந்திரி அறிவிப்பு

Posted: 09 Apr 2015 07:22 PM PDT

திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு ஆந்திரா அரசு சார்பாக நஷ்ட ஈடு கொடுக்கப்படுமா என்று ஆந்திர மாநில உள்துறை மந்திரி சின்ன ராஜப்பாவிடம் கேட்கப்பட்டது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: பொதுநல மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Posted: 09 Apr 2015 06:56 PM PDT

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு படையினர் கடந்த 7-ந்தேதி அதிகாலை நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், ஆந்திர அரசாங்கத்திடம் இருந்து

உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது

Posted: 09 Apr 2015 04:32 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம் ராகிலாமாமு என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் லலித் குமார். இந்த பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன் மற்றும் சிவாராவத் (வயது 10) என்ற 2 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். இந்த நிலையில் அந்த வகுப்பில் உள்ள சக மாணவர்கள் தங்களது பென்சில்கள் மற்றும் ரப்பர்கள் காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

அன்னிய முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியது இந்தியா

Posted: 09 Apr 2015 10:18 AM PDT

அரசு பத்திரங்களில் மறுமுதலீடு செய்யும் அன்னிய முதலீ்ட்டாளர்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியிருக்கிறது பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அன்னிய முதலீ்ட்டாளர்களுக்கு இந்திய அரசு பத்திரங்கள் 90 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து அன்னிய முதலீடு அதிகரிக்கவே மீதமுள்ள இடைவெளியையும் குறைத்திருக்கிறது செபி. செபியின் இந்த

பன்றிக்காய்ச்சல் பலி 2159 ஆக உயர்வு: 35 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு

Posted: 09 Apr 2015 09:12 AM PDT

இந்தியா முழுவதும் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 6 பேர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2159 ஆக அதிகரித்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் நோய்,

சூரத் சிறையில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது திடீர் தாக்குதல்

Posted: 09 Apr 2015 08:25 AM PDT

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய், சிறையில் இன்று தாக்கப்பட்டார். ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் புகார் அளித்தனர்

அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை

Posted: 09 Apr 2015 08:19 AM PDT

உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கோவில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி நகரில் உள்ள பிரபல பிரகாம் பாபா கோவிலில் பூசாரியாக

திரையரங்குகளில் மாலைக்காட்சியில் இனி மராத்தி படம் கட்டாயம் இல்லை: விதிமுறையை தளர்த்தியது மராட்டிய அரசு

Posted: 09 Apr 2015 06:53 AM PDT

மும்பை திரையரங்குகளில் மாலைக் காட்சிகளில் மராத்தி படங்கள்தான் ஒளிப்பரப்ப வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது. கடும் கண்டனத்தால் அந்த விதிமுறையை இன்று தளர்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வணிக வளாகத்தில் இயங்கும் திரையரங்குகள் (மல்டிபிளக்ஸ்) அனைத்திலும் தினசரி மாலைக்காட்சி (6 மணி காட்சி) மராத்தி மொழி திரைப்படம் திரையிடுவதை கட்டாயமாக்க அந்த மாநில அரசு முடிவெடுத்தது. இதற்கான விதிகளில் மாற்றம் செய்தவுடன் இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனறு மகாராஷ்டிர மாநில

முரளி மனோகர் ஜோஷியை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

Posted: 09 Apr 2015 06:00 AM PDT

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் உ.பி.யில் உள்ள கான்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை காணவில்லை என்று அங்கு வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. கான்பூர் பகுதி பா.ஜனதா பிரிவு சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களில், முரளி மனோகர் ஜோஷியை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

சிகரெட் பாக்கெட்டில் விழிப்புணர்வு விளம்பரங்களால் புகைப்பவர்கள் திருந்துகிறார்கள்: ஆய்வில் தகவல்

Posted: 09 Apr 2015 05:44 AM PDT

சிகெரெட் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரங்களால், மனம் திருந்தி புகைப்பழகத்தை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறும் புகையிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இருப்பது

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 09 Apr 2015 05:42 AM PDT

அணு ஆயுதத்தைச் ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியது. உள்நாட்டு தயாரிப்பான பிருத்வி ஏவுகணையில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லக்வி விடுதலை உத்தரவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது: மத்திய அரசு

Posted: 09 Apr 2015 05:13 AM PDT

மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லக்வியை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது என்றும், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லக்வி எந்த நேரத்திலும் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உயர்நீதிமன்றம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™