Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லிபியாவில் தற்கொலை தாக்குதல்: 45 பேர் பலி

Posted: 20 Feb 2015 12:31 PM PST

லிபியாவில், கப்பா நகரில் வெள்ளிக்கிழமை, கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பிவந்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்.

இளைஞர்களை தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும்: ஆளுநர் ரோசய்யா

Posted: 20 Feb 2015 12:28 PM PST

இளைஞர்களை தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 604 கோயில் குளங்கள் புனரமைப்பு

Posted: 20 Feb 2015 12:25 PM PST

தமிழகத்தில் இதுவரை 604 கோயில் குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

"மாவட்டத் தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு 50 குளிர்சாதன பேருந்துகள்'

Posted: 20 Feb 2015 12:23 PM PST

மாவட்டத் தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு 50 குளிர்சாதன பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சூரிய மின்சக்தி கொள்முதலுக்கு விரைவில் ஒப்பந்தம்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 20 Feb 2015 12:22 PM PST

சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுடன் மின் சக்தி கொள்முதல் ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுவை ஒழிக்க விழிப்புணர்வு பாத யாத்திரை: விஎச்பி மூத்த தலைவர் வேதாந்தம் பேட்டி

Posted: 20 Feb 2015 12:21 PM PST

தமிழகத்தில் மதுவை ஒழிக்க கன்னியாகுமரி முதல் சென்னை வரை பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பாத யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக விசுவ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Posted: 20 Feb 2015 12:20 PM PST

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அவை உரிமை மீறல் குழு விவாதம்

Posted: 20 Feb 2015 12:19 PM PST

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக, அவையின் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்ட பிரச்னை அந்தக் குழுவால் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது.

விபத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் சாவு

Posted: 20 Feb 2015 12:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், அரசுப் பேருந்தும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் திருச்சி மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினர் உயிரிழந்தார்.

மர்மக் காய்ச்சல்: பள்ளி மாணவி சாவு

Posted: 20 Feb 2015 12:15 PM PST

ஆலங்குடி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மாநகரக் காவல் கூடுதல் ஆணையராக ரவிக்குமார் நியமனம்

Posted: 20 Feb 2015 12:14 PM PST

சென்னை மாநகர சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக வி.ஏ.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

Posted: 20 Feb 2015 12:14 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

தாமதமின்றி நிலப் பட்டா வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை

Posted: 20 Feb 2015 12:13 PM PST

நிலவுடைமைப் பதிவேடுகளை முறைப்படுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் தாமதமின்றி பட்டா வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

கெளரவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 20 Feb 2015 12:12 PM PST

கெளரவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவதற்கான தேவை எழவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்ய மார்ச் 5-இல் அமித் ஷா சென்னை வருகை

Posted: 20 Feb 2015 12:11 PM PST

தமிழக பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா வரும் மார்ச் 5-ஆம் தேதி சென்னை வர உள்ளார்.

கோயில் நிலத்தில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றம்

Posted: 20 Feb 2015 12:09 PM PST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே 50 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த இறால் பண்ணைகளை இந்து சமய அறநிலையத் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

Posted: 20 Feb 2015 12:09 PM PST

சீர்காழியை அடுத்த மடவாமேடு கிராமத்தை சேர்ந்தவர் கு. சதீஷ் (23). இவரது அண்ணன் கார்த்திக் (28) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அ. பிரேமதாஷ் ஆகிய மூன்று பேரும் வியாழக்கிழமை இரவு மடவாமேடு பகுதியில்

பாபநாசம் அருகே அரசுப் பேருந்து-கார் மோதல்: 9 பேர் காயம்பாபநாசம்

Posted: 20 Feb 2015 12:09 PM PST

பாபநாசம் அருகே அரசுப் பேருந்தும் காரும் வியாழக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

2016-ல் தமிழகத்திற்கு நல்ல நேரம்: ஸ்டாலின்

Posted: 20 Feb 2015 12:08 PM PST

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு நல்ல நேரம் வருகிறது என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திருமண நிகழ்ச்சிகளில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட ஸ்டாலி

காவல் துணைகண்காணிப்பாளருக்கு பிடி ஆணை

Posted: 20 Feb 2015 12:08 PM PST

மதுரை காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.

மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல்: 4 பேர் கைது

Posted: 20 Feb 2015 12:08 PM PST

திருவாரூர் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸாரைத் தாக்கி 4 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சூழலியல் சிந்தனையை கொண்டது தமிழ் மரபு

Posted: 20 Feb 2015 12:07 PM PST

விவசாயத்துடன் பறவைகளையும் சேர்த்தே வளர்த்த, சூழலியல் சிந்தனை மரபைக் கொண்டது தமிழ் மரபு என்றார் திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

Posted: 20 Feb 2015 12:07 PM PST

திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் இருவர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காக்க வேண்டிய கலை

Posted: 20 Feb 2015 12:07 PM PST

வைணவக் கோயில்களில் நடைபெறும் ஒருவகை நடனம் அரையர் ஆட்டம். இது எல்லா வைணவக் கோயில்களிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் மட்டும் நடைபெறுகிறது. இருப்பினும், இது இன்று அருகி வருகிறது.

சரியான புள்ளி விவரங்களை அலுவலர்கள் அளிக்க வேண்டும்

Posted: 20 Feb 2015 12:07 PM PST

புதுக்கோட்டையில் குளங்கள் வறண்டு கிடக்கும் போது தண்ணீர் உள்ளதாக தகவல் தந்த அலுவலரை விவசாயிகள் முற்றுகையிட்டு, சரியான புள்ளி விவரங்கலை அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அறந்தாங்கி கோயிலில் சிறப்பு பூஜை

Posted: 20 Feb 2015 12:06 PM PST

அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை, 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க...

Posted: 20 Feb 2015 12:06 PM PST

இமயம் முதல் குமரி வரையும் விரிந்து கிடக்கும் பெருநிலப்பரப்பு பல்வேறு மொழிப் பகுதிகளாகவும், நூற்றுக்கணக்கான ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்த நிலையில், பெருநிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசு - ஒரே ஆட்சிமுறை என்னும் ஆட்சியதிகாரத்திற்குள்பட்ட ஒரே நாடாக ஆக்கி, அதற்கு இந்தியா என்னும் பெயரையும் வழங்கியோர் ஆங்கிலேயர்.

இலுப்பூரில் இன்று மாநில கபடி போட்டி

Posted: 20 Feb 2015 12:06 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி (பிப். 21, 22) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்றது.

புலியின் வலி...!

Posted: 20 Feb 2015 12:06 PM PST

ஆள்கொல்லிப் புலியைக் கொல்வதில் தவறில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டாலும், கூடலூர் அருகே இரு நாள்களுக்கு முன்பு ஒரு புலி சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி, கானுயிர் ஆர்வலர்களுக்கு நிச்சயம் வேதனையளித்திருக்கும்.

நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம்

Posted: 20 Feb 2015 12:05 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மாவட்ட நுகர்வோர் அமைப்பினர் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்

Posted: 20 Feb 2015 12:05 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன், அழகுமணி (35). கட்டடக் கூலித் தொழிலாளர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2 பெண்,

முயல் வேட்டையின் போது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் காயம்

Posted: 20 Feb 2015 12:05 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மீனவேலி ஊராட்சியைச் சேர்ந்த பெரிச்சிபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவைத் தொடர்ந்து வரும் நாட்களில் காட்டுபகுதிக்குச் சென்று முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம்.

அரசுக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கு

Posted: 20 Feb 2015 12:05 PM PST

பேராவூரணி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில், தமிழறிவு 2015 சிந்தனையியல் சிறப்பு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மூலதனம் குறித்த பயிலரங்கம்

Posted: 20 Feb 2015 12:04 PM PST

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள ஞானம் வணிகவியல் கல்லூரியில் மூலதன முயற்சி, வணிக மதிப்பீடு குறித்த பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

Posted: 20 Feb 2015 12:04 PM PST

கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட ஆயரும், மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளின் மேலாளருமான ஆயர் அந்தோனிசாமி

பூண்டி புஷ்பம் கல்லூரியில் கலை விழா தொடக்கம்

Posted: 20 Feb 2015 12:04 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள ஸ்ரீ பூண்டி புஷ்பம் கல்லூரியில் "புஷ்பமாலா 2015' என்ற கலைவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முத்துப்பேட்டை தர்ஹா சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 20 Feb 2015 12:03 PM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக் தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 713-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மரத்திலிருந்து கீழே விழந்தவர் சாவு

Posted: 20 Feb 2015 12:03 PM PST

நாகப்பட்டினம் கீழையூர் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். நாகை, பிரதாமபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சுப்ரமணியன் (58). இவர்

முத்துப்பேட்டை தர்ஹா சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 20 Feb 2015 12:03 PM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக் தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 713-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூரில் நாளை 104 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Posted: 20 Feb 2015 12:02 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) மாவட்ட அதிமுக சார்பில் 104 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

அமைதி, நல்லிணக்கத்துக்காக "திருவள்ளுவர் இயக்கம்'

Posted: 20 Feb 2015 12:02 PM PST

இளைய தலைமுறையினரிடையே அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றைப் பரப்பும் நோக்குடன் "திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள்' என்ற இயக்கத்தை தில்லியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

ஆசிரியர் தம்பதி வீட்டில் திருட்டு முயற்சி

Posted: 20 Feb 2015 12:02 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே யுள்ள தகட்டூர் கடைவீதியை அடுத்த மருதூர் ஆண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சு. பாஸ்கரன் (45), தையல்நாயகி (40) இருவரும் ஆசிரியர்கள். அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பாஸ்கரன் வெள்ளிக்கிழமை ரூ. 1 லட்சம் பணம் எடுத்துள்ளார்.

அரைவைக்காக 1000 டன் நெல் திருச்சிக்கு அனுப்பிவைப்பு

Posted: 20 Feb 2015 12:02 PM PST

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து ஆயிரம் டன் சன்னரக நெல் அரைவைக்காக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

"கரும்பு ஆலைகள் காப்பீட்டுத் தொகையை அளிக்கவில்லை'

Posted: 20 Feb 2015 12:02 PM PST

சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இன்னமும் ஆலை நிர்வாகம் காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவில்லை என கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 20 Feb 2015 12:01 PM PST

கரூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 85,347 குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

கரூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் கைது

Posted: 20 Feb 2015 12:01 PM PST

கரூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை வெங்கமேடு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பெட்ரோலியத் துறை ரகசிய ஆவணங்கள் திருட்டு: தீவிரமடைகிறது விசாரணை

Posted: 20 Feb 2015 12:01 PM PST

பெட்ரோலியத் துறை ரகசிய ஆவணங்கள் உளவு பார்க்கப்பட்டு, திருடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைகிறது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிப் 22-ல் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி

Posted: 20 Feb 2015 12:01 PM PST

கரூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப் 22) ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன.

போலீஸாரை முற்றுகையிட்ட திமுகவினர்

Posted: 20 Feb 2015 12:00 PM PST

கரூரில் திமுக பிரமுகரைக் கைது செய்யச் சென்ற திருச்சி காவல் துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் வெள்ளிக்கிழமை

ஜெ. பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

Posted: 20 Feb 2015 12:00 PM PST

கரூரில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 20 Feb 2015 12:00 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற்று மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

டிரைவருக்கு கத்தி குத்து: இருவர் கைது

Posted: 20 Feb 2015 11:59 AM PST

வாங்கல் அருகே டிரைவரை கத்தியால் குத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூரைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (45). லாரி டிரைவர்.

கரூரில் இன்று ரத்த தான முகாம்

Posted: 20 Feb 2015 11:59 AM PST

கரூரில் 5,000 பேர் வரை பங்கு பெறும் ரத்த தானம் முகாம் சனிக்கிழமை (பிப். 21) நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சின்னதாராபுரம், தரகம்பட்டி,

அதிமுக சார்பில் விளையாட்டுப் போட்டி

Posted: 20 Feb 2015 11:59 AM PST

அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில், குளித்தலை ஒன்றியத்துக்கு உள்பட்ட சுய உதவிக்குழு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

நிலப் பறிப்பு வழக்குகள் தள்ளுபடி இல்லை

Posted: 20 Feb 2015 11:59 AM PST

நிலப்பறிப்பு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 20 Feb 2015 11:59 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.

குன்னம் அருகேபெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

Posted: 20 Feb 2015 11:58 AM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெள்ளிக்கிழமை நகையை பாலீஸ் போட்டுத் தருவதாகக் கூறி 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிப். 28-ல் கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 20 Feb 2015 11:58 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 65 கிராம ஊராட்சிகளில் பிப். 28-ம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.

பாரதிதாசன் பல்கலை. கல்லூரியில் ரூ.1 கோடியில் கட்டடப் பணி தொடக்கம்

Posted: 20 Feb 2015 11:57 AM PST

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்னமங்கலம் கிராமத்தில் வயல் விழா

Posted: 20 Feb 2015 11:57 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில், வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மஞ்சள் பயிருக்கான வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்ற

காடுகளில் மின் இணைப்பு எப்போது?

Posted: 20 Feb 2015 11:57 AM PST

காட்டுப் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்குவது எப்போது என்ற கேள்விக்கு தமிழக அரசு பதிலளித்தது.

வேலைவாய்ப்பு முகாம்:180 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 20 Feb 2015 11:57 AM PST

அரியலூரில் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு வியாழக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்து

வி. கைகாட்டியில் ஆபத்தான நிலையில்இருந்த கட்டடம் இடித்து அகற்றம்

Posted: 20 Feb 2015 11:57 AM PST

அரியலூர் அருகே வி. கைகாட்டியில் அரைகுறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கட்டடம் தினமணி செய்தி

ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி

Posted: 20 Feb 2015 11:56 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல்

Posted: 20 Feb 2015 11:56 AM PST

மோனோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோட்ஸே சிலைகள் எங்கும் நிறுவப்படவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 20 Feb 2015 11:55 AM PST

மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலைகள் தமிழகத்தில் எங்கும் நிறுவப்படவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

கருணாநிதி குறித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ கருத்து: பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

Posted: 20 Feb 2015 11:54 AM PST

காவிரிப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடு குறித்து, தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. கே.தமிழழகன் தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, திமுக உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படாததால் அக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னையில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கு பற்றாக்குறை

Posted: 20 Feb 2015 11:51 AM PST

சென்னையில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கு அதிகத் தேவை இருப்பதால் பற்றாக்குறை நிலவுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அரசுக்கு நிதி நெருக்கடி இல்லை

Posted: 20 Feb 2015 11:51 AM PST

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முத்துப்பேட்டை தர்கா சுவர் இடிப்பு: முதல்வர் விளக்கம்

Posted: 20 Feb 2015 11:50 AM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தர்கா சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

இளைஞர் காவல் படையை கைவிடவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 20 Feb 2015 11:48 AM PST

இளைஞர் காவல் படையை தமிழக அரசு கைவிடவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சிலுவைச்சேரி கிராம விவசாயிகள் ஆண்டுக்கு 30 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி- பி.எஸ். மீனாட்சிசுந்தரம்

Posted: 20 Feb 2015 11:39 AM PST

அரியலூர் மாவட்டம், சிலுவைச்சேரி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட நர்சரி கார்டன்கள் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

அறந்தாங்கியில் இணையதளம் மூலம் ஜாதிச் சான்றிதழ்கள்

Posted: 20 Feb 2015 11:38 AM PST

அறந்தாங்கியில் இணையதளம் மூலம் வருவாய் துறை சான்றிதழ்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

புதுகையில் அஞ்சல்தலை, நாணயக் கண்காட்சி

Posted: 20 Feb 2015 11:38 AM PST

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அனைத்து நாடுகளின் ரூபாய், நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலைகளின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செந்தூரான் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி

Posted: 20 Feb 2015 11:38 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Feb 2015 11:38 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இம்மாதம் நடத்த உத்தேசித்துள்ள வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைப்பது குற்றம்

Posted: 20 Feb 2015 11:38 AM PST

புதுக்கோட்டை நகரில் பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பது குற்றமாகக் கருதப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள்

Posted: 20 Feb 2015 11:37 AM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் பொன்னமராவதி வட்டார வள மையத்துக்குள்பட்ட ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முழு சுகாதாரம் குறித்த போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு:தொலைத்தொடர்பு ஊழியர்கள் தர்னா

Posted: 20 Feb 2015 11:37 AM PST

மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

2016-ல் தமிழகத்திற்கு நல்ல நேரம்: ஸ்டாலின்

Posted: 20 Feb 2015 11:37 AM PST

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு நல்ல நேரம் வருகிறது என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திருமண நிகழ்ச்சிகளில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியது:

தஞ்சையில் நாளை 113 ஜோடிகளுக்கு திருமணம்

Posted: 20 Feb 2015 11:36 AM PST

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி (பிப்ரவரி 24), தஞ்சாவூரில்

கல்லூரி மாணவர்களை தாக்கிய 10 பேர் கைது

Posted: 20 Feb 2015 11:36 AM PST

தஞ்சாவூர் பில்லுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கவியரசன் (17). கல்லூரி மாணவர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான மாதவன், அஜீத் ஆகியோரும் தஞ்சாவூர் அருகே காசவளநாடுபுதூர் பகுதியில் வியாழக்கிழமை பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது, இவர்களுக்கும் தென்னமநாடைச் சேர்ந்த

போலியோ, டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 20 Feb 2015 11:36 AM PST

கும்பகோணத்தில் போலியோ, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ரோட்டரி சங்கம், ஜேஆர்சி இணைந்து நடத்திய இந்த பேரணிக்கு ரோட்டரி சங்க தலைவர் ப

பிப். 27-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

Posted: 20 Feb 2015 11:36 AM PST

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:

காவல் துணை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை

Posted: 20 Feb 2015 11:35 AM PST

மதுரை காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.

சாராய வியாபாரிகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Posted: 20 Feb 2015 11:35 AM PST

காரைக்கால் பகுதி பூவம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ஆ. சண்முகம் (42) இவர் கடந்த 4-ம் தேதி காரைக்காலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானங்களை கொள்ளிடம் அடுத்த

மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல்: 4 பேர் கைது

Posted: 20 Feb 2015 11:35 AM PST

திருவாரூர் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸாரைத் தாக்கி 4 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கோபாலசமுத்திரம் - தில்லைவிளாகம் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

Posted: 20 Feb 2015 11:34 AM PST

கோபாலசமுத்திரத்தில் இருந்து தில்லைவிளாகம் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை

Posted: 20 Feb 2015 11:34 AM PST

மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்து விற்ற, மருந்துக் கடை (மெடிக்கல்ஸ்) உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

Posted: 20 Feb 2015 11:34 AM PST

சீர்காழியை அடுத்த மடவாமேடு கிராமத்தை சேர்ந்தவர் கு. சதீஷ் (23). இவரது அண்ணன் கார்த்திக் (28) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அ. பிரேமதாஷ் ஆகிய மூன்று பேரும் வியாழக்கிழமை இரவு மடவாமேடு

மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் காயம்

Posted: 20 Feb 2015 11:34 AM PST

நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் மின் பஸ் கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு முக்கியமானது: ஆட்சியர்

Posted: 20 Feb 2015 11:33 AM PST

கிராமப்புற மக்களின் சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் புதிய அரசு

Posted: 20 Feb 2015 11:33 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), பாஜக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூர்

Posted: 20 Feb 2015 11:33 AM PST

அறந்தாங்கி

Posted: 20 Feb 2015 11:33 AM PST

மோடியின் சர்ச்சைக்குரிய "கோட்' ரூ. 4.31 கோடிக்கு ஏலம்

Posted: 20 Feb 2015 11:32 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய "கோட்' ரூ. 4.31 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவுகள்

Posted: 20 Feb 2015 11:32 AM PST

மகளிருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நாடு முழுவதும் 150 பிரிவுகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்பு: தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 20 Feb 2015 11:32 AM PST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு தூர்தர்ஷன் தொடர்ந்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனு

Posted: 20 Feb 2015 11:28 AM PST

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகள் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு சிறப்பு வழக்கரைஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வலதுசாரிகளின் தாக்குதல்: மோடி அரசு மீது பிரகாஷ் காரத் புகார்

Posted: 20 Feb 2015 11:28 AM PST

பெருநிறுவனங்கள் மற்றும் ஹிந்துத்துவ சக்திகளின் நலன்களைக் காப்பதற்காக, நாட்டு மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துள்ளது மோடி அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™