Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எங்கே செல்லும் இந்த பாதை?அலைபேசிக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்

Posted:

கோவை:இயந்திரத்தனமான உலகில், ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்க தவறிவிடுகின்றனர். பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தந்தால், பிரச்னை முடிந்து விடும் என்று நினைக்கும் பெற்றோரால் தான் அதிகப்படியான அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றது.நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, மாணவர்களுக்கு கல்லுாரி சென்ற பின்பே, சைக்கிள், இருசக்கர வாகனம் என்ற கனவு நினைவாகும். ஆனால், தற்போது பள்ளி பருவத்தை முடிக்கும் முன்பே இருசக்கர வாகனம், மொபைல்போன் மாணவர்களின் மிகப்பெரும் கனவாகிவிட்டது.இதன், ஆபத்தை ஆராயாத ...

நாடு முழுவதும் புதிதாக வங்கி கணக்கு துவக்கியவர்கள் 880 லட்சம்: மோடி அறிமுகம் செய்த 'ஜன்தன்' திட்டத்தால் சாதனை

Posted:

புதுடில்லி: ''ஜன்தன் யோஜனா என அழைக்கப்படும், பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட, வங்கி கணக்கு துவக்கும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 880 லட்சம் பேர், கணக்கு துவக்கி உள்ளனர். திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், ஜனவரி 26ம் தேதிக்குள், இந்த எண்ணிக்கை, 10 கோடியை எட்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கும், 'ஜன்தன்' திட்டம், ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி, இத்திட்டத்தின் கீழ், ...

முக்கிய ரயில் நிலையங்களில் இனி சுவையோ சுவை: பிட்சா, பர்கர், வடாபாவ் விற்க அனுமதி

Posted:

புதுடில்லி: ரயில் பயணிகளின், நாக்கு ருசிக்கு தீனி போடும் வகையில், 'காபி டே, சப்வே, பிட்சா ஹட்' உள்ளிட்ட, தனியார் உணவு நிறுவனங்களின் கடைகளை, முக்கியமான ரயில்வே நிலையங்களில் அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது, நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளுக்கு சுவையான, சூடான உணவு கிடைப்பது, அரிதாகவே உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம், முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களிலும் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவின் தரம் தொடர்பாக, தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.தனியார் ...

மோடிக்கு 'ஆப்பு' வைக்கும் ரகுராம் ராஜன்

Posted:

புதுடில்லி: ''தயாரிப்பு துறையை மட்டும் மையப்படுத்தி, 'இந்தியாவில் தயாரித்தல்' என்ற கோஷத்தை முன்வைப்பது ஆபத்தானது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.பிரதமர் மோடி, கடந்த சுதந்திர தின விழாவில், உலக உற்பத்தி பொருட்களின் மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்றார்.
இதுகுறித்து, டில்லி யில் நிகழ்ச்சி ஒன்றில், ரகுராம் ராஜன் சூசகமாக கூறியதாவது: தயாரிப்பு துறையை மட்டும் ஊக்கப்படுத்துவது ஆபத்தாக முடியும். அது, சீனாவில் சாத்தியமானது. ஆனால், இந்தியாவின் நிலை வேறு. நாம் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப ...

சீக்கிரம் ராமர் கோவில் கட்டுங்க!

Posted:

லக்னோ: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்திய மக்களின் விருப்பம்,'' என்று கூறிய உ.பி., கவர்னர் ராம் நாயக், உடனடியாக பதவி விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மக்களின் விருப்பம்:பைசாபாத், அவாத் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் பேசிய ராம் நாயக், ''எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி, இந்திய மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். ஏற்கனவே உ.பி.,யில் மத மாற்றப் பிரச்னை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, அதில் எண்ணெய் ஊற்றுவது ...

சி.பி.ஐ., இயக்குனரின் அதிகாரம் குறைக்க மத்திய அரசு தீவிரம்

Posted:

புதுடில்லி : சி.பி.ஐ., இயக்குனரின் அதிகாரத்தை, குறைப்பதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன்மூலம், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனரை, தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யின் இயக்குனர், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய, மூவர் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்.அதேநேரத்தில், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவானது, கடந்த ஆண்டு வரை, மத்திய சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அதனால், இந்தப் பிரிவை தங்கள் கட்டுப்பாட்டில் ...

மின் கட்டண உயர்வு: போராட எதிர்க்கட்சிகள் முடிவு

Posted:

சென்னை: மின் கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கை:தி.மு.க., தலைவர் கருணாநிதி:புலி வருது; புலி வருது என, சில மாதங்களாக மிரட்டிக் கொண்டிருந்த மின் கட்டண உயர்வு, உண்மையில் வந்து விட்டது. மின் கட்டண உயர்வு, மின்சார ஒழுங்கு முறை வாரியத்தின் முழு ஒப்புதலை பெறாமல், தன்னிச்சையாக, அரசால் வலியுறுத்தி, ஒழுங்கு முறை வாரியத்தில் உள்ள ஒரு சிலரால் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் ...

டில்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் சதி: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கையால் போலீசார் உஷார்

Posted:

புதுடில்லி: 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், டில்லி யில் தாக்குதல் நடத்தலாம்' என, மத்திய அரசை, அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதால், டில்லி போலீசாரும், உளவுத் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பினர், தலைநகர் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என, அமெரிக்க உளவு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், எப்போது, எந்த இடத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற, குறிப்பிடத்தக்க தகவல் இல்லை. சிறப்பு ...

இந்திய தண்டனை சட்ட பிரிவு 309 ரத்தானால் சமூக ஆர்வலர் சானு சர்மிளா உயிருக்கு ஆபத்து

Posted:

கோல்கட்டா: கடந்த, 2000ம் ஆண் டில், மணிப்பூரில் உள்ள மலோம் கிராமத்தில், பாதுகாப்புப் படையின ரால், பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத் தின் கீழ், பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர். அதனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்போது முதல், சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவர் மீது, தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுவதும், பின், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும், ...

கறுப்புப் பணம் பற்றிய திடுக் தகவல்கள்: சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை

Posted:

புதுடில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் பற்றிய திடுக்கிடும் தகவல்களை, சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது. இதில், சுவிஸ் வங்கியில், 4,000 கோடி ரூபாயும், இந்தியாவில், 15 ஆயிரம் கோடி ரூபாயும் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய, 628 பேர் பட்டியலை மத்திய அரசு ...

பூரண மதுவிலக்கு என்பது கொள்கை முடிவு: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

Posted:

சென்னை : மதுவிலக்கு வேண்டுமா, இல்லையா என்பது, கொள்கை முடிவுக்கு உட்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.வாகன விபத்து வழக்கில், தீர்ப்பாயம் விதித்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பலியானவர்களின் குடும்பத்தினர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் விபத்து நடந்ததாக, போக்குவரத்து கழகம் தரப்பில், தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது.மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக் கூடாது; 'பார்'களை ஏன் மூடக் கூடாது என, மத்திய, மாநில ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™