Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

Posted: 26 Mar 2015 10:07 PM PDT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தை திருமணங்களும் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ்

திருப்பதி கோவிலில் நாளை ஸ்ரீராம நவமி: ஆஸ்தானம் கட்டண சேவைகள் ரத்து

Posted: 26 Mar 2015 09:57 PM PDT

ஸ்ரீராம நவமி விழா நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் நாளை இரவு நடக்கிறது. அப்போது ஸ்ரீராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி ஏழுமலையானுக்கு நாளை இரவு நடக்கும் வசந்த உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

ஆந்திர சட்டசபையில் அமளி: சபாநாயகரிடம் ஜெகன்மோகன் மன்னிப்பு கேட்டார்

Posted: 26 Mar 2015 09:56 PM PDT

ஆந்திர சட்டசபையில் கடந்த 19–ந்தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பேச அனுமதிக்காததால் சபாநாயகர் சிவபிரசாத்தை கண்டித்து அவரது இருக்கையை முற்றுகையிட்டு

ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தனது சக பெண் அதிகாரிக்கு 44 போன் கால்கள் செய்ததாக பொய்: சித்தராமையா குட்டு அம்பலம்

Posted: 26 Mar 2015 09:30 PM PDT

பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி, கடந்த 16-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தற்கொலை அல்ல என்று பலத்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரவி தனது சக பெண்

ஏமனில் நெருக்கடி: இந்தியர்களை மீட்க மத்திய அரசு கப்பல்களை அனுப்புகிறது

Posted: 26 Mar 2015 08:31 PM PDT

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவிலிருந்து ஏடன்

மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

Posted: 26 Mar 2015 08:24 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர் அவரது அறைக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம்

வெளிநாடுகளில் இருந்து எனக்கு பணம் வரவில்லை: அன்னா ஹசாரே அறிக்கை

Posted: 26 Mar 2015 07:53 PM PDT

ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், காந்தியவாதியுமான 77 வயது அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30-ந் தேதி தேர்வு: ராகுல் காந்தி தலைவராக வாய்ப்பு

Posted: 26 Mar 2015 05:19 PM PDT

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் 30-ந் தேதி நடைபெறும் அகில இந்திய தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி தேர்வுபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998-ம் ஆண்டு முதல்

இடஒதுக்கீட்டை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவு: மோடியுடன் ஜாட் இன தலைவர்கள் சந்திப்பு

Posted: 26 Mar 2015 04:28 PM PDT

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் ஜாட் இனத்தவருக்கு மத்திய அரசு பணியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு செய்யும் வகையில் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சர்ச்சைக்குரிய சட்ட பிரிவுக்கான கருத்தை உருவாக்கியவர் ஆ.ராசா: முன்னாள் சட்ட மந்திரி பரத்வாஜ் பேட்டி

Posted: 26 Mar 2015 04:06 PM PDT

சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது. இந்த சட்டப்பிரிவு தொடர்பாக ஷ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சர்ச்சைக்குரிய அந்த சட்டப்பிரிவை ரத்து செய்து கடந்த 24-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

Posted: 26 Mar 2015 03:45 PM PDT

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted: 26 Mar 2015 03:28 PM PDT

நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது பல்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த கமிஷனரின் சிறப்பு படையினருக்கு சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து,

பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த தயார்: அன்னா ஹசாரே அறிவிப்பு

Posted: 26 Mar 2015 02:47 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல்-சபையில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கிறது.

கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் பூஷண் எதிர்ப்பு: ஆம் ஆத்மி கட்சியில் சமரச முயற்சி தோல்வி

Posted: 26 Mar 2015 02:21 PM PDT

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் விலக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அந்த கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து பிரசாந்த் பூஷணும்,

ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியல் வெளியீடு: மத்திய நேரடி வரி வாரியம் நடவடிக்கை

Posted: 26 Mar 2015 02:11 PM PDT

ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியலை முதல் முறையாக மத்திய நேரடி வரி வாரியம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இந்த பாக்கியை மத்திய நேரடி வரி வாரியம் வசூலித்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Posted: 26 Mar 2015 01:52 PM PDT

ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்துக்காக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு

Posted: 26 Mar 2015 01:38 PM PDT

கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான 'டார்னியர்' ரோந்து விமானம், 24-ந்தேதி இரவு அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 3 பேரில் நிகில் ஜோஷி என்ற அதிகாரி, காயங்களுடன் மீட்கப்பட்டார். விமானத்தின் விமானி, பார்வையாளராக சென்ற பெண் அதிகாரி ஆகிய 2 பேரின் கதி என்ன என தெரியாமல் இருந்தது.

1994 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: நாடு முழுவதும் 33 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கம்

Posted: 26 Mar 2015 11:56 AM PDT

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1994 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 33,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் ஏப்ரல் 4-ந்தேதி தோன்றும் முழு சந்திர கிரகணம்

Posted: 26 Mar 2015 10:57 AM PDT

சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும். இது

குஜராத்தில் பா.ஜனதா கவுன்சிலர் சுட்டுக்கொலை

Posted: 26 Mar 2015 09:32 AM PDT

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பா.ஜனதா கவுன்சிலர் ஒருவர் சக கவுன்சிலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜஸ்டான் நகராட்சி பா.ஜனதா கவுன்சிலரான விபுல் ஹிர்பாராவுக்கும், சக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™