ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :(
- அந்த தியேட்டருக்கு எல்லோரும் ஏன் தயங்கி தயங்கி போறாங்க..?
- வீறு கொண்டு எழு!
- முதல் வேலையா முன்ஜாமின் எடுத்து வச்சிக்கணும்..!
- பேஸ்புக் கலாட்டா....!
- கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
- சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக......
- நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?
- நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ
- உறவுகளின் சிறப்பம்சம் அவ்வப்போது நம் எல்லைகளை நினவுபடுத்துதலே...!
- தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
- எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !
- ஒரே நேரத்தில் நான்கு சிங்கங்களை சமாளிக்கும் மாவீரன் - காணொளி
- புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரியா ?
- நம்மாழ்வார் புத்தகம் கிடைக்குமா...
- ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
- உள்ளங்கைகளில் தரிசனம்!
- 2015 புத்தாண்டு பலன்கள் !
- உதிர்ந்த மலர்கள் – 2014
- தள்ளாத வயதிலும் சொந்த வீட்டை தானம் வழங்கியவர்
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !
- ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்!
- வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?
- பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
- இப்படி இருந்தா எப்படி இருக்கும்...?!
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- மார்கழிப் பூவே...காணொளி
- ஆப்கனில் போரிட்ட வீரர்களுக்கு ஒபாமா நன்றி
- அமெரிக்கா நீதிபதியாகப் பதவியேற்கும் பார்வையற்றவர்!
| ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 40 உடல்கள் மீட்பு: தேடும் பணி தீவிரம் :( Posted: 30 Dec 2014 11:22 AM PST ஏர் ஏசியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான ஜாவா கடலில் இருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் (க்யூ.இசட்.8501) நேற்று முன்தினம் காணாமல் போனது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் நேற்று கடலில் மிதக்கும் சில பாகங்களை கண்டுபிடித்தது. இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன் மாகாணம், பங்காலன் பன்னிலிருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள ... |
| அந்த தியேட்டருக்கு எல்லோரும் ஏன் தயங்கி தயங்கி போறாங்க..? Posted: 30 Dec 2014 11:06 AM PST - பத்து பைசா இல்லாம அலைஞ்ச நீ பத்து தலைமுறைக்கு சொத்து சேத்துட்டியா,எப்படிடா? - சாமியார் ஆயிட்டேன்..! - -லீலாவிசய் - -------------------------------------------------------------------------------- - அந்த தியேட்டருக்கு எல்லோரும் ஏன் தயங்கி தயங்கி போறாங்க..? - அந்த தியேட்டர்ல நாய்கள் ஜாக்கிரதை படம் ஓடுது..! - -என்.சாமிநாதன் - -------------------------------------------------------------------------------- - எம்.பி.ஏ.படிச்ச உங்க பையன் மாசம் 5 லட்சம் சம்பாதிக்கிறான்னு சொல்றீங்களே, ... |
| Posted: 30 Dec 2014 11:05 AM PST - - புத்தாண்டு பிறக்கும் நேரமிது புதிய சபதம் ஏற்கும் முன் பழங்கதையைப் புரட்டிடுவோம்! திரைமறைவிலிருந்த தீவிரவாதம் மெல்ல மெல்ல தலையெடுத்து தேசமெங்கும், 'தெருக்கூத்து' நடத்துகிறது! பெண்மையைப் போற்றிய பாரதத்தில் பாலியல் வன்முறையோ பச்சிளங் குழந்தையைக்கூட பலாத்காரம் செய்து வீதியுலா போகிறது! நம் தன்மானமோ நாட்காட்டியில் தினம் தினம் கிழிக்கப்படும் தாள்களைப் போல் நலிவடைந்து போகிறது! நல்லொழுக்கத்தையும், நாட்டுப்பற்றையும் எந்தக் கடையில் அடகு வைத்தோம்? எப்படித் தான் மீட்டெடுப்போம் எனத் ... |
| முதல் வேலையா முன்ஜாமின் எடுத்து வச்சிக்கணும்..! Posted: 30 Dec 2014 11:04 AM PST ![]() |
| Posted: 30 Dec 2014 11:02 AM PST பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...ONLINEல ஜாலியா ... |
| கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Posted: 30 Dec 2014 10:45 AM PST அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். |
| சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக...... Posted: 30 Dec 2014 10:02 AM PST வாழ்க்கையில் நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் மறந்து விடுவதுண்டு. அதனை நினைவு படுத்தும் வகையில்தான் இந்த கட்டுரை உங்களுக்காக. நாம் செய்ய மறந்த, செய்யாத, கவனிக்காத விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். நாம் சிரிப்பதால் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. அதே சமயம், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளின் பலம் கூடுகிறது. 6 வயதாகும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 300 முறை சிரிக்குமாம். ஆனால் நம்மைப் போன்ற பெரியவர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 100 முறை ... |
| நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? Posted: 30 Dec 2014 09:41 AM PST நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு. நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும். இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் ... |
| நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ Posted: 30 Dec 2014 09:23 AM PST விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஏர் ஏசியா விமானம் ஒன்றும் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதன் பாகங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பும் பதட்டமும் ஒருபுறமிருக்க.. லண்டனின் கட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் லாஸ் ... |
| உறவுகளின் சிறப்பம்சம் அவ்வப்போது நம் எல்லைகளை நினவுபடுத்துதலே...! Posted: 30 Dec 2014 09:13 AM PST |
| தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு Posted: 30 Dec 2014 06:54 AM PST மெல்போர்ன்: இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 'டுவென்டி-20' (849) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய அணிக்கு 'டுவென்டி-20'(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார். இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ... |
| எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Posted: 30 Dec 2014 06:31 AM PST அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. மொத்தம் 36 வருடங்கள் 3 மாதங்கள் 8 நாட்கள் பணியாற்றியுள்ளேன். எனது நீண்ட அனுபவத்தை வைத்து இன்னும் 3ல் இருந்து 5 வருடங்கள் பணியாற்றிட நிறைய இடத்தில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. மாதம் ரூபாய் 50,000 - 60000 வரை சம்பாதிக்க முடியும். ஆயினும் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. கிடக்கும் ஓய்வூதியமே போதும் என்று முடிவுசெய்து விட்டேன். காரணம், எனக்கு ஒரு விலை மதிப்பில்லாத, நிம்மதியான ... |
| ஒரே நேரத்தில் நான்கு சிங்கங்களை சமாளிக்கும் மாவீரன் - காணொளி Posted: 30 Dec 2014 04:52 AM PST |
| புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரியா ? Posted: 30 Dec 2014 02:14 AM PST மதவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாவது புத்தகங்களும் திரைப்படங்களும் தான். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையை மதவாதிகள் பிரதிபளிக்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதைப் பற்றியோ , சாதாரண மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ துளியும் கவலைப்படாதவர்கள் தான் மதத்திற்காக கொடிபிடிக்கிறார்கள். "மக்களுக்காக மதம் " என்பது போய் "மதத்திற்காக மக்கள்" என்றாகிவிட்டது தான் இன்றைய அவலம். புத்தகமாக இருந்தாலும் திரைப்படமாக ... |
| நம்மாழ்வார் புத்தகம் கிடைக்குமா... Posted: 30 Dec 2014 12:39 AM PST நண்பர்களே நம்மாழ்வார் புத்தகம் இருந்தால் தரவும் |
| ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்! Posted: 29 Dec 2014 11:47 PM PST - கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மைத்திரிபால சிறிசேன என்பவரை பொது வேட்பாளராக களமிறக்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள தற்போதைய அதிபர் ராஜபக்சேவும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். - இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக, இந்திய பாலிவுட் ... |
| Posted: 29 Dec 2014 10:28 PM PST நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு. காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும். இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம். கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும். உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, ... |
| Posted: 29 Dec 2014 10:19 PM PST மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம் மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு ... |
| Posted: 29 Dec 2014 09:42 PM PST - ஜனவரி 23. காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த தலைவர் ஜி.பூவராகன் (86) மறைவு. - மார்ச் 1. முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண் (74), ஹைதராபாதில் காலமானார். 13. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் எஸ்.மல்லிகார்ஜுனையா (82), தும்கூரில் மறைவு. 25. தமிழக முன்னாள் டிஜிபி எஸ்.ஸ்ரீபால் (76) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். - மே 9. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.ஜனார்த்தன ரெட்டி(80), ஹைதராபாதில் காலமானார். 21. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் ... |
| தள்ளாத வயதிலும் சொந்த வீட்டை தானம் வழங்கியவர் Posted: 29 Dec 2014 09:39 PM PST - - ஆற்காடு தாலுகாவில் உள்ள திமிரியில் ஐம்பது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை சமூக நலத் துறைக்கு தானம் வழங்கிய 82 வயது தாட்சாயிணியிடமிருந்து (வலமிருந்து மூன்றாவது) ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் மாவட்ட ஆட்சியர். படம்: தகவல் சாதனம் ============== பிடி மண்ணைக் கூட தனதாக்கிக் கொள்ள விழையும் இக்காலத்தில் தனக்குச் சொந்தமான சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பெருமானமுள்ள 2,854 சதுர அடி பரப்பிலான வீட்டை சமூக நலத் துறைக்கு தானமாக வழங்கியுள்ளார் 82 வயது தாட்சாயிணி. - இவர், தாம்பரத்தில் உள்ள ... |
| அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Posted: 29 Dec 2014 09:24 PM PST அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. போராட்டத்தை தீவிரப்படுத்த, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதால், ஓடாத பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், ... |
| ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்! Posted: 29 Dec 2014 09:13 PM PST Posted Date : 18:38 (29/12/2014)Last updated : 18:39 (29/12/2014) புதுடெல்லி: கடுமையாக எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் முடிவை ஏர்டெல் நிறுவனம் கைவிட்டுள்ளது. - இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு ... |
| வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்? Posted: 29 Dec 2014 09:11 PM PST - மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன்னால் மாக்கோலமிட்டு மகிழ்வார்கள். மணக்கோலம் காண வேண்டிய பெண்கள், கோலத்தில் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதித்து வைப்பது நல்லது. மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். மாட்டுச்சாணம் கிருமி நாசினி என்பதால் இல்லத்தில் உள்ளோர்க்கு ஆரோக்கியத்தை வழங்கும். பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும் மலர்ச்சியோடும் திகழ்வார்கள் ... |
| பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;– Posted: 29 Dec 2014 09:09 PM PST - 1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் } உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம் - 2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது - 3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம் - 4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும் - 5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது . வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை ... |
| இப்படி இருந்தா எப்படி இருக்கும்...?! Posted: 29 Dec 2014 08:56 PM PST - - - ================================================================ நன்றி: மல்லிகை மகள் |
| Posted: 29 Dec 2014 07:47 PM PST தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| Posted: 29 Dec 2014 05:12 PM PST |
| ஆப்கனில் போரிட்ட வீரர்களுக்கு ஒபாமா நன்றி Posted: 29 Dec 2014 04:28 PM PST ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படையினரின் போர்ப் பணிகள் முடிவுக்கு வருவதைக் குறிக்கும் நிகழ்ச்சி தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2001-இல் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அமெரிக்கா 13 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் போரிட்டு வருகிறது. அந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அல்-காய்தா ... |
| அமெரிக்கா நீதிபதியாகப் பதவியேற்கும் பார்வையற்றவர்! Posted: 29 Dec 2014 04:26 PM PST - அமெரிக்காவின் மிஷிகன் மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதியாக பார்வையற்ற ஒருவர் பதவியேற்கவுள்ளார். இன்னும் சில தினங்களில் அப்பதவியை ஏற்கவுள்ள ரிச்சர்ட் பெர்ன்ஸ்டைன் (41), இதன் மூலம் அந்த மாகாண உச்ச நீதிமன்றத்தின் பார்வையற்ற முதல் நீதிபதி ஆகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எல்லோரையும் போல, வழக்கு விவரங்களை நானே படித்துத் தெரிந்துகொண்டு தீர்ப்பு வழங்குவது எளிமையாக இருந்திருக்கும். பிறரது உதவியுடன் படிக்கவும், எழுதவும் வேண்டியிருப்பதால், அதிக உழைப்பும், விழிப்புணர்வும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
