மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2500 நகரங்களில் இலவச அதிவேக வை-பை சேவை-பி.எஸ்.என்.எல் திட்டம்
- 60 சதவீத வாடிக்கையாளர்கள் கால்சென்டர் ஊழியர்கள்-மும்பையில் கைதான போதை மருந்து வியாபாரிகள் தகவல்
- உ.பி.யில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி-அகிலேஷ் திட்டம்
- திருச்சூர் அருகே பணம் பறிக்க பஞ்சாயத்து தலைவர் பேரனை கடத்திய 5 வாலிபர்கள் கைது
- சந்திரபாபு நாயுடு ஏற்பாடு: யோகா கற்கும் ஆந்திர மந்திரிகள்
- லோக்பால் சட்டத்துக்காக தனியாக போராடுவேன்: அன்னா ஹசாரே பேட்டி
- கேரளாவில் நாகமுத்து தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி: பெண் உள்பட 5 பேர் கைது
- நடிகர் சுரேஷ்கோபி பா.ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல்
- பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச முக கவசம்
- கம்பெனிகளின் வருவாயை சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கணக்கிட்டது தவறு: ஜெயலலிதா வக்கீல்
- ஐரோப்பிய நாடுகளில் இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை: மத்திய மந்திரி தகவல்
- மோடியை பாராட்டி பேசியதால் சர்ச்சை: ஜனார்த்தன திவிவேதி மீது ஒழுங்கு நடவடிக்கை?
- குடியரசு தினவிழா: ஒபாமா 25-ந் தேதி காலை டெல்லி வருகிறார்- சுற்றுப்பயண விவரம் அறிவிப்பு
- கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை: முன்னாள் நிர்வாகிகள் வரவேற்பு
- டெல்லியில் பா.ஜனதா தலைவர் வருண்காந்தி சசிதரூரை சந்தித்தார்
- பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது சமூகத்துக்கு செய்யும் துரோகம்: பிரதமர் மோடி ஆவேசம்
- மராட்டியம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்: புலனாய்வு துறை எச்சரிக்கை
- நிதி மந்திரி மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் 27-ந்தேதி முழுஅடைப்பு: பாரதீய ஜனதா அழைப்பு
- ஒபாமா வருகையின்போது தாக்குதல் நடைபெறும் என போனில் மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது
- டெல்லி தேர்தலில் பா.ஜனதாவுக்கு நேரடி போட்டி ஆம் ஆத்மி தான்-காங்கிரஸ் அல்ல: அமித் ஷா
| 2500 நகரங்களில் இலவச அதிவேக வை-பை சேவை-பி.எஸ்.என்.எல் திட்டம் Posted: 22 Jan 2015 11:05 PM PST ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏர்போர்ட், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் தனியார் நெட்வொர்க்குகள் இலவச வை-பை சேவையை வழங்கி வருவதை போல, 2500 நகரங்களில் இச்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை குறிப்பிட்ட நேரம் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்துவதற்கு நியாயமான கட்டணம் விதிக்கப்படும். |
| 60 சதவீத வாடிக்கையாளர்கள் கால்சென்டர் ஊழியர்கள்-மும்பையில் கைதான போதை மருந்து வியாபாரிகள் தகவல் Posted: 22 Jan 2015 11:00 PM PST மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் போதை மருந்து விற்று வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை தானே மாவட்டத்தில் உள்ள மும்புரா நகரில் அல்தாப் ஆருண் (32) என்ற போதை மருந்து வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் இன்று சையது சிக்கந்தர் (21), முகமது ஜாகித் (23) என்ற இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15,000 ரூபாய் |
| உ.பி.யில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி-அகிலேஷ் திட்டம் Posted: 22 Jan 2015 10:59 PM PST உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 'சிறப்பு காவல் அதிகாரி'களுக்கான பயிற்சி அளிக்கும் 'தேவதைகள்' என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்படி, உத்திரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள 1,170 பள்ளிகளில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களில் ஒரு வகுப்பிற்கு 2 அல்லது 3 பேர் வீதம் 70,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு 'சக்தி வாய்ந்த தேவதைகள்' எனும் தற்காப்புக்கலை பயிற்சி கொடுக்கப்பட்டு 'சிறப்பு |
| திருச்சூர் அருகே பணம் பறிக்க பஞ்சாயத்து தலைவர் பேரனை கடத்திய 5 வாலிபர்கள் கைது Posted: 22 Jan 2015 10:02 PM PST திருச்சூரை அடுத்த அரிப்பூர் பஞ்சாயத்து தலைவர் ஆண்டனி. இவரது மகன் டிக்டோ. இவரது 6 வயது குழந்தை நஸ்வின். அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20–ந்தேதி பள்ளிக்கு சென்ற நஸ்வினை காரில் வந்த கும்பல் கடத்தி சென்றனர். இதுபற்றி பஞ்சாயத்து தலைவர் ஆண்டனி, திருச்சூர் புறநகர் போலீசில் புகார் |
| சந்திரபாபு நாயுடு ஏற்பாடு: யோகா கற்கும் ஆந்திர மந்திரிகள் Posted: 22 Jan 2015 09:57 PM PST ஆந்திராவில் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் யோகா கற்க உள்ளனர். கோவை ஈஷா பவுண்டேசன் நிறுவனமும், யோகா குருவுமான ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் ஐதராபாத் சென்றார். ஆந்திர முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், மந்திரிகள், எம்.எல்.ஏக்களுக்கு யோகா பயிற்சி அளிக்குப்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஜக்கி வாசுதேவ் ஐதராபாத் வந்து மந்திரிகளுக்கு யோகா |
| லோக்பால் சட்டத்துக்காக தனியாக போராடுவேன்: அன்னா ஹசாரே பேட்டி Posted: 22 Jan 2015 09:07 PM PST இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராடி வருகிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் சட்டத்தைக்கொண்டு வர அவர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். நாடெங்கும் அவர் போராட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு கிடைத்ததால், மத்திய அரசு லோக்பால் சட்டத்தைக்கொண்டு வந்தது. |
| கேரளாவில் நாகமுத்து தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி: பெண் உள்பட 5 பேர் கைது Posted: 22 Jan 2015 08:43 PM PST திருச்சூரை அடுத்த நெருவாமூடு பகுதியை சேர்ந்தவர் சுபின். இவர் திருச்சூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், குமரி மாவட்டம் குளப்புரத்தை சேர்ந்த யமுனா என்ற பெண் தன்னிடம் நாகமுத்து இருப்பதாக கூறினார். அதனை வாங்கினால் வீட்டில் ஐஸ்வரியம் ஏற்படும் என்றும், விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். |
| நடிகர் சுரேஷ்கோபி பா.ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல் Posted: 22 Jan 2015 08:41 PM PST மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஐ' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதை கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் முரளிதரன் உறுதிப |
| பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச முக கவசம் Posted: 22 Jan 2015 08:25 PM PST ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு தெலுங்கானாவில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் |
| கம்பெனிகளின் வருவாயை சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கணக்கிட்டது தவறு: ஜெயலலிதா வக்கீல் Posted: 22 Jan 2015 08:03 PM PST பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12-வது நாள் விசாரணை தனி |
| ஐரோப்பிய நாடுகளில் இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை: மத்திய மந்திரி தகவல் Posted: 22 Jan 2015 07:38 PM PST பாகற்காய் உள்பட 4 இந்திய காய்கறிகளுக்கும், மாம்பழத்துக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதனால், இவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றமதி செய்ய முடியவில்லை. |
| மோடியை பாராட்டி பேசியதால் சர்ச்சை: ஜனார்த்தன திவிவேதி மீது ஒழுங்கு நடவடிக்கை? Posted: 22 Jan 2015 07:26 PM PST காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜனார்த்தன திவிவேதி, இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். |
| குடியரசு தினவிழா: ஒபாமா 25-ந் தேதி காலை டெல்லி வருகிறார்- சுற்றுப்பயண விவரம் அறிவிப்பு Posted: 22 Jan 2015 04:27 PM PST குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 25-ந்தேதி காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் நாளை |
| கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை: முன்னாள் நிர்வாகிகள் வரவேற்பு Posted: 22 Jan 2015 04:09 PM PST இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட என்.சீனிவாசனுக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளதற்கு முன்னாள் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் |
| டெல்லியில் பா.ஜனதா தலைவர் வருண்காந்தி சசிதரூரை சந்தித்தார் Posted: 22 Jan 2015 03:42 PM PST பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி நேற்று முன்தினம் மாலையில் டெல்லி லோகி எஸ்டேட்டில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். சசிதரூரை சந்தித்தது பற்றி நிருபர்கள் வருண்காந்தியிடம் கேட்டதற்கு அவர் பதில் ஏதும் அளிக்காமல் சென்று விட்டார். |
| பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது சமூகத்துக்கு செய்யும் துரோகம்: பிரதமர் மோடி ஆவேசம் Posted: 22 Jan 2015 02:28 PM PST பெண் சிசுவை கருவிலேயே கொல்லும் பாவம், சமூகத்துக்கு செய்யும் துரோகம் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பெண் குழந்தைகளை காப்பாற்றவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும், 'மகளை காப்போம்; மகளுக்கு கற்பிப்போம்' என்னும் புதிய பிரசார |
| மராட்டியம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்: புலனாய்வு துறை எச்சரிக்கை Posted: 22 Jan 2015 01:42 PM PST மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் வருகிற 28-ந்தேதிக்குள் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. |
| நிதி மந்திரி மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் 27-ந்தேதி முழுஅடைப்பு: பாரதீய ஜனதா அழைப்பு Posted: 22 Jan 2015 12:36 PM PST மதுபான பார் ஊழல் வழக்கில் சிக்கிய கேரள நிதி மந்திரி கே.எம்.மாணி பதவி விலகக் கோரி, கேரளாவில் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. |
| ஒபாமா வருகையின்போது தாக்குதல் நடைபெறும் என போனில் மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது Posted: 22 Jan 2015 12:19 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி அவருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. |
| டெல்லி தேர்தலில் பா.ஜனதாவுக்கு நேரடி போட்டி ஆம் ஆத்மி தான்-காங்கிரஸ் அல்ல: அமித் ஷா Posted: 22 Jan 2015 08:51 AM PST டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கும் முக்கிய எதிரியான ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி என்றும், காங்கிரஸ் கட்சி போட்டியில் இல்லை என்றும் அமித் ஷா கூறினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |