Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மீண்டும் இணைகிறது வெற்றி கூட்டணி?

Posted: 15 Nov 2014 12:16 AM PST

ajith_yuvan001

ajith_yuvan001திரையுலகில் ஒரு சில கூட்டணி இணைந்தாலே வெற்றி தான். அந்த வகையில் அஜித்தின் பேவரட் கம்போஸர் என்றால் யுவன் தான்.

ரசிகர்களும் பெரிதும் விரும்பும் கூட்டணி இது தான். இதுவரை தீனா, மங்காத்தா, பில்லா, ஆரம்பம் என இவர் அஜித்திற்கு இசையமைத்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் பெரும்பாலும் யுவன் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்-58 படத்தில் இடம்பெறும் பாலிவுட் கலைஞர்!

Posted: 15 Nov 2014 12:15 AM PST

விஜய் படம் தற்போது தமிழ் நாட்டை தொடர்ந்து வெளி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பிரபுல பாலிவுட் டிசைனர் மனிஷ் மல்கோத்ரா பணி புரியவுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களே இதற்கு அனுமதிக்காதீர்கள்: கவனம் தேவை!

Posted: 15 Nov 2014 12:05 AM PST

womencellpone_prob_002

womencellpone_prob_002உலகம் நவீன மயமாகிவிட்டாலும், கைப்பேசியில் அதிகமான புகைப்படங்கள் எடுப்பதை பெண்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கைப்பேசி , கணனி பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.

அதுவும் தங்கள் கைப்பேசியில் எடுக்கப்பட்ட ரகசிய புகைப்படங்கள், காணொளிகள் அழிந்திருந்தாலும் (Delete) மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விடயம் ஒன்று தெரியுமா.

அந்த விடயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை கைப்பேசியிலும், டிஜிட்டல் கமெராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.

பின்னர் அழித்து (Delete) செய்து விடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும்.

அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.

இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ரெக்கவரி மென்பொருட்கள் இருக்கின்றன.

இதன் மூலம் திரும்பப் பெறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.

இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.

ஆனால், ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இணையதளத்தில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கமெரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.

கணனியில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கணனிகள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும்.

பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கமெராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கமெராக்காள் வந்து விட்டன.

திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Windows Phone 8 இயங்குதளத்தினைக் கொண்ட Lumia கைப்பேசிகளில் Windows 10

Posted: 15 Nov 2014 12:02 AM PST

ms_windows_family_001

ms_windows_family_001மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் Windows 10 இயங்குதளத்தின் Technical Preview பதிப்பினை வெளியிட்டிருந்தது.

இதேவேளை முற்றுமுழுதகாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பபட்ட Lumia கைப்பேசியும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியானது தற்போது Windows Phone 8 இயங்குதளத்திலேயே செயல்பட்டு வருவதுடன் விரைவில் இக்கைப்பேசிக்கான Windows 10 பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது Windows 10 இயங்குதளத்தின் Technical Preview பதிப்பானது லேப்டொப் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி

Posted: 15 Nov 2014 12:01 AM PST

australia_vs_southafrica_001

australia_vs_southafrica_001அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 32 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடி அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

ஏழாவது விக்கெட்டுக்காக மேத்யூ வேட் பெய்லியுடன் ஜோடி சேர்ந்தார். அவரும் பெய்லியும் கூட்டாக 102 ரன்கள் சேர்த்திருந்த வேளையில் பெய்லி 70 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை பெற்றது.

301 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஒருகட்டத்தில் டி வில்லியர்ஸ், மில்லரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி பயணித்தது. 36 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 202 ரன் எடுத்திருந்தது.

அப்போது தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 84 பந்தில் 99 ரன் தேவைப்பட்டது. ஆனால், 37-வது ஓவரின் முதல் பந்தில் மில்லர் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் டி வில்லயர்ஸுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்காததால் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை நோக்கி சென்றது.

இதன்படி தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

அவுஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிச்சேல் ஜோன்சன் தெரிவு

Posted: 14 Nov 2014 11:58 PM PST

mitchell_johnson_001

mitchell_johnson_001சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிச்சேல் ஜோன்சனின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இறுதியாக நடைபெற்ற ஆஷஷ் தொடரை 5 – 0 என்ற ஆட்டக்கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டிருந்தது.

2013 ஆகஸ்ட் தொடக்கம் 2014 செம்டெம்பர் வரையான காலப் பகுதியில் 59 டெஸ்ட் விக்கெட்டுக்களை மிச்சேல் ஜோன்சன் வீழ்த்தியுள்ளார்.

இந்த விருதுக்கு இலங்கை அணியின் குமார் சங்க்கார, அஞ்ஜலோ மெத்தியூஸ் மற்றும் தென்னாபிரிக்காவின் ஏ பி டி வில்லியஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதை தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்சும், மக்கள் தெரிவு வீரருக்கான விருதை இந்தியாவின் புவனேஸ்வர் குமாரும் பெற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உட்புற வாகனதரிப்பிடத்தில் கொடுமையாக தாக்கப்பட்ட பெண் உயிராபத்தான நிலையில்?.

Posted: 14 Nov 2014 11:57 PM PST

women3-600x340

women3-600x340கனடா-50-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பல குத்துக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இச்சம்பவம் பிரம்ரன் என்ற இடத்தில் ஒரு ஆடம்பர ரவுன்ஹவுஸ் தொடர் உட்புற வாகன தரிப்பிடத்தில் வியாழக்கிழமை இரவு 11.30-மணியளவில் நடந்தது.

ஹூரொன்ராறியோ மற்றும் றத்பேர்ன் அருகில் சிப் டிரைவில் அமைந்துள்ள ஆடம்பர ரவுன்ஹவுஸ் தொடர் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பெண்ணைப்பற்றிய விபரங்கள் பொலிசாரால் வெளியிடப்படவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்! இரு தமிழர்கள் பலி!

Posted: 14 Nov 2014 11:55 PM PST

plane_crash1

plane_crash1கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் லோகேஷ் லக்ஷ்மிகாந்தன்(25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு நபர்கள் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் வசித்துவரும் தமிழர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துகுள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

ஹெலிகாப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துகுள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மறுநாள் செவ்வாய்க்கிழமையே கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயலலிதாவின் பதவி பறிப்பு: அறிவிப்பை வெளியிட்ட சட்டசபை செயலாளர் டிஸ்மிஸ்

Posted: 14 Nov 2014 11:53 PM PST

stasabai_secretary_002

stasabai_secretary_002ஜெயலலிதாவின் பதவி பறிப்பு அறிவிப்பை முறைப்படி வெளியிட்ட தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், அந்த பொறுப்பில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி அறிவித்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர் 29ல் பதவியேற்றார். வழக்கமாக, முதல்வர் அல்லது அமைச்சர், எம்எல்ஏ ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அந்த மாநில சட்டப்பேரவை செயலாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று கடந்த 8ம் திகதி தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் கடிதம் அனுப்பினார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் தமிழ்நாடு அரசிதழிலும், ஜெயலலிதா எம்எல்ஏ பதவி பறிப்பு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது என்று அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் அறிவித்தார். அரசிதழில், ஜெயலலிதாவுக்கு எந்தெந்த பிரிவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, ரூ.100 கோடி அபராதம், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை அளிக்கப்படும். தண்டனை காலம் முடிந்த பிறகும் ஜெயலலிதா 6 ஆண்டு என 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்பட முழு தகவலையும் குறிப்பிட்டிருந்தார். அரசிதழில் ஜமாலுதீன் பெயரில் வந்த இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அந்த பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை தகவல் வெளியானது. ஆனால், தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஜமாலுதீனையும் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், அவரது அலுவலக ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு வழியனுப்பியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய எல்லையில் பயிற்சியளிக்கும் சீனா

Posted: 14 Nov 2014 11:52 PM PST

china_border_002

china_border_002ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுக்கு சீன ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு உளவுத் துறை, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி சர்வதேச எல்லைப் பகுதியில் சீனாவின் நடமாட்டம் குறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ படையின் சிறப்புப் பிரிவு, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் சட்டசபை தேர்தலின் போது ஊடுருவுவதற்காக காத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ரஜோரி செக்டாரின் சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினர் பாகிஸ்தான் படையினருக்கு பயிற்சிகள் அளித்தும் வருகின்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாயின் கருவறையில் சிரித்துக் கொண்டிருந்த அழகிய குழந்தை

Posted: 14 Nov 2014 11:50 PM PST

childlaugh_scan_002

childlaugh_scan_002பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது குழந்தை வயிற்றில் சிரித்தபடி இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ப்ரூன்லி நகரை சேர்ந்த ஏமி மற்றும் லெயிடன் தம்பதியினர் தங்களது குழந்தை 31 வார கருவாக இருக்கும் போது ஸ்கேன் எடுத்துள்ளனர்.

இதில் லீயோ என பெயரிட்டுள்ள இந்த குழந்தை சிரித்து கொண்டே இருந்துள்ளது.

இதுகுறித்து தாயார் கூறுகையில், ஸ்கேனை பார்த்தவுடன் அதிசயமாக இருந்ததாகவும், ஸ்கேன் செய்த மருத்துவர்களும் ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது, லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை பிறந்தவுடனும் சிரித்து கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

தற்போது தூக்கத்திலும் சிரித்து கொண்டேயிருக்கும் லியோவுக்கு தற்போது 4 மாதங்கள் ஆகிறது.

இக்குழந்தையின் புகைப்படங்களை பார்த்து அனைவரும் ரசிப்பதாகவும், மேலும் பல மொடல் கம்பெனிகள் கேட்டு வருவதாகவும் லியோவின் தாயார் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™