Tamil News | Online Tamil News |
- தலைநகர் டில்லியில் 67 சதவீத ஓட்டுப்பதிவு: கிரண் பேடியா, கெஜ்ரிவாலா என 10ம் தேதி தெரியும்
- பீகார் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்: சட்டசபையை கலைக்க முதல்வர் மஞ்ஜி பரிந்துரை
- தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது: முதல்வர் பன்னீர்செல்வம் பெருமிதம்
- வங்கிகளின் வராக்கடன் ரூ.2.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு: 6 ஆண்டில் 500 மடங்கு உயர்ந்ததை விசாரிக்க கோரி வழக்கு
- கவர்னர் ரோசய்யா காலடியில் காந்தி, மோடி படம்: சர்ச்சை அழைப்பிதழால் விழாவை புறக்கணித்தார்
- மேட்டூர் அணையில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர்: பட்ஜெட்டில் புதிய திட்டம் வெளியாகிறது?
- பத்திரப்பதிவு அலுவலக பணிகளை தனியாரிடம் விட யோசனை: முறைகேடுகள், தாமதத்தை தவிர்க்க அரசு புது திட்டம்
- பிற்போக்கு எண்ணங்களை உதறுங்கள்: தூதர்களுக்கு மோடி வேண்டுகோள்
- 'பயோ மெட்ரிக்'கால் கூடுதல் நேரம் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்: ஆய்வில் தகவல்
| தலைநகர் டில்லியில் 67 சதவீத ஓட்டுப்பதிவு: கிரண் பேடியா, கெஜ்ரிவாலா என 10ம் தேதி தெரியும் Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் நேற்று, விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. அதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அரியணையில் ஏறப்போவது, பா.ஜ.,வின் கிரண் பேடியா, ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலா என்பது, வரும், 10ம் தேதி தெரியும்.பா.ஜ., - ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான களமாக விளங்கிய டில்லி சட்டசபை தேர்தல், நேற்று நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளிலும், காலை, 8:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலையில், பனி, குளிர் காரணமாக ஓட்டுப் பதிவு மந்தமாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே ஓட்டுச்சாவடிகளுக்கு வந்தனர். நேரம் செல்ல செல்ல, ... |
| பீகார் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்: சட்டசபையை கலைக்க முதல்வர் மஞ்ஜி பரிந்துரை Posted: பாட்னா: பீகார் மாநிலத்தில், உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையை கலைக்கும்படி, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதே நேரத்தில், ''ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், அடுத்த முதல்வர் நான் தான்,'' என, நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஜிதன்ராம் மஞ்ஜி முதல்வராக உள்ளார்.தீவிர விசுவாசி: கடந்த லோக்சபா தேர்தலில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ... |
| தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது: முதல்வர் பன்னீர்செல்வம் பெருமிதம் Posted: 'தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது' என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க., பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க., பொருளாளரும், தமிழக முதல்வருமான பன்னீர்செல்வம் பேசியதாவது: ஸ்ரீரங்கத்திலேயே ஏராளமான திட்டங்களை, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். அதை சொன்னாலே நமக்குத் தான் வெற்றி. இந்த சூழ்நிலையில், நாம் மீண்டும் ஜெ.,வுக்கே விசுவாசி என, நிரூபிப்போம். இந்த ... |
| Posted: மும்பை: வராக்கடன், 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயரக் காரணமாக இருந்த பொதுத் துறை வங்கிகள் மற்றும் முக்கிய பரிவர்த்தனைகளை கோட்டை விட்ட ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, முன்னாள் பத்திரிகையாளர் கேதன் திரோட்கர் தாக்கல் செய்த மனு விவரம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி அளித்த விவரப்படி, 2008 மார்ச்சில், 455 கோடி ரூபாயாக இருந்த, பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன், 2014 மார்ச்சில், 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளில், ... |
| கவர்னர் ரோசய்யா காலடியில் காந்தி, மோடி படம்: சர்ச்சை அழைப்பிதழால் விழாவை புறக்கணித்தார் Posted: குண்டூர்: மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழில், தமிழக கவர்னர் ரோசய்யாவின் ஆளுயர படத்திற்கு கீழ், தேசத் தந்தை மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் சிறிய படங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்தார் ரோசய்யா.ஆதரவாளர்: ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வியாபாரி கண்டசாலா பங்காரு பாபு. தற்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக இருந்த போது, அவரின் ஆதரவாளராக இருந்த பாபு, சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு ... |
| மேட்டூர் அணையில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர்: பட்ஜெட்டில் புதிய திட்டம் வெளியாகிறது? Posted: சென்னை மாநகர மக்கள் தொகையை கணக் கில் கொண்டு, நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க, மேட்டூர் அணையில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.தலைநகர் சென்னை யின் மக்கள்தொகை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மற்றொருபுறம், மாநகர் எல்லை விரிவடைந்து வருவதால், மக்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது. இதற்கேற்ப, மாநகர மக்களின் குடிநீர் தேவையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலை: தற்போது, சென்னை மாநகருக்கு, பூண்டி, வீராணம், ... |
| பத்திரப்பதிவு அலுவலக பணிகளை தனியாரிடம் விட யோசனை: முறைகேடுகள், தாமதத்தை தவிர்க்க அரசு புது திட்டம் Posted: பாஸ்போர்ட் அலுவலகங்களில் உள்ளது போன்று, சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட சில பணிகளை ஒப்பந்த முறையில், தனியாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை, பதிவுத்துறை துவங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடுகளை ஒழிக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும், பிரபல ஐ.டி., நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற, அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சொத்து பரிமாற்றம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்வது கட்டாயம். இந்த ஆவணங்களை முத்திரைத்தீர்வை மற்றும் கட்டணம் வசூலித்துக் கொண்டு பதிவு செய்வது பத்திரப் ... |
| பிற்போக்கு எண்ணங்களை உதறுங்கள்: தூதர்களுக்கு மோடி வேண்டுகோள் Posted: புதுடில்லி: ''பிற்போக்கு எண்ணங்களை உதறி விட்டு, உலக அரங்கில், இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர பாடுபட வேண்டும்,'' என, உலக நாடுகளுக்கான இந்தியாவின் தூதர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.டில்லியில், 'வளர்ச்சி சார்ந்த விவேகமான செயல்பாடு' என்ற தலைப்பில், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின், நான்கு நாள் மாநாட்டை மோடி துவங்கி வைத்து பேசினார்.அப்போது, அவர் கூறியதாவது: சர்வதேச அமைதி மற்றும் வளத்திற்கு எதிராக, புதிய நடிகர்கள் உருவாகியுள்ளனர்; புதிய அச்சுறுத்தல்களும் எழுந்துள்ளன. அத்துடன், மிகப் பெரிய சவாலாக உள்ள பருவநிலை ... |
| 'பயோ மெட்ரிக்'கால் கூடுதல் நேரம் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்: ஆய்வில் தகவல் Posted: புதுடில்லி: 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையால், மத்திய அரசு ஊழியர்கள், வழக்கத்திற்கு மாறாக, 20 நிமிடங்கள் கூடுதலாக பணி செய்வதாகவும், இதன் மூலம், அரசுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதாகவும், மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதைத் தவிக்க, ஊழியர்களின் வருகைப் பதிவானது பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த முறையில், ஊழியர்களின் விரல் ரேகை பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு விடுவதால், அவர்கள் அலுவலகத்திற்கு வரும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 08,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |