மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திட்ட கமிஷனுக்கு புதிய பெயர்: கொள்கை கமிஷன் என்று மாற்றம்
- இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 32 வெப்சைட்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
- நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
- ஜார்க்கண்ட்-அரியானா பா.ஜனதா முதல் – மந்திரிகளின் எளிமையான வாழ்க்கை பின்னணி
- கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி
- கல்வி பெறுவது உரிமை போல சுகாதாரம் பெறுவது அடிப்படை உரிமை: மத்திய அரசு புதிய திட்டம்
- வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்
- அரசியலில் ஒற்றுமை இருந்தால் மதப்பிரச்சனைகள் வராது: ராஜ்நாத்சிங் பேச்சு
- திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: தங்கதேரில் ஏழுமலையான் பவனி
- புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்
- பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பீகாரில் தீவிரவாதி கைதா?
- இந்து அமைப்புகளின் பேச்சுகளால் அதிருப்தி: சிறுபான்மையினரை கவர மத்திய அரசு புதிய திட்டம்
- வல்லுனர் குழு சிபாரிசு: ரெயில் கட்டணம் உயர்கிறது?
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கினால் இரு மடங்கு பதிலடி கொடுங்கள்: மனோகர் பாரிக்கர்
- உளவுத்துறை அதிர்ச்சி தகவல்: டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கல்?
- இன்று முதல் சமையல் கியாஸ் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
- உத்தரபிரதேசத்தில் பிகே திரைப்படத்துக்கு வரிவிலக்கு: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
- காஷ்மீரில் திடீர் திருப்பம்: பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறது- மக்கள் ஜனநாயக கட்சி
- டெல்லியில் வெப்ப ஹீட்டரால் மூச்சு திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு
- இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார்
| திட்ட கமிஷனுக்கு புதிய பெயர்: கொள்கை கமிஷன் என்று மாற்றம் Posted: 31 Dec 2014 11:01 PM PST பிரதமர் நரேந்திரமோடி மத்தியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். திட்டக்கமிஷனையும் மாற்றி அமைக்கப்போவதாக அவர் அறிவித்தார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டதால் திட்டக்கமிஷனையும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று மோடி கூறினார். |
| இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 32 வெப்சைட்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை Posted: 31 Dec 2014 10:59 PM PST ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வந்தன. சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இளைஞர்களுக்கு தவறான வழி காட்டுகிறது என்று புகார் எழுந்தது. |
| நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து Posted: 31 Dec 2014 10:56 PM PST பிரதமர் நரேந்திர மோடி இன்று 2015 புத்தாண்டு பிறப்பையொட்டி தனது டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ''உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் 2015–ம் ஆண்டு அற்புதமாக இருக்க வாழ்த்துக்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், |
| ஜார்க்கண்ட்-அரியானா பா.ஜனதா முதல் – மந்திரிகளின் எளிமையான வாழ்க்கை பின்னணி Posted: 31 Dec 2014 10:27 PM PST மத்தியில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஒவ்வொரு மாநிலமாக கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. ரகுபர்தாஸ் முதல் – மந்திரியாக பதவி ஏற்றார். ராஜஸ்தானில் அரசு பரம்பரையைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியாவை முதல் – மந்திரியாக நியமித்த பா.ஜனதா சமீப காலமாக எளிமையான |
| கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி Posted: 31 Dec 2014 09:39 PM PST கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலியாகினர். அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட வர்கலா கடற்கரையில் |
| கல்வி பெறுவது உரிமை போல சுகாதாரம் பெறுவது அடிப்படை உரிமை: மத்திய அரசு புதிய திட்டம் Posted: 31 Dec 2014 09:16 PM PST இந்தியாவில் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக இருப்பது போல மருத்துவ சிகிச்சை பெறுவதையும் அடிப்படை உரிமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சுகாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வர உள்ளது. |
| வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம் Posted: 31 Dec 2014 09:16 PM PST திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க இன்று கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர். ஆங்கில புத்தாண்டு– வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை ஒரே நாளில் வந்ததால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது. கட்டண சேவை, திவ்ய தரிசன டோக்கன் வழங்வகுவதை 2 நாட்களுக்கு முன்பே தேவஸ்தானம் நிறுத்திவிட்டது. தர்ம தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. |
| அரசியலில் ஒற்றுமை இருந்தால் மதப்பிரச்சனைகள் வராது: ராஜ்நாத்சிங் பேச்சு Posted: 31 Dec 2014 09:02 PM PST திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலை சிவகிரி மடத்தில் நாராயணகுருவின் நினைவிடம் உள்ளது. இங்கு நாராயணகுருவின் ஜெயந்தி விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. சிவகிரி மடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அவர் அந்த மடத்தில் உள்ள நாராயண குருவின் |
| திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: தங்கதேரில் ஏழுமலையான் பவனி Posted: 31 Dec 2014 09:01 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகியவை சேர்ந்து வந் |
| புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் Posted: 31 Dec 2014 08:59 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலையில் சுவாமி அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக தற்போது கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். மண்டல பூஜையை விட தற்போது அதிக அளவில் சபரிமலையி |
| பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பீகாரில் தீவிரவாதி கைதா? Posted: 31 Dec 2014 06:41 PM PST பெங்களூர் எம்.ஜி.ரோடு அருகே சர்ச்தெருவில் கடந்த 28-ந் தேதி குண்டுவெடித்து சிதறியது. இதில், சென்னையை சேர்ந்த பவானி என்பவர் உயிர் இழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெங்களூர் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. |
| இந்து அமைப்புகளின் பேச்சுகளால் அதிருப்தி: சிறுபான்மையினரை கவர மத்திய அரசு புதிய திட்டம் Posted: 31 Dec 2014 04:15 PM PST இந்து அமைப்புகளின் பேச்சுகளால் அதிருப்தி அடைந்துள்ள சிறுபான்மையினரை கவர மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, அவர்களுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மாநிலம் தோறும் ஆய்வு செய்கிறது. சமீபகாலமாக, இந்து அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள். |
| வல்லுனர் குழு சிபாரிசு: ரெயில் கட்டணம் உயர்கிறது? Posted: 31 Dec 2014 03:17 PM PST ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வல்லுனர் குழு சிபாரிசு செய்துள்ளது. குறைந்தபட்ச பயண தொலைவும் அதிகரிக்கிறது. ரெயில்வேயில் தற்போதைய வருவாய் கட்டமைப்பினை ஆய்வு செய்யவும், நலிவுற்ற நிலையில், வருவாயை பெருக்குவதற்கான வழிகளை |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கினால் இரு மடங்கு பதிலடி கொடுங்கள்: மனோகர் பாரிக்கர் Posted: 31 Dec 2014 03:03 PM PST காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தி உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார். |
| உளவுத்துறை அதிர்ச்சி தகவல்: டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கல்? Posted: 31 Dec 2014 02:06 PM PST டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அவர்கள் குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க திட்டமிடக்கூடும் என்று கருதப்படுகிறது. |
| இன்று முதல் சமையல் கியாஸ் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் Posted: 31 Dec 2014 12:03 PM PST வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இதுவரை மத்திய அரசு வழங்கும் மானியம் போக எஞ்சிய தொகை கொடுத்து நுகர்வோர்கள் வாங்கி வந்தனர். மானிய தொகையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தது. இப்போது மத்திய அரசு நுகர்வோர்கள் சந்தை மதிப்பில் |
| உத்தரபிரதேசத்தில் பிகே திரைப்படத்துக்கு வரிவிலக்கு: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு Posted: 31 Dec 2014 11:20 AM PST இந்தி நடிகர் அமீர்கான் நடித்து கடந்த மாதம் வெளியான 'பிகே' திரைப்படம், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. |
| காஷ்மீரில் திடீர் திருப்பம்: பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறது- மக்கள் ஜனநாயக கட்சி Posted: 31 Dec 2014 10:38 AM PST காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா, கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி அவர் சூசகமாக தெரிவித்தார். |
| டெல்லியில் வெப்ப ஹீட்டரால் மூச்சு திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு Posted: 31 Dec 2014 08:20 AM PST டெல்லியில் ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு தாக்கியதால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். வடக்கு மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் கதகதப்பாக தூங்குவதற்காக வெப்பத்தை உருவாக்குவார்கள். அப்படி டெல்லியில் ஒரு குடும்பம் வெப்பம் உருவாக்க ஹீட்டர் பயன்படுத்தியதால் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள கோட்லா முபாரக்பூரில் |
| இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார் Posted: 31 Dec 2014 08:05 AM PST முதல் முயற்சியிலேயே 'மங்கள்யான்' விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடிக்க காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார். கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடாவில் 29-8-1949 அன்று பிறந்த கே.ராதாகிருஷ்ணன் கடந்த 1971-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் விக்ரம் சாரா பாய் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |