Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புதுச்சேரி

Posted: 06 Mar 2015 01:18 PM PST

ராசிபுரம்

Posted: 06 Mar 2015 01:18 PM PST

பெங்களூரு

Posted: 06 Mar 2015 01:17 PM PST

மதுரை

Posted: 06 Mar 2015 01:17 PM PST

திருநெல்வேலி

Posted: 06 Mar 2015 01:17 PM PST

ஈரோடு

Posted: 06 Mar 2015 01:16 PM PST

கோவை

Posted: 06 Mar 2015 01:16 PM PST

தாராபுரம்

Posted: 06 Mar 2015 01:16 PM PST

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தில் மோதல்: 2 பேர் கொலை

Posted: 06 Mar 2015 01:14 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி, எடா ஆகிய மாவட்டங்களில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 02 பேர் கொல்லப்பட்டனர்.

விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Posted: 06 Mar 2015 01:13 PM PST

ஒடிஸா மாநிலத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டர்களின் கட்சி திரிணமூல்: மார்க்சிஸ்ட் தாக்கு

Posted: 06 Mar 2015 01:13 PM PST

"மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, குண்டர்களின் கட்சி' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிமன் போஸ் விமர்சித்தார்.

பாலியல் புகாரில் கைதான இளைஞரைத் தாக்கிக் கொன்ற சம்பவம்: சிறை அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

Posted: 06 Mar 2015 01:12 PM PST

நாகாலந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டவரை சிறைக்குள் புகுந்து வியாழக்கிழமை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஐ.நா. அமைதி காப்புக் குழுவில் இந்தியா

Posted: 06 Mar 2015 01:11 PM PST

ஐ.நா. அமைதி காக்கும் ஆணையத்தின் அமைப்புக் குழுவில் இந்தியா 2 ஆண்டுகளுக்கு இடம்பெறும்.

பன்றிக் காய்ச்சல்: நாடு முழுவதும் 1,289 பேர் பலி

Posted: 06 Mar 2015 01:10 PM PST

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் பலியானதையடுத்து, நாடு முழுவதும் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,289ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எகிப்து: பேருந்து மீது ரயில் மோதி 7 பேர் பலி

Posted: 06 Mar 2015 01:00 PM PST

எகிப்து தலைநகர் கெய்ரோவில், ஆளில்லா ரயில் கடவுப்பாதையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் பலத்தகாயமடைந்தனர்.

விவசாயி எரித்துக் கொலை: மருமகள் உள்பட 3 பேர் கைது

Posted: 06 Mar 2015 12:58 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருமகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

"கொடைக்கானல் வனச் சரணாலயத் திட்டத்தால் 6 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்'

Posted: 06 Mar 2015 12:57 PM PST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனச் சரணாலயம் திட்டம் அமைக்கப்பட்டால் 6 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, பாரதிய கிசான் சங்கத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் தினேஷ் குல்கர்னி தெரிவித்தார்.

22 அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கோரி வழக்கு

Posted: 06 Mar 2015 12:57 PM PST

புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அரசு செலவில் தங்கியது குறித்து 22 அதிகாரிகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகள் திடீர் சுகவீனம்

Posted: 06 Mar 2015 12:55 PM PST

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகள் திடீரென சுகவீனம் அடைந்தன. இதில் ஒரு பசு மாடு இறந்தது.

வேறு சமுதாய இளைஞருடன் காதல்: மகளைக் கொலை செய்து எரித்த தந்தை உள்பட 4 பேர் கைது

Posted: 06 Mar 2015 12:31 PM PST

சிவகங்கை மாவட்டம், உடைகுளத்தில் மகளை கொலை செய்து எரித்த தந்தையையும், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனையை கேட்டதும் விஷம் குடித்த குற்றவாளி

Posted: 06 Mar 2015 12:30 PM PST

திருவாரூர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர், தீர்ப்பைக் கேட்டதும் விஷம் குடித்தார்.

காந்தியின் உருவ அமைப்புடன் குடந்தைக்கு வந்த சுற்றுலாப் பயணி

Posted: 06 Mar 2015 12:29 PM PST

குடந்தைக்கு வெள்ளிக்கிழமை மகாத்மா காந்தியின் உருவ அமைப்பில் வந்த பிரெஞ்சு நாட்டு சுற்றுலாப் பயணியை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ ஆய்வு

Posted: 06 Mar 2015 12:28 PM PST

திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காய்கறிக் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞர் கைது

Posted: 06 Mar 2015 12:27 PM PST

கந்தர்வகோட்டையில் காய்கறி கடை உரிமையாளரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குழந்தைத் திருமண விவகாரம்: முஸ்லிம் பெண்ணை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Mar 2015 12:26 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்ணை ஆஜர்படுத்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தவறான சிகிச்சை: கண் பரிசோதனை தொழில்நுட்பப் பணியாளருக்கு ஓராண்டு சிறை

Posted: 06 Mar 2015 12:26 PM PST

மர வியாபாரிக்கு தவறான சிகிச்சை அளித்த கண் பரிசோதனை தொழில்நுட்பப் பணியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கக் கூட்டம்

Posted: 06 Mar 2015 12:25 PM PST

கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்ட பேரவை கூட்டம் ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் சாவு

Posted: 06 Mar 2015 12:25 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தீக்காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

Posted: 06 Mar 2015 12:25 PM PST

கும்பகோணம் அருகே ரயில் தண்டவாளம் அருகே தீக்காயமடைந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள், 1 கன்றுக்குட்டி சாவு

Posted: 06 Mar 2015 12:24 PM PST

அரியலூரில் வெறிநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் மற்றும் 1 கன்றுக்குட்டி வியாழக்கிழமை இறந்தது.

உதவி ஆய்வாளர் பணிக்கு இலவச பயிற்சி

Posted: 06 Mar 2015 12:24 PM PST

உதவி ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததற்கான ஆதாரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுகை நீதிமன்ற வளாக உணவகத்தில் தீ விபத்து

Posted: 06 Mar 2015 12:23 PM PST

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் சமையல் எரிவாயு உருளை வாயு கசிவால் வெள்ளிக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

வம்பன் அற்புதா கலைக் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டி கருத்தரங்கு

Posted: 06 Mar 2015 12:23 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் அற்புதா கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கு, கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை: பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறும்

Posted: 06 Mar 2015 12:22 PM PST

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதேநாளில் அட்டவணைப்படி பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறு

சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்

Posted: 06 Mar 2015 12:22 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள சாந்தம்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ரா. புளோரா, மு. கீர்த்தனா ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீ

எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 06 Mar 2015 12:22 PM PST

தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

குடந்தையில் பௌர்ணமி தீர்த்தவலம்

Posted: 06 Mar 2015 12:21 PM PST

கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றி மாசி மாத பௌர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கண்டிதம்பட்டு கிராமத்தில் மார்ச் 11-ல் மக்கள் நேர்காணல்

Posted: 06 Mar 2015 12:20 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டிதம்பட்டு கிராமத்தில் வரும் 11-ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்:ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பலாம்

Posted: 06 Mar 2015 12:20 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள ஸ்ரீ பூண்டி புஷ்பம் கல்லூரியில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் கிராமப்புற பெண்கள் தொழில் முனைப்புத் திறன், வளர்ச்சி தொடர்பான தேசிய கருத்தரங்குக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Mar 2015 12:20 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கும்பகோணம் கோட்ட கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும், வேலைநிறுத்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.

சரபோஜி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 06 Mar 2015 12:20 PM PST

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் உயிர்கள், பல்லுயிர்கள் மற்றும் அதனுடைய பாதுகாப்பு பற்றிய இரு நாள் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வைத்தீஸ்வரன்கோயில்,மயிலாடுதுறையில் ரத்த தான முகாம்

Posted: 06 Mar 2015 12:19 PM PST

மயிலாடுதுறை மற்றும் வைத்தீஸ்வரன்கோயிலில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறையில்...

காலமானார் சேனாபதி குருக்கள்

Posted: 06 Mar 2015 12:19 PM PST

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகரும், திருவல்லிக்கேணி ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயிலின் அறங்காவலருமான ந. சேனாபதி குருக்கள் (76) உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னையில் காலமானார்.

வேதாரண்யத்தில் நாளை வர்த்தகர் சங்க கட்டடம் திறப்பு

Posted: 06 Mar 2015 12:19 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தின் அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை நடைபெறவுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் அமைந்துள்ள புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்

வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 06 Mar 2015 12:18 PM PST

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் செல்வமுத்து குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.

பொது நூலகத் துறை மாற்றுத் திறனாளி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Mar 2015 12:18 PM PST

பொது நூலகத் துறை மாற்றுத் திறனாளி ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை கரூர் மாவட்ட நூலக அலுவலர் உள்ளிட்டோர் திட்டமிட்டே புறக்கணிப்பதாகக் கூறி, அச்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் அதிமுக மகளிரணி சார்பில் மருத்துவ முகாம்

Posted: 06 Mar 2015 12:17 PM PST

அதிமுக பொது செயலர் ஜெயலலிதா பிறந்த தினம் மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கரூரில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருங்கலாப்பள்ளியில் மூடப்பட்ட அரசு மதுபானக் கடை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 06 Mar 2015 12:17 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கருங்கலாப்பள்ளியில் செயல்பட்டுவந்த அரசு மதுபானக்கடை, வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் போராட்டக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பேருந்துகளை உடனே இயக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 06 Mar 2015 12:17 PM PST

புதிதாக வாங்கப்பட்ட 260 பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ரூ.16 லட்சம் லாரி வாங்க கடன் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்கு

Posted: 06 Mar 2015 12:17 PM PST

கரூரில் லாரி வாங்க ரூ.16 லட்சம் கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர் மீது கரூர் நகர போலீஸார் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படத்தொகுப்பாளர் கிஷோர் காலமானார்

Posted: 06 Mar 2015 12:16 PM PST

பிரபல படத்தொகுப்பாளரும் தேசிய விருது பெற்றவருமான கிஷோர் (36) மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார்.

குளித்தலையில் திமுகவினர் ரத்த தானம்

Posted: 06 Mar 2015 12:16 PM PST

திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலினின் 63 ஆவது பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், திமுகவினர் 63 பேர் ரத்த தானம் செய்தனர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: உணவக ஊழியர் சாவு

Posted: 06 Mar 2015 12:16 PM PST

கும்பகோணம் அருகே காரும் மோட்டார் சைக்கிளும் மோதி கொண்ட விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்தார். சோழபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் அய்யனார்ராஜ் (41). உணவகம் நடத்தி வருக

வீட்டிலிருந்த 6 அடி நீள சாரைபாம்பு மீட்பு

Posted: 06 Mar 2015 12:15 PM PST

கும்பகோணம் பத்துக்கட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கு. சாமிநாதன் (50). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் சமையல்அறையின் மேல் உள்ள ஓட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது.

மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்துக்கு கண்டனம்

Posted: 06 Mar 2015 12:15 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறியல்

Posted: 06 Mar 2015 12:15 PM PST

ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி கடைத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை, மற்றும்

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

Posted: 06 Mar 2015 12:15 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் அ. பாப்பாசுந்தரம் தலைமையில், குழு உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், செ

ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு: "லிங்கா' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு ரூ. 21 கோடி இழப்பு

Posted: 06 Mar 2015 12:15 PM PST

"லிங்கா' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு பெற்று அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எறையூர் சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

Posted: 06 Mar 2015 12:14 PM PST

பெரம்பலூர் எறையூர் நேரு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூரில் மார்ச் 10-ல்மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

Posted: 06 Mar 2015 12:14 PM PST

பெரம்பலூரில் மார்ச் 10-ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சி. தேவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

Posted: 06 Mar 2015 12:14 PM PST

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 3-வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரும்பு பயிரில் தீ: ரூ.1லட்சம் சேதம்

Posted: 06 Mar 2015 12:13 PM PST

பெரம்பலூர் அருகே வெள்ளிக்கிழமை கரும்பு பயிரில் ஏற்பட்ட தீ யினால் ரூ. 1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் கண்துடைப்பு: வைகோ

Posted: 06 Mar 2015 12:13 PM PST

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம் வெறும் கண்துடைப்பே என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

பாளை. மத்திய சிறையில் கைதி சாவு

Posted: 06 Mar 2015 12:12 PM PST

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இறந்தார்.

மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு: மற்றொரு சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல்?

Posted: 06 Mar 2015 12:11 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருவையாறில் இசைத் திருவிழா தொடக்கம்

Posted: 06 Mar 2015 12:10 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சென்னை பிரகிருதி அறக்கட்டளை சார்பில் காவிரி "கரையிலே திருவையாறு' என்ற பெயரிலான புனித இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கூடாது: ஜி.கே. வாசன்

Posted: 06 Mar 2015 12:07 PM PST

தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

காலத்தின் தேவை

Posted: 06 Mar 2015 11:59 AM PST

அண்மையில், வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும், தமிழகத்தில் ஓர் அரசியல் தலைவர் வெளிப்படுத்திய கருத்தையும் பலரும் கவனித்திருக்கலாம்.

அறிவியல் ஒளிச்சேர்க்கை!

Posted: 06 Mar 2015 11:52 AM PST

இந்த ஆண்டினை (2015) "பன்னாட்டு ஒளி ஆண்டு' என்று "யுனெஸ்கோ' அறிவித்து இருக்கிறது.

நிதிநிலை அறிக்கை 2015 - VI

Posted: 06 Mar 2015 11:52 AM PST

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை பற்றிய மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த நிதிநிலை அறிக்கையின் நல்ல அம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

Posted: 06 Mar 2015 11:43 AM PST

பருவகாலத் தொற்று நோயான பன்றிக் காய்ச்சல் வருவதைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவதே நல்ல பயன் அளிக்கக் கூடிய தீர்வு என்று உலக சுகாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.

48 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்: 8 படகுகள் பறிமுதல்

Posted: 06 Mar 2015 11:43 AM PST

அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற குஜராத் மீனவர்கள் 48 பேரை பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். மீனவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தேசிய மீன்பிடித் தொழிலாளர்கள் மன்ற அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: தீஸ்தாவின் தொண்டு நிறுவனத்தை விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு

Posted: 06 Mar 2015 11:42 AM PST

மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் கீழ் பெற்ற நிதியை தீஸ்தா சீதல்வாடின் சப்ரங் தொண்டு நிறுவனம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் கூட்டம் குறித்து விவாதம்

Posted: 06 Mar 2015 11:41 AM PST

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை இறுதி செய்வது உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் தொழில் முதலீடு: முதல்வருடன் பிரான்ஸ் தூதுக் குழு ஆலோசனை

Posted: 06 Mar 2015 11:40 AM PST

புதுச்சேரியில் தொழில் முதலீடு செய்வது குறித்து பிரான்ஸ் நாட்டு தூதுக் குழுவினர் முதல்வர் என்.ரங்கசாமியுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

சமூக வலைதளங்களில் செல்வாக்கு நிறைந்தவர்கள் பட்டியலில் மோடி: டைம் பத்திரிகை தகவல்

Posted: 06 Mar 2015 11:32 AM PST

சமூக வலைதளங்களில் அதிக செல்வாக்கு நிறைந்த 30 பிரமுகர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த "டைம்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 06 Mar 2015 11:32 AM PST

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் புறவழிச்சாலையிலுள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

Posted: 06 Mar 2015 11:30 AM PST

அரியலூர் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

காலை, மாலை தலா 2 மணிநேரம் கனரக லாரிகள் செல்ல தடை விதிக்க வலியுறுத்தல்

Posted: 06 Mar 2015 11:30 AM PST

அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் அனைத்து சாலைகளில் கனரக லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரியலூர் வழக்குரைஞர்கள்

வாரணவாசியில் தொல்லுயிரி அருங்காட்சியகத்துக்கு பூமி பூஜை

Posted: 06 Mar 2015 11:30 AM PST

அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி சமத்துவபுரம் எதிரில் அமைக்கப்படவுள்ள தொல்லுயிரி அருங்காட்சியகத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அருகேதீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 06 Mar 2015 11:29 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 06 Mar 2015 11:29 AM PST

சட்டப் பேரவையில் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆத்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 06 Mar 2015 11:29 AM PST

ஜயங்கொண்டம் ஆத்மா திட்டம் சார்பில், விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரூ. 75.09 லட்சம் வங்கிக் கடனுதவி

Posted: 06 Mar 2015 11:29 AM PST

அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் சார்பில் 70 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடிக் கடனாக ரூ. 75.09 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்

Posted: 06 Mar 2015 11:29 AM PST

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

13 மாவட்டங்களில் குழந்தைகள் காப்பகம்

Posted: 06 Mar 2015 11:28 AM PST

தமிழகத்தில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் குழந்தைகள் காப்பகம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுகையில் பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது

Posted: 06 Mar 2015 11:28 AM PST

புதுக்கோட்டை பல்லவன் குளம் மேல்கரையில் விநாயகர் கோயில் அருகே இருந்த 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசமரம் வியாழக்கிழமை திடீரென வேரோடு சாய்ந்தது.

"நிலத்தடி நீர் மட்டம் உயர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

Posted: 06 Mar 2015 11:28 AM PST

மழைநீரை உரிய முறையில் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Mar 2015 11:27 AM PST

அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் எதிரே

காய்கறிக் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞர் கைது

Posted: 06 Mar 2015 11:27 AM PST

கந்தர்வகோட்டையில் காய்கறி கடை உரிமையாளரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புதை சாக்கடை இணைப்பு பெறாவிடில் குடிநீர் இணைப்பு ரத்து

Posted: 06 Mar 2015 11:27 AM PST

தஞ்சாவூர் நகரிலுள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் புதை சாக்கடை இணைப்பை பெறவேண்டும். இல்லாவிடில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் த. குமார் தெரிவித்துள்ளார்.

பேராவூரணியில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம்

Posted: 06 Mar 2015 11:26 AM PST

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: உணவக ஊழியர் சாவு

Posted: 06 Mar 2015 11:26 AM PST

கும்பகோணம் அருகே காரும் மோட்டார் சைக்கிளும் மோதி கொண்ட விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்தார். சோழபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் அய்யனார்ராஜ் (41). உணவகம் நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர்

Posted: 06 Mar 2015 11:26 AM PST

புதுக்கோட்டை

Posted: 06 Mar 2015 11:25 AM PST

தூத்துக்குடியில் பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

Posted: 06 Mar 2015 11:25 AM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பணம் தர மறுத்த பழ வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாதுகாப்பு மேம்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 06 Mar 2015 11:25 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 அபாயகரமான தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் முன்னிலையில் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

விசைப்படகு மீனவர்கள் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 06 Mar 2015 11:25 AM PST

கடலில் மீன்பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்துகளில் கை கால்களை இழந்து கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு, விசைப்படகு உரிமையாளர்கள் நிவாரணம் வழங்க வலியுறுத்தி

இந்தியாவின் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சபை பாராட்டு

Posted: 06 Mar 2015 11:13 AM PST

இந்தியாவின் மேம்பட்ட பேரிடர் மேலாண்மை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளுக்கும், இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் துல்லியமான கணிப்புகளுக்கும் ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்: பாதுகாப்பு அளித்த மாணவர்கள்

Posted: 06 Mar 2015 11:12 AM PST

சிறுபான்மையினருடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹிந்துக் கோயிலில் நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அந்நாட்டு மாணவர் அமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™