மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இலங்கை அதிபர் சிறிசேனா இன்று திருப்பதி வருகை: நாளை சுப்ரபாத சேவையில் தரிசனம்
- மகா சிவராத்திரி: பிரதமர் மோடி வாழ்த்து
- பட்டுவாடா செய்யாமல் 2 ஆண்டு தபால்களை மூட்டை கட்டி வீட்டில் பதுக்கிய தபால் அதிகாரி
- 10000 கோடி ரூபாயை கூடு கட்ட முடிவில்லை - 30000 கோடியை எப்படி கட்டுவீர்கள்: சுப்ரதா ராய்க்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்
- கர்நாடக போலீசாரால் தேடப்பட்ட தாதா பன்னான்ஜே ராஜாவை பொறி வைத்து பிடித்த மொராக்கோ போலீஸ்
- மேற்குவங்காளத்தில் ராணுவ முகாமில் வீரர்கள் மோதல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
- பதவி ஏற்ற 8 மாதத்தில் சந்திரபாபு நாயுடு விமான பயணச் செலவு ரூ.16 கோடி: எதிர்கட்சிகள் கண்டனம்
- நெல்லூர் அருகே லாரி மோதியதில் மேம்பால சுவர் இடிந்து தண்டாவாளத்தில் விழுந்தது: ரெயில்கள் தாமதம்
- ரெயிலில் பெர்த் ஒதுக்கி கொடுத்து சென்னை பெண்ணை கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது
- அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன்: கிரண்பேடி புலம்பல்
- மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை: அருண்ஜெட்லி ஆலோசனை
- திருப்பதியில் கல்யாண உற்சவ தரிசனத்துக்கு போலி டிக்கெட்டுடன் வந்த தந்தை, மகன் கைது
- பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி: 3 நாளில் 100 பேர் உயிரிழந்தனர்
- மத்தியபிரதேசத்தில் மலையில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
- போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு
- ஓடும் ரெயிலில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்: தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்த அதிசயம்
- போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை: சசிதரூர் விளக்கம்
- இரு நாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச ஏற்பாடு: சிறிசேனாவுடன் மோடி கூட்டாக பேட்டி
- உ.பி. மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.9 கோடி நகைகள் கொள்ளை
| இலங்கை அதிபர் சிறிசேனா இன்று திருப்பதி வருகை: நாளை சுப்ரபாத சேவையில் தரிசனம் Posted: 16 Feb 2015 11:15 PM PST இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாள் இந்திய சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பீகாரில் உள்ள புத்தகயாவுக்கு சென்றார். |
| மகா சிவராத்திரி: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 16 Feb 2015 11:08 PM PST சிவன்–பார்வதி திருமணம் நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்தர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| பட்டுவாடா செய்யாமல் 2 ஆண்டு தபால்களை மூட்டை கட்டி வீட்டில் பதுக்கிய தபால் அதிகாரி Posted: 16 Feb 2015 11:06 PM PST ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள கொல்லப்பள்ளியில் தபால் நிலையம் உள்ளது. 10 கிராமங்களைச் சேர்ந்த தபால்கள் இங்கிருந்துதான் பிரிந்து அனுப்பப்படுவது உண்டு. இங்கு தபால் அதிகாரியாக இருப்பவர் ஹரி. கடந்த சில ஆண்டுகளாக |
| Posted: 16 Feb 2015 11:05 PM PST சகாரா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தராததையடுத்து அந்நிறுவனம் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலீடு மற்றும் வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து ரூ. 30000 கோடி அளவுக்கு சகாரா நிறுவனம் முறைகேடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. |
| இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள் Posted: 16 Feb 2015 10:34 PM PST உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டது. |
| கர்நாடக போலீசாரால் தேடப்பட்ட தாதா பன்னான்ஜே ராஜாவை பொறி வைத்து பிடித்த மொராக்கோ போலீஸ் Posted: 16 Feb 2015 09:55 PM PST கர்நாடக மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கர நிழல் உலக தாதாவான பன்னான்ஜே ராஜா மொராக்கோ நாட்டு போலீஸ் விரித்த வலையில் வகையாக சிக்கினான். அம்மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்கில் தொடர்புடைய ராஜா உடுப்பியை சேர்ந்தவன். தொலைபேசி மூலமாக பெங்களூர் மற்றும் |
| மேற்குவங்காளத்தில் ராணுவ முகாமில் வீரர்கள் மோதல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Posted: 16 Feb 2015 09:54 PM PST மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் உள்ளது. இவர்கள் இந்தியா–வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று அதிகாலையில் முகாமில் தங்கி இருந்த வீரர்களுக்கு இடையே திடீர் என்று மோதல் உருவானது. வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றியதால் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். |
| பதவி ஏற்ற 8 மாதத்தில் சந்திரபாபு நாயுடு விமான பயணச் செலவு ரூ.16 கோடி: எதிர்கட்சிகள் கண்டனம் Posted: 16 Feb 2015 09:35 PM PST ஆந்திர முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவுக்கு ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் குண்டூர் வந்தார். அன்று முதல் இன்று வரை எங்கு செல்வதாக இருந்தாலும் சிறப்பு விமானத்தையே அவர் பயன்படுத்தி வருகிறார். |
| நெல்லூர் அருகே லாரி மோதியதில் மேம்பால சுவர் இடிந்து தண்டாவாளத்தில் விழுந்தது: ரெயில்கள் தாமதம் Posted: 16 Feb 2015 09:34 PM PST ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் மண்டலத்தில் உள்ளது அப்பய்யாகேட் பகுதி. இங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நிலக்கரி ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. திடீரென லாரி மேம்பால சுவரில் மோதியது. இதில் 10 அடி உயர சுவர் இடிந்து ரெயில் பாதையில் விழுந்தது. அதோடு லாரியும் கவிழ்ந்தது. |
| ரெயிலில் பெர்த் ஒதுக்கி கொடுத்து சென்னை பெண்ணை கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது Posted: 16 Feb 2015 09:34 PM PST ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்து இருந்தார். |
| அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன்: கிரண்பேடி புலம்பல் Posted: 16 Feb 2015 08:48 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் கட்சியில் புதிதாக சேர்ந்த கிரண் பேடியை பா.ஜ.க.வின் முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தியதால் தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததாக |
| மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை: அருண்ஜெட்லி ஆலோசனை Posted: 16 Feb 2015 08:46 PM PST மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி |
| திருப்பதியில் கல்யாண உற்சவ தரிசனத்துக்கு போலி டிக்கெட்டுடன் வந்த தந்தை, மகன் கைது Posted: 16 Feb 2015 08:44 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவ தரிசனம் நடந்து வருகிறது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கல்யாண உற்சவத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக, இதற்கு முன்பு பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது |
| பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி: 3 நாளில் 100 பேர் உயிரிழந்தனர் Posted: 16 Feb 2015 08:40 PM PST இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 8,423 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 585 பேர் சிகிச்சை பலனின்றி |
| மத்தியபிரதேசத்தில் மலையில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி Posted: 16 Feb 2015 08:40 PM PST மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் காலியாகாட் எனும் பகுதிக்கு நேற்று இரவு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 55 பயணிகள் இருந்தனர். மசலியாசாட் எனும் உயரமான மலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு குறுகலான வளைவில் பஸ் திரும்பியது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. |
| போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு Posted: 16 Feb 2015 08:32 PM PST கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோக்கைன் போதை மருந்துடன் மலையாள திரைப்பட இணை இயக்குனர் பிளஸ்சி சில்வஸ்டர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் மாடல் அழகி ரேஷ்மா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கொச்சி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கைதானவர்களுக்கு சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்று கொச்சி போலீசார் வி |
| ஓடும் ரெயிலில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்: தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்த அதிசயம் Posted: 16 Feb 2015 08:23 PM PST ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகருக்கு நேற்று முன்தினம் இரவு சூரத்கர் நகரில் இருந்து பார்மர் கல்கா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஹனுமன்கர் நகரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மன்னு (வயது22) என்பவர் தன் கணவர் மற்றும் தாயுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். |
| போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை: சசிதரூர் விளக்கம் Posted: 16 Feb 2015 07:39 PM PST முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டெல்லியை விட்டுச் செல்லவேண்டும் என்றால், டெல்லி போலீசின் அனுமதியை பெறவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. |
| இரு நாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச ஏற்பாடு: சிறிசேனாவுடன் மோடி கூட்டாக பேட்டி Posted: 16 Feb 2015 07:24 PM PST பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது இரு நாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பேச்சுவார்த்தை முடிந்த பின் இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி |
| உ.பி. மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.9 கோடி நகைகள் கொள்ளை Posted: 16 Feb 2015 07:21 PM PST உத்தரபிரதேச மாநிலம் ஷரண்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் நேற்று போலீஸ் சீருடையில் 2 கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து மேலும் 5 கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |