Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


18 சுங்க சாவடிகளில் ஏப்ரலில் கட்டணம் உயர்கிறது: சரக்கு வாகனம், ஆம்னி பஸ் கட்டணம் அதிகரிக்கும்

Posted:

தமிழகம் முழுவதும், 18 சுங்கச்சாவடிகளின் கட்டணம், ஏப்ரல் முதல், 10 - 15 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதனால், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ் கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், 14 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் மேற்கொண்டுள்ளனர்.வசூல்: தனியார் நிறுவனங்கள் சாலையை பராமரித்து, சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும், 41 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச்சாவடிகளில் தனியார்; 12 ...

கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு 100 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: தமிழக அரசு கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவு

Posted:

சென்னை: 'கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து, கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும் என்ற, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, 100 மெகாவாட் மின்சாரம் வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், நேற்று, சென்னை வந்திருந்தார். தலைமைச் செயலகத்தில், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மின் திட்டங்கள் தொடர்பாக, தமிழக முதல்வர், மின் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினேன்.ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள், மின் துறையில் சிறப்பான பணிகளை செய்து உள்ளனர். தமிழகத்தில், ...

நாகாலாந்து கைதி கொலை சம்பவம் ஏன்? அசாம் முதல்வர் தருண் 'பகீர்' குற்றச்சாட்டு

Posted:

கவுகாத்தி: ''நாகாலாந்தில், சிறையில் இருந்த கைதி அடித்துக் கொல்லப்பட்டதற்கு, பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய படையினரின் அலட்சியமே காரணம். இதற்கான முழுப் பொறுப்பையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்,'' என, அசாம் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான தருண் கோகோய் கூறினார்.பழங்குடி பெண்: வடகிழக்கு மாநில மான நாகாலாந்தில், முதல்வர் டி.ஆர்.ஜெலி யாங் தலைமையிலான நாகாலாந்து மக்கள் முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். விசாரணையில், அந்த ...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிப்பு

Posted:

வேளாண் துறை அதிகாரி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின், கட்சி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று, அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அவர் கவனித்து வந்த வேளாண் துறை, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்தவர் முத்துக்குமாரசாமி. இந்த ஆண்டு இறுதியில், ஓய்வு பெற இருந்தார்.இவர் பணிபுரிந்த துறையில், சமீபத்தில், ஏழு டிரைவர் பணியிடம் நிரப்பப்பட்டது. அந்த பணியிடங்களுக்கு, சிலரை, ...

காஷ்மீர் கூட்டணி ஆட்சியால் நாட்டுக்கு கேடு: சிவசேனா கடும் பாய்ச்சல்

Posted:

மும்பை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியான பி.டி.பி., இணைந்து, கூட்டணி அரசு அமைத்துள்ளதற்கு, சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், 'ஒட்டுமொத்த நாட்டிற்கும், பா.ஜ., சிக்கலை ஏற்படுத்தி விட்டது' என, விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சட்டசபை தேர்தல் சுமுகமாக நடைபெற, பயங்கரவாதிகளும், பாகிஸ்தானும், ஹூரியத் மாநாட்டு அமைப்பினருமே காரணம்' என, அம்மாநில முதல்வராக பதவியேற்றுள்ள முப்தி முகமது சயீத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ...

இந்தியாவில் முதலீடு செய்ய 'கூகுள்' உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் படையெடுப்பு: குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்ட திட்டம்

Posted:

'கூகுள்' உள்ளிட்ட சர்வதேச அளவில் பிரபலமான பல நிறுவனங்கள், முதலீடு செய்வதற்காக இந்தியாவை நோக்கி வரத் துவங்கியுள்ளன. மேற்கத்திய நாடுகளை விட, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதும், மக்கள்தொகை அதிகம் இருப்பதுமே இதற்கு காரணம். பெரும்பாலான மக்கள், பல்வேறு விவரங்களைத் தேடுவதற்காக கூகுளை பயன்படுத்துகின்றனர். ஆனால், கூகுளோ, கையில் புரளும் ஏராளமான பணத்தை எதில், எங்கே முதலீடு செய்யலாம் என்று தீவிரமாகத் தேடுகிறது. கடந்த 2013ல் இதற்காகவே, 'கூகுள் கேபிடல்' என்ற தனிப் பிரிவைத் துவங்கிய, கூகுள் நிறுவனம், ஜனவரி வரை, ஒரு டஜன் நிறுவனங்களில், 3,000 கோடி ரூபாயை ...

இலங்கை பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் சுஷ்மா பதிலடி: மீனவர் பிரச்னையை குழப்புவதற்கு கண்டனம்

Posted:

கொழும்பு: 'இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால், அவர்களை சுடுவோம்' என, கூறிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதிலடி கொடுத்துள்ளார். 'மீனவர்கள் பிரச்னையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்னையுடன் இதை ஒப்பிடக் கூடாது' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம், இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, மீனவர்கள் பிரச்னை, இரு தரப்பு உறவு, வர்த்தகம் உட்பட, பல பிரச்னைகள் குறித்து பேசுகிறார். பிரதமரின் பயணத்துக்கு முன், ...

மேகதாது முற்றுகை போராட்டம்: தி.மு.க., ஆதரவு என கருணாநிதி அறிவிப்பு

Posted:

சென்னை: 'மேகதாதுவை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு, தி.மு.க., ஒத்துழைப்பும், ஆதரவும் உண்டு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, மேகதாது பிரச்னையில், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே நோக்கத்தோடு ஒன்றிணைந்துள்ளனர்.தமிழகத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திடுக என, எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தபோது, 'நீ யார் சொல்வதற்கு? பிறருடைய யோசனையை, நான் ஏன் கேட்க வேண்டும். எல்லாம் எனக்கு தெரியும்' என, எதேச்சதிகாரத் ...

தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாக்., உளவாளிகள் நாசவேலைக்கு சதி: மத்திய உளவு போலீசார் எச்சரிக்கை

Posted:

தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாக்., உளவாளிகள், பயங்கர நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வருவதாக, மத்திய உளவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., மற்றும், 'க்யூ' பிரிவு போலீசார், உளவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.கடந்த, 2010ல், இலங்கையில் இருந்து, போலி பாஸ்போர்ட் மூலமாக, தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள வாலிபர்கள், பயங்கர நாசவேலைக்கு உளவு பார்த்து வருவதாக, மத்திய உளவு போலீசார் எச்சரித்தனர்.இதையடுத்து, 2012 செப்டம்பரில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த, தமீன் அன்சாரி, 38; கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னை ...

விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் போலி டிக்கெட்? மிரளும் பயணிகள்; மழுப்பும் அதிகாரிகள்

Posted:

கோவை : தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், போலி டிக்கெட் கொடுப்பதன் மூலமாக, பெரும் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களுக்கான டிக்கெட்கள், ரிசர்வேஷன் முறையில் வழங்கப்படுகின்றன. டிக்கெட் வழங்கும் பணி, தனியார் நிறுவனங்களிடம் 'அவுட்சோர்சிங்' முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு ரிசர்வேஷன் கட்டணமாக, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் என்பதால், இந்த பஸ்களில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கின்றனர்.இதைப் பயன்படுத்தி, புதுவிதமான முறைகேடு ...

கெஜ்ரிவாலுக்கு ஒரு நாள் மருத்துவ செலவு ரூ.19,500; ரூம் வாடகை ரூ.17,500

Posted:

பெங்களூரு: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, பெங்களூருவில் உள்ள ஜிந்தால் மருத்துவமனையில், அளிக்கப்படும் சிகிச்சைக்குஒரு நாள் செலவு ரூ. 19,500. மருத்துவமனையில் ஒரு நாள் ரூம் வாடகை ரூ.17,500 எனவும் தெரியவந்துள்ளது. ஜிந்தால் மருத்துவமனை வளாகத்துக்குள் சிகிச்சை பெறவும், தங்குவதற்கும் ஐந்து வகை பிரிவுகள் உள்ளன. கெஜ்ரிவால், நான்காவது பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அறையில், நான்கு பேர் தங்கலாம். இரண்டு, 'ஏசி' படுக்கை அறைகள், குளியல் அறையுடன் சேர்ந்த சிகிச்சை அறை, டிரஸ்ஸிங் ரூம், லிவிங் ரூம், தனி தாழ்வாரம் போன்ற வசதிகள் உண்டு. அறைக்கான தினசரி வாடகை, 17 ...

இரண்டாக உடைகிறது ஆம் ஆத்மி கட்சி?

Posted:

புதுடில்லி: ''ஆம் ஆத்மி கட்சியில் இருந்து என்னை நீக்க சதி நடக்கிறது,'' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியின் அரசியல் விவகார கமிட்டியில் இருந்து நீக்கியதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவித்தவருமான, மயாங் காந்தி கூறியுள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™