மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற சட்டப்பிரிவு 66ஏ செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- திகார் ஜெயில் கைதிகளுக்கு செல்போன் வீசும் உறவினர்கள்: சிகரெட், போதைப்பொருளும் கிடைக்கிறது
- திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர் கைது
- நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பரீட்சையில் பிட் அடிக்க புத்தகம் கொடுத்தோம்: லல்லு பிரசாத் பேச்சால் சர்ச்சை
- தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு
- அத்துமீறிய காங்கிரசார் மீது நடவடிக்கை கோரி அச்சுதானந்தன் தலைமையில் கம்யூ. பெண் எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார்
- ராகுலுக்கு 27–ந்தேதியுடன் ஒரு மாத லீவு முடிகிறது: சோனியாவுடன் சமரசம் ஆவாரா?
- குட்கா விற்றால் இனி ஜாமீனில் வெளிவரமுடியாது: மாட்டிறைச்சியை தொடர்ந்து மகாராஷ்டிரா அடுத்த அதிரடி
- பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
- தொழில்நுட்ப பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
- சசிதரூரின் மனைவி சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது
- தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு
- சசி கபூர் திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்தவர்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து
- ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு
- 20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்
- 5 நிமிடங்களுக்குள் தேங்காயில் நார் உரிக்கும் நாய்
- உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
- இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் பிரிவினைவாதிகளுக்கு இடம் இல்லை: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு
- 5 ஆண்டுகளில் 42 லட்சம் லிட்டர் அளவு மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கிய குஜராத் போலீசார்
- அரசியல் நோக்கத்துடனே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை சோனியா காந்தி எதிர்க்கிறார்: அன்னா ஹசாரே காட்டம்
| Posted: 23 Mar 2015 11:10 PM PDT சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல்வாதிகள் எதிராக கருத்து தெரிவிப்போர் மீது 66ஏ தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 66-ஏ தெளிவற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறிய |
| திகார் ஜெயில் கைதிகளுக்கு செல்போன் வீசும் உறவினர்கள்: சிகரெட், போதைப்பொருளும் கிடைக்கிறது Posted: 23 Mar 2015 10:59 PM PDT தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் திலக் நகரில் நாட்டிலேயே மிகப்பெரிய திகார் ஜெயில் உள்ளது. காலப்போக்கில் ஜெயிலைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் பெருகி விட்டன. தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் திகார் ஜெயில் அமைந்தது போல் ஆகிவிட்டது. |
| திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர் கைது Posted: 23 Mar 2015 10:08 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க வாயில் அருகே சம்பங்கி பிரகாரத்தில் 3 நடமாடும் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மூலவரை தரிசித்து வெளியே வரும் பக்தர்கள் இந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது உண்டு. நேற்று முன்தினம் இரவு இந்த உண்டியலில் ஒன்று நிரம்பி வழிந்தது. அப்போது தர்ம தரிசன வரிசையில் வந்த இளைஞர் ஒருவர் உண்டியலில் |
| Posted: 23 Mar 2015 10:04 PM PDT பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் புதிய பள்ளிக்கூடம் ஒன்றை ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– பீகார் மாநிலம் 10–ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவும் படம் பத்திரிகைகளில் வெளியாகி இருப்பதால் நமது மாநிலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளியின் சுவர்களில் பெற்றோர்கள் பல்லி மாதிரி |
| தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு Posted: 23 Mar 2015 10:04 PM PDT நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசினார். |
| Posted: 23 Mar 2015 09:43 PM PDT கேரள சட்டசபையில் கடந்த 13–ந்தேதி காங்கிரஸ் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். மாணி மீது மது பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ளதால் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகரின் இருக்கை உள்பட பொருட்கள் உடைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. மேலும் கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.க்களிடம் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அத்துமீறி நடந்து |
| ராகுலுக்கு 27–ந்தேதியுடன் ஒரு மாத லீவு முடிகிறது: சோனியாவுடன் சமரசம் ஆவாரா? Posted: 23 Mar 2015 09:33 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் ராகுல் கடுமையாக விரக்தி அடைந்துள்ளார். காங்கிரசை சீரமைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்த அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கட்சி பொறுப்புகளில் இருந்து அகமது படேல், ஜனார்த்தனன் திவேதி இருவரையும் நீக்க வேண்டும் என்று ராகுல் காந்தி |
| குட்கா விற்றால் இனி ஜாமீனில் வெளிவரமுடியாது: மாட்டிறைச்சியை தொடர்ந்து மகாராஷ்டிரா அடுத்த அதிரடி Posted: 23 Mar 2015 09:19 PM PDT மகாராஷ்டிராவில் குட்கா விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதை திறமையான முறையில் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு மாட்டிறைச்சியை தொடர்ந்து தனது கவனத்தை குட்கா மீது திருப்பியுள்ளது. என்ன தான் மகாராஷ்டிராவில் குட்கா தடை செய்யப்பட்டாலும், அண்டை மாநிலங்கள் குட்காவுக்கு தடை விதிக்காததால், அங்கிருந்து எளிதாக மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது. இந்த கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய உணவு மற்றும் போதை தடுப்பு துறை மந்திரி கிரிஷ் பப்பட் கூறுகையில், குட்கா மீதான |
| பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி Posted: 23 Mar 2015 08:18 PM PDT சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. |
| Posted: 23 Mar 2015 08:07 PM PDT கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் தொழில்நுட்ப பணிகள் காரணங்களாக விண்ணில் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. |
| சசிதரூரின் மனைவி சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது Posted: 23 Mar 2015 06:00 PM PDT சசிதரூரின் மனைவி சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிவடைந்தது. அந்த ஆய்வறிக்கையை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் |
| தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு Posted: 23 Mar 2015 05:37 PM PDT அனைத்து ரெயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஆகியவற்றில் பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெட்டிக்கு 2 படுக்கை வீதம் ஒதுக்கீடு செய்யும் முறை, கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதியில் இருந்து அமலில் உள்ளது. |
| சசி கபூர் திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்தவர்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து Posted: 23 Mar 2015 03:13 PM PDT இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் சசி கபூருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். |
| ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு Posted: 23 Mar 2015 02:59 PM PDT ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுப்பதற்காக, இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாட்டை ரெயில்வே அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது. இதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்-இன் ஐ பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே |
| 20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர் Posted: 23 Mar 2015 02:43 PM PDT டெல்லியின் தெற்கு பகுதியில், கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு பணம் கொடுக்காத நபரை கடை உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மால்வியா நகர் பகுதியின் சிராக்டெல்லியில் உள்ள தெருவோரக் கடைக்கு, |
| 5 நிமிடங்களுக்குள் தேங்காயில் நார் உரிக்கும் நாய் Posted: 23 Mar 2015 02:06 PM PDT கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரோய் டேனியல். இவரிடம் 2 வயது நிரம்பிய பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆண் நாய் உள்ளது. இதற்கு அவர் பிரெஞ்சு மாஷிப் என்று பெயர் சூட்டி உள்ளார். அது குட்டியாக இருந்தபோது தேங்காயில் இருந்து நார் உரிப்பது எப்படி என்பதை ரோய் டேனியல் கற்றுக்கொடுத்தார். |
| உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை Posted: 23 Mar 2015 01:01 PM PDT உத்திரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 7 வயது சிறுமி, பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 23 Mar 2015 12:53 PM PDT டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று பாகிஸ்தான் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஹுரியத் தலைவர்கள் (காஷ்மீர் பிரிவினைவாதிகள்) அழைக்கப்பட்டனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இந்திய அரசும், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தும் நேர் எதிர் துருவங்களில் இருந்து பேசுகிறார்கள் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. |
| 5 ஆண்டுகளில் 42 லட்சம் லிட்டர் அளவு மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கிய குஜராத் போலீசார் Posted: 23 Mar 2015 11:21 AM PDT மகாத்மா காந்தி பிறந்த பூமியான குஜராத்தில் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து குஜராத்துக்கு மது கடத்தப்படுவதும் அவர்களை போலீசார் கைது செய்வதும் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில், கடந்த 5 வருடங்களில் குஜராத் |
| அரசியல் நோக்கத்துடனே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை சோனியா காந்தி எதிர்க்கிறார்: அன்னா ஹசாரே காட்டம் Posted: 23 Mar 2015 09:21 AM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சோனியா காந்தி தெரிவித்திருப்பதில் அரசியில் உள்நோக்கம் உள்ளது என காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் இன்று தியாகிகள் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பேசிய |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |