மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் மீண்டும் விசாரணை
- பத்து நாளில் 216 பேரை பலி வாங்கிய பன்றிக்காயச்சல்: 40 நாளில் 5157 பேர் பாதிப்பு
- 191-வது பிறந்த நாள்: தயானந்த சரஸ்வதிக்கு மோடி மரியாதை
- காளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மேற்சவ விழா தொடங்கியது: 5 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்
- பரோலில் கூடுதலாக 2 நாள் தங்கியதால் நடிகர் சஞ்சய்தத்தின் 10 நாள் விடுமுறை குறைப்பு
- ஆந்திராவில் தலைநகரம் அமைக்க நிலங்களை பறித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: விவசாயிகள் மிரட்டல்
- பிரதமரை சந்தித்தார் கெஜ்ரிவால்: டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக மோடி உறுதி
- கணவர் முதல் மந்திரி ஆனாலும் அரசு பதவியை துறக்காத கெஜ்ரிவாலின் மனைவி
- திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு
- குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு
- குதிரையை பார்த்து மிரண்டு ஓடிய யானை: தாக்கிய போதும் திறமையாக செயல்பட்டு யானையை கட்டிபோட்ட பாகன்
- பத்மநாபசாமி கோவிலில் ஹைடெக் பாதுகாப்பு வசதிகள்: கேரள மந்திரி தொடங்கி வைத்தார்
- சொத்து குவிப்பு வழக்கு: பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை
- டெல்லியில் மணீஷ் சிசோடியா துணை முதல்வர்: முக்கிய இலாகா கொடுக்க கெஜ்ரிவால் முடிவு
- சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி-டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
- மே.வங்க குண்டுவெடிப்பு: 5 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை - வங்கதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
- அமைதி, மத நல்லிணக்கம் பராமரிக்கப்பட வேண்டும்: கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பேச்சு
- டெல்லி இமாம் மத கட்டளையால் தோற்றேன்: கிரண் பேடி சொல்கிறார்
- டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்.எல்.ஏ.க்களின் பின்னணி தகவல்
- எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி: மத்திய அரசு பரிசீலனை
| சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் மீண்டும் விசாரணை Posted: 11 Feb 2015 11:28 PM PST காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சுனந்தாவின் மகனிடம் கடந்த 5–ந்தேதி |
| பத்து நாளில் 216 பேரை பலி வாங்கிய பன்றிக்காயச்சல்: 40 நாளில் 5157 பேர் பாதிப்பு Posted: 11 Feb 2015 11:25 PM PST மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலை ஏறி வருகிறது. கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. அந்த வகையில் பன்றிக்காயச்சல் நோய் இந்திய மக்களை காவு வாங்க தொடங்கியுள்ளது. |
| 191-வது பிறந்த நாள்: தயானந்த சரஸ்வதிக்கு மோடி மரியாதை Posted: 11 Feb 2015 11:19 PM PST ஆர்ய சமாஜம் நிறுவனர் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 191–வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''சமுதாய மறுமலர்ச்சிக்கும் கல்விக்கும் தயானந்த சுவாமிகள் ஆற்றியுள்ள |
| காளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மேற்சவ விழா தொடங்கியது: 5 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள் Posted: 11 Feb 2015 10:25 PM PST ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் விஷ்ணு சிவன் கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை முதல் இரவில் தினமும் ஒரு வாகனத்தில் சா |
| பரோலில் கூடுதலாக 2 நாள் தங்கியதால் நடிகர் சஞ்சய்தத்தின் 10 நாள் விடுமுறை குறைப்பு Posted: 11 Feb 2015 10:20 PM PST நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று புனே எரவாடா ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சஞ்சய்தத் பரோலில் மும்பை வந்தார். அவருக்கு 14 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 8–ந் தேதி அவர் ஜெயிலுக்கு திரும்பி இருக்க வேண்டும். |
| ஆந்திராவில் தலைநகரம் அமைக்க நிலங்களை பறித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: விவசாயிகள் மிரட்டல் Posted: 11 Feb 2015 10:20 PM PST ஆந்திர மாநிலத்தின் தலைநகர் குண்டூர் மாவட்டம் மங்களகிரி, துள்ளூர் பகுதிகளில் அமைகிறது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நிலத்தை கையகப்படுத்தும் பணிக்காக அதிகாரி சந்துகுரு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் குருவள்ளு என்ற கிராமத்தின் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். |
| Posted: 11 Feb 2015 10:13 PM PST டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். அதே |
| கணவர் முதல் மந்திரி ஆனாலும் அரசு பதவியை துறக்காத கெஜ்ரிவாலின் மனைவி Posted: 11 Feb 2015 10:07 PM PST கெஜ்ரிவால் என்ற சாமானிய மனிதர் டெல்லி மாநில அரியணையில் முதல்வராக கொலுவிருக்கப் போகிறார். அவர் பெற்றது சாதாரண வெற்றியல்ல. இமாலய வெற்றி. துடப்பக்கட்டையால் இரு பெரும் தேசிய கட்சிகளை துடைத்தெறிந்து வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு சாமானிய மனிதரால் இவ்வளவு பெரிய சாதனையை எப்படி சாதிக்க முடிந்தது? |
| திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு Posted: 11 Feb 2015 09:41 PM PST திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகரப் பகுதிகளிலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார்கள். |
| குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு Posted: 11 Feb 2015 09:37 PM PST குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் கோதாரியா கிராமம் உள்ளது. இங்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். கோவிலின் உள்ளே 4 அடி உயர பீடத்தில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு காவி துண்டு போர்த்தப்பட்டுள்ளது. அந்த துண்டில் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. சிலை மீது பித்தளையால் ஆன சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே |
| குதிரையை பார்த்து மிரண்டு ஓடிய யானை: தாக்கிய போதும் திறமையாக செயல்பட்டு யானையை கட்டிபோட்ட பாகன் Posted: 11 Feb 2015 08:56 PM PST திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் அருகே உள்ள விழிஞ்சம்–பூவார் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியாருக்கு சொந்தமான யானையை 2 பாகன்கள் ஆற்றில் குளிப்பாட்டுவதற்காக அழைத்துச்சென்றனர். நேற்று பகல் 2 மணி அளவில் மல்லுர் என்ற இடத்தில் அந்த யானை சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வளர்ப்பு குதிரையுடன் ஒருவர் |
| பத்மநாபசாமி கோவிலில் ஹைடெக் பாதுகாப்பு வசதிகள்: கேரள மந்திரி தொடங்கி வைத்தார் Posted: 11 Feb 2015 08:44 PM PST திருவனந்தபுரத்தில் மிகவும் பழமையான பத்மநாபசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் ரகசிய நிலவறைகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கோவிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. |
| சொத்து குவிப்பு வழக்கு: பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை Posted: 11 Feb 2015 08:24 PM PST பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002 வரை பொதுப் பணித்துறை மந்திரியாகவும், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை வேளாண்மைத்துறை மந்திரியாகவும் இருந்தார். |
| டெல்லியில் மணீஷ் சிசோடியா துணை முதல்வர்: முக்கிய இலாகா கொடுக்க கெஜ்ரிவால் முடிவு Posted: 11 Feb 2015 08:07 PM PST டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை படைத்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்– மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை மறுநாள் (சனிக் கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் |
| சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி-டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு Posted: 11 Feb 2015 07:41 PM PST சுனந்தா புஷ்கர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி தெற்கு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். சந்தேகத்துக்கு |
| மே.வங்க குண்டுவெடிப்பு: 5 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை - வங்கதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Posted: 11 Feb 2015 07:13 PM PST வங்காள தேசத்தில் 2007-ம் ஆண்டு, மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அரசு வக்கீல் ஹைதர் உசேன் கொலை செய்யப்பட்டார். இவர், ஒரு கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஷேக் |
| அமைதி, மத நல்லிணக்கம் பராமரிக்கப்பட வேண்டும்: கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பேச்சு Posted: 11 Feb 2015 07:01 PM PST டெல்லியில், இரண்டு நாட்கள் நடைபெறும் கவர்னர்கள் மாநாடு, நேற்று தொடங்கியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், 21 மாநில கவர்னர்கள், 2 துணை நிலை கவர்னர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். |
| டெல்லி இமாம் மத கட்டளையால் தோற்றேன்: கிரண் பேடி சொல்கிறார் Posted: 11 Feb 2015 06:54 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதி, பாரதீய ஜனதா சார்பில் தற்போதைய மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி ஆகும். பாதுகாப்பான தொகுதி என்பதால் இந்த தொகுதியில் கிரண் பேடி நிறுத்தப்பட்டார். |
| டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்.எல்.ஏ.க்களின் பின்னணி தகவல் Posted: 11 Feb 2015 06:46 PM PST டெல்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதி, நிதி நிலைமை, குற்ற வழக்குகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:- * 70 எம்.எல்.ஏ.க்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் |
| எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி: மத்திய அரசு பரிசீலனை Posted: 11 Feb 2015 06:36 PM PST நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்கள் பரவலாக |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |