Tamil Star |
- போர் முடிவுக்கு வந்ததன் பலன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன: மகிந்த
- நல்லாட்சி இருந்தால் எதற்கு வீதி முழுவதும் கட்அவுட்டுகள்? மைத்திரிபால கேள்வி
- குடிவரவு முதலீட்டாளர்களை புதிய செயலாக்க ஆய்வின் கீழ் கண்டறியும் முயற்சியில் கனடா
- எண்ணை விலை குறைந்தாலும், சமஷ்டி அரசின் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்படும் – பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்
| போர் முடிவுக்கு வந்ததன் பலன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன: மகிந்த Posted: 18 Dec 2014 07:17 AM PST
போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பிரதிபலன்களை ஏற்கபனவே மக்களுக்கு வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் தேவைகளை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம் அவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்தும் வழங்க கடமைப்பட்டுள்ளது. உலர் வலய மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க தெதுருஓயா திட்டத்தை ஆரம்பித்து நிறைவு செய்துள்ளதாகவும் ஏனைய பணிகளை முடித்த பின்னர் மக்களுக்கான தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நல்லாட்சி இருந்தால் எதற்கு வீதி முழுவதும் கட்அவுட்டுகள்? மைத்திரிபால கேள்வி Posted: 18 Dec 2014 07:15 AM PST
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச வளங்களை அழித்து சர்வாதிகாரமான ஊழல் ஆட்சியை ஆரம்பித்ததாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி நாட்டில் இருக்கும் நல்லாட்சி குறித்து பேசுகிறார். ஆனால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளையும் கவனத்தில் கொள்ளாது வீதிகளில் கட்அவுட்கள், தோரணங்களை அமைத்துள்ளனர். இதுவா நல்லாட்சி?. நாட்டில் தாய்மைக்கும் இருக்கும் கௌரவம் இல்லாமல் செய்யப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. அப்படியானால் நாட்டில் நல்லாட்சியும் ஜனநாயகமும் இருக்கின்றதா?, எனக்கு சுகாதார அமைச்சை வழங்கிய போதிலும் அதனை என்னால், சரியான முறையில் நடத்தி செல்ல முடியவில்லை என ஜனாதிபதி பொதுக் கூட்டங்களில் குற்றம் சுமத்துகிறார். மோசடியான அதிகாரிகளை சுகாதார அமைச்சுக்கு நியமித்து, அவர்களை மாலை வேளைகளில் அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு இரகசியமான உத்தரவுகளை வழங்கி அமைச்சின் பணிகளை சீர்குலைத்தது யார்? எனவும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குடிவரவு முதலீட்டாளர்களை புதிய செயலாக்க ஆய்வின் கீழ் கண்டறியும் முயற்சியில் கனடா Posted: 18 Dec 2014 07:11 AM PST
கனடிய அரசாங்கம் 50 செல்வந்த குடிவரவு முதலீட்டாளர்களிற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய செயலாக்க ஆய்வு திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிட உரிமையை எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ளது. புதன்கிழமை அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர் துணிகர மூலதன முன்னோடித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒரு உத்தரவாதமற்ற 2-மில்லியன் டொலர்கள் முதலீட்டை 15-வருடங்களிற்குள் செய்ய வேண்டும் என்றும் 10-மில்லியன் டொலர்கள் நிகரமதிப்பபை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் பிற அடிப்படைகளிற்கிடையில் ஆங்கிலம் அல்லது பிரான்ஸ் மொழி பேச வேண்டும் என்றும் இந்த புதிய தேவையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முன்னோடித்திட்டத்தின் மூலம் கணிசமான முதலீடு செய்பவர்களை நாங்கள் ஈர்ப்பதுடன் இவரகள் கல்வி மற்றும் நிரூபிக்கப்பட்ட வர்த்தக அனுபவம் அல்லது முதலீட்டு அனுபவம் கனடாவில் வெற்றியை அடைய அவசியம் எனவும் கனடிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர் கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி மாத இறுதியில் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் ஆரம்பிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம், புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் இரண்டையும் இவ்வருட ஆரம்பத்தில் அரசாங்கம் ஒதுக்கி தள்ளியபின்னர் வந்துள்ளது. 1986-ல் புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டம் கனடிய அரசாங்கத்திற்கு ஒரு 5-ஆண்டு காலத்தில் 800,000 டொலர்களை கொடுக்க விரும்பிய, குறைந்தது 1.6-மில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள வர்த்தகர்களிற்கு விசா வழங்கியது. மோசடிகள் காணப்பட்டதால் விமர்சகர்கள் "குடியுரிமைக்கு பணம்" என இத்திட்டத்தை விமர்சித்ததாலும் அரசாங்கம் புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டத்தை ரத்துச்செய்தது. பாரிய விண்ணப்ப பின்னடைவினால் இத்திடம் 2012-ல் நிறுத்தி வைக்கப்பட்டது. நிரந்தர விதிவிடத்திற்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான மில்லியனர்கள் பின்னடைவு விண்ணப்பங்களை நீக்கியதால் மத்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். முதலீட்டு குடிவரவாளர்களாக வரவேண்டியிருந்த 1,000-ற்கும் மேற்பட்டவர்களிற்கு எதிராக கடந்த யூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Dec 2014 07:06 AM PST
எண்ணை விலை குறைந்தாலும்,கனேடிய சமஷ்டி அரசின் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்படுமென கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறியுள்ளார். எண்ணை விலை கணிசமாகக் குறைந்தாலும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பற்றாக்குறை அகற்றப்படுமெனவும், அது குறித்த சந்தேகத்திற்கு இடமில்லையெனவும் குபெக் சிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டார். எண்ணை வளத்தில் அதிகளவு தங்கியிருக்கும் அல்பேட்டாவின் அரசு, பணியாளர்களைப் புதிதாக பணிக்குச் சேர்த்துக் கொள்வதை இடைநிறுத்தி, சிக்கன நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பிரதிபலன்களை ஏற்கபனவே மக்களுக்கு வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் தேவைகளை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம் அவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்தும் வழங்க கடமைப்பட்டுள்ளது. உலர் வலய மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க தெதுருஓயா திட்டத்தை ஆரம்பித்து நிறைவு செய்துள்ளதாகவும் ஏனைய பணிகளை முடித்த பின்னர் மக்களுக்கான தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச வளங்களை அழித்து சர்வாதிகாரமான ஊழல் ஆட்சியை ஆரம்பித்ததாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி நாட்டில் இருக்கும் நல்லாட்சி குறித்து பேசுகிறார். ஆனால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளையும் கவனத்தில் கொள்ளாது வீதிகளில் கட்அவுட்கள், தோரணங்களை அமைத்துள்ளனர். இதுவா நல்லாட்சி?. நாட்டில் தாய்மைக்கும் இருக்கும் கௌரவம் இல்லாமல் செய்யப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. அப்படியானால் நாட்டில் நல்லாட்சியும் ஜனநாயகமும் இருக்கின்றதா?, எனக்கு சுகாதார அமைச்சை வழங்கிய போதிலும் அதனை என்னால், சரியான முறையில் நடத்தி செல்ல முடியவில்லை என ஜனாதிபதி பொதுக் கூட்டங்களில் குற்றம் சுமத்துகிறார். மோசடியான அதிகாரிகளை சுகாதார அமைச்சுக்கு நியமித்து, அவர்களை மாலை வேளைகளில் அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு இரகசியமான உத்தரவுகளை வழங்கி அமைச்சின் பணிகளை சீர்குலைத்தது யார்? எனவும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடிய அரசாங்கம் 50 செல்வந்த குடிவரவு முதலீட்டாளர்களிற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய செயலாக்க ஆய்வு திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிட உரிமையை எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ளது. புதன்கிழமை அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர் துணிகர மூலதன முன்னோடித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒரு உத்தரவாதமற்ற 2-மில்லியன் டொலர்கள் முதலீட்டை 15-வருடங்களிற்குள் செய்ய வேண்டும் என்றும் 10-மில்லியன் டொலர்கள் நிகரமதிப்பபை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் பிற அடிப்படைகளிற்கிடையில் ஆங்கிலம் அல்லது பிரான்ஸ் மொழி பேச வேண்டும் என்றும் இந்த புதிய தேவையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முன்னோடித்திட்டத்தின் மூலம் கணிசமான முதலீடு செய்பவர்களை நாங்கள் ஈர்ப்பதுடன் இவரகள் கல்வி மற்றும் நிரூபிக்கப்பட்ட வர்த்தக அனுபவம் அல்லது முதலீட்டு அனுபவம் கனடாவில் வெற்றியை அடைய அவசியம் எனவும் கனடிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர் கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி மாத இறுதியில் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் ஆரம்பிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம், புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் இரண்டையும் இவ்வருட ஆரம்பத்தில் அரசாங்கம் ஒதுக்கி தள்ளியபின்னர் வந்துள்ளது. 1986-ல் புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டம் கனடிய அரசாங்கத்திற்கு ஒரு 5-ஆண்டு காலத்தில் 800,000 டொலர்களை கொடுக்க விரும்பிய, குறைந்தது 1.6-மில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள வர்த்தகர்களிற்கு விசா வழங்கியது. மோசடிகள் காணப்பட்டதால் விமர்சகர்கள் "குடியுரிமைக்கு பணம்" என இத்திட்டத்தை விமர்சித்ததாலும் அரசாங்கம் புலம்பெயர்ந்த முதலீட்டாளர் திட்டத்தை ரத்துச்செய்தது. பாரிய விண்ணப்ப பின்னடைவினால் இத்திடம் 2012-ல் நிறுத்தி வைக்கப்பட்டது. நிரந்தர விதிவிடத்திற்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான மில்லியனர்கள் பின்னடைவு விண்ணப்பங்களை நீக்கியதால் மத்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். முதலீட்டு குடிவரவாளர்களாக வரவேண்டியிருந்த 1,000-ற்கும் மேற்பட்டவர்களிற்கு எதிராக கடந்த யூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எண்ணை விலை குறைந்தாலும்,கனேடிய சமஷ்டி அரசின் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்படுமென கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறியுள்ளார். எண்ணை விலை கணிசமாகக் குறைந்தாலும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பற்றாக்குறை அகற்றப்படுமெனவும், அது குறித்த சந்தேகத்திற்கு இடமில்லையெனவும் குபெக் சிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டார். எண்ணை வளத்தில் அதிகளவு தங்கியிருக்கும் அல்பேட்டாவின் அரசு, பணியாளர்களைப் புதிதாக பணிக்குச் சேர்த்துக் கொள்வதை இடைநிறுத்தி, சிக்கன நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.