Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி வழங்கும் குழுவின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted: 05 Nov 2014 11:15 PM PST

kottapaya

kottapayaஇரட்டைக் குடியுரிமை பெற எண்ணியுள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அதற்கான வசதிகளை பெற்றுக் கொடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை பெறவிரும்பு வெளிநாடு வாழ் இலங்கையர்கள் இந்த குழுவிடம் விபரங்களை முன்வைக்க வேண்டும். இரட்டை குடியுரிமையை வழங்குவதா இல்லையா என்ற இறுதி முடிவை இந்த குழுவே எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் இரட்டை குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். இவர்களில் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு கோத்தபாய தலைமையிலான குழு நிபந்தனைகளின் அடிப்படையில் இரட்டை குடியுரிமையை வழங்க சிபாரிசு செய்யும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காங்கிரஸ்சுடன் த.தே.கூட்டமைப்பு ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?

Posted: 05 Nov 2014 11:10 PM PST

TNA_SLMC

TNA_SLMCதற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்சுடன் ஏன் த.தே.கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்? ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்க கூடாதென ஒரு பகுதி முஸ்லிம் சமூகம் கூறும் இந்த சூழ்நிலையில் த.தே.கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்தையில் ஈடுபடவிருப்பது நகைப்பிற்குரிய விடயம் என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத்தெரிவித்தார். காலத்திற்கேற்றாற் போல் வேசம் போடும் முஸ்லிம் காங்கிரஸ்சுடன் ஏன் த.தே.கூட்டமைப்பு பேச்சுக்கு செல்லவேண்டும், ஜனாதிபதி தேர்தல்தொடர்பாக தற்போது பரவலாக சூடு பிடித்துள்ள காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியை ஆதரிக்க கூடாதென்று முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜனாதிபதியை ஆதரிப்பதாக ஒரு முகத்தினையும் த.தே.கூட்டமைப்பினருடன் பேசி தமிழ் முஸ்லிம் உறவு நல்லது என்று காட்டும் ஒரு முகத்தினையும் காட்டும் மாயை நாட்டு மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கும் வேலையில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பது நகைப்பிற்குரிய விடயமாக பார்க்கவேண்டி இருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று த.தே.கூட்டமைப்பினருடன் சந்திப்பினை நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேற்று பாதுகாப்பு அமைச்சின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்கள். அதே வேளை பசீர் சேகுதாத் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையினை இந்த த.தே.கூட்டமைப்பினர் கணக்கில் எடுக்கவில்லை ஏன்? இவர்கள் எதனை எதிர்பார்த்து பேசப்போகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் காலாகாலமாக இவ்வாரான வேலைகளில் ஈடுபடுவதுதான் அவர்களது பழக்கமாக இருந்துவருகின்றது. இதனை தமிழ் தேசிய தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தும் தலைமைகள் புரிந்து கொள்ளவில்லையா? அவர்கள் தமிழ் மக்களை முஸ்லிம்களிடம் தாரைவார்க்கவா அவர்களுக்கு உகந்த நேரத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது சரியானதா? முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் தங்களுக்கு சாதகமான பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கல்வி அமைச்சுப்பதவியும் மற்றைய மூன்று பேருக்கு ஏனைய அமைச்சுக்களும் தரவேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றாரகள். இவர்கள் இவ்வாரான கோரிக்கைகளை முன் வைத்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஏன் த.தே.கூட்டமைப்பினர் இவர்களுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்தவேண்டும்? அப்படி என்ன தேவை த.தே.கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இப்போதாவது ஒரு நல்லெண்ண ஏற்பாடாக கிழக்கு மாகாணத்தை த.தே.கூட்டமைப்பினருடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க முன்வருமா? உறுதியாக அவர்கள் தமிழர்களுக்கு எதையும் கொடுப்பதற்கு தயார் இல்லை. இதைத்தான் அவர்கள் அன்று முதல் இன்றுவரைக்கும் செய்து வருகிறார்கள். தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கும் த.தே.கூட்டமைப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ்சினரும் என்ன நல்லென்னத்தினை ஏற்படுத்துவதற்காக கூடுகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி பேசி எடுக்கும் தீர்மானங்களில் எப்போதாவது த.தே.கூட்டமைப்பினரின் எந்த விடயத்தையாவது கணக்கில் எடுத்த வரலாறு இருக்கின்றதா? இல்லை மாறாக ஏமாற்றப்பட்ட வரலாறே அதிகம் என்பதனை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ளவில்லையா? எத்தனை குத்துக்கரணம் அடித்தாலும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில் இருந்து சற்றும் விலகாது என்பது மாத்திரம் உறுதியான உண்மை, இதுதான் வரலாறு கண்ட பாடம் என்பதனை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் புரிந்து கொண்டு தமிழ் இனத்திற்கு செய்யவேண்டிய நல்ல செயல்களில் த.தே.கூட்டமைப்பினர் செயற்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மீடியாடெக் அக்டா கோர் SoC கொண்ட HTC டிசயர் 820s அறிமுகம்!

Posted: 05 Nov 2014 06:31 AM PST

HTC 820s

 HTC 820s HTC நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று HTC டிசயர் 820s ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. HTC டிசயர் 820s ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைப்பது பற்றிய விரிவான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. டிசயர் 820 ஸ்மார்ட்போன் போல டிசயர் 820s ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குறிப்புகள் கொண்டுள்ளன. தவிர, 4G LTE இணைப்பு மற்றும் மாலி T760 ஜிபீயூ கொண்ட 64 பிட் 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MT6752 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அக்டா கோர் மீடியாடெக் SoC உடன் இணைந்து ரேம் 2GB உள்ளது. HTC டிசயர் 820s ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. டிசயர் 820 ஸ்மார்ட்போன் போல இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. டிசயர் 820s ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. கைப்பேசி இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், 3G மற்றும் 4G LTE ஆகியவை அடங்கும். HTC டிசயர் 820s ஸ்மார்ட்போன் அம்சங்கள்: இரட்டை சிம், 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே, 64 பிட் 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MT6752 ப்ராசசர், ரேம் 2GB, எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு, Wi-Fi, எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், 3G, 4G LTE, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்.

This posting includes an audio/video/photo media file: Download Now

2வது டெஸ்ட் போட்டி: வங்கதேசம் 433 ரன் குவிப்பு!!

Posted: 05 Nov 2014 04:07 AM PST

cricket

cricketஜிம்பாப்வே அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 433 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் சதம் விளாசினர். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற வங்க தேச அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் குல்னா, ஷேக் அபு நாசர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது (நவ. 3-7). டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி, நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்திருந்தது. தமிம் இக்பால் 74 ரன், ஷாகிப் அல் ஹசன் 13 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தது. தமிம் 109 ரன் (332 பந்து, 10 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் முஷ்பிகுர் ரகிம் 11 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஷாகிப் அல் ஹசன் 137 ரன் எடுத்து (180 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) வாலர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தைஜுல் இஸ்லாம் 32, ஷகாதத் உசேன் 18, ஜுபைர் உசேன் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 433 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் பன்யங்கரா, சதாரா, வாலர் தலா 2, சிகும்புரா, நட்சாய், மசகட்சா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்துள்ளது. சிக்கந்தர் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரையன் சாரி 21, மசகட்சா 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு!

Posted: 05 Nov 2014 04:01 AM PST

national-cricket-performance-centre

national-cricket-performance-centreஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்குகிறது. பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நேற்று நடைபெற இருந்தது. சந்தீப் பட்டீல் தலைமையில் ரோஜர் பின்னி, விக்ரம் ரத்தோர், சபா கரீம், ராஜிந்தர் சிங் ஹன்ஸ் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர், கிரிக்கெட் வாரிய தலைமயகத்துக்கு வந்திருந்தனர். இந்த நிலையில், 'ஆஸி. தொடருக்கான வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் அறிவித்தார். இலங்கை அணியுடன் நடந்து வரும் தொடரில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் வருண் ஆரோனுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. காயம் அடைந்துள்ள சில வீரர்கள் தங்களின் உடல்தகுதியை நிரூபிக்க கூடுதல் அவகாசம் வழங்குவதற்காகவே அணி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளதாகவும், அடுத்த தேர்வுக் குழு கூட்டம் நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

துபாயில் நவீன‌ டிராம் வண்டிகள் நவம்பர் 11 முதல் அறிமுகம்!

Posted: 05 Nov 2014 03:33 AM PST

Train

Trainதுபாயில் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் நவீன‌ டிராம் வண்டிகள் வரும் நவம்பர் 11 முதல் இயக்கப்பட உள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள டிராம் வண்டிகளின் சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. பிரான்சில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிராம் வண்டிகள் ஓட்டத்தில் மாறுபட்ட வேகங்கள், பாதுகாப்பு அம்சங்கள், வண்டிகளின் உந்துவிசை, பிரேக், அவசர நிறுத்தங்கள், கதவுகளின் இயக்கம், வண்டியின் சக்தி போன்ற அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. துபாய் அரசின் பல முக்கிய பிரமுகர்களாலும், அதிகாரிகளாலும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது. முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது. 44 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த டிராம் வாகனம் சராசரியாக மணிக்கு 21.44 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 405 பயணிகள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு காலை 5.30லிருந்து நள்ளிரவு 12 மணிவரை இயக்கபட உள்ளது. மேலும் ப‌டி படியாக 14.5 கிலோமீட்டார் தூரம் வரை ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிராம் வண்டியில் ஏழு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு கோல்ட் சூட், நான்கு பெட்டிகள் சில்வர் கிளாஸ் என்ற இரண்டு வகுப்புகளுடன், இரண்டு பெட்டிகள் குழந்தைகள் மகளிருக்கென தனி வகுப்பும் இதில் இருக்கும். வண்டிகளின் உட்புறங்களும், நிறுத்தங்களும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு பயணிகளை கவரும் வகையில் டிராம் அமைந்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுழற்சி முறையில் பணிபுரியும் நபர்களின் மூளை திறன் பாதிப்பு: ஆய்வில் தகவல்

Posted: 05 Nov 2014 03:24 AM PST

brain

brainபிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுழற்சி முறையில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை திறன் மங்குவதாக தெரியவந்துள்ளது. பிரான்சில் 3000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவில், சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் மூளை திறனை விட தினமும் ஒரே முறையான நேரத்தில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை செயல்திறன் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் உடல்நிலையில் உண்ணும், உறங்கும் நேரங்கள் மாற்றமடைவதால் அவர்களுக்கு இதயம், மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் எனவும், சில சமயங்களில் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. ஆய்வின் ஒரு பகுதியாக, சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவாற்றல் வேகம் சார்ந்த சோதனையில் பலர் தேர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டௌலோசி மற்றும் ஸ்வான்ஸி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், முறையற்ற ஷிப்டுகளில் 10 ஆண்டுகாலமாக பணிபுரிபவர்களின் அறிவாற்றல் திறன் 6 1/2 ஆண்டுகள் பின்தங்கியதாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளனர். காலை, மதியம், இரவு நேர சுழற்சி முறை ஷிப்டுகளில் பணிபுரியும் நபர்களுக்கு எவ்வாறு அறிவாற்றல் திறன் குறைகிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாத நிலையில், அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்திரத்தன்மைக்காக 18வது அரசியல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது: மகிந்த

Posted: 05 Nov 2014 03:09 AM PST

rajapaksa

rajapaksaநாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே 10 வருடகாலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து அதன் பலனை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்க முடிந்தது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் 5 வருடங்கள் பணியாற்றிய பின்னர், அடுத்த 5 வருடத்தின் மூன்று வருடங்கள் செல்லும் போது கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்படும். அப்போது நாட்டை கட்டியெழுப்ப இடமில்லாமல் போகும். நாடு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஸ்திரத்தன்மையான அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொருளாதர வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது: துமிந்த சில்வா

Posted: 05 Nov 2014 02:57 AM PST

Duminda-Silva

Duminda-Silvaஎதிர்க்கட்சியினர் இலங்கையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் நாட்டை ஆபிரிக்காவில் உள்ள வறிய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்ட போதிலும் மகிந்த சிந்தனை கொள்கையில் உள்ள தூரநோக்கு பார்வை காரணமாக நாட்டின் பொருளாதர வளர்ச்சி வேகம் 7.08 வீதமாக அதிகரித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு நகரில் 60 ஆயிரம் வீடுகளை இரண்டு கட்டங்களாக நிர்மாணித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர் கொழும்பு நகரில் சேரிப்புறங்களில் வாழும் மக்களுக்கு பொய்களை கூறி அவர்களை தவறாக வழி நடத்தினர். இதன் மூலம் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் லாபத்தை பெற முயற்சித்தனர் எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

500 அடி உயரத்தில் கண்களை கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்து உலக சாதனை செய்த நிக் வாலெண்டா!

Posted: 04 Nov 2014 11:32 PM PST

nik-valendo

nik-valendoஅமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 35 வயது நிக் வாலெண்டா மிகவும் ஆபத்தான சாகச நிகழ்ச்சி ஒன்றை செய்து சாதனை புரிந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள பள்ளத்தாக்கு மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சியை கண்களை கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகப்பெரிய மூன்று அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு இடையே கயிற்றை கட்டி அதில் கண்களை கருப்புத்துணியால் கட்டியபடியே கடந்து சாதனை புரிந்துள்ளார். சிகாகோ ஆறு ஒன்றின் இடையே இரு புறங்களிலும் உள்ள 500 அடி உயரத்தில் கயிற்றில் நடந்தபடி கடந்தார். முதலில் மரினா சிட்டி வெஸ்ட் டவர் மற்றும் லியோ பர்னெட் கட்டிடங்கள் இடையே 7 நிமிடத்தில் நடந்தார். மேலும் மற்றொரு கட்டிடத்தை ஒரு நிமிடத்தில் தனது கண்களை துணியால் கட்டியபடி கடந்தார். இம்முறை பாதுகாப்புக்காக கீழே வலை கூட அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரை பணயம் வைத்து இவர் முடித்த இந்த சாதனை மூலம் ஏற்கனவே இவர் செய்த இரண்டு உலக சாதனைகளை இவரே முறியடித்துள்ளார். இந்த உலக சாதனையை உலகில் உள்ள 220 நாடுகள் தங்கள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியதுடன் சுமார் 50000 பேர் இந்த சாதனையை நேரில் திகிலுடன் பார்த்து ரசித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™