Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இன்று யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி கோவில் 4 டன் மலர்களால் அலங்கரிப்பு

Posted: 20 Mar 2015 10:40 PM PDT

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 7.30 மணிக்கு யுகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. கோவில் தங்க வாயில் அருகே புதிய வருடமான 'மன்மத நாம' ஆண்டு

நிலம் கையகப்படுத்தும் மசோதா: அவசர சட்டத்தை மீண்டும் அறிவிக்க மத்திய அரசு முடிவு

Posted: 20 Mar 2015 10:28 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை செய்தது. அந்த சட்டத்திருத்தம் அவசர சட்டமாக வெளியிடப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் கடந்த 10–ந்தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அடுத்து பாராளுமன்ற மாநிலங்களவையிலும் இந்த சட்டத்திருத்தம்

சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்: மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

Posted: 20 Mar 2015 10:10 PM PDT

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக மன்மோகன்சிங் உள்ளிட்ட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில் மன்மோகன்சிங் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள சட்டசபையில் அமளி: காங்கிரசார் மீது கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் போலீசில் புகார்

Posted: 20 Mar 2015 10:00 PM PDT

கேரள சட்டசபையில் கடந்த 13–ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது, அவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மந்திரி மாணிக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம்

ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது

Posted: 20 Mar 2015 09:32 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பெரும்பாவூர். இங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர்–ஆலுவாய் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து வந்தனர். அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முடிவு

Posted: 20 Mar 2015 08:19 PM PDT

முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடைந்தால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளது என்றும் கேரள மாநில அரசு கூறி வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி

காஷ்மீரில் 2–வது நாளாக கைவரிசை: ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Posted: 20 Mar 2015 07:46 PM PDT

காஷ்மீரில் நேற்று காலை தீவிரவாதிகள் கதுவா பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 3 பாதுகாப்புப்படை வீரர்கள், 2 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தற்கொலைப் படை தீவிரவாதிகளுடன் 6 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2

பட்ஜெட் கூட்ட முதல் அமர்வு முடிந்தது: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Posted: 20 Mar 2015 07:29 PM PDT

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதி ரெயில்வே பட்ஜெட், 27-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கை, 28-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நேற்று முடிந்தது. இதையடுத்து

கருப்பு பண ஒழிப்பு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல்: வெளிநாட்டு வருமானம், சொத்து மறைத்தால் 10 ஆண்டு சிறை

Posted: 20 Mar 2015 04:53 PM PDT

வெளிநாட்டு வருமானம், சொத்து மறைத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் கருப்பு பண மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரி, அபராதம் செலுத்தி தண்டனைக்கு தப்ப ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தே தீருவோம் என மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்

Posted: 20 Mar 2015 04:51 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை நண்பகல் அளவில் பெற்றெடுத்ததாக மருத்துவர் ஜி.கே சமத் தெரிவித்தார். அக்குழந்தையின் இதயமானது மார்புக்கு உள்ளே இல்லாமல், மார்புக்கு வெளியே காணப்படுகிறது. ஆனால் குழந்தையின் இதயம் நன்றாக துடிப்பதாக மருத்துவர் சமத் கூறியுள்ளார். எனினும்

ஏப்ரல் 20-ந் தேதி நடக்கும் பேரணி தோல்வியடைந்தால் அரசியலை விட்டு விலகுவேன்: ஜித்தன் ராம் மாஞ்ஜி

Posted: 20 Mar 2015 04:34 PM PDT

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் முதல் மந்திரியான ஜித்தன் ராம் மாஞ்ஜி புதிய கட்சியை தொடங்கி உள்ளார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தனது கட்சியின் முதல் பேரணியில் கலந்து கொண்டு மாஞ்ஜி உரையாற்றுகிறார். இக்கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் திரளவில்லையென்றால் அரசியலை விட்டு விலகுவன் என்று மாஞ்ஜி கூறியுள்ளார். பேரணியில் அதிகளவில் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு ஊர்களுக்கு நேரடியாக சென்று மாஞ்ஜி தானே மக்களை சந்தித்து நேரில் அழைக்கிறார். அந்த வகையில் பேரணிக்கு ஆதரவு திரட்ட முசாபர்பூருக்கு மாஞ்ஜி சென்றபோது அங்கு அவருக்கு உற்வாக வரவேற்பு அளித்தள்ளது.

காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில் 3வது நபரின் தலையீடு தேவையில்லை: மத்திய அரசு

Posted: 20 Mar 2015 03:25 PM PDT

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் 3வது நபரின் தலையீடு தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் திங்களன்று பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் அந்நாட்டு தேசிய நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக ஹுரியத் தலைவர்கள் கூறியுள்ள போதிலும் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது. இந்த விழாவில் ஆண்டு தோறும் ஹுரியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள போதிலும்,

எவரெஸ்ட் சிகர பயணம்: கடந்த ஆண்டு பயணத்தை ரத்து செய்த 300 மலையேறுபவர்களின் உரிமங்களை நீட்டித்த நேபாளம்

Posted: 20 Mar 2015 12:31 PM PDT

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையில் கடந்தாண்டு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 16 ஷெர்பா வழிகாட்டிகள் பலியானார்கள். இதனால் கடந்த ஆண்டு எவரெஸ்ட் மலை ஏறும் பயணத்தில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். அப்படி தங்கள் பயணத்தை ரத்து செய்த அனைவரும் இந்த ஆண்டு மீண்டும் மலை ஏறும் பொருட்டு, புதிய கட்டணம் ஏதும் நிர்ணயிக்காமல், அவர்களது அனுமதியை மேலும் நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை தலைவரான துளசி கவுதம்

சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்க 1.75 கோடி ரூபாய் லஞ்சம்: ரேணுகா சவுத்ரி மீது பாய்ந்தது வழக்கு

Posted: 20 Mar 2015 11:22 AM PDT

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, தனக்கு சீட் வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ரேணுகா சவுத்ரி 1.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பி. கலாவதி என்பவர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் இன்றைய விசாரணையின் போது, ரேணுகா மீது வழக்கு பதிவு செய்ய ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஐதராபாத் போலீசார் உடனடியாக ரேணுகா மீது வழக்கு தொடர்ந்தனர். அவர் மீது மோசடி மற்றும் கிரிமினல் மிரட்டலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு

ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்த வழக்கு: போராட்டத்துக்கு பணிந்தார் சித்தராமையா - சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு

Posted: 20 Mar 2015 11:10 AM PDT

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அம்மாநில அரசு சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று கூறி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க மறுத்து வந்தது. இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம் வெடித்தது. இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி முற்றியது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி

ரத்தாகிறது மீத்தேன் திட்டம்: டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் மத்திய அரசின் அறிவிப்பு

Posted: 20 Mar 2015 10:42 AM PDT

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியது. 2010 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் இத்திட்டத்தை தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் அந்நிறுவனம் எடுக்கவில்லை. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்களையும் இதுநாள் வரை

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது

Posted: 20 Mar 2015 09:28 AM PDT

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன் தூக்கிச் சென்றான். ஆனால், கோயிலுக்கு போகும் வழியில் அந்த குழந்தை துடிதுடித்து அழுததை சகித்துக் கொள்ள முடியாத அந்த படுபாதகன்

தூக்கு தண்டனை கைதி அஜ்மல் கசாப் பிரியாணி கேட்டானா?: மறுக்கிறார், அரசு தரப்பு வக்கீல்

Posted: 20 Mar 2015 08:40 AM PDT

'மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் கைதாகி தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தனக்கு பிரியாணி வாங்கித்தரும்படி சிறை அதிகாரிகளிடம் கேட்கவில்லை, அரசும் அவனுக்கு பிரியாணி வாங்கித் தரவில்லை' என இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நெடுநாட்களாக உலவிவந்த வதந்திக்கு தற்போது

மத்தியப்பிரதேசத்தில் ஹவாலா புள்ளி கைது; ரூ.50 லட்சம் பறிமுதல்

Posted: 20 Mar 2015 08:31 AM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஹவாலா முறை மூலம் பணப்பரிமாற்றம் செய்த நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த ஹவாலா பணப்பரிமாற்றத்தின் முக்கியப்புள்ளியான ஜிதேந்திரா லால்வானி என்ற பிரபல தரகரின் கையாளாக செயல்பட்ட நிமோஷ் குமா டல்ரேச்சா என்பவரை, ரகசிய தகவலையடுத்து கைது செய்த

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்

Posted: 20 Mar 2015 08:24 AM PDT

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உஸ்லாபூர் ரெயில் நிலையத்திலிருந்து, விசாகப்பட்டினம்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய சுனிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜோத்பூர் சென்று கொண்டிருந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™