Tamil Star |
- குழந்தைக்கு தாயான குரங்கு…. சோறூட்டி, தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!
- பெற்றோருக்கு இளைஞன் கொடுத்த சோகமான பேரதிர்ச்சி
- மறக்க முடியுமா- திக்..திக் போட்டி: அவுஸ்திரேலியாவை ஆட்டங்காண வைத்த டோனி
- உலகக்கிண்ணம் 2015: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
- குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்
- பலாப்பழத்தை சுவைப்பீர்களா? இதோ எச்சரிக்கை
- பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா
- விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு: ஏர் ஏசியா
- ஏர் ஏசியா விபத்து: கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக தகவல்
- மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் வாக்குப் பதிவு
- மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
- உபயோகப்பொருட்கள் கடைக்கு சென்றதால் கிடைத்த அதிஷ்டம்! 2-மில்லியன் டொலர்கள் லாட்டரி வெற்றி!
- ஜனாதிபதி தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்! அமெரிக்கா கோரிக்கை
| குழந்தைக்கு தாயான குரங்கு…. சோறூட்டி, தாலாட்டி வளர்க்கும் அதிசயம்! Posted: 08 Jan 2015 09:09 AM PST |
| பெற்றோருக்கு இளைஞன் கொடுத்த சோகமான பேரதிர்ச்சி Posted: 08 Jan 2015 09:07 AM PST |
| மறக்க முடியுமா- திக்..திக் போட்டி: அவுஸ்திரேலியாவை ஆட்டங்காண வைத்த டோனி Posted: 08 Jan 2015 09:00 AM PST
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற டோனியின் கடைசி நேர போராட்டம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். கடந்த 2012ம் ஆண்டு காமென்வெல்த் பேங்க் தொடர் நடைபெற்றது. இதில் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பொண்டிங், வார்னர், கிளார்க் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பொராஸ்ட் (66), ஹசி (72) ஜோடி பொறுமையாக விளையாட அணி எழுச்சி பெற்றது. இந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 270 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கம்பீர் (90) நல்ல தொடக்கம் கொடுத்தார். பின்னர் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து நடையை கட்ட நெருக்கடியில் சிக்கியது இந்திய அணி. ஒரு கட்டத்தில் கடைசி 2 ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜாவும், டோனியும் களத்தில் இருந்தனர். 49வது ஓவரை டூகர்டி வீசினார். அவர் தனது சுழலில் இருவரை மிரட்டினார். இதனை எதிர்த்து விளாசிய ஜடேஜா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிக்சர் அடிக்க முயற்சி செய்யும் போது அது நேராக பொண்டிங் கைக்கு கேட்சாக சென்றது. பின்னர் அஸ்வின் இறங்கினார். இந்த ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. கடைசி ஓவரை அஸ்வின் எதிர்கொண்டார். கிளிண்ட மைகே வீசிய முதல் பந்தை பைஃன் லெக்கில் அடிக்க முயற்சி செய்து கோட்டை விட்டார் அஸ்வின். இரண்டாது பந்தில் ஒரு ஓட்டம் தட்டிக் கொடுத்தார். 4 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மறுமுனையில் டோனி இருந்தார். களவியூகத்தை அணித்தலைவர் கிளார்க் சரிசெய்ய ஓவரின் 3வது பந்து வீசப்பட்டது. யார்க்கராக ஆஃப் திசையில் போடப்பட்ட பந்தை நேராக சிக்சராக அடித்தார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. பின்னர் அடுத்த பந்தை டாஸாக வீச அதையும் சிக்சர் நோக்கி அடித்தார் டோனி. அது கேட்சாக சென்றது. ஆனால் நடுவரால் தவறான பந்து என அறிவிக்கப்பட்டது. 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்று இருக்கும் போது பவுண்டரி அடித்து, 2 பந்துகள் மிச்சமுள்ள நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தார் டோனி. கடைசி நேரத்தில், இக்கட்டான நிலைமையில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதில் டோனி சிறந்தவர் என்பதற்கு இந்தப் போட்டியும் ஒரு சான்று.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகக்கிண்ணம் 2015: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு Posted: 08 Jan 2015 08:58 AM PST
உலகக்கிண்ண கிரிக்கெட்டுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகளில் 11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து இன்று, 15 பேர் கொண்ட தனது உலகக்கிண்ண அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை உலகக்கிண்ண தொடர்களில் ஆடிய நியூசிலாந்து அணியிலேயே இதுதான் சிறந்த அணி என்று அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இலங்கையை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்த டிரென்ட் பவுல்ட் இடம்பெற்றுள்ளார். இவர் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். மேலும் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரியும் இடம்பெற்றுள்ளார். 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி: பிரெண்டன் மெக்கல்லம் (அணித்தலைவர்), கோரி ஆன்டர்சன், டிரென்ட் பவுல்ட், கிரான்ட் எல்லியட், மார்ட்டின் குப்தில், டாம் லதாம், மிட்சேல் மெக்கிளனாகன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, லூக் ரோன்சி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன். பலமான தென் ஆப்பிரிக்க அணியில் இளம் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் இடம்பெற்றுள்ளார். சகலதுறை வீரர் ராயன் மெக்லாரன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபி ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி: ஏ.பி.டிவிலியர்ஸ் (அணித்தலைவர்), ஹஷிம் ஆம்லா, கைல் அபாட், பர்ஹான் பிஹார்டீன், குவிண்டன் டி காக், ஜே.பி.டுமினி, டு பிளேசிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், வெய்ன் பார்னெல், ஆரோன் ஃபாங்கிஸோ, வெர்னன் பிலாண்டர், ரைலி ரூசோ டேல் ஸ்டெய்ன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள் Posted: 08 Jan 2015 08:53 AM PST
குளிர்காலம் என்றாலே நமது உணவு பழக்க வழக்கங்களில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரவேண்டும். குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பசலைக் கீரை பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை பாதுகாக்கும். குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வேர்க்கடலை, இதனை வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ எடுத்துக் கொண்டால் உடலில் வெப்பம் சரியான அளவு இருப்பதுடன் புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பலாப்பழத்தை சுவைப்பீர்களா? இதோ எச்சரிக்கை Posted: 08 Jan 2015 08:49 AM PST
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன. எச்சரிக்கைகள் * பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். * இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். * பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். *எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும். * பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும். * குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது. * சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும். * மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா Posted: 08 Jan 2015 08:47 AM PST
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும். இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது. மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு: ஏர் ஏசியா Posted: 08 Jan 2015 08:44 AM PST
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் 'ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் பங்க்லான் பன் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் 20 போர் விமானங்களும், 27 கப்பல்களும் ஈடுபட்டு உள்ளன. இன்று 11வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் 5 பாகங்கள் மற்றும் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் பலியானவர்களில் சிலரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான டிடியை அளித்தது, அவர்கள் அதனை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தனர். இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏர் ஏசியா விபத்து: கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக தகவல் Posted: 08 Jan 2015 08:43 AM PST
ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக மீட்புபடையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் 'ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் பங்க்லான் பன் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் 20 போர் விமானங்களும், 27 கப்பல்களும் ஈடுபட்டு உள்ளன. இன்று 11வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. பங்க்லான் பன் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் கடல் எந்த நேரமும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் பயணிகளின் உடல்களையும், விமானத்தின் கருப்பு பெட்டியையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று ஜாவா கடல் பகுதியில் 9.8 மீட்டர் நீளம், 1.1 மீட்டர் அகலம், 0.5 மீட்டர் உயரம் கொண்ட ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் அதை மீட்க முடியவில்லை. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பது தெரியவரும் என்பதால் அதைத் தேடும் முயற்சியில் இந்தோனேஷிய மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானத்தின் கருப்பு பெட்டியின் ஆயுள் காலம் 30 நாள் மட்டுமே எனவே, அதை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் நீர்மூழ்கி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வெளியானதை உணர்ந்ததாகவும், பின்னர் அது நின்று விட்டதாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். சிக்னல் வெளியானதை தொடர்ந்து கருப்பு பெட்டி வால் பகுதி விழுந்து கிடக்கும் பகுதியில் தான் விழுந்து கிடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தேடும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் வாக்குப் பதிவு Posted: 08 Jan 2015 08:38 AM PST
மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்வின் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் காலைமுதல் வாக்குகள் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யபப்ட்ட 79 ஆயிரத்து 500 இறூகும் அதிகமான வாக்காளர்கள் 70 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ் Posted: 08 Jan 2015 08:34 AM PST
சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது. எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2ம் இணைப்பு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்று வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பிரகாரம் மக்கள் மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்து வருகின்றனர். வாக்களிப்பு 60 வீதத்தைத்தையாவது தாண்டும் என நான் நம்புகின்றேன். பெரும்பான்மையான மக்கள் சரியான சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பை எனக்கு தருவார்கள் என்று நம்புகின்றேன். எனது தேர்தல் பிரசாரம் வெற்றிலைச் சின்னத்தை நோக்கித் தான் இருந்தது என்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுடன் அதிகாரத்தையும் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்வதன் ஊடாகவே எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மட்டுமன்றி அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் இலகுவாகவும் விரைவாகவும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தீர்த்து வைப்பார் என்றும் நம்புகின்றேன். அத்துடன் எனது நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் என்பதுடன் அதில் எந்த மாற்றமும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உபயோகப்பொருட்கள் கடைக்கு சென்றதால் கிடைத்த அதிஷ்டம்! 2-மில்லியன் டொலர்கள் லாட்டரி வெற்றி! Posted: 08 Jan 2015 08:26 AM PST
கனடா-ஒரு செட் இறந்த பற்றறிகள் கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கிறிஸ்ரின் ஹவ்லி அவரது மகனிற்கு ஒரு பொம்மை வாங்கியுள்ளார். ஆனால் அதன் பற்றறிகள் பழுதடைந்து விட்டன. அதனால் அவர் அருகில் உள்ள வீட்டுப்பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்று பற்றறிகள் வாங்க சென்றார். அவரிடம் கடை சொந்காரர் சுரண்டும் ரிக்கெட் ஒன்றை கிறிஸ்மஸ் ஈவ் தினமான இன்று வாங்க போகின்றீர்களா என கேட்டதுடன் இவை அதிஷ்டமானதென தான் கேள்விப் பட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்ரினும் சரியென்று 20-டொலர்களிற்கு 200-மில்லியன் டொலர்கள் பரிசிற்கான வியக்கத்தகு சுரண்டல் சீட்டை வாங்கினார். வீட்டிற்கு சென்ற அவர் ரிக்கெட்டை சுரண்ட அவர் 2-மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகையை பெற்றார். விடுமுறை தினங்கள் வந்ததால் பரிசு தொகையை பெற திங்கள் கிழமை வரை காத்திருக்கு வேண்டி வந்தது. தான் ஒரு வீடும் காரும் வாங்கி கொண்டு மீதிப்பணத்தை தனது மகனிற்காக வைக்க போவதாக தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Jan 2015 08:23 AM PST
இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நேற்று காலை (அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி, தேர்தல் பரப்புரைகளின் போது நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக வெளியாகின்ற அறிக்கைகள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இலங்கையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயல்முறைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. தேர்தல் நம்பகமாகவும், அமைதியாகவும், இடம்பெற வேண்டும். அதற்கமைய, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனவரி 8ம் நாள் நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும், வன்முறைகளின்றியும், அச்சுறுத்தல்களின்றியும் நடத்தப்படுவதையும், வாக்கு எண்ணும் பணி நம்பகமாகவும், வெளிப்படையாகவும் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கைகளை அவரும் பார்த்திருக்கிறார். நாமும் பார்த்திருக்கிறோம். இலங்கையின் நிலைமைகளை நாம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிப்போம். வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுவதையும், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம், பொலிஸார் மற்றும் எல்லா அரசியல் கட்சிகளையும் கோருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற டோனியின் கடைசி நேர போராட்டம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். கடந்த 2012ம் ஆண்டு காமென்வெல்த் பேங்க் தொடர் நடைபெற்றது. இதில் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பொண்டிங், வார்னர், கிளார்க் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பொராஸ்ட் (66), ஹசி (72) ஜோடி பொறுமையாக விளையாட அணி எழுச்சி பெற்றது. இந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 270 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கம்பீர் (90) நல்ல தொடக்கம் கொடுத்தார். பின்னர் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து நடையை கட்ட நெருக்கடியில் சிக்கியது இந்திய அணி. ஒரு கட்டத்தில் கடைசி 2 ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜாவும், டோனியும் களத்தில் இருந்தனர். 49வது ஓவரை டூகர்டி வீசினார். அவர் தனது சுழலில் இருவரை மிரட்டினார். இதனை எதிர்த்து விளாசிய ஜடேஜா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிக்சர் அடிக்க முயற்சி செய்யும் போது அது நேராக பொண்டிங் கைக்கு கேட்சாக சென்றது. பின்னர் அஸ்வின் இறங்கினார். இந்த ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. கடைசி ஓவரை அஸ்வின் எதிர்கொண்டார். கிளிண்ட மைகே வீசிய முதல் பந்தை பைஃன் லெக்கில் அடிக்க முயற்சி செய்து கோட்டை விட்டார் அஸ்வின். இரண்டாது பந்தில் ஒரு ஓட்டம் தட்டிக் கொடுத்தார். 4 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மறுமுனையில் டோனி இருந்தார். களவியூகத்தை அணித்தலைவர் கிளார்க் சரிசெய்ய ஓவரின் 3வது பந்து வீசப்பட்டது. யார்க்கராக ஆஃப் திசையில் போடப்பட்ட பந்தை நேராக சிக்சராக அடித்தார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. பின்னர் அடுத்த பந்தை டாஸாக வீச அதையும் சிக்சர் நோக்கி அடித்தார் டோனி. அது கேட்சாக சென்றது. ஆனால் நடுவரால் தவறான பந்து என அறிவிக்கப்பட்டது. 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்று இருக்கும் போது பவுண்டரி அடித்து, 2 பந்துகள் மிச்சமுள்ள நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தார் டோனி. கடைசி நேரத்தில், இக்கட்டான நிலைமையில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதில் டோனி சிறந்தவர் என்பதற்கு இந்தப் போட்டியும் ஒரு சான்று.
உலகக்கிண்ண கிரிக்கெட்டுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகளில் 11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து இன்று, 15 பேர் கொண்ட தனது உலகக்கிண்ண அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை உலகக்கிண்ண தொடர்களில் ஆடிய நியூசிலாந்து அணியிலேயே இதுதான் சிறந்த அணி என்று அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இலங்கையை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்த டிரென்ட் பவுல்ட் இடம்பெற்றுள்ளார். இவர் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். மேலும் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரியும் இடம்பெற்றுள்ளார். 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி: பிரெண்டன் மெக்கல்லம் (அணித்தலைவர்), கோரி ஆன்டர்சன், டிரென்ட் பவுல்ட், கிரான்ட் எல்லியட், மார்ட்டின் குப்தில், டாம் லதாம், மிட்சேல் மெக்கிளனாகன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, லூக் ரோன்சி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன். பலமான தென் ஆப்பிரிக்க அணியில் இளம் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் இடம்பெற்றுள்ளார். சகலதுறை வீரர் ராயன் மெக்லாரன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபி ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி: ஏ.பி.டிவிலியர்ஸ் (அணித்தலைவர்), ஹஷிம் ஆம்லா, கைல் அபாட், பர்ஹான் பிஹார்டீன், குவிண்டன் டி காக், ஜே.பி.டுமினி, டு பிளேசிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், வெய்ன் பார்னெல், ஆரோன் ஃபாங்கிஸோ, வெர்னன் பிலாண்டர், ரைலி ரூசோ டேல் ஸ்டெய்ன்.
குளிர்காலம் என்றாலே நமது உணவு பழக்க வழக்கங்களில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரவேண்டும். குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பசலைக் கீரை பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை பாதுகாக்கும். குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வேர்க்கடலை, இதனை வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ எடுத்துக் கொண்டால் உடலில் வெப்பம் சரியான அளவு இருப்பதுடன் புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன. எச்சரிக்கைகள் * பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். * இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். * பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். *எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும். * பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும். * குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது. * சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும். * மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும். இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது. மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் 'ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் பங்க்லான் பன் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் 20 போர் விமானங்களும், 27 கப்பல்களும் ஈடுபட்டு உள்ளன. இன்று 11வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் 5 பாகங்கள் மற்றும் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் பலியானவர்களில் சிலரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான டிடியை அளித்தது, அவர்கள் அதனை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தனர். இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாக மீட்புபடையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் 'ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் பங்க்லான் பன் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் 20 போர் விமானங்களும், 27 கப்பல்களும் ஈடுபட்டு உள்ளன. இன்று 11வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. பங்க்லான் பன் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் கடல் எந்த நேரமும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் பயணிகளின் உடல்களையும், விமானத்தின் கருப்பு பெட்டியையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று ஜாவா கடல் பகுதியில் 9.8 மீட்டர் நீளம், 1.1 மீட்டர் அகலம், 0.5 மீட்டர் உயரம் கொண்ட ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் அதை மீட்க முடியவில்லை. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பது தெரியவரும் என்பதால் அதைத் தேடும் முயற்சியில் இந்தோனேஷிய மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானத்தின் கருப்பு பெட்டியின் ஆயுள் காலம் 30 நாள் மட்டுமே எனவே, அதை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் நீர்மூழ்கி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வெளியானதை உணர்ந்ததாகவும், பின்னர் அது நின்று விட்டதாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். சிக்னல் வெளியானதை தொடர்ந்து கருப்பு பெட்டி வால் பகுதி விழுந்து கிடக்கும் பகுதியில் தான் விழுந்து கிடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தேடும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்வின் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் காலைமுதல் வாக்குகள் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யபப்ட்ட 79 ஆயிரத்து 500 இறூகும் அதிகமான வாக்காளர்கள் 70 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது. எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2ம் இணைப்பு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்று வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பிரகாரம் மக்கள் மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்து வருகின்றனர். வாக்களிப்பு 60 வீதத்தைத்தையாவது தாண்டும் என நான் நம்புகின்றேன். பெரும்பான்மையான மக்கள் சரியான சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பை எனக்கு தருவார்கள் என்று நம்புகின்றேன். எனது தேர்தல் பிரசாரம் வெற்றிலைச் சின்னத்தை நோக்கித் தான் இருந்தது என்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுடன் அதிகாரத்தையும் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்வதன் ஊடாகவே எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மட்டுமன்றி அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் இலகுவாகவும் விரைவாகவும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தீர்த்து வைப்பார் என்றும் நம்புகின்றேன். அத்துடன் எனது நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் என்பதுடன் அதில் எந்த மாற்றமும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.
