4TamilMedia செய்திகள் | |
- புதிய பாய்ச்சலில் விஷால் : தனது ரசிகர்கள் மன்றங்களை ஒன்றிணைத்து நற்பணி இயக்கமாக்கினார்!
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டால் உண்மையாக செயற்படுவோம்: இரா.சம்பந்தன்
- திருமாவளவன் என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்: கவிதா
- இன்று முதல் சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை
- காற்று மாசு குறித்து இந்தியாவை யாரும் கேள்வி கேட்க முடியாது: பிரதமர்
- மகாராஷ்டிராவில் கடந்த 48 மணி நேரத்தில் ஐந்து விவசாயிகள் தற்கொலை!
- நிலம் கையகப்படுத்தும் போது நிலத்துக்கு உரிய விவசாயிகளையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கலாம்
- சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களுக்கு அந்நாட்டு வங்கிகள் எச்சரிக்கை!
- கனிம வளங்களை ஏலம் விட ஜார்கண்ட் அரசு முடிவு!
- பருவம் தப்பிப் பெய்த மழையால இருபத்தைந்து சதவிகித விளைச்சல் நாசம்!
- பசுவதைத் தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும்: மேனகா
- ரயில்வே துறைக்கு தன்னாட்சி அதிகார ஆணையம் அமைக்கப்பட வேண்டும்!
- நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஹெச்.எல்.தத்து
- நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம்; தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் மைத்திரி ஆதங்கம்!
- ராகுல் காந்தி மிகவும் பாதுகாப்பாக உள்ளார்: சல்மான் குர்ஷித்
- கோயம்பேடு- ஆலந்தூர் வழித்தட மெட்ரோ ரயில் பாதுகாப்புக் குறித்த ஆய்வு!
- சரக்கு லாரி உரிமையாளர்களுடன் கேரள அரசு இன்று பேச்சுவார்த்தை!
- மஹிந்த ராஜபக்ஷவின் மற்றொரு மைத்துனருக்கு எதிராக ஆயுதக் கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகள்!
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பல கோடி மோசடி; முன்னாள் தலைவர் விரைவில் கைது(?)
- பொதுத் தேர்தலின் பின் நிலையான அரசு அமையும்; ஊழல் மோசடிகளுக்கு தண்டனை உறுதி: ரணில் விக்ரமசிங்க
- யேமெனின் போர் நிகழும் ஆடெனில் இருந்து இந்தியக் கடற்படையின் மீட்புப் பணி நிறைவு!:சுஷ்மா சுவராஜ்
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமை வேண்டும்!:டெல்லி மாநாட்டில் தமிழக முதல்வர்
- புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரங்களைப் பெரியளவில் வெளியிட மோடி உத்தரவு!
- Fast and Furious 7 திரைப்படம் 2015 ஆம் ஆண்டின் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஆப்பனிங்காக சாதனை!
- வடக்கு சினாயில் எகிப்து இராணுவம் தொடுத்த தாக்குதலில் 40 போராளிகள் பலி!
- கென்யாவில் அல் ஷபாப் இன் பல்கலைக் கழகத் தாக்குதலின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்!
- மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் முன்னால் அமெரிக்கத் தூதர் உட்பட 6 பேர் பலி!
| புதிய பாய்ச்சலில் விஷால் : தனது ரசிகர்கள் மன்றங்களை ஒன்றிணைத்து நற்பணி இயக்கமாக்கினார்! Posted:
சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடிகர் விஷால் தன்னளவில் பல மாற்றங்களை செயல்படுத்தவுள்ளார். முதலில் தன் ரசிகர் மன்றத்தை மாற்றங்கள் செய்து நற்பணி இயக்கமாக மாற்றி 5-4-2015 முதல் நடைமுறைப் படுத்த இருக்கிறார். Read more ... |
| எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டால் உண்மையாக செயற்படுவோம்: இரா.சம்பந்தன் Posted:
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டால், உண்மையாக செயற்படுவோம் என்று அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| திருமாவளவன் என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்: கவிதா Posted:
திருமாவளவன் என்னைத் திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி, திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்று கவிதா என்கிற பெண், சென்னை மாநகர காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். Read more ... |
| இன்று முதல் சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை Posted:
இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைத் தொடங்கி உள்ளது. Read more ... |
| காற்று மாசு குறித்து இந்தியாவை யாரும் கேள்வி கேட்க முடியாது: பிரதமர் Posted:
காற்று மாசு தடுப்புக் குறித்த புதியத் திட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காற்று மாசு குறித்து இந்தியாவை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கூறியுள்ளார். Read more ... |
| மகாராஷ்டிராவில் கடந்த 48 மணி நேரத்தில் ஐந்து விவசாயிகள் தற்கொலை! Posted:
மகாராஷ்டிராவில் கடந்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை அம்மாநிலத்தில் பதற்றத்தை எற்படுத்தி உள்ளது. Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் போது நிலத்துக்கு உரிய விவசாயிகளையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கலாம் Posted:
நிலம் கையகப்படுத்தும் போது நிலத்துக்கு உரிய விவசாயிகளையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். Read more ... |
| சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களுக்கு அந்நாட்டு வங்கிகள் எச்சரிக்கை! Posted:
சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களுக்கு அந்நாட்டு வங்கிகள் புதிதாக எச்சரிக்கை ஒன்றை விடுத்து வலியுறுத்தி உள்ளன. Read more ... |
| கனிம வளங்களை ஏலம் விட ஜார்கண்ட் அரசு முடிவு! Posted: |
| பருவம் தப்பிப் பெய்த மழையால இருபத்தைந்து சதவிகித விளைச்சல் நாசம்! Posted:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பருவம் தப்பிப் பெய்த மழையால் 25 சதவிதம் விளைச்சல் பயிர்கள் நாசமாகி உள்ளன என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. Read more ... |
| பசுவதைத் தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும்: மேனகா Posted:
பசுவதைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அமலுக்கு வரவேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். Read more ... |
| ரயில்வே துறைக்கு தன்னாட்சி அதிகார ஆணையம் அமைக்கப்பட வேண்டும்! Posted:
ரயில்வே துறைக்கு தன்னாட்சி அதிகார ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று, நிபுணர் குழு தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஹெச்.எல்.தத்து Posted:
நேற்று டெல்லியில் நடைப்பெற்ற மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தமை நீதிபதிகள், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கலந்துக்கொள்ளும் மாநாடு டெல்லியில் நடைப்பெற்றது.அந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைத்து மாநில முதல்வர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டில் உரையாற்றிய நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதி மன்றங்கள் நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், மத்திய அரசு இவை மூன்றும் மூன்று தூண்கள் போன்றவை. மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதோடு நாட்டில் மிக குறைந்த ஊதியம் நீதித்துறையில்தான் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இனி வரும் பட்ஜெட்டில் நீதித் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
Read more ... |
| நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம்; தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் மைத்திரி ஆதங்கம்! Posted:
‘நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம்’ என்று தொனிப்பட தேசிய அரசாங்கம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். Read more ... |
| ராகுல் காந்தி மிகவும் பாதுகாப்பாக உள்ளார்: சல்மான் குர்ஷித் Posted:
ராகுல்காந்தி முகவும் பாதுகாப்பாகவே உள்ளார், அவரைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று,. காங்கிரசின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். Read more ... |
| கோயம்பேடு- ஆலந்தூர் வழித்தட மெட்ரோ ரயில் பாதுகாப்புக் குறித்த ஆய்வு! Posted: சென்னை கோயம்பேடு ஆலந்தூர் வழித்தட மெட்ரோ ரயில் பாதுகாப்புக் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பெங்களூருவில் இருந்து 3 உயர் அதிகாரிகள் கொண்ட குழு இன்று சென்னை வந்துள்ளது. Read more ... |
| சரக்கு லாரி உரிமையாளர்களுடன் கேரள அரசு இன்று பேச்சுவார்த்தை! Posted:
கேரளா செல்லும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், லாரி உரிமையாளர்கள் சங்கங்களுடன் கேரள அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவின் மற்றொரு மைத்துனருக்கு எதிராக ஆயுதக் கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகள்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க மீது ஆயுதக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவரது இராஜதந்திர கடவுச்சீட்டு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பல கோடி மோசடி; முன்னாள் தலைவர் விரைவில் கைது(?) Posted:
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பல கோடி ரூபாய்கள் மோசடி இடம்பெற்றிருப்பதாக விசாரணைகளின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. Read more ... |
| பொதுத் தேர்தலின் பின் நிலையான அரசு அமையும்; ஊழல் மோசடிகளுக்கு தண்டனை உறுதி: ரணில் விக்ரமசிங்க Posted:
பொதுத் தேர்தலின் பின் நாட்டில் நிலையான அரசாங்கமொன்று அமையும். அந்த அரசாங்கத்தினூடு நாட்டில் வறுமை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| யேமெனின் போர் நிகழும் ஆடெனில் இருந்து இந்தியக் கடற்படையின் மீட்புப் பணி நிறைவு!:சுஷ்மா சுவராஜ் Posted:
யேமெனில் சமீபத்தில் தோன்றியுள்ள போர் பதற்ற நிலை காரணமாக அங்கு தலைநகர் சனா மற்றும் ஆடென் ஆகிய நகரங்களில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும் அதாவது ஆடெனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய கடற்படை பூர்த்தி செய்து விட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் டுவீட்டரில் தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமை வேண்டும்!:டெல்லி மாநாட்டில் தமிழக முதல்வர் Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசிய போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக மொழியாகத் தமிழைப் பயன்படுத்தவும் தமிழில் வாதாடவும் அனுமதி அளிக்கும் படியான கோரிக்கையை மறுபடியும் அழுத்தமாக முன் வைத்துள்ளார். Read more ... |
| புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரங்களைப் பெரியளவில் வெளியிட மோடி உத்தரவு! Posted:
கடந்த ஆண்டு ஆக்டோபரில் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுக்களில் புற்றுநோய் விழிப்புணர்வு எச்சரிக்கையைப் பெரியளவில் படங்களாக அச்சிட வேண்டும் என முடிவு செய்திருந்தது. Read more ... |
| Fast and Furious 7 திரைப்படம் 2015 ஆம் ஆண்டின் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஆப்பனிங்காக சாதனை! Posted:
இவ்வருடம் ஏப்பிரல் 2 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் ஏப்பிரல் 3 ஆம் திகதி அமெரிக்காவிலும் உலகெங்கும் 3D இல் வெளியிடப் பட்ட Fast and Furious 7 திரைப்படம் 2015 ஆம் ஆண்டுக்கான ஹாலிவுட்டின் மிகப் பெரிய ஆப்பனிங் வசூல் செய்து சாதனை படைக்கவுள்ளது. Read more ... |
| வடக்கு சினாயில் எகிப்து இராணுவம் தொடுத்த தாக்குதலில் 40 போராளிகள் பலி! Posted:
எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் அந்நாட்டு இராணுவம் வெள்ளிக்கிழமை தரை வழியாகவும் வான் வழியாகவும் மேற்கொண்ட பாரிய படை முன்னெடுப்பில் 40 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| கென்யாவில் அல் ஷபாப் இன் பல்கலைக் கழகத் தாக்குதலின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்! Posted:
கடந்த 2 ஆம் திகதி கென்யாவின் காரிசாவிலுள்ள பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து சோமாலியாவின் அல் ஷபாப் போரளிகள் 4 பேர் நிகழ்த்திய கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 142 மாணவர்கள், 3 போலிசார்கள் மற்றும் 3 இராணுவத்தினர் உட்பட 148 பேர் பரிதாபமாகப் பலியாகி இருந்தனர். Read more ... |
| மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் முன்னால் அமெரிக்கத் தூதர் உட்பட 6 பேர் பலி! Posted:
சனிக்கிழமை மலேசியாவில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் அந்நாட்டின் அமெரிக்காவுக்கான முன்னால் தூதர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை மாலை 4.55 இற்கு கோலாலம்பூருக்கு வெளியே செமென்யிஹ் இலுள்ள கம்புங் பசிர் பாருக்கு அண்மையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




.jpg)




















