Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நாளை பதவி ஏற்பு: கெஜ்ரிவால் மந்திரி சபையில் 7 பேர் இடம் பெறுகிறார்கள்

Posted: 12 Feb 2015 10:18 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சியின் மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவாஸ் ஷெரீப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு: உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்ற வாழ்த்து

Posted: 12 Feb 2015 10:17 PM PST

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இப்போட்டிகளில் ஆசிய கண்டத்திலிருந்து முக்கிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.

காஷ்மீரில் பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி ஆட்சி: முப்தி முகமது சயீத் முதல்–மந்திரி ஆகிறார்

Posted: 12 Feb 2015 10:12 PM PST

காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 25–ந்தேதி முதல் டிசம்பர் 20–ந்தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடந்தது. டிசம்பர் 23–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் பி.டி.பி. கட்சி 28 தொகுதிகளிலும் பா.ஜனதா 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சிக்கு

ரூ.10 லட்சம் செலவில் தயாரான பிரதமர் மோடி உடையை ஏலம் விட்டு நிதி திரட்ட முடிவு

Posted: 12 Feb 2015 10:11 PM PST

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார். அப்போது பிரதமர் மோடி விலை உயர்ந்த கோட்–சூட் அணிந்து இருந்தார். அதன் விலை ரூ. 10 லட்சம் என்று தகவல் பரவியது. இது சமூக

டெல்லியில் இரவோடு இரவாக சூறையாடப்பட்ட பள்ளி: கல்வி மந்திரி ஸ்மிருதி இரானி பார்வையிடுகிறார்

Posted: 12 Feb 2015 09:43 PM PST

டெல்லியின் தெற்கு பகுதியான வசந்த் விகாரில் அமைந்துள்ள புனித குழந்தை ஆக்சீலியம் பள்ளி நேற்றிரவு சூறையாடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பள்ளியை சேர்ந்த அதிகாரிகள் பள்ளி தாளாளர் அறையின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி மலையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கம்பி வேலி அமைக்கும் பணி தொடங்கியது

Posted: 12 Feb 2015 09:34 PM PST

திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து பாதுகாப்பு வசதிக்காக திருப்பதி கோவிலை சுற்றியும், திருப்பதி மலையை சுற்றியும் கம்பி வேலி அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்தது.

குருவாயூர் கோவிலில் அதிகாரிகள்–ஊழியர்கள் மோதல்: தெய்வத்திற்கு கோபம் ஏற்பட்டுள்ளதாக தேவ பிரசன்னத்தில் தகவல்

Posted: 12 Feb 2015 09:21 PM PST

கேரளாவில் பிரசித்திப்பெற்ற கோவில்கள் முதல் சாதாரண கோவில்கள் வரை சீரமைப்பு பணிகள் செய்யவும், முக்கிய விழாக்கள் நடத்தவும் வேத பண்டிதர்கள், ஜோதிடர்கள் மூலம் சோழி உருட்டி தேவ பிரசன்னம் பார்ப்பது வழக்கம். அதன்படி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது பற்றி நேற்று முன்தினம் தேவ பிரசன்னம்

ஜோதிடம் பார்த்து கோவிலில் கைவரிசை: கொள்ளையர்கள் 2பேர் கைது

Posted: 12 Feb 2015 09:16 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜீவன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது ஒரு முதியவரும், அவர் அருகே சிறுவனும் நின்று கொண்டிருந்தனர். சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த அவர்களை போலீசார் பிடித்து

வருமானவரி ஏய்ப்பு செய்தால் 7 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Posted: 12 Feb 2015 08:42 PM PST

வருமானவரி ஏய்ப்பு நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக நடப்பு நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை 628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 56 வழக்குகள் வெளிநாட்டு வருவாய் தொடர்பானவை.

ஓசூரில் பெங்களூர்-எர்ணாகுளம் ரெயில் தடம் புரண்டு என்ஜின் தீப்பிடித்தது: 10 பேர் பலி-பலர் படுகாயம்

Posted: 12 Feb 2015 08:09 PM PST

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அதன் என்ஜின் தீப்பிடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இன்று காலை 7.00 மணியளவில் ஓசூர் பகுதியில் உள்ள அநேகல் அருகே

பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது

Posted: 12 Feb 2015 07:50 PM PST

பெங்களூரில் முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட

தரிகெரேவில் நூதன மோசடி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது

Posted: 12 Feb 2015 07:25 PM PST

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியில் நேற்று காலை 5 பேர் வீடு, வீடாக சென்று தகடு, சங்குமணி போன்ற பூஜைப்பொருட்களை விற்பனை செய்து வந்தனர். மேலும் அவர்கள், அந்த பொருட்கள் சாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்தது என்றும், அதனை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், நன்மை கிடைக்கும் என்றும் கூறினார்கள். அவர்களது

ரூ.1½ கோடி பணம் மோசடி: சமூக சேவகி தீஸ்தா செதல்வாட்டை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை

Posted: 12 Feb 2015 07:14 PM PST

கடந்த 2002-ம் குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 69 பேர் பலியானார்கள். அந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக, சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும், அவருடைய கணவர் ஜாவீது ஆனந்தும் நிதி திரட்டினர். ரூ.1

பீகாரில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: முதல்-மந்திரி மாஞ்சி அறிவிப்பு

Posted: 12 Feb 2015 06:50 PM PST

பீகாரில் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி, விவசாயத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அக்ரோ பீகார் 2015' என்ற நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், சிறிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

தீவிரவாத இயக்கங்களுக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை: இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தடுக்க முடிவு

Posted: 12 Feb 2015 03:52 PM PST

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில், அந்த நாட்டின் நிதி மந்திரி ஜேக்கப் லெவ் இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடனான இந்திய-அமெரிக்க பொருளாதார, நிதி கூட்டாளித்துவ கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அதன்பின்னர் அவரும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி குற்றச்சாட்டு தவறானது: சுதாகரன், இளவரசி வக்கீல் வாதம்

Posted: 12 Feb 2015 03:32 PM PST

சொத்து குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி குற்றச்சாட்டு தவறானது என்று கர்நாடக ஐகோர்ட்டில் சுதாகரன், இளவரசி வக்கீல் சுதந்திரம் வாதிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா தரப்பு வக்கீல்களின் வாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், மூத்த வக்கீலுமான சுதந்திரம் நேற்று 2-வது நாளாக தனது

டெல்லியில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Posted: 12 Feb 2015 02:40 PM PST

டெல்லியில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களை விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். முன்னாள் மத்திய மந்திரியும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லியில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவை சந்தித்து தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

குடியரசு தின அணிவகுப்பை ஒபாமா பார்வையிட்ட போது பறந்த மர்ம விமானம்

Posted: 12 Feb 2015 02:09 PM PST

3 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். அவர் தலைவர்களுடன் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டு கொண்டு இருந்த போது, இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம விமானம் ஒன்று பறப்பது ரேடார் மூலம் தெரியவந்தது.

அமெரிக்காவில் இந்தியர் முடமாக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 12 Feb 2015 01:49 PM PST

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாய் படேல் (வயது 57). இவரது மகன் சிராக், அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், மேடிசன் நகரில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 17 மாத குழந்தை உள்ளது. சுரேஷ் பாய் படேல், தனது பேரக் குழந்தைகயை பார்த்துக்கொள்ளவும், மகனுக்கும், மருமகளுக்கும் உதவுவதற்கும் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் கடந்த 6-ந் தேதி அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரைக் கண்டு சந்தேகித்த ஒருவர், போலீசுக்கு தொலைபேசியில் புகார்

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி

Posted: 12 Feb 2015 09:43 AM PST

வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. 'legacy contact' என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் அக்கவுண்டை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™