Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் கட்டண சேவை: ஆன் லைனில் கட்டணம் செலுத்துவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு

Posted: 10 Mar 2015 11:16 PM PDT

திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகள் நடைபெறுகின்றன. இந்த கட்டண சேவைகள் அனைத்துக்கும் கட்டணத்தை ஆன் லைனில்

திருப்பதியில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம்: அருகில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு

Posted: 10 Mar 2015 10:46 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பள்ளியில் தேர்வுகள் நடப்பதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்துள்ளது. நேற்று அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 43 ஆயிரத்து 446 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இலவச தரிசனத்தில் செல்லும்

ரேணிகுண்டாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெண் உள்பட 2 பேர் கைது

Posted: 10 Mar 2015 10:45 PM PDT

ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகில் ரேணிகுண்டா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்

Posted: 10 Mar 2015 10:45 PM PDT

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும்.

பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் முலாயம்சிங் அனுமதி

Posted: 10 Mar 2015 10:43 PM PDT

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. நாடெங்கும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 1400–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சனிக்கிழமை அவர் மேதந்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆந்திர சட்டசபையில் நடிகை ரோஜா மீது உரிமை மீறல் தீர்மானம்

Posted: 10 Mar 2015 10:42 PM PDT

நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கடந்த டிசம்பர் மாதம் ஆந்திர சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ரோஜா சட்டசபையில் பெண்கள் வெட்கி தலைகுனியும் வகையில் நடந்து கொண்டதாக தெலுங்கு தேசம் கட்சி பெண் எம்.எல்.ஏ. அனிதா புகார் தெரிவித்தார்.

மதுபார் உரிமையாளர்களிடம் லஞ்சம்: கேரள நிதி மந்திரியை நீக்கக்கோரி சட்டசபையில் அமளி

Posted: 10 Mar 2015 10:31 PM PDT

கேரள சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் மதுபார் உரிமையாளர்களிடம் இருந்து மாணி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் பேசும் போது மந்திரி மாணி குற்றவாளி.

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன் சிங் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன்

Posted: 10 Mar 2015 10:19 PM PDT

நாட்டையே உலுக்கிய நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 6 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஏப்ரல் 8-ந் தேதி நேரில்

கேரள சட்டசபை: புதிய சபாநாயகர் நாளை தேர்வு

Posted: 10 Mar 2015 10:18 PM PDT

கேரள சட்டசபை சபாநாயகராக இருந்த கார்த்திகேயன் புற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக கேரள சட்டசபை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் தற்போதைய துணை சபாநாயகர் சக்தன் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார்.

பசுவதையை தடுக்க புதிய சட்டம் தேவை இல்லை: சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பேட்டி

Posted: 10 Mar 2015 08:11 PM PDT

சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- "பசுவதை தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில்

பங்களா அருகே கான்கிரீட் சரிவு பாதை அகற்றிய விவகாரம்: நடிகர் ஷாருக்கானுக்கு அபராதம்- மும்பை மாநகராட்சி நடவடிக்கை

Posted: 10 Mar 2015 08:00 PM PDT

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காரை நிறுத்துவதற்காக மும்பை பாந்திராவில் உள்ள தனது பங்களா அருகே சாலையில் கான்கிரீட் சரிவு பாதை ஒன்றை கட்டியிருந்தார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பூனம் மகாஜன் எம்.பி., மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார்.

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Posted: 10 Mar 2015 07:49 PM PDT

பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். 'காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்' என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை சற்று நேரத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சுரங்க மசோதா மீது டெல்லி மேல்-சபையில் 3 மணி நேரம் காரசார விவாதம்: 3 முறை சபை ஒத்திவைப்பு

Posted: 10 Mar 2015 07:35 PM PDT

சுரங்க மசோதா மீது விவாதம் நடத்தலாமா? கூடாதா? என்பது பற்றி டெல்லி மேல்-சபையில் 3 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. சுரங்கம் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதை சட்டம் ஆக்குவதற்கான மசோதாவை

நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

Posted: 10 Mar 2015 07:25 PM PDT

நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கும் சட்டதிருத்தத்தால் நீதித்துறையின் சுதந்திரம் வலுப்படுத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்டதிருத்த மசோதா 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தின்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று நிறைவடைகிறது

Posted: 10 Mar 2015 07:15 PM PDT

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் கடந்த 6-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் நேற்று முன்தினம் நிறுவனங்கள் மனுவுக்கு

டெல்லிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் ராகுல்காந்தி விடுமுறை நீட்டிப்பு

Posted: 10 Mar 2015 07:01 PM PDT

நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, நேற்று டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர், தனது விடுமுறையை மேலும் நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த சில

ஒரே வருடத்தில் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை: பாராளுமன்றத்தில் அதிர்ச்சித்தகவல்

Posted: 10 Mar 2015 05:12 PM PDT

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ராணுவ, மற்றும் விமானப்படையில் பணிபுரியும் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக

1465 கி.மீ பயணம் செய்து இந்தியா வந்த உலகைச் சுற்றும் சூரிய ஒளி விமானம்

Posted: 10 Mar 2015 02:56 PM PDT

அபுதாபியிலிருந்து நேற்று முன்தினம் தனது பயணத்தைத் தொடங்கிய உலகைச் சுற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விமானமான 'சோலார் இம்பல்ஸ் 2' நேற்று நள்ளிரவு குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குஜராத்திலிருந்து 40 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட குட்கா: மடக்கிப் பிடித்த மகாராஷ்டிர போலீசார்

Posted: 10 Mar 2015 01:10 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 2012 ஆண்டு ஜூலை முதல் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள காஷ்மீரா மாவட்டத்தில் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா மற்றும் குட்காவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைகுலுக்காமல் வணக்கம் சொன்னால் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்: அமைச்சர் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

Posted: 10 Mar 2015 12:23 PM PDT

மேற்கத்திய முறைப்படி கைகுலுக்காமல் இந்திய மரபுப்படி வணக்கம் சொன்னால் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்று அரியானா சுகாதார அமைச்சர் 'அனில் விஜ்' சட்டசபையில் தெரிவித்துள்ளது பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™