ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இறப்பிலும் திருப்தியுறும் மரம்..!
- ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது
- கண்டக்டர் தான் குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னார்.
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- அனேகன் - விமர்சனம்
- போகர் 300 புத்தகம் கிடைக்குமா?
- மதன் - வந்தார்கள் வென்றார்கள்
- தன்னம்பிக்கை சூப் 4 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2
- அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்
- மண்ணில் புதைந்தும் மரணமில்லாதவர்!
- சாமி சமாச்சாரத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம்…!!
- ஒரு பொண்ணுக்கு வலை வீசினியே, எங்கேடா அவ..?
- டேய் மாப்ளே, பிசாசு பார்த்துட்டியா..? -
- பல ஃபைல்கள் பெயரை ஒரே நேரத்த்ில் மாற்றம் செய்யும் மென்பொருள்
- இரவு நேர கிரீடம்..!
- வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி
- `தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!'
- வேஸ்ட் என்று எதுவும் இல்லை!
- ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்!
- மௌனமாய் இருக்கவே விரும்புகிறேன்..!
- வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
- உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (94)
- கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!
- தொல்காப்பியத்துக்கு முன் சோழரா
- உலகத் தாய்மொழி தினம்...!!
- மீரா நாயர் பாராட்டும் திரைப்படம்
- பெரிய பெரிய ஆசைகள்
- கொழு கொழுன்னு யம்மா…யம்மா !
- ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு
- டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
- வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது:
- பேன் மாத்திரை
- மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி
- ஈகரையின் புதிய வசதிகள்!
- தாயும் தந்தையுமான கைலாசநாதர்!
- மண் மாதாவின் மார்பகங்கள் …கவிஞர் வாலி
- மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்
- ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க ‘1512’ எண் தமிழகத்தில் தொடக்கம்
| இறப்பிலும் திருப்தியுறும் மரம்..! Posted: 21 Feb 2015 10:51 AM PST - திருப்தியுடன் இறக்கும் மூங்கில் மரம் எது தெரியுமா..? - நீ நாள்தோறும் கிழித்தெறியும் நாட்காட்டிதான்..! - ====================== இ.முத்து |
| ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Posted: 21 Feb 2015 10:48 AM PST நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 31 பேர் பலியானதையடுத்து இந்த ஆண்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் ... |
| கண்டக்டர் தான் குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னார். Posted: 21 Feb 2015 10:47 AM PST டிக்கெட் பரிசோதகா்:- " ஐயா, டிக்கெட் கொடுங்க"...! பயணி:- "பஸ முன்னாடி கண்டக்டா் நிக்கறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க"!.. பரிசோதகா்:- " என்ன குசும்பா? நான் 'செக்கா்'யா, உங்க 'பயண சீட்'டை காட்டுங்க"!.. பயணி:- "கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து இருந்நேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க"! பரிசோதகா்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) " நான் கேக்கறது இந்த டிக்கெட்டைய்யா"...! பயணி:- " இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாரு"!.. பரிசோதகா்:- ... |
| Posted: 21 Feb 2015 10:45 AM PST Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| Posted: 21 Feb 2015 10:42 AM PST கதையின் கரு: ஜென்ம ஜென்மமாக வரும் காதல் பந்தம். ரொம்ப நாளைக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு மறு ஜென்ம கதை. பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கதை ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு பொருட்காட்சியின் ராட்டினம் அறுந்து விழ-அதில் அமர்ந்திருந்த அமைராவின் உயிரை காப்பாற்றுகிறார், தனுஷ். இரண்டு பேருக்கும் காதல் வருகிறது. தனுஷ், கூலி தொழிலாளி. அமைரா, போலீஸ் அதிகாரி முகேஷ் திவாரியின் மகள். இவர்கள் காதலுக்கு முகேஷ் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலர்கள் பர்மாவை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பியோட முயற்சிக்கிறார்கள். ... |
| போகர் 300 புத்தகம் கிடைக்குமா? Posted: 21 Feb 2015 10:40 AM PST போகர் 300 புத்தகம் கிடைக்குமா? நண்பர்கள் உதவி தேவை?? நன்றி செந்தில்குமார் |
| Posted: 21 Feb 2015 10:33 AM PST இணையத்தில் தற்போது உள்ள மின் நூல் பதிப்புகள் முழுமையாக இல்லை. இக்குழுவில் இருந்தால் பகிர்வு செய்யுங்கள் நண்பர்களே! |
| தன்னம்பிக்கை சூப் 4 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Posted: 21 Feb 2015 10:18 AM PST இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ... |
| கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Posted: 21 Feb 2015 10:03 AM PST 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ... |
| அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Posted: 21 Feb 2015 09:55 AM PST ஒரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று, அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம். அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா, ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் ... |
| மண்ணில் புதைந்தும் மரணமில்லாதவர்! Posted: 21 Feb 2015 09:52 AM PST தன் உடலை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள், ஒரு ஹத யோகியால் வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு பல உதாரணங்களை வரலாறு ஆதாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில், சராசரி மனிதன் செய்ய முடியாததைச் செய்து காட்டி இருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் ஒரு சிறப்பான இடம் யோகி ஹரிதாசுக்கு உண்டு. இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடநாட்டின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த யோகி. இவரால் பல நாட்கள் உணவு நீரின்றி மட்டுமல்ல, நிலத்தடியில் புதைந்திருக்கவும் முடியும். இந்த யோகியைப் ... |
| சாமி சமாச்சாரத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம்…!! Posted: 21 Feb 2015 09:37 AM PST சாமி, கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிருச்சு. ஆனா கொழந்தையே பொறக்கலை சாமி..! – பக்தா! சங்கடப்படாதே விடு..! நான் காசிக்குப் போகிறேன். அங்கு உனக்காக விளக்கேற்றி வழிபாடு நடத்தறேன். – அஞ்சு வருஷம் கழிச்சி சாமி மறுபடியும் அதே வீட்டுக்கு வந்தப்போ அஞ்சு குழந்தைகள் அழகா விளையாடிக்கிட்டு இருந்தன..! – சாமி: இந்தக் குழந்தைகளின் தந்தை எங்கே..? – மனைவி: காசிக்குப் போயிருக்கிறார்..! – சாமி: எதுக்கு..? – மனைவி: நீங்க ஏத்துன விளக்கை அணைக்க…!! – ——————————- –பாக்யராஜ் (பாக்யா இதழில்)( |
| ஒரு பொண்ணுக்கு வலை வீசினியே, எங்கேடா அவ..? Posted: 21 Feb 2015 09:27 AM PST - color=#006400]தலைவரிடம் பூங்கொத்துக்குப் பதிலா கருவேப்பிலை, கொத்துமல்லி கட்டை கொடுத்துட்டுப் போறாரே, யார் அவர்..? – காய்கறி விற்பனையாளர் சங்கத்தின் தலைவராம்..! – சி.பன்னீர்செல்வன் – —————————————— – ஆகாயம் இடிந்து விழுந்தாலும் அச்சம் என்பது எனக்கில்லைனு வீரமா தொண்டரகளிடம் பேசிக் கொண்டிருந்த தலைவர் சைலண்டாயிட்டாரே…? – சகாயம் விசாரணைக்கு வரப்போவதாக தகவல் வந்திருக்கிறதாம்..! – சி.பன்னீர்செல்வன் – —————————————— – வரும்போது ஒரு பொண்ணுக்கு வலை வீசினியே, எங்கேடா அவ..? – மீன் ... |
| டேய் மாப்ளே, பிசாசு பார்த்துட்டியா..? - Posted: 21 Feb 2015 09:27 AM PST - என்ன அந்த பயில்வான் கட்டுகட்டா பணத்தோட போறாரு..? – வம்பை விலை கொடுத்து வாங்கத்தான்..! – மூ.ஏழுமலை – - ----------------------------------------------------------------------------------------------- - எதுக்கு நம்ம தலைவர் குழந்தை மாதிரி அழுது போராட்டம் பண்றாரு..? – பால்விலை உயர்வைக் கண்டித்து புதுமையான போராட்டடமாம்..! – ஆர்.ஜெயசந்திரன் – —————————————- – ஏன் நடிகை உம்முனு இருக்கார்..? – இந்த ஆண்டில் சிறந்த நடிகைன்னு சொல்றதுக்குப் பதிலா திறந்த நடிகைன்னு கூப்பிட்டாங்களாம்..! – மூ.ஏழுமலை – —————————————— – காமராஜ் ... |
| பல ஃபைல்கள் பெயரை ஒரே நேரத்த்ில் மாற்றம் செய்யும் மென்பொருள் Posted: 21 Feb 2015 08:16 AM PST சில நேரங்களில் நாம் இணையத்த்திலிருந்து தரவிறக்கம் செய்யும் பாடல்கள் பெயருடன் அது தரவிறக்கப்பட்ட தளத்த்தின் பெயரும் இணைந்திருக்கும்.அந்த பைல்களின் பெயரில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீஇக்கலாம் எளிதாக .... [noguest]தரவிறக்க[/noguest] |
| Posted: 21 Feb 2015 07:32 AM PST - தலையணை – மனித தலைகளின் இரவு நேர கிரீடம் கௌரவ கொலைகளின் மௌன சாட்சி..! – வி.எம்.ஜெயந்தன் |
| வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Posted: 21 Feb 2015 07:29 AM PST பல நாட்கள் முன்னதாகத் தெரிந்துவிட்டால், நீண்ட நெடிய பயணத்திற்குக் கூட, எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், திடுதிப்பென்று சொன்னால், ஊர் எல்லையில் உள்ள இடத்திற்கு செல்லக் கூட, 'முடியாது… அசதியா இருக்கு; தூக்கமா வருது…' என்கிறோம். இவ்வளவு ஏன்? வீட்டில், பரணில் இருப்பதை எடுத்துத் தரச் சொல்பவர்களுக்கும், கண்ணெதிரே இருக்கும் அலமாரியில், ஓர் பொருளைத் தேடித் தரச் சொல்பவர்களுக்கும் கூட, சாக்குப் போக்குச் சொல்லி தவிர்த்து விடுகிறோம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முதல் விஷயத்தில் மனத் தயாரிப்பு ... |
| `தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!' Posted: 21 Feb 2015 07:28 AM PST 'காலையில் எழுந்ததும் தண்ணி குடிக்கிறேன், சரியா?', 'தண்ணி நிறைய குடிச்சா ரொம்ப நல்லதா?', 'சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாதா?', 'வெதுவெதுப்பான தண்ணீரா, வெந்நீரா... எது நல்லது..?' இப்படி தண்ணீர் குடிப்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் பலருக்கும். இவர்களுக்கெல்லாம் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர், ரேச்சல் ரெபேக்கா தரும் சூப்பர் டிப்ஸ்... பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை. 'எனக்குத் ... |
| Posted: 21 Feb 2015 07:21 AM PST 'மினரல் வாட்டர் பாட்டில், சாஃப்ட் டிரிங்க் பாட்டில் எல்லாம் காலியானதும் தூக்கிப் போட்டுருங்க. திரும்பவும் யூஸ் பண்ணாதீங்க'னு ஒரு பக்கமும், 'பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாதீங்க'னு இன்னொரு பக்கம் சொல்லிட்டே இருக்காங்க. அப்போ இதெல்லாத்தையும் என்னதான் பண்றதுனு நீங்க புலம்பறது தெரியுது. உங்களுக்காகவே வலைதளத்துல நிறைய ஐடியாக்கள் வலம் வந்திட்டிருக்கு. அதாவது, பிளாஸ்டிக் பாட்டில்கள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்கள்... இதெல்லாத்தையும் ரீ சைக்கிளிங் முறையில் எப்படி பயன்படுத்தலாம்னு எக்கச்சக்க ... |
| ஒவ்வொரு பெண்ணும் உங்கள் சொத்து! உருகிய ஐஸ்! Posted: 21 Feb 2015 07:18 AM PST 'மகளிர் நலம், நாட்டின் வளம்' - இதுதான், அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த 58-வது அனைத்து இந்திய மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் மாநாட்டின் (AICOG -2015, All India Congress of Obstetrics & Gynaecology) தாரக மந்திரம்! ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், மருத்துவ சங்கங்கள் பலவற்றையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஜேக்கப் குமரேசன் துவக்கி வைத்த இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். மாநாட்டின் ... |
| மௌனமாய் இருக்கவே விரும்புகிறேன்..! Posted: 21 Feb 2015 06:55 AM PST என்னவனே… உன்னால் நான் மௌனமாய் இருக்கவே விரும்புகிறேன் உந்தன் நினைவுகளுடன் ஒவ்வொரு நொடியும் பேசிக்கொண்டு…! - ==================== தாரணி.ரா |
| வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! Posted: 21 Feb 2015 05:41 AM PST 100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்.. அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்.. ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல.. வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 ... |
| உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Posted: 21 Feb 2015 05:33 AM PST காதல் திருமணங்கள் என்றாலே த்ரில்தான். அப்படி ஒரு த்ரில் திருமணம்தான், மாதேஷ் அனிதாவுடையதும்! வலுக்கட்டாயமாக இன்னொரு வருடன் மணமேடை வரை கொண்டு செல்லப்பட்ட தன் காதலியை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி தன் மனைவியாக்கியிருக்கிறார் மாதேஷ்! கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமாபுரத்தில் வசிக்கும் இந்த புதுமணத் தம்பதியை, வியப்பு கலந்த வாழ்த்துகளுடன் சந்தித்தோம். ''நீங்க கொஞ்ச நேரத்துல சாகப்போறீங்க; உங்க காதலிக்கு வேறொருத்தரோட கல்யாணம் நடக்கப் போகுது... இப்படி ஒரு சூழல்ல, என்ன பண்ணுவீங்க? ... |
| Posted: 21 Feb 2015 05:24 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! Posted: 21 Feb 2015 05:12 AM PST நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே! இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO |
| தொல்காப்பியத்துக்கு முன் சோழரா Posted: 21 Feb 2015 04:00 AM PST ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது விளக்குவீர்களா தொல்காப்பியத்துக்கு முன் சோழரா |
| Posted: 21 Feb 2015 02:45 AM PST உலக மக்கள் அனைவருக்கும் " உலகத் தாய்மொழி நாள் " நல்வாழ்த்துக்கள். ந.க துறைவன். |
| மீரா நாயர் பாராட்டும் திரைப்படம் Posted: 21 Feb 2015 02:41 AM PST - பஞ்சாபி மொழிப் படமான 'கிஸ்ஸா' (Qissa) ஆங்கில சப்-டைட்டிலுடன் பிப்ரவரி 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 'கிஸ்ஸா' என்றால் அரேபிய மொழியில் வாய்மொழி வரலாற்றையும், பண்பாட்டையும் பேசும் கதைகளைக் குறிக்கும். இப்படத்தை இயக்கி இருக்கும் அனுப் சிங் இந்திய மண்ணைச் சார்ந்தவர். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் இலக்கியத்திலும் தத்துவப் படிப்புகளிலும் பட்டம் பெற்று, பூனே திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவர் ஏற்கெனவே 'லாஸ்யா' (Lasya-The Gentle Dance) என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார். ... |
| Posted: 21 Feb 2015 02:28 AM PST - மண்ணில் வாழும் மனிதனும் சரி விண்ணில் இருக்கும் தேவனும் சரி முற்றிலும் துறந்த முனிவனும் சரி ஆசையில்லாமல் இருந்தனரா? - ஆசையில் அசை போட்டு கற்பனையில் மிதந்து காற்றினிலே கோட்டை கட்டுவார்கள் சோம்பேறிகள். - ஆசையையே ருசி பார்த்து நிஜவாழ்வில் தின்று ஏப்பமிட்டு அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்பவர்கள் உழைப்பாளிகள். - பிறந்த குழந்தை முதல் இறக்கும் மனிதன் வரை பூமி பிறந்த காலம் முதல் அது அழியும் காலம் வரை எங்கும் எப்போதும் இருப்பது ஆசை! ஆசை!! - ஆடையில்லாதவன் அரை மனிதன் ஆசை ... |
| Posted: 21 Feb 2015 01:58 AM PST - தமிழ் ரசிகர்களுக்கு கொழு கொழுவென இருக்கும் ஹீரோயின்களையே அதிகம் பிடிக்கிறதே…என்ன காரணம ? நம்ம ரசிகர்கள் ஒரு பெண்ணின் அழகைப் பாராட்டிப் பேசும் போதுகூட 'அடேங்கப்பா,செம கட்டை !' என்பார்கள். 'மூங்கில்' என்று சொல்வது இல்லை. தமிழ் நாட்டில், கோயில்களில் உள்ள பெண் சிலைகள் கூட 'கொழுக் மொழுக்' என்றுதான் இருக்கும். பசிபிக் தீவுகள் சிலவற்றில் பெண் மிகப் பருமனாக 'கும்' மென்று இருந்தால்தான் திருமணம் ஆகும். அங்கு ஒல்லிப் பெண்களை யாரும் சீண்ட மாட்டார்கள். அந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் பல்லாயிரக் ... |
| ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு Posted: 21 Feb 2015 01:53 AM PST டெல்லியில் மத்திய அமைச்சகங்களின் ரகசிய ஆவணங்கள் திருடி விற்பனை செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி 'பொறி' வைத்து சிலரை பிடித்து நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த திருட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு நாள் கோப்புகள் சிதறி கிடந்தன. அடுத்த நாள் பெட்ரோலிய அமைச்சகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய ... |
| டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம் Posted: 21 Feb 2015 01:39 AM PST டெல்லி: டெல்லியில் நேற்று அதிகாலை, ஓடும் காரில் நைஜீரிய நாட்டு பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான நைஜீரிய நாட்டு பெண் சாலையோரத்தில் மயக்க நிலையில் கிடந்தார். அவரை கண்ட டோல்கேட் ஊழியர் ஒருவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீஸார் டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கண்டனர். அதில் அப்பெண்ணை 4 பேர் சேர்ந்து, சாலையில் இறக்கி விட்டு சென்றதாக பதிவாகியுள்ளது. ... |
| வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது: Posted: 21 Feb 2015 12:45 AM PST வரதட்சணை கொடுமையாக கருதி தண்டிக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் பினிபென் என்பவருக்கும் 96-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விவாகரத்தான ஜேசுபென் என்ற பெண்ணுடன் ராகேஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட தக ராறில் ராகேஷ், பினிபென் இரு வரும் பிரிந்தனர். பெற்றோர் சமரசத்தின்பேரில், கணவரின் வீட்டிலேயே பினிபென் தங்கியிருந்தார். அங்கு பின்னர் அவர் மொட்டை மாடியில் தங்க வைக்கப்பட்டார். இதனால், ... |
| Posted: 21 Feb 2015 12:10 AM PST பேன் மாத்திரை முகநூல் /மின்னஞ்சல் மூலம் வந்தது . அந்த நடிகைக்கு பேன் தொல்லையா ? ரமணியன் |
| மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Posted: 20 Feb 2015 11:57 PM PST மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை பேசும் போது, காவிரி படுகை பகுதியில் மீத்தேன் எடுப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் சாதகப் பாதகங்களை அறிவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நிலையை அறிய விரும்புகிறேன் என்றார். இதற்கு தொழில்துறை அமைச்சர் ... |
| Posted: 20 Feb 2015 11:30 PM PST ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா |
| தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Posted: 20 Feb 2015 11:29 PM PST விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி உடனாய கைலாசநாதர் திருக்கோயில், 1300 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் தற்போது சீர்குலைந்த நிலையில் உள்ளது. எளிய பலிபீடம் முன்பாக நந்திதேவர் மேற்குமுகமாய் இறைவனை நோக்க அமைந்துள்ளார். மகான்கள், துறவிகள் தொடங்கி எளிய மக்களுக்கும் அருள் வழங்கிய கைலாசநாதர் கிழக்கு முகமாய் காட்சி தருகிறார். ஆலயம் சிதிலமடைந்திருந்தாலும் கைலாசநாதரின் அருளுக்குக் குறைவில்லை. ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், ... |
| மண் மாதாவின் மார்பகங்கள் …கவிஞர் வாலி Posted: 20 Feb 2015 10:51 PM PST - மலைகள் மண் மாதாவின் மார்பகங்கள் … இவ்வளவு பெரியதா ? என்று ஆச்சிரியப்பட வேண்டாம் எவ்வளவு மேகக் குழந்தைகள் அத்தனைக்கும் பாலுட்ட வேண்டாமா ? ====================== கவிஞர் வாலி |
| மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Posted: 20 Feb 2015 10:43 PM PST (பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம் தமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர். இதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் ... |
| ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க ‘1512’ எண் தமிழகத்தில் தொடக்கம் Posted: 20 Feb 2015 10:36 PM PST ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் '1512' என்ற எண் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ரயில்வே போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், செயின் பறிப்பு, மதுகுடித்து விட்டு சண்டை போடுதல் போன்று ரயில்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, தமிழக ரயில்வே காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டாலும், பிற மாநிலங்களில் பயணிக்கும்போது, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |