Tamil Star |
- ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும்: ரணில்
- என்னைக் கொலை செய்ய காத்திருக்கின்றார்கள்: ஹிருணிகா
- எட்டு பேர்களிற்கு உயிர் பரிசு கொடுக்கும் 14-வயது கமரனின் கிறிஸ்மஸ் அற்புதம்!
- விமானத்தை சுட்டுவீழ்த்தி ஜோர்டான் விமானி சிறைபிடிப்பு! IS தீவிரவாதிகளுக்கு ஐ.நா. கண்டனம்!
| ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும்: ரணில் Posted: 26 Dec 2014 06:36 PM PST
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனது நல்ல நண்பர், கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் கடமையாற்றியுள்ளார். அவரை ஓய்வூறுத்தி அதிக வேலைப்பளுவிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு என்னைச்சாரும். அமைச்சரவையில் 70 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற அதிகாரங்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் ராஜபக்ச அதிகாரம் பரவியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒருவர் ராஜபக்ச அரசாங்கத்தையும் மற்றுமொருவர் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்து போட்டியிடுகின்றனர். ராஜபக்ச அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து பக்கங்கள் செய்தவை பற்றியும், 100 பக்கங்களில் செய்யப் போவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிடாது, சுய விமர்சனம் ஒன்றையே செய்துள்ளது. நாட்டில் தொழில் வாய்ப்பு இல்லையாம், போதைப் பொருள் பயன்பாடு தலைவிரித்தாடுகின்றதாம். அதுசரி இந்த நாட்டை கடந்த எட்டு ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள்? நாமா அல்லது ராஜபக்ஸ குடும்பத்தினரா? இளைஞர் யுவதிகள் ரிலோட் ஒன்றை போடக் கூட பணம் இல்லாமல் இருக்கின்றார்கள். உடுப்பு வாங்கவோ அல்லது காலணிகளை வாங்கவோ பணம் இல்லை. நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்போம். ராஜபக்ச ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| என்னைக் கொலை செய்ய காத்திருக்கின்றார்கள்: ஹிருணிகா Posted: 26 Dec 2014 06:34 PM PST
தம்மைக் கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது தந்தையின் உடலுக்குள் 43 துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன. போதைப் பொருள் வர்த்தகர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக உலவித் திரிகின்றனர். எனது எதிரிகள் என் மீது அசிட் வீசவும் கொலை செய்யவும் காத்திருக்கின்றார்கள். எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி நிற்பதே இதற்கான காரணமாகும். தந்தையின் உடல் தீயில் சங்கமித்த தினத்தில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி மூலம் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என கோருகின்றார். நீர் ஓர் பெண் பிள்ளை தானே என கேட்டார். தந்தையின் கொலை குறித்த வழக்கு விசாரணைக்கு செல்லும் போது அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, என்னை வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஜனாதிபதியின் மகனுக்கு ஒரு நீதியும், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகளுக்கு ஒரு நீதியும், கிராமத்தில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது. அதற்காகவே நாம் நாட்டில் மைத்திரி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென கோருகின்றோம் என ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எட்டு பேர்களிற்கு உயிர் பரிசு கொடுக்கும் 14-வயது கமரனின் கிறிஸ்மஸ் அற்புதம்! Posted: 26 Dec 2014 06:29 PM PST
கனடா- ஒட்டாவாவைச் சேர்ந்த மார்க் மற்றும் ஹெதர் மக்கினன் குடும்பத்தினருக்கு இந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சி, சந்தோசம் ஆகியவற்றிலிருந்து மிக தொலைவான ஒரு கிறிஸ்மஸ் ஆகும். இவர்களின் 14-வயது மகன் கமரனின் உயிர் ஆதரவு இயந்திரங்களை அகற்றி இதயத்தை திருகும் முடிவை கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இருப்பினும் துயரத்திலும் ஒரு நிறைவாக மற்றவர்களிற்கு வாழ்க்கை பரிசை கொடுக்க ஆசீர்வதிக்கப்பட்டான். இது அனைவருக்கும் நம்ப முடியாத ஒரு பேரிடியாக அமைந்தது என கமரனின் பெரிய அத்தை கூறினார். ஆனால் கமரனின் பெற்றோர் மற்றவர்களிற்கு உதவ விரும்பினார்கள். கமரனும் அதையே விரும்பியிருப்பான் என தெரிவித்தனர். இது கமரனின் கிறிஸ்மஸ் அற்புதங்கள் ஆகும். ஏனெனில் அவன் உயிர் பரிசை கொடுக்கின்றான். மூளைக்குருதி நாள நெளிவு நோய் காரணமாக கமரன் கடந்த திங்கள்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் ஆதரவு கருவிகளுடன் புதன்கிழமை வரை வைக்கப்பட்டிருந்தான். இந்நிலை முடிவிற்கு வரவேண்டிய கட்டத்தில் கமரனின் பெற்றோர் தமது மகனின் எட்டு உறுப்புக்களை உறுப்புகளிற்காக ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகளிற்கு தானம் செய்ய முடிவு செய்தனர். கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் மாலை 6.40-மணியளவில் குடும்பத்தினர் சூழ நின்ற நிலையில் கமரனின் உயிர் பிரிந்தது. மரணச்சடங்கு செலவினங்களில் குடும்பத்தினருக்கு உதவவும் தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தவும் நெருங்கிய நண்பர்கள் இருவர் நிதி சேர்க்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 4,500 கனடியர்கள் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனரெனவும் இவர்களில் ஒன்ராறியோவில் மட்டும் 1,500-பேர்கள் உள்ளனரெனவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானத்தை சுட்டுவீழ்த்தி ஜோர்டான் விமானி சிறைபிடிப்பு! IS தீவிரவாதிகளுக்கு ஐ.நா. கண்டனம்! Posted: 26 Dec 2014 06:22 PM PST
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கூட்டுப்படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க கூட்டுப்படையைச் சேர்ந்த ஜோர்டான் நாட்டு போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அப்போது விமானத்தில் இருந்து விமானி குதித்து உயிர்பிழைத்தார். அவரை தீவிரவாதிகள் சிறைபிடித்து பிணை கைதியாக வைத்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், 'இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடத்தப்பட்ட விமானியை கடத்தல் காரர்கள் சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி நடத்த வேண்டும்' என்று தெரிவித்தார். இதற்கிடையே ஜோர்டான் விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், அந்த விமானம் விபத்தில் சிக்கியபோது விமானி கடத்தப்பட்டு உள்ளார். இதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. அமெரிக்க கூட்டுப்படை விமானியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச்சென்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


தம்மைக் கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது தந்தையின் உடலுக்குள் 43 துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன. போதைப் பொருள் வர்த்தகர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக உலவித் திரிகின்றனர். எனது எதிரிகள் என் மீது அசிட் வீசவும் கொலை செய்யவும் காத்திருக்கின்றார்கள். எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி நிற்பதே இதற்கான காரணமாகும். தந்தையின் உடல் தீயில் சங்கமித்த தினத்தில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி மூலம் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என கோருகின்றார். நீர் ஓர் பெண் பிள்ளை தானே என கேட்டார். தந்தையின் கொலை குறித்த வழக்கு விசாரணைக்கு செல்லும் போது அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, என்னை வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஜனாதிபதியின் மகனுக்கு ஒரு நீதியும், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகளுக்கு ஒரு நீதியும், கிராமத்தில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது. அதற்காகவே நாம் நாட்டில் மைத்திரி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென கோருகின்றோம் என ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கனடா- ஒட்டாவாவைச் சேர்ந்த மார்க் மற்றும் ஹெதர் மக்கினன் குடும்பத்தினருக்கு இந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சி, சந்தோசம் ஆகியவற்றிலிருந்து மிக தொலைவான ஒரு கிறிஸ்மஸ் ஆகும். இவர்களின் 14-வயது மகன் கமரனின் உயிர் ஆதரவு இயந்திரங்களை அகற்றி இதயத்தை திருகும் முடிவை கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இருப்பினும் துயரத்திலும் ஒரு நிறைவாக மற்றவர்களிற்கு வாழ்க்கை பரிசை கொடுக்க ஆசீர்வதிக்கப்பட்டான். இது அனைவருக்கும் நம்ப முடியாத ஒரு பேரிடியாக அமைந்தது என கமரனின் பெரிய அத்தை கூறினார். ஆனால் கமரனின் பெற்றோர் மற்றவர்களிற்கு உதவ விரும்பினார்கள். கமரனும் அதையே விரும்பியிருப்பான் என தெரிவித்தனர். இது கமரனின் கிறிஸ்மஸ் அற்புதங்கள் ஆகும். ஏனெனில் அவன் உயிர் பரிசை கொடுக்கின்றான். மூளைக்குருதி நாள நெளிவு நோய் காரணமாக கமரன் கடந்த திங்கள்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் ஆதரவு கருவிகளுடன் புதன்கிழமை வரை வைக்கப்பட்டிருந்தான். இந்நிலை முடிவிற்கு வரவேண்டிய கட்டத்தில் கமரனின் பெற்றோர் தமது மகனின் எட்டு உறுப்புக்களை உறுப்புகளிற்காக ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகளிற்கு தானம் செய்ய முடிவு செய்தனர். கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் மாலை 6.40-மணியளவில் குடும்பத்தினர் சூழ நின்ற நிலையில் கமரனின் உயிர் பிரிந்தது. மரணச்சடங்கு செலவினங்களில் குடும்பத்தினருக்கு உதவவும் தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தவும் நெருங்கிய நண்பர்கள் இருவர் நிதி சேர்க்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 4,500 கனடியர்கள் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனரெனவும் இவர்களில் ஒன்ராறியோவில் மட்டும் 1,500-பேர்கள் உள்ளனரெனவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கூட்டுப்படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க கூட்டுப்படையைச் சேர்ந்த ஜோர்டான் நாட்டு போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அப்போது விமானத்தில் இருந்து விமானி குதித்து உயிர்பிழைத்தார். அவரை தீவிரவாதிகள் சிறைபிடித்து பிணை கைதியாக வைத்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், 'இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடத்தப்பட்ட விமானியை கடத்தல் காரர்கள் சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி நடத்த வேண்டும்' என்று தெரிவித்தார். இதற்கிடையே ஜோர்டான் விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், அந்த விமானம் விபத்தில் சிக்கியபோது விமானி கடத்தப்பட்டு உள்ளார். இதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. அமெரிக்க கூட்டுப்படை விமானியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச்சென்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.