Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


புதிய தலைநகர் அமைக்க ஆந்திர அரசு ஊழியர்கள் ரூ.150 கோடி நிதி வசூல்: சந்திரபாபு நாயுடுவிடம் வழங்குகிறார்கள்

Posted: 16 Mar 2015 10:45 PM PDT

ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா–குண்டூர் இடையே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது. தலைநகருக்காக தாராளமாக நிதி வழங்கும்படி பொதுமக்களுக்கு முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பதியில் முடி காணிக்கை பக்தர்களிடம் பணம் வசூல்: நிர்வாக அதிகாரி இடமாற்றம்

Posted: 16 Mar 2015 10:39 PM PDT

திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்யாண கட்டாவிலும், விடுதி அருகே உள்ள மினி கல்யாண கட்டாவிலும்

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது: உச்சநீதிமன்றம்

Posted: 16 Mar 2015 10:38 PM PDT

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜாட் இனத்தையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ''இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்: 2 மணிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 16 Mar 2015 10:30 PM PDT

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கேரள சட்டசபையில் ரகளை செய்த எம்.எல்.ஏ.க்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: உம்மன்சாண்டி பேச்சு

Posted: 16 Mar 2015 09:57 PM PDT

கேரள சட்டசபையில் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கேரள சட்ட சபையே போர்க்களமாக மாறியது. எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பில் ஈடுபட்டதுடன் சபாநாயகரின் இருக்கை உள்பட பொது சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

தேவாலயம் இடிப்பு, கன்னியாஸ்திரி பலாத்காரம் சம்பவம் வருத்தம் அளிக்கிறது: மோடி

Posted: 16 Mar 2015 09:15 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசு இதுகுறித்து

சென்னை-டெல்லி புல்லட் ரெயில் திட்ட ஆய்வுப்பணி தொடக்கம்: சுரேஷ் பிரபு தகவல்

Posted: 16 Mar 2015 08:11 PM PDT

சென்னை-டெல்லி புல்லட் ரெயில் திட்டங்களுக்கான ஆய்வுப்பணிகள் தொடங்கி விட்டதாக ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கூறினார். சென்னை-டெல்லி மற்றும் ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்

கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்

Posted: 16 Mar 2015 08:10 PM PDT

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி தனிக்கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Posted: 16 Mar 2015 07:49 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஒ.பி.சைனி முன்னிலையிலான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஏர்செல் மேக்சிஸ் பங்குகள் விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிப்பு: தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted: 16 Mar 2015 07:42 PM PDT

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசினார். பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியதாவது:-

மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது

Posted: 16 Mar 2015 07:32 PM PDT

மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த மூத்த கன்னியாஸ்திரியை கற்பழித்து, பள்ளி அலமாரியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி உடல்நிலை தேறி வருகிறார்.

மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 16 Mar 2015 07:15 PM PDT

'ஆதார்' அட்டை கட்டாயம் என்று சில அரசுத்துறைகள் அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'ஆதார் அட்டை கட்டாயம் அல்ல. ஆதார் அட்டை இல்லாததற்காக யாரும் பாதிப்படைய விடக்கூடாது' என்று கடந்த

பீகாரில் கோர்ட்டு வளாகத்துக்குள் கைதி மீது துப்பாக்கி சூடு

Posted: 16 Mar 2015 07:08 PM PDT

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்னு. கொலை மற்றும் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவரை நேற்று போலீசார் முசாபர்பூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். கோர்ட்டு வளாகத்தில் போலீசாருடன் ஜக்னு நின்று கொண்டிருந்தார்.

பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா

Posted: 16 Mar 2015 06:01 PM PDT

உலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர் 2014 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய

கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்

Posted: 16 Mar 2015 04:39 PM PDT

மும்பை நகரின் நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள கமோதேவைச் சேர்ந்தவர் ஷபனா பெர்சாடே(38) மூன்று குழந்தையின் தாயான இவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் ஷாரூக் கிரிக்கெட் சேனல் ஒன்றை வைக்கச்சொல்லி

காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு: ரெயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிப்பு

Posted: 16 Mar 2015 03:17 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக காஷ்மீர் நெடுஞ்சாலை

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்: பிரபல வங்காளக் கவி நஜ்ருலின் பெயரில் அடுத்த மாதம் திறப்பு

Posted: 16 Mar 2015 03:03 PM PDT

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று துர்காபூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில போக்குவரத்து செயலாளர் அலாபன் பண்டோபத்யாய், விமான நிலையத்திற்கான

தென்னிந்திய பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து மன்னிப்பு கேட்க சரத்யாதவ் மறுப்பு

Posted: 16 Mar 2015 02:55 PM PDT

தென்னிந்திய பெண்கள் பற்றி கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். டெல்லி மேல்-சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், இந்தியர்கள் வெள்ளைத்தோல் மீது மோகம் கொண்டவர்கள்

அரியானாவிலும் மாட்டிறைச்சிக்கு தடை: பசுவதைத் தடைச்சட்டம் நிறைவேற்றம்

Posted: 16 Mar 2015 01:49 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டதையடுத்து, தற்போது அரியானாவிலும் மாட்டிறைச்சி விற்பனையை முழுவதுமாக தடை செய்யும் 'பசுவதைத் தடைச்சட்டம்' நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக விமான நிலைய விருதுகள்-2015: 2 சர்வதேச விருதுகளை தட்டிச் சென்ற டெல்லி விமான நிலையம்

Posted: 16 Mar 2015 01:05 PM PDT

பாரிசில் நடைபெற்ற 2015-ம் ஆண்டுக்கான உலக விமான நிலைய விருதுகள் வழங்கும் விழாவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 2 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மத்திய ஆசியா/இந்தியா-வில் சிறந்த விமான நிலையம், மற்றும் மத்திய ஆசியா/இந்தியா-வில் சிறந்த விமான நிலைய ஊழியர்கள் என்று 2


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™