Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி கோவிலில் தரிசனத்தை எளிமையாக்க தேவஸ்தானம் திட்டம்

Posted: 10 Dec 2014 09:51 PM PST

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சாதாரண நாட்களில் 10 மணி நேரமும், விடுமுறை நாட்களில் 36 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்

Posted: 10 Dec 2014 09:50 PM PST

டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. அதில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி உட்பட 10 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் தேர்தல் பிரசார கூட்டம்: மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு- தேர்தல் கமிஷனிடம் புகார்

Posted: 10 Dec 2014 09:43 PM PST

பிரதமர் மோடி சமீபத்தில் ஸ்ரீ நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். ஸ்ரீநகர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த

வரிவிதிப்பு என்ற பெயரில் மக்களை மிரட்டும் மாவோயிஸ்டுகள்: தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிரம்

Posted: 10 Dec 2014 09:36 PM PST

இந்தியாவில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 10–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவி கிடக்கின்றனர். சில மாநிலங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாவோயிஸ்டுகள் தங்கள் அமைப்பை பலப்படுத்த அரசை போலவே மக்களிடம் வரிவிதிப்பிலும்

பாத்திரத்தை தலையில் மாட்டிய ஆண் குழந்தை: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அகற்றம்

Posted: 10 Dec 2014 09:30 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் சிறையம்மன் பகுதியை சேர்ந்தவர் சினோய். இவரது 1½ வயது மகன் அக்தஜி. நேற்று மாலை அக்தஜியின் தாய் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் அக்தஜி வீட்டுக்குள் விளையாடினான். சமையல் அறை அருகே விளையாடிய குழந்தைகளை அக்தஜின் தாய்

திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்தால் நல்லது நடக்கிறது: ராஜபக்சே பேட்டி

Posted: 10 Dec 2014 09:12 PM PST

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதற்காக முதல் நாளே திருமலை வந்த அவர் அங்குள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சுப்ரபாத சேவையில் அவர் ஏழுமலையானை

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்தது தவறு இல்லை: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.

Posted: 10 Dec 2014 09:10 PM PST

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பு செய்தது. அப்போது அவர், பிரியங்கா காந்தி படத்தை பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

புதினின் இந்திய வருகை இரு நாடுகளுக்கிடையேயான உறவை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்லும்: மோடி

Posted: 10 Dec 2014 09:02 PM PST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று இரவு டெல்லி வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் புதினின் வருகை குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் அவதி

Posted: 10 Dec 2014 08:26 PM PST

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தெற்கு ஆந்திர பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருப்பதியில் நேற்று மாலை பெய்ய தொ

5 ஆயிரம் ரெயில்களில் போலீஸ் பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு

Posted: 10 Dec 2014 08:11 PM PST

ரெயில்வே போலீசாருக்கான 3 நாள் பயிற்சி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை ரெயில்வே பாதுகாப்புப் படை இயக்குனர் கிருஷ்ண சவுத்திரி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:–

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு தகவல்

Posted: 10 Dec 2014 08:01 PM PST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இதை மத்திய அரசு மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பணியாளர் நலன் இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று

5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டரும் மானிய விலையில் கிடைக்கும்: தர்மேந்திர பிரதான் தகவல்

Posted: 10 Dec 2014 08:01 PM PST

வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அது, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஆகும். ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர் வீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள், சந்தை விலையில் வாங்க வேண்டி இருக்கும்.

தற்கொலை முயற்சி இனி தண்டனைக்குரிய குற்றம் ஆகாது: மத்திய அரசு முடிவு

Posted: 10 Dec 2014 07:31 PM PST

நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து அமல்படுத்தி வருகிறார். அவர், நடைமுறையில் இல்லாத சட்டங்கள், தேவையற்ற சட்டங்களை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சபரிமலை பக்தர்களை 18-ம் படியில் ஏற்றி அனுப்பும் பணியை மத்திய போலீஸ் படை ஏற்றது

Posted: 10 Dec 2014 07:30 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து வரும் அய்யப்ப பக்தர்கள் 18-ம்படி ஏறிச்சென்று சாமியை தரிசித்து வருகிறார்கள். 18-ம் படிகளில் கேரள போலீசார் பணியமர்த்தப்பட்டு பக்தர்களை வேகமாக அனுப்பி வந்தனர். ஆனால் மண்டல பூஜை விழா காலத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத

சத்தீஸ்கரில் கண்ணிவெடி தடுப்பு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 3 போலீசார் பலி

Posted: 10 Dec 2014 06:49 PM PST

சத்தீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்டு நடமாட்டம் மிகுந்த மாநிலமாகும். அங்குள்ள மாவோயிஸ்டுகள் அடிக்கடி குண்டுவெடிப்பு, துப்பாக்கி தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் அட்டூழியத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ்படையும் ஈடுபட்டு உள்ளது.

சபரிமலை கோவிலில் அன்னதானம் வழங்குவதில் மோசடி எதுவும் நடக்கவில்லை: கேரள மந்திரி பேட்டி

Posted: 10 Dec 2014 06:16 PM PST

அன்னதான பிரபு என போற்றப்படும் சபரிமலை அய்யப்பனுக்கு செய்யப்பட வேண்டிய முக்கிய வழிபாடு அன்னதானம் ஆகும். இதன்காரணமாக சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பலரும் அன்னதானம் நடத்தி வருகிறார்கள். அன்னதானம் நடத்த இயலாத பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் பணஉதவி செய்து வருகிறார்கள்.

ராஜ்நாத் சிங்குடன் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் சந்திப்பு

Posted: 10 Dec 2014 04:20 PM PST

டெல்லி முன்னாள் மந்திரியும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான மனிஷ்திவாரி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வரி விகிதம் இருக்கும்: அருண்ஜெட்லி தகவல்

Posted: 10 Dec 2014 03:30 PM PST

பாராளுமன்றத்தில் நேற்று கூடுதல் செலவுகளுக்கான துணை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:- காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு சதவீதம் அதிகரிக்கப்பட இருப்பதால் விரைவில் இந்தியாவுக்கு அதிக அளவிலான அன்னிய

உரத்துறை மந்திரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted: 10 Dec 2014 02:35 PM PST

மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி ஆனந்தகுமாரை அவரது இல்லத்தில் மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக விவசாயிகளுக்கான உர தட்டுப்பாடு மற்றும் உர தொழிற்சாலைகளுக்கான பிரச்சினைகள் குறித்து பேசினார்.

தெலுங்கானாவில் அரசு பஸ் மீது ஜீப் மோதி 6 பேர் பலி

Posted: 10 Dec 2014 02:00 PM PST

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பன்டிரேவு கிராமம் அருகே சென்ற அரசு பஸ் மீது ஜீப் மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™