Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


13 வருடங்களுக்கு பிறகு இணையும் அபிஷேக்-வாசு பக்நானி!

Posted:

தயாரிப்பாளர் வாசு பக்நானியும், நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2002ம் ஆண்டு, ''ஓம் ஜெய் ஜெகதீஷ்'' என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின்னர் இவர்கள் இணைந்து படம் பண்ணவேயில்லை. இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகின்றனர். புதியவர் அக்ஷ்ய் பூரி இயக்கும் படத்தில், அபிஷேக் ஹீரோவாக ...

போலீஸாக நடிக்கிறார் கோவிந்தா

Posted:

நீண்ட இடைவௌிக்கு பிறகு கில் தில் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கோவிந்தார். அடுத்தப்படியாக இவர் ஒரு அதிரடியான போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் இவர் தயாரிக்கும் முதல்படமான அபிநய் சக்ரா என்ற படத்தில் தான் இவர் போலீஸாக நடிக்கிறார். இப்படத்தில் ஆக்ஷ்ன், காமெடி உள்ளிட்ட அனைத்து ...

மீண்டும் இணையும் அப்பா-மகன்

Posted:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர், சமீபத்தில் தனது மகன் அர்ஜூன் கபூரை வைத்து தீவர் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது. இதனையடுத்து மீண்டும் தன் மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் போனி கபூர். இப்படம் கிரைம் ...

சல்மான் கான் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே!

Posted:

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் புதிய படத்தில் சல்மான் கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். சல்மான், தற்போது பிரேம் ரத்தன் தன் பயோ, பஜ்ரங்கி பகிஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில், இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், சல்மானிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அப்படத்தின் கதை அவருக்கு பிடித்து போக உடன் நடிக்க சம்மதம் ...

பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் ஆளவந்தான் படத்தில், கமல் ஜோடியாக நடித்திருந்தார். ரவீனாவுக்கு வாய்ப்பு குறைந்ததால், முன்பு போன்று அவர் சினிமாவில் நடிப்பதில்லை. இந்நிலையில், இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவாக நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. ...

ஜெய் குஹைனியின், ஏஞ்சலினா ஜோலி கனவு!

Posted:

எஸ்.எஸ். பிலிம் பேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது சிஎஸ்கே - சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம். புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில், 'இனிது இனிது' ஷரண், நாராயண், விமல் மற்றும் 'ஆரோகணம்' ஜெய் குஹைனி நடித்துள்ளனர்.

பி.எஸ்.சி., பிலிம் டெக்னாலஜி மாணவியான ...

தொழில் தர்மம் இல்லாததால் சினிமா சீரழிந்து கொண்டிருக்கிறது - ராஜ்கிரண் பேட்டி!

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராஜ்கிரண். தற்போது இவர் ''குட்டிபுலி'' இயக்குநர் முத்தையா இயக்கி இருக்கும் ''கொம்பன்'' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், கார்த்தியின் மாமனராக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வௌியாக இருக்கிறது. இந்நிலையில் ...

பா.ஜ.வில் இணைந்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா!

Posted:

இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே, கும்மிப்பாட்டு, கரிசகாட்டுப்பூவே போன்ற கிராமத்து மண் சார்ந்த படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. நடிகர் தனுஷின் தந்தையும், நடிகர் ...

குடும்ப உறவுகளைச் சொல்லும் 'கொம்பன்'

Posted:

கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் 'கொம்பன்' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'குட்டிப் புலி' படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கியுள்ள படம் ...

ஒரு வரியில் கதை சொன்ன பாக்யராஜ்

Posted:

தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பட நிறுவனமாக விளங்கியது தேவர் பிலிம்ஸ் நிறுவனம். மிருகங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த நிறுவனமாகத்தான் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியும். அந்த நிறுவனத்திற்கென்று தனிப்பட்ட கதை இலாகா ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் அவர்கள்தான் ஒரு படத்திற்கென்று கதைகளை உருவாக்குவார்கள். படத்தை ...

'கொம்பன்- கலக்கும் 'கருப்பு நிறத்தழகி....' பாடல்

Posted:

கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'கொம்பன்' படம் ராமநாதபுரத்தைச் சுற்றிய கிராமியப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே கிராமிய மணம் வீசும் இசையில் உள்ளது. இந்தப் படத்தில் தனிக்கொடி, மகாலிங்கம் என்ற இரண்டு பாடலாசிரியர்களை ...

அல்லு சிரிஷின் சிக்ஸ் பேக்ஸ் அவதாரம்

Posted:

யங் மெகா ஹீரோவான அல்லு சிரிஷ் சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்த கௌரவம் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை. அவர் நடிப்பு பற்றி விமர்சனங்களும் எழுந்தது. அந்த படத்தில் நடித்த ரெஜினா கசந்திராவின் நட்பை அனைவரும் பாராட்டினார்கள். ...

பஞ்சமி யின் அழகு தேவதை!

Posted:

நாளை வெளிவர உள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான பஞ்சமி யில் நடிக்கும் அழகு தேவதையான அர்ச்சனா, இந்த படம் தன்னுடைய பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்றும், தன்னுடைய வாழ்நாளில் இந்த படம் வெரி ஸ்பெஷல் என்றும் கூறி உள்ளார். இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராபிக்ஸ் கலக்காமல் ரியலாக பல ...

அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் சுசந்த்

Posted:

அத்தா என்ற ஹிட் படம் கொடுத்த யங் ஹீரோவான சுசந்த் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார். அவர் தற்போது வேங்கடத்ரி எக்ஸ்பிரஸ் என்ற ஹிட் படத்தை கொடுத்த மெர்லாபாக்க காந்தியின் இயக்கத்தில் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கேத்தரின் தரெசா கதாநாயகியாக ...

மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் பஹத் பாசில் தான்..!

Posted:

இயக்குனர் மணிரத்னம் ஹீரோவுக்காக கதை எழுதுபவர் அல்ல.. கதையை தயார்செய்துவிட்டு அதற்கு பொருத்தமான ஹீரோவை தேடுபவர். அதனால் தான் அரவிந்த் சாமியை வைத்து நான்கைந்து படங்கள் எடுக்க முடிந்த அவரால் கமலுடனும், ரஜினியுடன் ஒரு படத்திற்கு மேல் பணிபுரிய முடியவில்லை.. அவ்வளவு ஏன் இன்னும் அஜித், விஜய்யை வைத்து கூட படம் பண்ணவே ...

'பேருக்கு வில்லன்.. ஊருக்கு நல்லவன்' - சன்னி வெய்னின் புதிய அவதராம்..!

Posted:

துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் 'குருடி' என்கிற கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் சசிகுமார் ரேஞ்சுக்கு நடிப்பால் அசத்தியவர் தான் சன்னி வெய்ன். இது தவிர 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' என இந்த இரண்டு படங்களிலுமே துல்கரின் நண்பனாய் துணைக்கு வந்த நடிகர் சன்னி வெய்னை அவ்வளவு சுலபத்தில் ...

கொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்!

Posted:

மேஸ்ட்ரோ என்ற பெயரில் மெல்லிசைக்குழுவை வைத்துக் கொண்டு கச்சேரிகள் செய்து வந்த கருணாஸை, சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் அறிமுகப்படுத்தினார் பாலா. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்த கருணாஸ் வெகுவிரைவிலேயே பிஸியான காமெடி நடிகரானார். சினிமாவில் கிடைத்த வாழ்க்கையை ...

எமி ஜாக்சனைக் கவர்ந்த உதயநிதி, கருணா

Posted:

'ஐ' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கிய எமி ஜாக்சன் அதில் வெற்றியும் பெற்று விட்டார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படம், தனுஷ் ஜோடியாக மற்றொரு படம் என பிஸியாக ஆகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இரண்டு ...

அஜித் ஆக ஆசைப்படும் விஷால்!

Posted:

அஜித் நடிக்கும் படங்களுக்கு முன்கூட்டியே தலைப்பு வைப்பதில்லை. படப்பிடிப்பு முடிவடையும்போதுதான் தலைப்பை அறிவிக்கின்றனர். அதுவரை ரசிகர்கள் அஜித்தின் எத்தனையாவது படம் என்பதைக் குறிக்கும் வகையில் தல 55, தல56 என்று குறிப்பிடுகின்றனர். ஊடகங்களும் அவ்வாறே எழுதுகின்றன. இதேபோல் தான் நடிக்கும் படத்தையும் ரசிகர்களும், ஊடகங்களும் ...

குறும்படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தராமல் ஓயமாட்டேன்: கார்த்திக் சுப்புராஜ்

Posted:

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து ஸ்டோன் பென்ஞ் என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறார். இது குறும்படங்களுக்கான ஒரு களம். குறும்படத்தை இயக்கியவர்கள் அதனை இந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அதனை விருது விழாக்களுக்கு அனுப்பி வைப்பது, வியாபாரம் செய்வது, திரையிடுவது போன்ற பணிகளை இது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™