Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வேலூர்

Posted: 21 Jan 2015 01:11 PM PST

மதுரை

Posted: 21 Jan 2015 01:11 PM PST

திருநெல்வேலி

Posted: 21 Jan 2015 01:10 PM PST

திருப்பூர்

Posted: 21 Jan 2015 01:10 PM PST

ஈரோடு

Posted: 21 Jan 2015 01:10 PM PST

கோவை

Posted: 21 Jan 2015 01:10 PM PST

அறந்தாங்கியில்4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 21 Jan 2015 01:09 PM PST

அறந்தாங்கியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தேசிய மக்கள்தொகை பதிவு: விடுபட்டவர்கள் புகைப்படம் எடுக்க வாய்ப்பு

Posted: 21 Jan 2015 01:09 PM PST

தேசிய மக்கள்தொகை பதிவுக்காக புகைப்படம் எடுக்க விடுபட்டவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்

Posted: 21 Jan 2015 01:09 PM PST

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விநியோகித்தார்.

பெரம்பலூரில் இன்று முதல் கலை, இலக்கியப் போட்டிகள்

Posted: 21 Jan 2015 01:09 PM PST

பெரம்பலூரில் வரும் 30-ம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்குவதையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 22) முதல் 30-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 15 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்

Posted: 21 Jan 2015 01:08 PM PST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த மீனவர்கள் 15 பேர் புதன்கிழமை காரைக்கால் வந்தனர்.

காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் காவலர் தற்கொலை: கணவர் சரண்

Posted: 21 Jan 2015 01:08 PM PST

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த பெண் காவலர் கருப்பாயி (32) கைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய கணவர் திருச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: தொழிலாளி பலி

Posted: 21 Jan 2015 01:07 PM PST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஆலையின் மேற்கூரை சேதம் அடைந்தது.

சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

Posted: 21 Jan 2015 12:31 PM PST

கோவையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

Posted: 21 Jan 2015 12:31 PM PST

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்று விரைவில் அறிவிப்பு

Posted: 21 Jan 2015 12:31 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திராவிடர் கழகத்தின் ஆதரவு யாருக்கு என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted: 21 Jan 2015 12:31 PM PST

மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்.

அறந்தாங்கி நகருக்கு வெளியே குப்பைகளை கொளுத்த வேண்டும்

Posted: 21 Jan 2015 12:31 PM PST

அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகருக்கு வெளியே கொளுத்த வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஐஓபி சார்பில் இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி

Posted: 21 Jan 2015 12:31 PM PST

புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு குறித்து 21 நாள் பயிற்சி நடைபெறுகிறது.

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 21 Jan 2015 12:30 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புதுகை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி காயம்

Posted: 21 Jan 2015 12:30 PM PST

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் காயமடைந்தார்.

புதுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

Posted: 21 Jan 2015 12:30 PM PST

புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த சித்திரைவேல் மனைவி தமிழ்ச்செல்வி (43). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து அப்பகுதியில் உள்ள மருந்து கடைக்கு நடந்து சென்றுள்ளார்.

நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்க இடம் ஆய்வு

Posted: 21 Jan 2015 12:29 PM PST

கும்பகோணத்தில் வரும் 2016-ல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவுக்காக நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் புதன்கிழமை நேரில் ஆய்வு

தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் : ஆட்சியர்

Posted: 21 Jan 2015 12:29 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

"ஒபாமவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்'

Posted: 21 Jan 2015 12:29 PM PST

அமெரிக்க அதிபர் ஓபாமா வருகையைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் ஜன. 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

வார இறுதி விளையாட்டுப் பயிற்சி :வீரர், வீராங்கனைகள் நாளை தேர்வு

Posted: 21 Jan 2015 12:28 PM PST

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் வார இறுதி விளையாட்டுப் பயிற்சி முகாமுக்கு வீரர்கள், வீராங்கனைகள் வெள்ளிக்கிழமை (ஜன.23) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சாலை விபத்தில் விற்பனைப் பிரதிநிதி சாவு

Posted: 21 Jan 2015 12:28 PM PST

திருவாரூரில் புதன்கிழமை லாரியின் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார்.

மூன்றாம் நாளில் ஒரு மனுகூட இல்லை

Posted: 21 Jan 2015 12:28 PM PST

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் 3-வது நாளான புதன்கிழமை ஒரு மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை.

ஜனவரி 23 மின் தடை

Posted: 21 Jan 2015 12:28 PM PST

பாலவிடுதி, நடுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேன்- லாரி மோதல்:ஐயப்ப பக்தர்கள் 11 பேர் காயம்

Posted: 21 Jan 2015 12:28 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேன்- லாரி மோதிக்கொண்ட விபத்தில், வேனில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

உப்பிடமங்கலம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஆய்வு

Posted: 21 Jan 2015 12:27 PM PST

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் பேரூராட்சித் துறை மூலம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகள் தரம் பிரித்து சேகரித்து வரும் பணிகளை ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆங்கில மொழி உச்சரிப்பு குறுந்தகடுகள்: அரசுப் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

Posted: 21 Jan 2015 12:27 PM PST

ஆங்கில மொழி உச்சரிப்பு தொடர்பான குறுந்தகடுகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிப். 3-ல் தைப்பூச விழா மாலை 5.30-க்கு தீர்த்தவாரி

Posted: 21 Jan 2015 12:27 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலையில் பிப். 3 ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவில், அன்று மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

சகாயத்துக்கு ஆதரவான இயக்கத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 21 Jan 2015 12:27 PM PST

கிரானைட் குவாரிகள் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள "கனிம வள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்' என்ற அமைப்புக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் இயக்கமாக தமாகா அமையும்

Posted: 21 Jan 2015 12:27 PM PST

மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் அமையும் என்றார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.

போலி ஆவணங்கள் தயாரித்து நிலமோசடி: 9 பேர் மீது வழக்கு

Posted: 21 Jan 2015 12:26 PM PST

போலி ஆவணங்கள் தயாரித்து நிலமோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 21 Jan 2015 12:26 PM PST

கரூர் ராயனூர் அண்ணா நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25). மது அருந்தும் பழக்கமுடைய இவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 21 Jan 2015 12:26 PM PST

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழர் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு: தமிழகக் கட்சிகள் வரவேற்பு

Posted: 21 Jan 2015 12:26 PM PST

தமிழர் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

2 சமையல் எரிவாயு உருளைகள் திருட்டு

Posted: 21 Jan 2015 12:26 PM PST

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகேயுள்ள பெரிய ரெங்கம்பாளையத்தைச் சேர்ந்த குப்பசாமி மனைவி முனியம்மாள் (34). இவர் கடந்த 9-ம் தேதி வீட்டு சுற்றுச்சுவருக்குள் வைத்திருந்த காலி சமையல் எரிவாயு

சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 21 Jan 2015 12:25 PM PST

கரூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. வேம்புசாமி தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.

கேட்பாரற்று கிடந்த பெட்டியால் திருச்சியில் பரபரப்பு

Posted: 21 Jan 2015 12:25 PM PST

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

குற்ற வழக்குகளில்கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜன. 28-ல் ஏலம்

Posted: 21 Jan 2015 12:25 PM PST

அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜனவரி 28-ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

ஜனவரி 22 மின் தடை

Posted: 21 Jan 2015 12:24 PM PST

கயர்லாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது

Posted: 21 Jan 2015 12:24 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஏரிக்கரையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞர் கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

11 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள்

Posted: 21 Jan 2015 12:24 PM PST

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 14,73,827 மதிப்பிலான எந்திரங்களை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார்.

அரசு அலுவலர்களை மிரட்டியதான வழக்கில் ஜே. குரு விடுதலை

Posted: 21 Jan 2015 12:23 PM PST

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு அலுவலர்களை மிரட்டியதாக மாநில வன்னியர் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. குரு மீது

மரங்களை வெட்டிய 5 பேர் மீது வழக்கு

Posted: 21 Jan 2015 12:23 PM PST

மரங்களை வெட்டிய 5 பேர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted: 21 Jan 2015 12:23 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஒதியம் வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

பெரம்பலூரில் நாளைசமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2015 12:22 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெற உள்ளது.

சாலை பாதுகாப்பு வாரவிழா:350 பேருக்கு கண் பரிசோதனை

Posted: 21 Jan 2015 12:22 PM PST

பெரம்பலூர் மாவட்ட அரசு கண் மருத்துவமனையில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தொடக்கிவைத்துப் பார்வையிட்டார்.

செட்டிக்குளத்தில் 15 டன் சின்ன வெங்காயம் ரூ. 3.23 லட்சத்துக்கு ஏலம்

Posted: 21 Jan 2015 12:22 PM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திறந்தமுறை ஏலத்தில் 15 டன் சின்ன வெங்காயம் ரூ. 3.23 லட்சத்துக்கு விற்பனையானது.

ஜன. 25-ல் குழந்தைகளுக்கு இலவச இருதய பரிசோதனை

Posted: 21 Jan 2015 12:22 PM PST

பெரம்பலூர் ரோட்டரி சங்கம் சார்பில், வரும் 25-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

குன்னம் அருகேமூதாட்டியைக் கொன்று11 பவுன் நகைகள் கொள்ளை

Posted: 21 Jan 2015 12:21 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே முதாட்டியைக் கொன்று 11 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 21 Jan 2015 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ. 34.28 கோடி நிதி: ஆட்சியர் தகவல்

Posted: 21 Jan 2015 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ. 34.28 கோடி நிதி வழங்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 21 Jan 2015 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"நேர்மையான அரசியலுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது'

Posted: 21 Jan 2015 12:18 PM PST

நேர்மையான அரசியலுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன் தெரிவித்தார்.

ஜன. 24-ல் கேபிள் டிவிஒளிபரப்பு நிறுத்தம்

Posted: 21 Jan 2015 12:18 PM PST

புதுக்கோட்டையில் ஜன. 24-ல் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு கருத்தரங்கம்

Posted: 21 Jan 2015 12:18 PM PST

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் ஜன. 25-ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

Posted: 21 Jan 2015 12:17 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் ஜன. 25-ம் தேதி நடைபெறுகிறது.

விவசாயத் தொழிலாளர்கள் மறியல்

Posted: 21 Jan 2015 12:17 PM PST

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட அகில இந்திய விவசாயத்

மரம் தலையில் விழுந்து அரிசி வியாபாரி சாவு

Posted: 21 Jan 2015 12:16 PM PST

பட்டுக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சேர்ந்த அரிசி வியாபாரி வி.எஸ். நாடிமுத்து (56). இவர் புதன்கிழமை காலை அதே பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான காலியிடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஜேசிபி

வரலாற்று ஆய்வாளர்களுக்கு மொழித்திறன் அவசியம்

Posted: 21 Jan 2015 12:16 PM PST

வரலாற்று ஆய்வாளர்கள் மொழித் திறனை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்றார் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் ஒய். சுதர்சன் ராவ்.

பூதலூர் அருகே 153 பேருக்கு நலத் திட்ட உதவி

Posted: 21 Jan 2015 12:16 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 153 பேருக்கு ரூ. 14.98 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஜனவரி 23 மின் தடை

Posted: 21 Jan 2015 12:15 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.23) மின் விநியோகம் இருக்காது.

விடுதியில் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி - மயக்கம்

Posted: 21 Jan 2015 12:15 PM PST

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் புதன்கிழமை உணவு அருந்திய செவிலிய மாணவிகள் 58 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.

ஏன் இந்த நெருக்கடி?

Posted: 21 Jan 2015 12:15 PM PST

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னைக்கு ஒரு சர்வதேச தீர்வு ஏற்படும் வாய்ப்பு நெருங்கி வருகிறது.

ஜாதி பெயரைக் கூறி இருவரை தாக்கியதாக 5 பேர் கைது

Posted: 21 Jan 2015 12:15 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அருகேயுள்ள கோவத்தக்குடி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் டி. பாஸ்கர் (36). இவர் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தனது சகோதரர்கள் பவுன்ராஜ், தர்மராஜ்

மருந்து வணிகர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

Posted: 21 Jan 2015 12:14 PM PST

பட்டுக்கோட்டையில் மருந்து வணிகர் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புத்தகங்களால் மட்டுமே முடியும்!

Posted: 21 Jan 2015 12:14 PM PST

புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதை வைத்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை.

மீனவருக்குகத்திக்குத்து: மூவர் கைது

Posted: 21 Jan 2015 12:14 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிய மூவர் புதன்கிழமை கைது

நாகையில் ஜன. 26-ல்இந்திய கம்யூனிஸ்ட்ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jan 2015 12:14 PM PST

நாகப்பட்டினத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மீத்தேன் வாயு திட்டத்தை முற்றிலும் கைவிடக் கோரி குடியரசு தினத்தில் (ஜன.26) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jan 2015 12:13 PM PST

மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகூரில் பாஜகஉறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 21 Jan 2015 12:12 PM PST

நாகப்பட்டினம், நாகூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. செல்லிடபேசியில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

சவூதியில் உள்ள 22 பேரை மீட்கக் கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

Posted: 21 Jan 2015 12:12 PM PST

சவூதி அரேபியாவில் 7 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்க வலியுறுத்தி, தரங்கம்பாடி அருகே நாகை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் 2-வது நாளாக தேமுதிக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2015 12:12 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். அருள்செல்வன் 2-வது நாளாக புதன்கிழமையும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

தணிக்கை அரசியல்!

Posted: 21 Jan 2015 12:12 PM PST

மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக இருந்த பிரபல நாட்டியத் தாரகை லீலா சாம்சனும் அவரது குழுவிலிருந்த ஒன்பது பேரும் பதவி விலகி இருக்கிறார்கள்.

சாலை விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி சாவு

Posted: 21 Jan 2015 12:12 PM PST

திருவாரூரில் புதன்கிழமை லாரியின் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார். தஞ்சாவூர் கீழராஜவீதி பகுதியைச் சேர்ந்தவர் என். ரவிசங்கர் (36), மருந்து விற்பனை பிரதிநிதி. இவர்

அவசர சட்டத்தை எதிர்த்து எல்ஐசி ஊழியர்கள் பிரசாரம்

Posted: 21 Jan 2015 12:12 PM PST

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்தும் அவசர சட்டத்தை எதிர்த்து ஊழியர்கள், முகவர்கள் மக்களிடையே ஆதரவு திரட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்:ஆதரவு யாருக்கு என்று விரைவில் அறிவிப்பு

Posted: 21 Jan 2015 12:11 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திராவிடர் கழகத்தின் ஆதரவு யாருக்கு என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

1,200 வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு

Posted: 21 Jan 2015 12:11 PM PST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 1,200 வீடுகளுக்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

முத்துமாரியம்மன் கோயிலில் தை அமாவாசை பூஜை

Posted: 21 Jan 2015 12:10 PM PST

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தை அமாவாசை பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

அம்மா சிமென்ட் விற்பனையில் புகார்களுக்கு இடம் அளிக்கக் கூடாது

Posted: 21 Jan 2015 12:10 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 கிடங்குகள் மூலம் நடைபெறும் அம்மா சிமென்ட் விற்பனையில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது. வேலை நாள்களில் மாலை 5 மணி வரை

கோவிலூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 21 Jan 2015 12:09 PM PST

செய்யாறை அடுத்த கோவிலூர் கிராமத்தில், வள்ளல் ஆர்.சி.கே.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998-2005 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பேருந்து மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு

Posted: 21 Jan 2015 12:08 PM PST

ஆரணியை அடுத்த மாமண்டூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கணேசன் (75). இவர் சைக்கிளில் எஸ்.வி.நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பனையூரிலிருந்து

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா

Posted: 21 Jan 2015 12:08 PM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமங்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ-மாணவியர் சாலை விதிகளை

மாணவர்கள் காப்பகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஆய்வு

Posted: 21 Jan 2015 12:08 PM PST

சேத்துப்பட்டை அடுத்த பத்தியாவரம் பகுதியில் உள்ள நிர்மலா ஆதரவற்றோர் காப்பகம்,புனித வளனார் அன்பு இல்லம் ஆகியவற்றில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் உமையாள் புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 21 Jan 2015 12:07 PM PST

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் செய்யாறில் புதன்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தை சார் ஆட்சியர் எம்.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்

மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவிகள்

Posted: 21 Jan 2015 12:07 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வீட்டுக்குள் புகுந்தது வேன்: இளம் பெண் சாவு; 3 பேர் படுகாயம்

Posted: 21 Jan 2015 12:06 PM PST

கலசப்பாக்கம் அருகே, சாலையோர வீட்டில் புதன்கிழமை அதிகாலை வேன் புகுந்ததில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவிகள்

Posted: 21 Jan 2015 12:04 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அடுத்தவரின் கையெழுத்தைப் பயன்படுத்தி பண மோசடி

Posted: 21 Jan 2015 12:04 PM PST

அடுத்தவரின் கையெழுத்தைப் பயன்படுத்தி பண மோசடி செய்ததாக நிதி நிறுவன ஊழியர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் டெங்கு ஒழிப்புப் பணி

Posted: 21 Jan 2015 12:04 PM PST

செய்யாறு அரசு மருத்துவமனையில் டெங்கு கூட்டு ஒட்டுமொத்த ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted: 21 Jan 2015 12:04 PM PST

திருவண்ணாமலையை அடுத்த பெரிய கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (39). இவர், அப் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்

நிலப் பிரச்னை: 4 பேரை வெட்டியவர் கைது

Posted: 21 Jan 2015 12:04 PM PST

திருவண்ணாமலையை அடுத்த பெருங்குணம் கிராமம், பட்டித் தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் சுதாகர் (23). இவருக்கும், அதே பகுதியில் உள்ள இவரது சித்தப்பா சங்கர் குடும்பத்துக்கும் இடையே அப்

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 அதிகாரிகள் தேர்வு விவகாரம்: யுபிஎஸ்சி மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Jan 2015 12:01 PM PST

தமிழகத்தில் "டிஎன்பிஎஸ்சி' குரூப் -1 அதிகாரிகள் 83 பேர் நியமிக்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விடைத்தாள்களை "யுபிஎஸ்சி' (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அணுசக்தி ஒப்பந்தம்: முட்டுக்கட்டை நீங்குகிறது? லண்டனில் இந்தியா-அமெரிக்கா பேச்சுவார்த்தை

Posted: 21 Jan 2015 11:56 AM PST

அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 25ஆம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், இரு நாடுகள் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் முட்டுக்கட்டையாக உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பாக இரு தரப்புப் பிரதிநிதிகள், லண்டனில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: நடத்தை விதிகள்-சட்டம் ஒழுங்கை கண்காணிக்க இரு பார்வையாளர்கள்

Posted: 21 Jan 2015 11:55 AM PST

ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள், சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க, அசாம், உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை: அரசுக்கு தொடர்பு இல்லை: வெங்கய்ய நாயுடு

Posted: 21 Jan 2015 11:53 AM PST

நிலக்கரிச் சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில், மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™