Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜீத்தின், என்னை அறிந்தால் வியாபாரம் துவக்கம்

Posted:

முதன்முறையாக அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இந்த பொங்கலுக்கு வௌிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் ...

இளையராஜா இசையில் பாடியது பெரிய ஆசிர்வாதம் : அமிதாப் பச்சன்

Posted:

ஷமிதாப் படத்திற்காக, இளையராஜா இசையில் பாடியது, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஷமிதாப் படத்தில் பாடியது தொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் பாத்ரூம் சிங்கர் தான். "பொதுவாக பாத்ரூமில் ஷவரைத் திறந்ததும் எனக்குள் ...

வானவில் வாழ்க்கை பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு

Posted:

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் மியூசிக்கல் ஃபிலிம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளது. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்கள் அனைத்து பாடல்களையும் பாடி நடித்துள்ளனர். ...

ஸ்ருதிஹாசன் ரூட்டில் இறங்கிய சுரேஷ்கோபியின் மகள்..!

Posted:

கமலின் மகளாக இருந்தாலும் ஆரம்பத்தில் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இசைத்துறையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஒரு இசையமைப்பாளராக தனது தனித்தன்மையை நிரூபிக்கத்தான் முதலில் முயற்சி செய்தார் ஸ்ருதிஹாசன்.. அதன் பின்னர் தான் நடிகையாக தடம் மாறினார். மலையாள 'ஆக்சன் கிங்'கான சுரேஷ்கோபியின் மகல் பாக்யாவும் இதேபோல இசையில் ...

மீண்டும் ரஞ்சித்தின் இயக்கத்தில் மோகன்லால்-ஜெயராம்..!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ரஞ்சித், பல வருடங்களுக்கு முன் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான்.. கடந்த வருடம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த, கேரள அரசாங்கத்தால் சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என பாராட்டப்பட்ட 'ஸ்பிரிட்' படத்தை இயக்கியதும் இவர்தான். தற்போது மீண்டும் ...

மரம் நடச்சொன்னதால் தொந்தரவிற்கு ஆளான மம்முட்டி..!

Posted:

வீணாக ஏன் 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்கிற பெயரில் தண்ணீரையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கிறீர்கள் என்று அதற்கு மாற்றாக 'மை ட்ரீ சேலஞ்ச்' என்கிற பெயரில் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக' மரக்கன்றை நட்டுவைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார் மெகாஸ்டார் மம்முட்டி.. ...

குருவுக்கு மரியாதை செய்யும் தேவிஸ்ரீபிரசாத்

Posted:

இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை கற்றுக் கொண்டது மறைந்த மாண்டலின் இசைக் கலைஞர் ஸ்ரீனிவாசிடம். தற்போது தன் குருவை போற்றும் வகையில் குருஅர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை நடத்துகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு இசை கற்றுக் கொடுத்தது எனது குரு மாண்டலின் ஸ்ரீனிவாசன் சார். இது பலருக்கு தெரியாது. 5 வயது முதல் பிளஸ்-2 படிக்கும் ...

தோனி கதையை படமாக்க 20 கோடி சன்மானம்

Posted:

பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களை பற்றி சினிமா எடுப்பது புதிய டிரண்டாக உருவாகி இருக்கிறது. ஓட்டப் பந்தைய வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரை பற்றி எடுத்த படங்கள் வெற்றி பெறவே மற்றவர்களும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தங்கள் கதையை படமாக எடுக்க ...

கார்டூன் நெட் ஒர்க்கில் பேட்மேன் அனிமேஷன் தொடர்!

Posted:

சிறுவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று பேட்மேன் தொடர். இதுவரை கார்டூன் வடிவில் ஒளிபரப்பாகி வந்த பேட்மேன் தொடர் கார்டூன் நெட்ஒர்க் சேனலில் அனிமேஷன் தொடராக ஒளிப்பாகிறது. வருகிற 15ந் தேதி பொங்கல் முதல் காலை 11.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் இது ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.

ஒவ்வொரு ...

தமிழில் ரீமேக் ஆகிறது தெலுங்கு ரன் ராஜா ரன்

Posted:

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான படம் ரன் ராஜா ரன். எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஹீரோ. சீரத் கபூர் ஹீரோயின். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருந்தார், சுஜீத் இயக்கி இருந்தார்.

ஹீரோ சர்வானந்த் ஒரு காய்கறி வியாபாரியின் மகன். அவர் யாரைக் காதலித்தாலும் அது தோல்வியில்தான் முடியும். கடைசியாக ...

சூப்பர்ஸ்டாராகவே நடிக்கிறார் மோகன்லால்..!

Posted:

தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனரான டி.ராஜீவ்நாத் என்பவர் இயக்கும் 'ரசம்' என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் அதுவும் சூப்பர்ஸ்டாராகவே நடித்திருக்கிறார் மோகன்லால். பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படம் சமயல் கலையை மையப்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் ராஜீவ்நாத்தின் ...

திலீப் படம் மூலமாக மலையாளத்தில் நுழையும் ஈராஸ் நிறுவனம்..!

Posted:

இந்தியில் மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல். தமிழில் ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய 'கோச்சடையான்' படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் மலையாளத்திலும் முதன்முதலாக தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் ...

'லிங்கா' பிரச்சனை...பொங்கலன்று 600 திரையரங்குகள் மூடல்...?

Posted:

'லிங்கா' பட நஷ்டம் தொடர்பான பிரச்சனையில் ரஜினிகாந்த் தலையிடக் கோரி வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தற்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 'லிங்கா' பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவில்லை என்றால் வரும் பொங்கலன்று 'லிங்கா' படம் திரையிடப்பட்ட சுமார் 600 திரையரங்குகள், ஒரு நாள் அடைப்பு செய்ய ...

முதல் காதலைச் சொல்லும் பையன்

Posted:

ஒத்தவீடு படத்தை இயக்கிய சினிமா மக்கள் தொடர்பாளர் பாலு மலர்வண்ணன் இயக்கும் அடுத்த படம் பையன். பைசல்கான், ராகவி என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பசங்க சிவகுமார், எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.ராகுல் இசை அமைக்கிறார். சாய்சூரஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ...

திரைப்படம் ஆகும் நாவல்

Posted:

அசகாய திறமை கொண்ட மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் "பிளேம் இட் ஆன் டெஸ்டினி". இந்த நாவலில் உள்ள ஷர்மிளா, லீலா, நந்திதா, ஷஹான் மற்றும் மது உள்ளிட்ட 5 பெண்களின் குணாதிசயங்களை மையமாகக்கொண்டு படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படம், அந்த நாவலை படித்ததற்ற்கான திருப்தியை தரும் என்று நாவலாசிரியர் சூர்ர்னியா ...

லிங்கா விவகாரம் : விநியோகஸ்தர்களின் போராட்டம் துவங்கியது

Posted:

லி்ங்கா பட இழப்பு தொடர்பாக, பட விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதப்போராட்டம் துவங்கியுள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தை வாங்கி திரையிட்ட தங்களுக்கு, பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் ...

பெங்களூரை கண்டுகொள்ளாத நடிகர், நடிகைகள்

Posted:

மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் இயக்கிய இந்தப் படத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பாலி, பார்வதி நடித்திருந்தனர். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். இதில் ஆர்யா, சமந்தா, சித்தார்த், நித்யா மேனன் நடிப்பதாக இருந்தது. தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர் ...

கவலையை மறக்க வைத்த பேய்: ஜீ.பி.பிரகாஷ் நெகிழ்ச்சி

Posted:

ஜீ.வி.பிரகாஷ் அறிமுகமாகும் டார்லிங் படம் வருகிற பொங்கல் அன்று திடீரென்று வெளியாகிறது. அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் வாபஸ் ஆனதால் அந்த சைக்கிள் கேப்பில் புகுந்து விட்டது டார்லிங். அதனால் படத்தின் புரமோசனையும் வேகமாக ஆரம்பித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது: சினிமாவில் நடிக்கிற ஆசையே எனக்கு ...

பாலத்தின் ஒற்றுமையுடன் இரண்டு படங்கள்

Posted:

ஹாலிவுட் டிடெக்டிவ் படமான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்திலும் மற்றும் பாலிவுட்டில் உருவாகி வரும் பையோம்கேஷ் பக்ஷி படத்தின் போஸ்டர்களில், பாலம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தின் போஸ்டரில், டவர் பிரிட்ஜ் பாலமும், டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில், ஹவுரா பாலமும் இடம்பெற்றுள்ளது.

டோலி கி டோலி படத்தில் ரியல் கேரக்டரில் சோனம் கபூர்

Posted:

டோலி கி டோலி படத்தில், சோனம் கபூர், அவருக்கே உரித்தான மற்றும் ரியலான கேரக்டரில் நடித்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, படத்தின் 70 சதவீத காட்சிகளில், சோனம் கபூர் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சிகள், மக்கள் நெருக்கடி மிகுந்த மும்பை, நாசிக், போர், புனே, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™